Page 159 of 402 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1581
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1582
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1583
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாவம், பரிதாபம்... திருச்சி பேர்வழி நமது மஹான் திருப்பெயரை கேடயமாக காட்டி தப்பி விடலாம் என நினைக்க கூடாது... மக்கள் திலகம் அவர்தம் ரசிகர்களை, தொண்டர்களை, பக்தர்களை தவறான, எதிர் மறை செயல்களை செய்ய அனுமதிக்கவோ, போதிக்கவோ இல்லை... நீங்கள் உங்களுக்கு... மேலே பல மடங்குகள், பன்முகத்தன்மைகள்... யாரும் நெருங்க நினைக்க கூட இயலாத உச்ச நிலையில் திகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்...உங்களுக்கு சமமாக அல்லது உங்களுக்கு கீழே உள்ள நிலையில் இருப்பவர்களுடன் உங்களவரை.. ஒப்பீடு செய்தால் யாரும் கேள்வி கேட்க போவதில்லை... உங்க நிலைக்கே இப்படினா எங்க நிலையில் நாங்க எப்படி, என்னென்ன யோசிக்கணும் செய்யனும்... பார்த்து நடக்கவும்...

  5. #1584
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR வாழ்க

    படத்தில் இருப்பவர் எம்ஜிஆரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியன்

    இவர் 1950 ஆம் ஆண்டிலிருந்து எம்ஜிஆர் அவர்களின் குடும்ப டாக்டர்

    எம்ஜிஆர் கால் முறிந்த போது இவர் தான் வைத்தியம் பார்த்தார்

    எம்ஜிஆர் சுடப்பட்ட பொழுதும் இவர் தான் வைத்தியம் பார்த்தார்

    ,1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தபோது இவர்தான் உடனிருந்தார்

    !!!!"/////////////////////;// //////////////////////////

    ,1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது

    சென்னை நாராயணபுரம் பகுதியில்காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திமுகவிற்கு வாக்கு சேகரித்து விட்டு மதிய உணவிற்காக எம் ஜி ஆர் ராமாவரம் தோட்டம் வந்தார்

    ,5 மணியிலிருந்து 6 மணிக்குள்
    எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டான்

    /////////////////////////////////////////////// //?//

    எம்ஜிஆரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியம் அவர்கள்

    சென்னை அரசினர் மருத்துவமனையில் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

    ///////////////////////////////////////// /////////////

    சம்பவம் நடந்த அன்று மாலை
    நான் எனது சைனா பஜார் கிளினிக்கில் இருந்தேன்

    என்னுடைய சகோதரிதான் முதல் எனக்குப் போன் போட்டு தகவல் சொன்னார்

    எனது சகோதரிக்கு ஜானகி அம்மாள் ஃபோன் செய்து

    தலையில் சுட்டுட்டாங்க என்று கூறினார்

    அதற்கு மேல் அவரால் பேச முடியாமல் கதறி உள்ளார் ஜானகி அம்மாள்

    நான் எனது கிளினிக்கில் இருந்து புறப்படும் போது

    அரசாங்க ஆஸ்பத்திரிக்கு நான் போன் செய்தேன்

    அங்கு உள்ள அதிகாரிகள் அனைவரும்

    எம்ஜிஆரை சுட்டு விட்டார்கள் அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைத்துள்ளார்கள் உடனே நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரச்சொல்லுங்கள் என்று எங்களுக்குத் தகவல் வந்துள்ளது
    உடனடியாக செல்லுங்கள் என்று கூறினார்கள்
    நான் ஆஸ்பத்திரிக்கு சென்ற போகுது

    அஜிஸ்டெண்ட் கமிஷனரும்

    பல அதிகாரிகளும் அங்கு கூட்டமாக கூடி இருந்தார்கள்

    எம்ஜிஆர் இருந்த அறைக்கு நான் சென்ற பொழுது

    எம்ஜிஆர் ஆபரேஷன் மேஜை மீது அமர்ந்திருந்தார்

    என்னுடைய பதற்றத்தை கண்ட எம்ஜிஆர்
    ஏன் பதற ரீங்க.

    நான் நல்லபடியாகத் தான் இருக்கிறேன்
    கவலைப்படாதீர்கள் டாக்டர் என்று
    என்னை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் எம்ஜிஆர்

    அந்த வலியிலும் எனக்கு ஆறுதல் கூறினார்

    .இரவு ஒன்பது முப்பது மணிக்கு 9:30 எம்ஜிஆரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்

    அந்த நேரம் வரை எம்ஜிஆருக்கு நாடித்துடிப்பு நன்றாகவே இருந்தது

    பெரிய ரத்தக்குழாய் எதுவும் உடையவில்லை

    எம்ஜிஆருக்கு இரவு பத்தரை மணிக்கு 10: 30 ஆப்ரேஷன் செய்யஆரம்பித்தார்கள்

    ஆபரேஷன் முடிந்து எம்ஜிஆரை வார்டுக்கு அழைத்து வந்தபோது அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது

    அடிக்கடி எக்ஸ்ரே படங்களை எடுத்து உடனடியாக கழுவி பார்த்து பார்த்து ஆபரேஷன் செய்த காரணத்தினால் நேரம் நீண்டு கொண்டே சென்றது

    காதுக்குப் பின்புறமாக கழுத்தில் பக்கவாட்டில் ஆபரேஷன் நடந்தது

    6 டாக்டர்கள் குழு ஆப்பரேஷன் செய்தார்கள்
    உள்ளே இருந்த துப்பாக்கி குண்டை எடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள்

    இன்னும் கொஞ்சம் குண்டு வேகமாக பாய்ந்து இருந்தால்

    முதுகு தண்டுவடம் பகுதியில் பட்டிருக்கும்

    இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் பாய்ந்து இருந்தால்

    மூளைக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாய் வெடித்து இருக்கும்

    இதில் எது நடந்து இருந்தாலும் அடுத்தவினாடி மரணம் தான்

    மருத்துவ கணக்கின் படி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு 6:30

    எம்ஜிஆருக்கு நினைவு திரும்பியது

    எம்ஜிஆர் க்ககு
    ஆபரேசன் நடந்த பொழுது

    எம்ஜிஆர் உடைய அண்ணன் சக்கரபாணி அவர்களும்

    அவர் மனைவி அவர்களுடைய மகன்கள் அனைவரும் உடன் இருந்தார்கள்

    ஜானகி அம்மையாரும் உடனிருந்தார்

    எம்ஜிஆர் உயிர் பிழைத்தது மருத்துவ உலகின் அதிசயம்

    இவ்வாறு எம்ஜியாரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியம்

    தினமனி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்

    இந்தப் பேப்பர் இப்பொழுது என்னிடம் உள்ளது........... Thanks...........

  6. #1585
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGRஉடன் ஒரே ஒரு படத்தில் நடித்தவர் பட்டியல் & MGR குறித்த பல சுவாரஸ்யமான தகவல்*����������������

    Cinema Expressல் வெளிவந்து கொண்டிருக்கும்
    அபூர்வத் தகவல்கள்:
    01 - எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள்: எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோர். ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆருக்காக "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் "அமுதத் தமிழில் எழுதும்" என்ற ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார். ("நீதிக்கு தலைவணங்கு" படத்தில் எம்.ஜி.ஆர். இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது, "எத்தனை மனிதர்கள் உலகத்திலே" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் பின்னணியில் ஒலிக்குமே தவிர, எம்.ஜி.ஆருக்காகப் பின்னணி கொடுக்கப்பட்ட பாடலல்ல அது).

    கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இரு பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடியுள்ளார். ஒரு பாடல் இராக ஆலாபனை பாடல். மற்றது நரிக்குறவர் பாடும் டப்பாங்குத்துப் பாடல். பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்துப் பாடலும் இதுதான். "நவரத்தினம்" என்ற படத்தில் வாணி ஜெயராமுடன் பாலமுரளி இணைந்து பாடும் அப்பாடல் "குருவிக்கார மச்சானே" என்ற பாடலாகும்.
    சர்வாதிகாரி படத்தில் எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் எஸ்.தக்ஷிணாமூர்த்தியும், அஞ்சலிதேவிக்காக பி.லீலாவும் குரல் கொடுத்துப் பாடிய பாடல் "ஆணழகா எனது கைகள்" என்ற பாடலாகும். எஸ்.தக்ஷிணாமூர்த்தி பாடிய ஒரே படம் இது தான். இதே படத்தில் எம்.ஜி.ஆரும், எம்.சரோஜாவும் பாடுவதாக உள்ள "என் அத்தர் கடைச் சரக்கும்" என்ற பாடலிலும் எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்தது எஸ்.தக்ஷிணாமூர்த்திதான்.

    எம்.ஜி.ஆருக்காகக் பல (ஆண்) பாடகர்கள் குரல் கொடுத்துள்ளது ஒரு வியப்பான செய்தியல்ல. எம்.ஜி.ஆருக்கான ஒரு பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி. "காதல் வாகனம்" படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வேடமிட்ட எம்.ஜி.ஆர்., வில்லன் அசோகனை மயக்கும் காட்சியில் "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆருக்காக எல்.ஆர்.ஈஸ்வரியே பாடியிருக்கிறார்.

    பின்னணிப் பாடகர் கோவை செüந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக ஒரு முழுப் பாடலைப் பாடவில்லை என்றாலும், "உரிமைக்குரல்" படத்தில் வரும் "மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை" என்ற பாடலின் கடைசி இருவரிகளைப் பாடியிருப்பார். பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் லதாவுக்காகப் பாடியுள்ளனர்.
    *
    ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது நடனப் பயிற்சியாளருக்குத்தான் வேலையிருக்கும். நடனப் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியாளருக்கும் வேலை கொடுத்த முதல் பாடல் காட்சி "அரச கட்டளை" படத்தில் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்" என்ற பாடல் காட்சிதான்.
    *
    எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் மட்டுமின்றி, தமிழ்த் திரையிலேயே ரோஷனாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதிய ஒரே பாடல் "குடியிருந்த கோயில்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடலாகும்.
    *
    ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா". ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படமும் இதுவே.
    *
    பி.மாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "தெய்வத்தாய்". கே.பாலசந்தர் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான். இயக்குநர் கே. பாலசந்தர் திரையுலகுக்கு அறிமுகமான திரைப்படமும் இதுதான்.
    *
    மக்கள் திலகம், நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
    *
    எம்.ஜி.ஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் "முகராசி" மட்டுமே.
    *
    எம்.ஜி.ஆருடன் "எங்கள் தங்கம்", "நவரத்தினம்" ஆகிய இரு படங்களில் ஏ.வி.எம்.இராஜன் இணைந்து நடித்துள்ளார்.
    *
    எம்.ஜி.ஆரும் - தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான கே.பாலாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் "என் கடமை".
    *
    எம்.ஜி.ஆரின் புகழ் பாடும், "கண்டு கொண்டேன்", "கண்ணும் இல்லே" என்ற இரு பாடல்கள் "தர்மதேவன்" என்ற படத்தில் இடம் பெற்றன.
    *
    எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத படங்கள், "சாயா", "சிலம்புக் குகை", "இன்பக் கனவு", "அன்று சிந்திய இரத்தம்", "ஊமையன் கோட்டை", "மாடி வீட்டு ஏழை", "ஏசுநாதர்", "ரிக்ஷா ரங்கன்", "இதுதான் என் பதில்", "நல்லதை நாடு கேட்கும்","லலிதாங்கி" மற்றும் செந்தூர் பிலிம்ஸின் பெயரிடப்படாத படம் ஆகியனவாகும்.
    *
    எம்.ஜி.ஆர். தாம் நடிக்கும் படங்களில் தமக்குரிய ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்காரம் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா" படம் முழுவதும் ஒரு மலிவான பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து, கிணற்றில் தூர் எடுக்கும் தொழிலாளியாக எளிமையாக நடித்திருப்பார். மேலும், தமக்குரிய ஒரு சிறப்புக் கதையமைப்பு என்ற கோட்டைத் தாண்டி வந்து அவர் விரும்பி நடித்த படமிது.
    *
    நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று பல வழிகளிலும் திரையுலகில் தம் திறமையை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர், கதை எழுதிய ஒரே படம் "கணவன்" படமாகும்.
    *
    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். பக்கம் நீதி இருப்பதாகவும் மற்றவர்கள் அவருக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும். ஆனால் "நீதிக்குத் தலை வணங்கு" படத்தில் மட்டுமே, மற்றவர் பக்கம் நீதி இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும்.
    *
    எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்த படங்கள்: நாடோடி மன்னன், இராஜா தேசிங்கு, எங்க வீட்டுப் பிள்ளை, ஆசை முகம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,ஊருக்கு உழைப்பவன், எங்கள் தங்கம், தேர்த் திருவிழா, கலையரசி ஆகிய 18 படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்பவியல் முடிவாகவே இருக்கும். இருப்பினும் அவர் நடித்த பாத்திரங்கள், இறப்பதாக 11 படங்கள் அமைந்திருக்கும். என் தங்கை, நாம், மதுரை வீரன், இராஜா தேசிங்கு, இராணி சம்யுக்தா, பாசம், பணக்காரி, அடிமைப் பெண், நீரும் நெருப்பும், கலையரசி, நேற்று இன்று நாளை ஆகியன அப்படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர் நடித்த 11 படங்களுக்கு மு.கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார். நாம், இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம் ஆகியன அந்த 11 படங்கள்.
    *
    எம்.ஜி.ஆர். படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் 11 பேர் கதை-வசனம் எழுதியுள்ளனர். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம்,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர்.
    *
    எம்.ஜி.ஆருடன் மிக அதிகமான திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, கன்னித்தாய், முகராசி, அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், காவல்காரன், கணவன், புதிய பூமி, தேர்த் திருவிழா, சந்திரோதயம், காதல் வாகனம், கண்ணன் என் காதலன், எங்கள் தங்கம், தாய்க்குத் தலைமகன், ஒருதாய் மக்கள், இரகசிய போலீஸ் 115, அரசகட்டளை, தேடி வந்த மாப்பிள்ளை, நம்நாடு, இராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில், என் அண்ணன், நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம், பட்டிக்காட்டுப் பொன்னையா என்று 27 படங்களில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஜோடி இணைந்து நடித்தனர்.
    *
    எம்.ஜி.ஆருடன் மட்டுமே தமிழில் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர் இராதா சலூஜா. நடித்த திரைப்படங்கள் - இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க............ Thanks.........

  7. #1586
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    13-10-2019 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை சென்னை
    ராஜா அண்ணாமலை மன்றத்தில் அனைத்துலக எம்ஜிஆர் திரைப்பட திறனாய்வு சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் விலையில்லா மாத இதழ் மற்றும் நவீன் பைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய கவியின் ராஜ் மெலடிஸ் புரட்சித்தலைவரின் சூப்பர்ஹிட் பாடல்கள் மட்டும் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது நண்பர் கவிராஜ் இன்னிசை நிகழ்ச்சி மிக மிக அருமையாக இருந்தது.
    இந்த விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களும் திரைப்பட காமெடி நடிகர் சின்னிஜெயந்த் அவர்களும் திரைப்பட இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வந்திருந்த அனைவரும் பாராட்டினார்கள் மகிழ்ச்சியான தருணம் இது......... Thanks...........

  8. #1587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று கிண்டி ரயில் நிலையம் எதிரே உள்ள சுரங்க நடைபாதையில் நானும் நண்பரும் செல்லும்போது, இதை திறந்துவைத்தது யாரென்று தெரிந்து கொள்ள கல்வெட்டை படம்பிடித்தேன், முன்னிலை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், திறந்துவைத்தவர் கட்டிட மேஸ்தி ஏழுமலை என்று எழுதபட்டிருந்தது..........

  9. #1588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மல்யுத்த வீரன் தாராசிங் தமிழகத்தில் தன்னிடம் மோத யாருக்காவது வீரம் இருக்கிறதா என்று சவால் விட்ட போது - தமிழர்களின் மானம் காக்க வீரம் காக்க இதோ நான் இருக்கிறேன் என்னிடம் மோத தயாரா என்று பதில் சவால் விட்ட வீராதி வீரன் நம் புரட்சித் தலைவர் ! சவாலே சமாளி என்ற வாய் வீச்சு நடிகரின் குஞ்சுகளுக்கு வீர வாள் வீச்சு மன்னனின் இனங்கொண்ட சிங்க பக்தர்களின் பதிலடி பதிவுகள் சம்மட்டி அடிதான் ! உலக போற்றும் உத்தம தலைவரின் எளிய பக்தன் முருகு பத்மநாபன்..... France......... Thanks.........

  10. #1589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர்,கருணாநிதியை முதலமைச்சராக ஆக்கியதால்தான், புரட்சித்தலைவர் முதலமைச்சராக ஆக முடிந்தது,நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய தலைவருக்கு வாய்ப்புக் கிடைத்தது,அதனால்தானே அரசியல் உலகில் இத்தனை உச்சத்திற்கு செவ்வனே சென்று செயல் படுத்த இயன்றது........... Thanks Raja MK.,

  11. #1590
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகத்தில் முதன்முதலாக நடிகர் நாட்டைப் பிடித்து ஆட்சி செய்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர்........... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •