Page 153 of 402 FirstFirst ... 53103143151152153154155163203253 ... LastLast
Results 1,521 to 1,530 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1521
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1522
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1523
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1524
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1525
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரைப் பற்றி அதிமுக செண்டிமெண்ட் என்று படத்துடன் மோசமாக போட்டு குடும்பம் பற்றி விமரிசனங்கள் செய்து பேஸ்புக்கில் கண்ட முட்டாள்கள் எழுதினதை எல்லாம் எடுத்து மையம் திரியில் போட வேண்டியது.

    திருச்சியைச் சேர்ந்த தலைவர் பெயர் கொண்ட ஒரு நபர் புரட்சித் தலைவரை மிகவும் தரக்குறைவாக கேவலாமா எழுதுகின்றான்.

    இவைகளுக்கு எல்லாம் நாம்ப அதே முறையில் பதில் கொடுத்தால் மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று தெரியாத மாதிரி பதில் சொல்ல வேண்டியது.

    இவர்கள் எல்லாம் எப்பத்தான் உண்மை நிலைய புரிஞ்சு திருந்துவார்களோ தெரியலை. இந்த ஜென்மம் என்ன. ஏழு ஜென்மத்தில் கூட இவர்கள் திருந்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

  7. #1526
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கணேசனின் (சி)ரசிகர்கள் சிவா மற்றும் ராமச்சந்திரன் (இந்த திருப்பெயர் மட்டும் திருஷ்டி பரிகாரம்) ! இருவரின் தரம் தாழ்ந்த பதிவுகளை மய்யம் திரியில் காண நேர்ந்தது .
    கணேசனின் மறு வெளியீடு படங்களான திருவிளையாடல் , பாசமலர் , வீரபாண்டிய கட்ட பொம்மன் , ராஜா , ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன் ,போன்ற படங்கள் மண்ணை கவ்வியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .வசந்த மாளிகை (பேபி)ஆல்பட் திரை அரங்கில் ஓட்டப்பட்ட பரிதாபம் நாடறிந்தது . இந்த லட்சணத்தில் படு கேவலமாக தரக்குறைவாக பதிவுகளை வெளியிட்டு அவர்கள் தராதரத்தை காட்டியுள்ளார்கள் .
    எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்த 1936-1977 காலகட்டத்தில் எம்ஜிஆர் படங்கள் செய்த சாதனைகளை யாராலும் நெருங்க முடியவில்லை .

    1. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் .

    2. தென்னிந்தியாவில் 36 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் - எம்ஜிஆரின் " மதுரை வீரன் ".

    3. தென்னிந்தியாவில் அதிக வசூல் பெற்ற படம் "உலகம் சுற்றும் வாலிபன்" & " உரிமைக்குரல்"

    4. தென்னிந்தியாவில் 7 திரை அரங்கில் வெள்ளிவிழா ஓடிய ஒரே படம் " எங்க வீட்டுப்பிள்ளை"

    5. உலகமெங்கும் அதிகளவில்.......... லட்சக்கணக்கான...........கோடான கோடி கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர்...

    6. உலகமெங்கும் அதிகமான ரசிகர்மன்றங்கள் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் .

    7. உலக திரைப்பட வரலாற்றில் மிக கட்டுக்கோப்பான உடலுடன் எழிலான அழகான தோற்றம் கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர் .

    8. கடைசி வரை காதநாயகன் எம்ஜிஆர் .

    9. 1936-1977 வரை எம்ஜிஆர் கலை உலகில் மன்னாதி மன்னன் .

    10 1977- 2019 மறு வெளியீடுகளில் வசூலை வாரிக்குவித்த எம்ஜிஆர் படங்கள் .

    புகழுக்கு முடிவே இல்லாத எம்ஜிஆரை எந்த காலத்திலும் இந்த கணேசனின் தொல்லைகள் என்ற பிள்ளைகள் மரணிக்கும் வரை எம்ஜிஆரின் புகழை நொந்து வேதனையடன் மடிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமான செய்தி . நாம் என்ன செய்ய முடியும்?
    பரிதாபம் கொள்வோம் . நம்மால் முடிந்தது .......... Thanks.........

  8. #1527
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சரி நம்ப வேலையை பார்ப்போம். புரட்சித் தலைவர் புகழ் பாடுவோம்.

    நிலைமைகள் பற்றி எனக்கு தகவல் தெரிவித்த தம்பி சுந்தர பாண்டியனுக்கு நன்றி.

    சுந்தர பாண்டியன். உனக்கு ஒரு வேண்டுதல். இனிமேல் அந்தப் பக்கம் போகாதே. இங்கேயே பதிவு போடவும்.

    புரட்சித் தலைவரின் அருமையான படங்களுக்கு ரவிச்சந்திரனுக்கு நன்றி. கோயம்புத்துரில் 13 வாரமாக தொடர்ந்து புரட்சித் தலைவர் படங்கள் வெளியாகி சாதனை செய்கிறது. அதுபற்றி செய்திகள், படங்கள் போடுங்கள் ரவிச்சந்திரன். நன்றி.

  9. #1528
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973ம் ஆண்டில் இல்லஸ்ட்டேட் வீக்லி (Illustrated Weekly) என்ற ஆங்கில பத்திரிகையில் ஒருவர் அன்றைய இந்தி சூப்பர்ஸ்டார் ராஜேஸ் கண்ணா அரசியலுக்கு வந்தால் எப்படி வெற்றி பெறுவாரா,என்று கேள்வி கேட்டிருந்நார் அதற்கு ஆசிரியர் ராஜேஸ் கண்ணா இஸ் நாட் எம்.ஜி.ஆர் என பதில் சொல்லி இருந்தார். இந்தியாவே தலைவரின் தனித்தன்மை எவருக்கும் இல்லை என உணர்ந்திருந்தது........... Thanks..........

  10. #1529
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1530
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    (ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

    அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.

    திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

    `தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை எம்.ஜி.ஆரிடம் ஜேப்பியார் வழங்கினார்.

    திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

    "திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.

    கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.

    20_5_1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

    ஓட்டு விவரம்:_

    மொத்த ஓட்டுக்கள் 6,43,704

    பதிவான ஓட்டுக்கள் 5,05,253

    மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930

    சித்தன் (ப.காங்.) 1,19,032

    பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496

    சீமைச்சாமி (இ.காங்.) 11,423

    சூரியமுத்து (சுயே) 9,342

    சேதுராமதேவர் (சுயே) 695

    கோவிந்தசாமி (சுயே) 687

    வரததேசிகன் (சுயே) 502

    அங்கண்ண செட்டியார் (சுயே) 448

    செல்லாதவை 8,698

    அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அதில் அவர் கூறியிருந்ததாவது:_

    "திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."

    மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

    முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:_

    "கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •