Page 168 of 200 FirstFirst ... 68118158166167168169170178 ... LastLast
Results 1,671 to 1,680 of 1998

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1671
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,118
  Post Thanks / Like

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #1672
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  தோழர் மஸ்தான் சாஹிப் , பா.ம.. சென்னையில் 10 லட்சம் வசூல் தாண்டவில்லை அதற்கான ஆதார DCR., பார்த்திருந்தால் நம்புவதற்கு நமக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.. அப்போது அந்த படமும் ஓரளவுக்கு ஒட்டப்பட புத்தா பிக்சர்ஸ்ம், அப்ப ரொம்ப நட்பிலிருந்த சரவணா பிலிம்சாரும், avm நிறுவனத்தினரும் தான். காரணம் அவர்கள் தாம்(avm) விளம்பர பலூன், மற்றும் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் எது சிறந்த பாடல், அதற்கான காரணம் ஆகியனவற்றை கடிதமெழுதி தெரிவிபவர்கள் படத்தை பார்த்த டிக்கெட்டுடன் கலந்து கொள்ள சொல்லி அப்படி நடந்தது. அப்புறம் அதேபோல சில படங்களை( ந. ராத்திரி), உட்பட அதற்கப்புறம் தி. சூலம் 200 வது பட விழா சைடு ரீல் கலரில் படத்தின் இடைவேளையில் காண்பிக்கப்படும் என்ற பல விளம்பர உத்திகள் செய்யப்பட்டதை நாமெல்லாம் அறிந்தது பார்த்தது தானே.. ஆதலின் இது போன்ற இட்டுகட்டிய மிகவும் பொய்யான தகவல்களை பாவம் அவர்கள் முகநூல் வாட்சப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் வஞ்சனையில்லாமல் புளுகுகின்றனர்.. எதுவும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் என்றால் ஒத்துக்கொள்ளலாம்... Thanks..........

 4. #1673
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  நமது மக்கள் திலகம் திரியில் அட்டகாசமான 27001 பதிவுகள் பதிந்திருக்கும் திரு லோகநாதன் அவர்களை நம் உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்து உவகையுடன் பாராட்டுவோம்...

 5. #1674
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  என்ன தான் தங்கத்திலே ஆயிரம் கலப்படம் இருந்தாலும் அதற்குரிய மதிப்பு ஒரு நாளும் குறைந்ததில்லை.......
  அதைப் போல நம்ம
  புரட்சித் தலைவர்
  மீது ஆயிரந்தான் குறை சொன்னாலும் அது மக்களிடம் எடுபட்டதில்லை...
  ஏனென்றால்
  புரட்சித் தலைவர்
  ஒப்பீடில்லா உவமானம் !.......
  உலகத்தில் எந்த நாட்டிலும்
  எந்த ஒரு நடிகருக்கும்...
  எந்த ஒரு தலைவருக்கும்...
  இத்தனை காலங்கள் கடந்தும்... இப்படி ஒரு மதிப்பு மரியாதை இருந்ததில்லை.......... Thanks..

 6. #1675
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  உலகம் சுற்றும் வாலிபன் - பெங்களூர் நகர விநியோகஸ்தர்

  கே .சி .என் மூவிஸ் அதிபர் நாகராஜ் ஒரு முறை பேட்டியில்

  கூறியது .

  1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் 5 அரங்கிலும் மைசூர் நகரில் இரண்டு அரங்கிலும் பின்னர் படம் பெங்களூரில்
  3 அரங்கில் 105 நாட்கள் ஓடிய பின் கர்நாடக மாநிலத்தில் உள்ள
  25 நகரங்களில் ஓராண்டு காலம் சுழற்சி முறையில் தொடர்ந்து ஓடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த ஒரே படம் ..

  பெங்களூர் நகரில் முதல் வெளியீட்டில் 10 லட்சம் வசூல் செய்த முதல் தென்னிந்தியபடம் . மாநில மொழியான கன்னட படம் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை .மக்கள் திலகம் இங்கும்
  வசூல் சக்கரவர்த்தி என்று நிருபித்து காட்டினார் ............... Thanks.........

 7. #1676
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  என் தலைவன் ஒரு வாத்தியார்...

  புரட்சி தலைவரின் கண்ணீர் வரவழைக்கும் பேட்டி .......

  அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

  பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

  (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

  அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

  வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

  எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

  சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

  குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

  பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

  ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

  வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

  ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

  நல்ல பசி. இலை போட்டாச்சு.காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப்போயிருக்காங்க.

  சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

  நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

  வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

  கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

  கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

  ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

  அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

  கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

  எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

  எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

  இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

  எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

  அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

  ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

  எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

  இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

  புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

  விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்............. Thanks.........

 8. #1677
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  இந்த வாரம் சென்னை அகஸ்தியா 70 mm அரங்கில் திரையிடுவதாக இருந்த புரட்சி தலைவர் "நாளை நமதே" அடுத்த வாரங்களில் வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்... நன்றி........

 9. #1678
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,777
  Post Thanks / Like
  கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
  அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.

  இதன் தொடர்ச்சியாக
  முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
  ‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
  ‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

  அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
  அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.

  இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
  தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.

  #படித்தேன் பகிர்ந்தேன்............. Thanks.........
  .

 10. #1679
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,118
  Post Thanks / Like

 11. #1680
  Moderator Diamond Hubber ravichandrran's Avatar
  Join Date
  Aug 2012
  Location
  TIRUPUR
  Posts
  6,118
  Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •