Page 25 of 402 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #241
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உஷாரய்யா #உஷாரு

    கள்ளம் கபடமில்லா உண்மையான எம்ஜிஆர் பக்தர்களுக்காக இந்தப் பதிவு....

    பாசம் திரைப்படத்தில் வாத்தியார் 'திருடனாக' நடித்திருப்பார். ஒரு காட்சியில் ஒரு ஆபத்திலிருந்து சரோஜாதேவியைக் காப்பாற்றுவார்...

    அப்போது சரோஜாதேவி நம்ம வாத்தியாரிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு வாத்தியாரின் பதில் மிக அற்புதமாக இருக்கும்.

    அந்த உரையாடல் இதோ :

    ச.தேவி : என் கூட இப்படி தைரியமா வர்றீங்களே! நா உங்கள காட்டிக்கொடுத்தா என்ன பண்ணுவீங்க.?

    வா : மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தும் அவ ங்க நமக்கு தீமை செய்தால் அவர்களைப் பற்றி என்ன நினைப்ப?

    ச.தேவி : நா என்ன நினைப்பேன்...! அவங்க அறியாமையை நினைத்து வருத்தப்படுவேன்....!

    வா : நா அப்படியில்ல...
    என் அறியாமையை நினைச்சுத்தான் வருத்தப்படுவேன்...!!!

    என்னவொரு உண்மையான வார்த்தைகள்.....

    போலி எம்ஜிஆர் பக்தர்கள் விஷக்கிருமிகள் போல பரவிக்கொண்டிருக்கின்றனர்.
    தங்களை எம்ஜிஆர் பக்தர்களாகக் காட்டிக்கொண்டு, நம்மிடையே உள்ள ஒற்றுமையைக் குலைத்து, குழப்பம் விளைவித்து, நம் முதுகின் மேலேயே சவாரி செய்வது தான் அவர்களின் குறிக்கோள்...

    இப்போது நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இதுபோன்ற ஆசாமிகள் தான் காரணம்...
    நட்பிலிருந்தால் விரட்டியடியுங்கள்...
    அவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காதீர்கள்...

    வாத்தியாரைப் போற்றுவது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கட்டும்...

    நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் உஷாராயிருங்க....ஜாக்கிரதை!!!!!......... Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #242
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு
    மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரையும் விமர்சித்தார்.

    எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

    பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது.

    வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.

    ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.

    அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

    ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.

    பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பியபின் ஒருநாள்,
    கோட்டையில் இருந்து வீட்டுக்குக் காரில் புறப்பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர்பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.

    ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்து கொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும்.

    அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதிகளும் உங்களுக்குத் தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவராக நியமித்திருக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.

    சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’

    - தி இந்து .

    *ம.பொ.சி பிறந்த நாள் நேற்று.......... Thanks wa.,
    .

  4. #243
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நல்லதைச் #செய்ய #நேரம் #காலமா?

    திருவேற்காடு கோயிலில் சமபந்தி போஜனத்துக்காக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் வந்தபோது, அவர் முன்னிலையில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள வந்திருந்தனர். தலைவர் தன் பொற்கரங்களால் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன.

    அப்படி நடந்துகொண்டிருக்கும் போது ஒரு தம்பதி, மணமகனிடமிருந்து தாலியைக் கையில் வாங்கிய எம்ஜிஆர் ஒரு நிமிடம் அதிர்ச்சியுற்றார். ஏனெனில் அந்தத் தாலி கவரிங்கில் செய்யப்பட்டிருந்தது. அத்தம்பதிகளின் ஏழ்மை நிலையை விசாரித்த செம்மல் கண்கலங்கி விட்டார்..

    "தாலிக்குத் தங்கம் பயன்படுத்துவதற்குக் காரணம், புனிதமான அந்த மாங்கல்யம் துருப்பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்...அதுபோல அவர்களின் வாழ்வும் துரு என்னும் துன்பம் நேராமல் செழிக்கும் என்பதற்காகத் தான் பெரியோர்கள் அக்காலத்தில் வழிவகுத்துள்ளார்கள்...
    அதனால் கவரிங் நகையில் தாலியைப் போடுவதா ? என்று வருந்தினார்...

    அடுத்த சில நிமிடங்களில், "கோவில்கள் சார்பில் ஏழைகளின் திருமணமோ, கலப்புத் திருமணமோ செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்கவேண்டும்..." என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்...

    மேலும் ஆதரவற்ற பெண்களுக்கு "திருமண நிதி உதவித்திட்டம்", தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியதோடு, ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் பெண்களுக்கு ₹1000/- உதவித்தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

    இப்படி மக்களின் குறைகளைப் பார்த்து...பார்த்து...பார்த்து...வருந்தி...
    அதன் மூலம் தான் தனது ஒவ்வொரு மக்கள் நலத்திட்டத்தையும் உருவாக்கி செயல்படுத்தினார்...
    மேலும் அந்த முடிவை..ஸ்பாட்டிலேயே எடுத்துவிடுவார். நல்லதை செய்ய நாள், நேரம், காலம் பார்க்கமாட்டார்........... Thanks wa.,

  5. #244
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிவா ஆரம்பத்திவிட்டார்.

    அதாவது "கோட்டை இல்லை . கொடியும் இல்லை.. எப்பவுமே சிவாஜிதான் ராஜா......கட்சி ஆட்சி எதுவும் இல்லாமல் இறந்து 18 ஆண்டு கழிந்த பின்னரும் ஆர்ப்பரிப்போடு கொண்டாடும் ஒப்பற்ற சிவாஜி படை"

    கோட்டையும்][சூரக்கோட்டை] கொடியும், தாடியும் "இருந்தது" ஒன்றும் எடுபடவில்லை!!! ராஜா திரைப்படத்தில் நடித்ததால் ஒருவர் ராஜாவாக முடியாது!!! கட்சி ஆட்சி எப்படி இருக்கமுடியும் ...ஒருவர் கூட தேறவில்லை...அதற்கு அவரது கழகத்தின் உறுப்பினர் மீதி பழியை போட்டுவிட்டு கட்சி மூடப்பட்டது அப்புறம் ஜனதா தளம் அதுவும் "டுமீல்" - எனவே சிவாஜி படையும் ..... "பட்டை" என்பது தானே பொருந்தும் ........ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...எது இருந்தால் போதும்....குடிமகனே பெரும் குடிமகனே.

    தெளிந்த பின் நிதானத்துடன் "தெளிவாக எழுதவும்". ������........ Thanks wa.,

  6. #245
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கதாநாயகனாக நடித்த [ ராஜாவாக] கடைசியில் சிறு கதா பாத்திரங்களில் [சிப்பாயாக] நடிகர் திலகம் நடித்தார்... ஆனால் அதில் அவருக்கு "உடன்பாடு இல்லை"... என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா!!!!

    அப்படி சிப்பாயாக நடிக விருப்பம் இல்லை ...என்றால் எதற்கு நடித்தார்???? உடனே கலை மீது இருந்த ஆர்வம் என்று சிலர் சொல்லுவார்கள்!!! ஆனால் இந்த காணொளி கட்சி அப்படி சொல்லவில்லையே!!!������(Actor Sivakumar Interview)...... Thanks wa.,

  7. #246
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Pudhiya Boomi

    Theatrical Poster
    Directed by
    Chanakya
    Produced by
    P. K. V. Shankaran
    Aarumugam
    Written by
    S. S. Thennarasu
    Screenplay by
    V. C. Guhanathan
    Starring
    M. G. Ramachandran
    Jayalalitha
    Sheela
    M. N. Nambiar
    Nagesh
    Music by
    M. S. Viswanathan
    Cinematography
    P. N. Sundaram
    Edited by
    R.Devarajan
    Production
    company
    J. R. Movies
    Distributed by
    Jayanthi Films
    Release date
    27*June*1968
    Running time
    165 mins
    Country
    India
    Language
    Tamil
    Budget
    ₹ 20*lakhs
    Box office
    ₹ 50*lakhs......... Courtesy : wa.,

  8. #247
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று 26-06-1950 - 26-06-2019 மக்கள் திலகம் காவியம் "மந்திரி குமாரி" 69 ஆண்டுகள் நிறைவு கண்டு 70ம் வருடம் துவக்கம்... மகத்தான படைப்பு...

  9. #248
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்........... Thanks wa.,

  10. #249
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப் பெண் !
    ___________________
    இந்த ஒரு படத்தின் உழைப்பிற்கு மட்டுமே மக்கள் திலகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் பட்டம் அளிக்கலாம் ..........
    இந்த படம் ஒடினால் நான் மன்னன் இல்லையேல் நாடோடி என்று நாடோடி மன்னன் படத்திற்காக கூறினார்... ஆனால் மற்ற இரண்டு படங்களுக்கும் இது தான் நிலமை ...
    இவர் மேலை நாட்டில் பிறந்திருந்தால் ? இங்கு கிடைத்த அங்கிகாரத்தைவிட பல மடங்கு கிட்டியிருக்கும் ...
    அம்மையார் இந்த பாட்டில் கலக்கிருப்பார் ...

    ஹயாத் !........... Thanks wa.,

  11. #250
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலூர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்... வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த" காவல்காரன்" படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது... பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது

    அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
    அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...

    பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.

    ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்..........

    நன்றி,: குணசேகர் சகோ........ Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •