Page 259 of 402 FirstFirst ... 159209249257258259260261269309359 ... LastLast
Results 2,581 to 2,590 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2581
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (31/01/20) திருச்சி முருகனில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி காவியமாகிய டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2582
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அனுதாப செய்தி .
    --------------------------

    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பில் மறைந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும்,கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும்,முன்னாள் வக்ஃப் வாரிய தலைவரும்,நமது இதய தெய்வம் ,பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பை பெற்றவரும் ஆகிய ,மரியாதைக்குரிய திரு.தமிழ் மகனஉசேன் அவர்களின் மூத்த மகன் திரு.ஷாஜி (அ. தி.மு.க. தலைமை கழக பிரச்சார மேடை பாடகராக விளங்கியவர் ) மறைந்தார்
    என்கிற செய்தி அறிந்து துயரமும்,அதிர்ச்சியுமஅடைந்தது டன், திரு.தமிழ் மகன் உசேன் * அவர்களுக்கும் ,அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்.

  4. #2583
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் பொங்கல் மலர் -ஜனவரி 2020
    -----------------------------------------------------------------

    "சதி லீலாவதி " படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததற்கு பின்னாலே பொங்கல் வெளியீடாக வந்த* மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்திற்கு பெரும் பங்குண்டு .*

    எம்.ஜி.ஆர். பானுமதி ஜோடியாக நடித்த அந்த படம்தான் தமிழில் வெளியான முதல் வண்ணப்படம் . அது கோவா கலரில் உருவாக்கப்பட்டிருந்தது .

    அலிபாபாவும் 40* திருடர்களும் படத்தை தொடர்ந்து பொங்கலன்று வெளியான எம்..ஜி.ஆர். படங்களில் "சக்கரவர்த்தி திருமகள் ", "பணத்தோட்டம் " வேட்டைக்காரன் , "எங்க வீட்டு பிள்ளை " , "அன்பே வா " , "தாய்க்கு தலைமகன்", "ரகசிய போலீஸ் 115" , "மாட்டுக்கார வேலன்* "ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன .*

    1965ம் ஆண்டு சாணக்யாவின் இயக்கத்தில் வெளியான "எங்க வீட்டு பிள்ளை " படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் . வாகினி ஸ்டுடியோவின் சார்பில் தயாரிக்கப்பட்ட* அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது .* அது மட்டுமின்றி வசூலிலும் பல புதிய சாதனைகளை படைத்திருக்கிறது .1965ல் வெள்ளிவிழா ,சென்னையில் 3 அரங்குகள், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் ஓடியுள்ளது .* இந்த சாதனையை எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும்வரை எந்த படமும் முறியடிக்கவில்லை .

    அந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதால் பல திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கும்படி ஏ.வி.எம். நிறு வனத்தினரை* வற்புறுத்த தொடங்கினார்கள் .**

    அந்த சமயத்தில் ஏ.வி.எம். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனரான ஏ.சி.திருலோகச்சந்தர் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்ததால் தங்களுடைய தந்தையுடைய அனுமதியோடு எம்.ஜி.ஆரை சந்தித்த ஏ.வி.எம்..குமாரர்கள்* தங்கள் நிறுவனத்திற்காக அவர் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .*

    அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருந்ததைப் போல உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிப்பதற்காக கேட்ட சம்பளம் 3 லட்சம் ருபாய் .

    வாகினியின் தயாரிப்பான எங்க வீட்டு பிள்ளை 1965ம்* ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றதால் 1966ம் ஆண்டு பொங்கலுக்கு தங்களது தயாரிப்பில் எம்.ஜிஆர். நடிக்கின்ற படமான "அன்பே வா "வெளியாக வேண்டும் என்ற ஆசை நிறுவனத்திற்கு ஏற்பட்டது .**


    அப்போது எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகனான ஏ.வி.எம்.சரவணன் .அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் .

    அந்த உரிமையில் தங்களது படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் அவர் கேட்ட போது* , தனது நிர்வாகியாக பணியாற்றி கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த "நான் ஆணையிட்டால் "* படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக முதலில் சரவணனிடம் சொன்ன எம்.ஜி.ஆர். எதற்கும் ஆர்.எம்.வீரப்பனிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்* என்று சரவணனிடம் தெரிவித்தார் .

    அதன் பின்னர் ஆர்.எம்.வீரப்பனின் சம்மதத்துடன் "அன்பே வா " படத்தை பொங்கலுக்கு வெளியிட ஒப்புக் கொண்ட எம்.ஜி.ஆர். அதற்காக தனனுடைய சம்பள தொகையில் 25 ஆயிரம் ரூபாயை அதிகரித்து தருமாறு மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டுக் கொண்டார்*

    எங்க வீட்டு பிள்ளை படத்தை போலவே , "அன்பே வா " படமும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது ..**

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #2584
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  7. #2585
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை ஞாயிறு (02/02/20) முதல் திருவள்ளூர் மீராவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
    சென்னை சரவணாவில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நம் நாடு "
    இணைந்த 3 வது* வாரம் .

  8. #2586
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனி #உங்கள #பாரக்கமாட்டோம்

    அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...

    கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.

    ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...

    "ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.

    இது நித்தமும் தொடர...

    ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.

    மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....

    ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...

    அருகே சென்று...
    "ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்

    நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.

    "ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...

    பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.

    அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...

    "இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....

    இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
    ...பள்ளியில் இதான் பேச்சு...

    வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
    வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்............... Thanks.........

  9. #2587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படங்களில்
    கத்திச் சண்டையின்போது இரண்டு கைகளாலும் வாள் வீசுவதில் வல்லவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .

    அவரைப்போல் வாள் வீசும் சில
    ஸ்டண்ட் நடிகா்கள் உண்டு .

    ஆனால் கதாநாயக நடிகா்களில் எம்.ஜி.ஆரைப் போன்று சரளமாக வாள் வீசுபவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டதில்லை .

    கத்திச் சண்டை , சிலம்பம் ,
    வாள் சண்டை , குதிரையேற்றம் இவற்றிற்கான பயிற்சிகளை எம்.ஜி.ஆா் பெற்றிருந்தாா் .

    ஆரம்பக் காலங்களில்
    சிறு வேடங்களில் அவா் நடித்தபோதே , அப்படங்களின் கதாநாயகா்கள் மிரளும் வகையில் கத்திச் சண்டைகளில் அசத்தியிருக்கிறாா் .

    நாயகனான பிறகு
    வாிசையாக நடித்த ராஜாக்கள் கதை தொடா்புடைய படங்களில் எம்.ஜி.ஆாின் கத்திச் சண்டை ரசிகா்களை வெகுவாக ஈா்த்தது .

    'ராஜகுமாாி' , 'மந்திாிகுமாாி' ,
    'மா்மயோகி' 'மதுரைவீரன்', 'அலிபாபாவும் 40 திருடா்களும்' ,'நாடோடி மன்னன் ', 'ராணி சம்யுக்தா', 'ராஜா தேசிங்கு' உள்ளிட்ட பல படங்களில் அமைந்த கத்திச் சண்டைக் காட்சிகளில் தன்னை 'மன்னாதி மன்னன் ' என்று நிரூபித்திருக்கிறாா் .

    அவரை விமா்சித்தவா்கள் , அட்டைக் கத்தி வீரா் என்றாா்கள் . ஆனால் அசத்தலான புன்னகையுடன் அவா் வாள் சுழற்றும் காட்சிகள் திரையரங்கில் வசூலை அள்ளும் .

    எம்.ஜி.ஆா்., கடைசியாக நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ' படம் ராஜா கதை என்பதால் அதிலும் கத்திச் சண்டைதான் கிளைமாக்ஸ் வரை நீண்டது .

    எம்.ஜி.ஆருக்கு வாள் சுழற்றுவதில் இருந்த ஆா்வத்தால் , 'மீனவ நண்பன்' என்ற சமூகப் படத்தில்கூட கத்திச் சண்டை இடம் பெற்றது .

    குடியிருந்த கோயில் படத்தின் பாடல் காட்சியில்கூட 'உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 'என்று நாயகியிடம் வாளுடன் பாடியவா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் .......... Thanks.........
    .

  10. #2588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வெளிநாட்டு தலைவர்களும் மதித்த தலைவர் எம்.ஜி.ஆர் | MGR History | துரை கருணா

    #MGRHistory #துரைகருணா #DuraiKaruna #MGR #Jayalalitha #ADMK #DMK #Rajinikanth #KamalHassan #TTVDhinakaran #ACShanmugam #Queen #Thalaivi #MGRamachandran #Puratchithalaivar #ponmanachemmal #MakkalThilagam #MGRHistory #CM #TNCM #ArvindSwamy

    Link : ......... Thanks.........

  11. #2589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  12. #2590
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தைப் பற்றி திருமதி கே.ஆர்.விஜயா
    அவர்கள் ….

    சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து….

    "ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒளிச்சல் இல்லாமல்.
    நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.
    பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம், நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார. நாங்கள் இந்தியாவில் இருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.

    சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ஆமாம் ஆமோதித்து பதிலளித்தேன்.

    நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.

    ஆச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார்.
    சற்று குழப்பத்துடனேயே 'அவரைப் பற்றி துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்' என்று கேட்ட போது..
    'ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே' என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும்...

    எங்கள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இப்படிச் சொன்னதும் அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.

    அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.

    'எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை.

    அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார்' இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர்.

    அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம் சொல்லுங்கள் என்று அவரை அவசரப்படுத்தினோம்.

    மேலும் தொடர்ந்தார். 'ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன.

    திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிபில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சீனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

    ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம் தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது.

    அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

    விஷயத்தைக் கேள்விப் பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து எம்.ஜி.ஆர் அஞ்சலி செலுத்தினார்.

    வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட் செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது மிகச் சாதாரணமான விஷயமல்ல.

    இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே.

    இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன' கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை"......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •