Page 203 of 402 FirstFirst ... 103153193201202203204205213253303 ... LastLast
Results 2,021 to 2,030 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2021
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2022
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -17/11/19
    --------------------------
    திருமணத்தை சமாதியில் நடத்தாதீர் .
    ----------------------------------------------------------------
    டி .ஈஸ்வரன், சென்னை .
    அன்று, வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலத்தில் , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.*

    அப்போது வஷியில் அ. தி.மு.க.* தொண்டர் ஒருவரின், வீட்டு கூரை மீது , இரட்டை இலை சின்னம் அலங்கார* விளக்குகளுடன் எரிந்து கொண்டிருந்தது . அங்கு எம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடல்களும் ஒலி த்துக் கொண்டிருந்தன .

    உடனே, காரை நிறுத்திய எம்.ஜி.ஆர். அந்த* வீட்டிற்குள் சென்றார் .* அவரை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியில் மணமகன் உறைந்து போனார் .* பரிசு தந்த எம்.ஜி.ஆரிடம் , சற்று இருங்கள்* என மர* நாற்காலியில் அமர வைத்து சென்றார் .மணமகன் சற்று நேரத்தில் ,தாலி எடுத்து மணமகளை யும் அழைத்து வந்தார் .

    நீங்கள் இங்கு வந்த நேரமே , எனக்கு நல்ல நேரம் .* ஆகையால் நீங்களே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார் மணமகன் .* அதற்கு எம்.ஜி.ஆர்.** உங்கள் வீட்டு பெரியோர் குறித்த நேரத்தில் , குறிப்பிட்ட இடத்தில தான் திருமணம் நடக்க வேண்டும் .* கண்ட நேரத்தில், கண்டஇடத்தில் நடத்தக் கூடாது*என்று கூறி விட்டு சென்றாராம் .

  4. #2023
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் - 17/11/19
    ---------------------------
    இது உங்கள் இடம்*
    -------------------------------

    எம்.ஜி.ஆர். பாணி ,* ரஜினிக்கு வெற்றி கிட்டுமா ?
    ---------------------------------------------------------------------------

    என். சாணக்கியன் - மதுரையில் இருந்து அனுப்பிய இ* மெயில் கடிதம்*

    தமிழகம் முழுவதும்* தேர்தல் பிரச்சாரம் செய்து , தி. மு.க. ஆட்சியை பிடிக்க ,பெரிதும் உதவினார் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதை விட்டு விட முடியாது*என்று எம்.ஜி.ஆர். சொன்னதால்தான், அமைச்சர் பதவியை தர மறுத்தார் கருணாநிதி .

    பல காரணங்களை அபாண்டமாக எம்.ஜி.ஆர். மீது சுமத்தி , தி. மு.க. வை விட்டு நீக்க காரணமாக இருந்தார் கருணாநிதி .* அதற்கு எல்லாம் , துவண்டு விடாமல் ,சினிமாவிற்கு முழுக்கு போட்டு, அ. தி.மு.க. வை துவக்கினார் எம்.ஜி.ஆர்.*

    தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டார் .* அவரை பார்க்க , மக்கள் இரவு முழுவதும், விடிய விடிய*கொட்டும் பனியிலும்* காத்திருந்தனர் .* எங்க வீட்டு பிள்ளையாக எம்.ஜி.ஆரை தத்து எடுத்து ,சீராட்டி பாராட்டினார் , தமிழக தாய்மார்கள் .* இதுவரை, வேறு எந்த நடிகருக்கும் அந்த பெருமை கிடைக்கவில்லையே .**

    எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மறைவுக்கு பின் ,அ. தி.மு.கே. அம்பேல் ஆகிவிடும் என எதிர்பார்த்தனர் பலர் . அவர்கள் ஆசையை எல்லாம் நிராசையாக ஆக்கிவிட்டனர் முதல்வர் இ*. பி.எஸ். மற்றும் துணை முதல்வர்*ஓ.பி.எஸ். என்பது மறுக்க முடியாத உண்மை .**

    சினிமா நடிகர்கள் அரசியலில் இறங்கி, ஆட்சியை பிடிப்பது என்பதெல்லாம் இனி*தமிழகத்தில் எடுபடாது . அரசியல் எனும்* நெருப்பாற்றில் நீந்தியோர் என தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டா லினாலேயே* முதல்வர் ஆகமுடியவில்லையே*

    என் வழி தனி வழி என நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய வசனத்தை*உச்சரிக்கும் ரஜினி* கடைசி வரை, நடிகனாகத்தான் கோலோச்ச முடியும் .

    அதை விட்டு, பாம்பையும், கீரியையும் மோதவிட்டு , வேடிக்கை காட்டுவதாக*மக்களின் காதுகளில் மலர் சூடும் வித்தைக்காரனுக்கும் ,அரசியல் கட்சி துவக்கி*ஆட்சியை பிடிப்பேன் , என பூச்சாண்டி காட்டும், நடிகர் ரஜினிக்கும் ,வேறுபாடு இல்லை .

    எம்.ஜி.ஆர். மாதிரி நானும், முதல்வர் ஆகும்வரை தொடர்ந்து நடிப்பேன் .அரசியலில் தகுந்த ஆளுமை இல்லாததால், தமிழகத்தில் வெற்றிடம் தொடர்கிறது என நடிகர் ரஜினி திருவாய் மலர்ந்துள்ளார் .

    மாங்கா மடையர்களாக தமிழக மக்கள் இருக்கும் வரையில் இதுமாதிரி அதிரடி அறிவிப்புகளை அள்ளி விடுவார்* நடிகர் ரஜினி .

  5. #2024
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் பல ஆண்டுகளாக தலைவர் புகழ் பாடடுவதே தனது கடமை என்ற நோக்கத்தோடு இயங்கி வந்தாலும், தலைவரின் தலையாய கொள்கையான ஏழைகளுக்கு உதவுதல் என்ற உயரிய இலட்சியத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைவேற்றி வருவது அனைவரும் அறிந்ததே. சங்கத்தின் கௌரவத்தலைவர் தொடங்கி கடைசி உறுப்பினர் வரை அனைவரும் இது போன்ற நற்செயல்களில் அவ்வப்போது தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். புரட்சித்தலைவரின் ஆன்மாவுக்கு இதைவிட மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் வேறு இருக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் நலன் அவர்களது முன்னேற்றம் இதை மட்டுமே தனது கொள்கையாக கடைபிடித்து, என்ன நேரினும் அதிலிருந்து சற்றும் பிறழாமல் கடமையாற்றிய கலைக்கடவுள் மக்கள் திலகம் மட்டுமே. கடந்த 11ம் தேதி சங்க கூட்டம் வடபழனியில் இனிதே நடந்தேறியது. இக்கூட்டத்தினூடே திரு முஹம்மது மீரான் என்ற ஒரு ஏழை குடும்பத்து மாணவருக்கு கல்விக் கட்டணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தாம்பரத்தில் நடைபாதை கடை நடத்தி வரும் திரு முஹம்மது மீரான் அவர்கள் தனது மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாமற் போனதால், பள்ளி நிர்வாகம் அம்மாணவனை இடைநிலை நீக்கம் செய்திருந்தது. இதனால் அவரது படிப்பே கேள்விக்குறியாகிப் போனது. உடனடியாக வரும் 15ம் தேதிக்குள் ரூபாய் ஆறாயிரம் கட்டணமாக செலுத்த வேண்டுமென்றும், தவறினால் தனது மகன் ஒரு வருட படிப்பை இழக்க நேரிடும் என்று மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கத்தின் உறுப்பினர் மூலமாக இந்த விஷயம் சங்கத்தலைமைக்கு தெரிய வந்தது. உடனடியாக கட்டணத்தொகையை சங்கத்தின் மூலம் திரட்டி சங்கத்தின் கெளரவத் தலைவர் அரிமா திரு மணிலால் மூலம் வழங்கப்பட்டது. சாதி மத பேதங்கள் அறியா புரட்சித்தலைவர் பக்தர்கள் சரியாக மீலாது நபியன்று ரூபாய் ஆறாயிரத்தை சங்கக் கூட்டத்தில் வழங்கியது பெருமைக்குரிய ஒன்றாகும். பெற்றுக் கொண்ட திரு மீரான் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளியில் கட்டணத்தை செலுத்தி தனது மகன் படிப்பை தொடரச் செய்திருக்கிறார்.

    "தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்" என்று புரட்சித் தலைவர் பாடிச் சென்றிருக்கிறார். இன்று அவரது பக்தர்கள் தன் தலைவன் கனவை நனவாக்க முயன்று வருகின்றனர்.
    "எல்லாப் புகழும் புரட்சித் தலைவரருக்கே". இது நான் சொல்லவில்லை, மீரான் மிகவும் நெகிழ்ந்து நா தழுதழுக்க நன்றி தெரிவித்த போது அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச் சங்கத்தால் சொல்லப்பட்டது........... Thanks.........

  6. #2025
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது! : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-15

    எம்.ஜி.ஆர்

    தன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

    ...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

    அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!

    பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.

    எம்.ஜி.ஆர்

    இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.

    மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

    'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.

    எம் ஜி ஆர்

    சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது.

    சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி........... Thanks.........

  7. #2026
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் விமர்சகர்* திரு.*ரவீந்திரன் துரைசாமிக்கு பத்திரிகை மற்றும் அரசியல் விமர்சகர் திரு.துரை கருணா கடும் கண்டனம் .

    ----------------------------------------------------------------------------------------------------------------------------

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி பற்றி உண்மைக்கு புறம்பாகவும், அபாண்டமாகவும், அநாகரீகமாகவம் செய்திகள் வெளியிட்ட திரு.ரவீந்திரன் துரைசாமிக்கு திரு.துரை கருணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு போதும் மத்திய அரசுக்கு தலை வணங்கியும்,*சரணடைந்தும் , ஆட்சியை நடத்தியதில்லை.* தமிழகம் வளம் பெறவும், பல வளர்ச்சி திட்டங்கள் நடைபெற நிதி வேண்டியும், பல நல திட்டங்கள் , நிறைவேற்றவும், பொதுநோக்கு பார்வையுடன் மத்திய அரசுடன் சுமுக உறவை நாடினார் .* எமெர்ஜென்சி காலத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முன்னாள் பிரதமர் இந்திராவிடம் சரணடையவில்லை* அப்போதைய மத்திய அரசு மாநில கட்சிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய முற்பட்டபோது அ. தி.மு.க. வை* அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்று அகில இந்திய கட்சியாக அறிவித்தார் .* எந்த பிரதமரிடமும்* அவர் சரணாகதி அடைந்த வரலாறில்லை .* ஒருமுறை பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான நிதி திரட்ட டெல்லியில் பேச்சு வார்த்தைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தபோது நிதி அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.* பின்பு தமிழக முதல்வர் அதை எதிர்த்து*வெளிநடப்பு செய்து சென்னை திரும்பினார் .* உடனடியாக மத்திய அரசு பணிந்து*சீருடைக்கான நிதியை தருவதாக அறிக்கை வெளியிட்டது .
    மற்றொரு சமயம் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது , மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உடனடியாக தேவையான அளவு அரிசி மத்திய தொகுப்பில் இருந்து மாநிலத்திற்கு ஒதுக்குமாறு கேட்டு கொண்டதற்கு மத்திய அரசு மறுத்தது .எனவே முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக மக்களின் கோரிக்கைக்காக கடற்கரையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் .* அன்று மாலையே மத்திய அரசிடம் இருந்து உண்ணாவிரதத்தை உடனே கைவிடுமாறும் தேவையான அரிசியை மத்திய அரசு அனுப்பும் என்று தகவல் வந்தது . இது போன்று எவ்வளவோ விஷயங்கள் நடந்துள்ளன. உண்மை நிலை அறியாமல் பொய்யான*செய்திகளை தெரிவித்தமைக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டார் .

    உடன் திரு.ரவீந்திரன் துரைசாமி, தான் கேள்விப்பட்ட விஷயங்களை தான் வெளியிட்டதாக தெரிவித்தார்.* நீங்கள் கேள்விப்பட்டவை அனைத்தும் உண்மையல்ல .எனவே செய்திகளை வெளியிடும் முன்பு* அவற்றின் உண்மை தன்மைகளை தெரிந்து வெளியிடுங்கள்.* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பற்றி*அவதூறான கருத்துக்களை இனிமேலும் வெளியிட வேண்டாம் எனவும் திரு.துரை கருணா கேட்டுக் கொண்டார் .

  8. Likes orodizli liked this post
  9. #2027
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks.........

  10. #2028
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    https://www.sangam.org/2008/11/Sivaj...n.php?uid=3155

    “Many of the people with me were professional politicians. They had to remain in politics necessarily to make a living. I was compelled to start a party for their sake, although I did not require it.” Egged on by those who pampered him, his TMM party contested the January 1989 Tamil Nadu state legislative assembly elections, in alliance with one faction of AIADMK (that of MGR’s wife Janaki Ramachandran). Of the 49 TMM candidates who stood for election, none were elected. Sivaji himself lost at Tiruvayaru constituency to DMK candidate Chandrasekaran Durai by a margin of 10,643 votes. He notes, “The votes that I secured came from people of another party. It is true that I was defeated. This was a big disappointment and a very difficult situation that I faced. What could one do? When we take wrong decisions, we have to face disappointments.”........... Thanks...

  11. #2029
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    காமதேனு வார இதழ்*

    ----------------------------------

    நடிகர் கமலஹாசனின் சிறு வயதில், செவிலி தந்தையாக திரு.ராமசாமி என்பவர்*இருந்து வந்துள்ளார். கமலஹாசனின் குடும்பத்தினருக்கு பரமக்குடியில் நல்ல*பெயரும் , புகழும், மரியாதையும் இருந்த நேரம்.* எனவே பரமக்குடியில் உள்ள*அரங்கிற்கு அந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரங்கில் இலவசமாக பார்க்கும் அனுமதி இருந்தது* *அந்த வகையில் 1956ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " மதுரை வீரன் " படத்தை , கமலஹாசன் 2 வயது சிறுவனாக இருக்கும்போது பெரியவர் ராமசாமியுடன் 110 நாட்கள் தொடர்ந்து பார்த்ததாக தெரிவித்துள்ளார் .* பரமக்குடியில் மதுரை வீரன் 110 நாட்கள் ஓடியது என்பது*குறிப்பிடத்தக்கது .

  12. #2030
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *கிராமத்திலிருந்து திடீரென்று கூப்பிட்டு எடப்பாடியாரை யாரும் முதல்வர் ஆக்கவில்லை.. அவருடன் தன்னை ரஜினி ஒப்பிட்டு கொள்ளக்கூடாது*..


    *அதேபோல எம்ஜிஆரோடு ஒப்பிட்டுக் கொண்டு தானும் முதல்வர் ஆவேன் என்று ரஜினி நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.*

    *அறியாமையின் வெளிப்பாடு இது..*

    *மக்கள் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று கொங்கு மண்டல ஈஸ்வரன் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.*

    *நேற்று விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினி, 2 வருஷத்துக்கு முன்னாடி முதலமைச்சர் ஆவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.*

    *4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று எல்லாருமே அன்னைக்கு சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது... நேற்று அதிசயம் நடந்தது... இன்றும் அதிசயம் நடக்கிறது... நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும்.." என்றார்.*

    *ரஜினியின் இந்த பேச்சு வழக்கம்போல சர்ச்சை, சலசலப்பு, குழப்பம், சந்தேகங்களுக்கு உட்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது*

    *ரஜினி எந்த அர்த்தத்தில் இதை பேசினார், ஏன் பேசினார் என்ற விவாதங்களும் எழுந்தபடியே உள்ளன*

    *இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ரஜினியின் இந்த பேச்சுக்கு தன் கருத்தினை பதிவு செய்துள்ளார்*

    *கொங்கு மண்டல ஈஸ்வரனின் காட்டமான அறிக்கை இதுதான்:*

    *முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கனவிலும் முதல்வராக நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சில் சொல்லியிருக்கிறார். எதிர்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது..*

    *முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அந்த இயக்கத்தின் கிளை செயலாளராக, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..*

    *அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சரானவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்..*

    *ரஜினி2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அன்றைய பிரதம வேட்பாளர் மோடி அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே மோடிக்கு ஆதரவாக பணியாற்ற வந்தார்கள். எந்தளவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருந்தது என்பது அன்றைய தேர்தலில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்..*

    *ரஜினியை சுற்றி இருக்கின்ற 10 பேர் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ரஜினியின் இந்த பேச்சு..*

    *அவருடைய இலக்கு எம்ஜிஆருடைய ஓட்டுக்களை பிரிப்பது. இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர் பிரிக்கலாம். தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.*........... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •