Page 58 of 402 FirstFirst ... 848565758596068108158 ... LastLast
Results 571 to 580 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #571
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  அன்று விஜயவாகினியில் எம்.ஜி ஆர்.ன் " பாக்தாத் திருடன் ", படப்பிடிப்பு .........

  கதைப்படி குழந்தை எம்ஜிஆரை எதிரிகள் கொலை செய்ய திட்டமிடுகின்றனர் இத அறிந்த தாய் எஸ்.ன் லட்சுமி குழந்தை எம்ஜிஆரை பசு மாட்டு மடியில் கட்டி, மாட்டை விரட்டி தப்பிக்க செய்துவிடுகிறார்

  அதே நேரம் பின்னாலிருந்து ஒரு புலி வந்து எஸ். என் .லட்சுமியை துரத்தி கொண்று விடும் புலியோடு எஸ் ஏன் லட்சுமி மோதிப்புறளும் இந்த காட்சியில் டூப்பாக துணை நடிகை சூர்ய குமாரி புலியோடு சண்டை போடுகிறார்

  உண்மையிலே எதிர்பாராத விதமாக புலி சூர்யகுமாரியின் நெஞ்சை குதறி விடுகிறது

  செய்தி அறிந்த எம்ஜிஆர் உடனடியாக விரைந்து வந்து சூர்ய குமாரியை மருத்துவ மனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க செய்கிறார்

  மூன்று மாத சொந்த சிகைச்சையில் தாய் தந்தை இல்லாத சூர்யகுமாரியை கவனிக்க பகலுக்கு ஓர் ஆளையும் இரவுக்கு ஓர் ஆளையும் வைத்து சொந்த செலவில் வைத்தியம் பார்க்கிறார் எம்ஜிஆர்

  சிகிச்சை முடிந்து வீட்டுக்கு போகிற பொழுது இனி வாடகை பிரச்சனை வயிற்று பிரச்சனை எப்படி சமாளிப்பது என்று சூர்யகுமாரி கவலையுடன் சென்று கொண்டிருந்நபோது

  கார்; கோடம்பாக்கம் தாண்டி டிரஸ்ட் புரம் செல்கிறது

  உடனே சூர்யகுமாரி எனது வீடு இங்கில்லை
  வடபழனியை தாண்டி செல்லுங்கள் ....என்கிறார்

  அப்பொழுதுதான் உடன் வந்தவர்கள் , இனி நீங்கள் வாடகை வீட்டில் தங்க அவசியம் இல்லை "டிரஸ்ட் புரம் நாலாவது தெரு உள்ள நான்காம் நம்பர் வீட்டை எம்ஜிஆர் உங்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற இனிப்பான செய்தியை சொல்கிறார்கள்

  மூன்று மாத ராஜ உபச்சாரனை அளித்து , வீட்டு வாடகைக்கு என்ன செய்வது ,தன் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயந்த சூர்யகுமாரி அதிர்ச்சி சாக் ஆகிறார்

  தன் தாய் தந்தையை விட எம்ஜிஆரை தெய்வமாக போற்றி புகழ்கிறார்......... Thanks ...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #572
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

  ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

  எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

  பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்......... Thanks...

 4. #573
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  நேற்று இன்று நாளை - ........


  1970 ல் துவங்கப்பட்ட படம் பொருளாதார பிரச்சனைகள் - அசோகனின் மெத்தனம் - பின்னர்

  1972ல்மக்கள் திலகம் அதிமுக ஆரம்பித்த போது அசோகனின் போக்கில் மாறுதல்கள் என்ற பல

  சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1974 துவக்கத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது .

  நடிகர் அசோகனுக்கு எந்த வித நஷ்டமின்றி லாபத்துடன் படம் வியாபாரமாகி நல்ல வசூலை

  பெற்று அதிக பட்சமாக மதுரை - நெல்லை நகரகங்களில் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது .

  12.7.1974 தமிழகமெங்கும் திரைக்கு வந்த நேரத்தில் பல வன்முறை சம்பவங்கள் - திரை சீலை

  போஸ்டர்ஸ் - கிழிப்பு சம்பவங்கள் நடந்தேறின .

  எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை - பிரமாண்ட வெற்றி......... அது மட்டுமல்ல... இன்று வரை இந்த " நேற்று இன்று நாளை " காவியத்தின் விநியோக உரிமைகள் தான் எங்கள் குடும்பத்தை வாழ வைக்கிறது... மக்கள் திலகம் தான் காக்கின்றார்... எனவும் மறைத்திரு S A . அசோகன் அவர்கள் மகனும், இன்றைய திரைப்பட நடிகருமான திரு வின்சென்ட் அசோகன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது... Thanks...

 5. #574
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  " நேற்று இன்று நாளை "..........

  திரைப்படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

  மூன்று கதாநாயகிகள் இருக்கும்போது இரண்டு கதாநாயகர்களாவது வேண்டாமா? நண்பனும் (சற்று நேரம்) கதாநாயகனுமாக எம்.ஜி.ஆர். தோன்றுவது சற்று வித்தியாசமான உத்தி.

  ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எம்.ஜி.ஆரின் நடிப்பில் துள்ளலும் துடிப்பும் முனைப்பாக உயர்ந்து நிற்கின்றன. காதல் காட்சிகளில் எத்தனை கலகலப்பு! இவற்றுக்கு மேலே நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை.

  மூன்று கதாநாயகிகளில் யாரும் சளைத்தவராக இல்லை. ஆப்பக்கார அன்னம்மா மஞ்சுளா. அசல் ‘பேட்டை’யாகவே மாறியிருக் கிறார்.
  ராஜஸ்ரீ பைத்தியமாகிப் படாதபாடு படுத்துவது நல்ல தமாஷ்!

  நடிகையாகத் தோன்றும் லதா கவர்ச்சியோடு நிற்காமல், சில கட்டங்களில் உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்.
  ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது கதை. நேற்றைய கதைகளின் சாயலும், இன்றைய நடப்புகளும் பின்னிக் கிடக்கின்றன.
  கதாநாயகன் குடிக்கவேண்டிய விஷத்தை மற்றவர்கள் குடித்து மடிவது புதியதல்லவே! காதலனை அடையமுடியாத லதா, தற்கொலை செய்துகொள்வதற்குக் குன்றின் உச்சிக்குத்தான் வர வேண்டுமா?

  “மெட்ராஸிலேயே ரொம்ப நல்ல சபா ஐ.நா.சபைதாங்க” என்று சுகுமாரி விளாசித் தள்ளுவது அருமை. தேங்காய் சீனிவாசன், திகில் சீனிவாசனாக மாறியிருக்கிறாரே!
  “விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்போறோம்னு நான் சொல்லமாட்டேனே!” என்று குடி போதையில் உளறிக் கொட்டும்போதும், ஆவேசமாகச் சண்டையிடும்போதும் அசோகன் ‘சபாஷ்’ பெறுகிறார்.

  ராஜஸ்ரீக்கு விஷம், லதாவுக்கு கன்னியாஸ்திரீ உடை, மஞ்சுளாவுக்கு மணமாலை என்று முடிவு கொடுத்திருப்பது சாமர்த்தியமான சமாளிப்பு.
  கதைக்குக் கதை, நகைச்சுவைக்கு நகைச்சுவை, விறுவிறுப்புக்கு விறு விறுப்பு, கண்கவரும் வண்ணம், காதுக்கினிய கீதங்கள்........ Thanks...

  ‘�

 6. #575
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  வருடம் 1965 - தீபாவளி.

  மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.

  கொழும்பு நகரில் இன, மத பேதமில்லாது மக்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுக் கொண்ட மக்கள் திலகம், தனது பிறப்பிடமான கண்டி செல்கிறார். தான் பிறந்த மண்ணை விழுந்து வணங்கி, கண்கள் கலங்க முத்தமிடுகிறார். கைக்குழந்தையாக தாய், அண்ணன் இவர்களோடு இந்தியா சென்றவர் மறுபடியும் இலங்கை வந்தது இப்போதுதான் என்பது சிறப்பு.

  மறுநாள் மலையகத்தின் நுவரெலியா நகரில் குதிரைப்பந்தயத் திடலில் மக்கள் திலகம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம். இந்திய வம்சாவழித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் அழகிய மலைநகரம். தொழிலாளப் பெண்களுக்கிடையே 'மலையக அழகிப் போட்டி' - சரோஜாதேவி அம்மா நடுவராகவும், மக்கள் திலகம் பரிசு வழங்குபவராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  திடலின் மேடையைச் சுற்றிலும் பல மீட்டர்கள் தூரத்தில் பாதுகாப்புக்காக தடுப்புக்கட்டை வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் ஆரம்பிக்க அரை மணி நேரத்திற்கு முன்பதாக மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் மேடைக்கு வருகிறார்கள்.

  மக்கள் திலகத்தைப் பார்த்த தொழிலாளத் தோழர்களோடு (நானும் இந்திய வம்சாவழித் தொழிலாளக் குடும்பத்தில் பிறந்தவன்தான். அப்போது 1965ல் எனக்கு பதினான்கு வயது. ஒன்பதாம் தரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.) மற்றைய அவரது ரசிகர்கள், அபிமானிகளின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க" கோஷமும் விண்ணைப் பிளக்கின்றது.

  மேடை முன்னால் நின்று கரங்களை உயர்த்தி, உணர்ச்சி வசப்பட்டு வணங்குகிறார். ஆனால் சுற்றுமுற்றும் பார்த்த அவரது முகத்திலே சிறிது கலவரம். கூட்ட ஒருங்கிணைப்பாளரை சைகை மூலம் அழைக்கிறார்.

  "என்ன பண்ணிருக்கீங்க? எதுக்காக மக்கள் நிக்கற இடத்திற்கு முன்னாடி இவ்வளவு தடுப்புக் கட்டைகள் போட்டிருக்கீங்க?" - சிறிது கோபம் அவர் முகத்தில்.

  "இல்லே சார், மேடைக்கு ரொம்பக் கிட்டே மக்கள் வந்துட்டா, உங்களைத் தொடறதுக்கு முண்டியடிப்பாங்க. காவல் துறைக்குக் கூட அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியாது. அதனாலேதான் பாதுகாப்புக்காக..............,"
  இழுக்கிறார்.

  "ஒன்னு சொல்றேன். இத்தினி வருஷம் கழிச்சு நான் பிறந்த நாட்டுக்கு வந்திருக்கேன். இங்கே என்னைப் பார்க்க வந்திருக்க இவங்க எல்லாமே என் சொந்தங்கள். அவங்க ஆதரவாலேதான் நான் இன்னைக்கு இந்த நிலைமைலே இருக்கேன். அவங்க இல்லேன்னா நான் இல்லே. என்ன செய்வீங்களோ தெரியாது. கொஞ்ச நேரத்திலே இந்தத் தடுப்புக் கட்டைங்கள எல்லாம் கழட்டிட்டு, மக்களை மேடை கிட்டே வரவிடுங்க. இல்லே, நான் திரும்பிப் போய்டுவேன்" - கணீரென்ற குரலில் உறுதியாகச் சொல்கிறார். (இரக்கம் மிகுந்த நம்பிக்கையூட்டும் குரலல்லவா அது?)

  திகைத்த கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மற்றவர்களும் மளமளவென்று தடுப்புக்கட்டைகளை அகற்ற, "முன்னாடி வாங்க" என்று மக்கள் திலகம் கைகளை நீட்டி மக்களை அழைக்கிறார்.

  உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டு அழுத மக்கள் கூட்டத்தின் கரஒலியும், "மக்கள் திலகம் வாழ்க", "புரட்சி நடிகர் வாழ்க", "எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க" கோஷங்களும் விண்ணில் பட்டு எதிரொலிக்கின்றன.

  அழகு ராணிப் போட்டி நிறைவு பெறுகிறது. மக்கள் திலகத்துடன், சரோஜாதேவி அம்மாவும் பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து சுமார் அரை மணி நேரமாக மக்கள் திலகம் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
  அலை கடலென வந்த மக்கள் கூட்டம் மிக அமைதியாக அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

  நிகழ்வின் இறுதியில் மேடையை விட்டிறங்கிய மக்கள் திலகம் கூட்டத்தினரின் அருகிலே சென்று அவர்களை வணங்குகிறார். தன்னைத் தொட்ட மக்களை புன்முறுவலோடு மீண்டும், மீண்டும் வணங்கி நன்றி கூறியபின் கொழும்பு புறப்படுகிறார்.

  "இருந்தாலும் மறைந்தாலும்
  பேர் சொல்ல வேண்டும்
  இவர் போல யாரென்று
  ஊர் சொல்ல வேண்டும்"

  #தன்_பாடல்_வரிகளுக்கு_
  #தானே_முன்னுதாரணமாக_வாழ்ந்து_
  #மறைந்தவர்
  #நம்_மக்கள்_திலகம்_மட்டுமே♥♥♥

  (படத்தில் அப்போதைய இலங்கைப் பிரதமர் அமரர் டட்லி சேனநாயக்க அவர்களுடன் மக்கள் திலகம்)........... Thanks...

 7. #576
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  1976 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் "நவரத்தினம்" படம் ஊட்டியில் எடுக்கப்பட்ட போது அண்ணன் பெரியவர் திரு.ராமச்சந்திரன் - டிவி நடிகர் அன்று எடுத்துக்கொண்ட புகைப்படம்.

  அண்ணன் திரு.. ராமச்சந்திரனை கோவையில் உள்ள ஒரு பிளாட்டில் மூன்று வருடங்களுக்கு முன் சந்தித்தேன்..

  ' கல்தூண்" படத்தில் சிவாஜி கணேசன் உடன் நடித்துள்ளார். அந்த படத்தில் நாகேஷ் - இவரும் சேர்ந்து காமெடி ரோலில் கலக்கி இருப்பார்கள்.

  அண்ணன் திரு ராமசந்திரன் தான் எனக்கு நடிகர் சத்தியராஜ் அவர்களையும் அறிமுகம் செய்தார்.
  நடிகர் சத்திய்ராஜ் அவர்களுடன் என்னை அறிமுகம் செய்து பேசிக்கொண்டேன்.

  அண்ணன் ராமசந்திரன் தனது மக்கள் திலகத்துடன் சந்தித்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

  1976 ஆம் ஆண்டு ஏபி நாகராஜன் இயக்கத்தில் "நவரத்தினம்" படம் ஊட்டியில் எடுக்கப்பட்ட போது நான் ஒரு டெலிபோன் operator பார்க்கும் வேலையில் இருந்தேன். எம்ஜிஆர் தங்கி இருந்த அறையில் போன் வேலை செய்யவில்லை என்பதால் என்னை அழைத்தனர்.

  மக்கள் திலகத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் சாண்டோ எம் எம் சின்னப்பா தேவர் அவர்கள்தான்..

  மக்கள் திலகம் தங்கி இருந்த அவர் அறையில் உள்ள டெலிபோன் வயர் மற்றும் இயக்கம் சரி செய்து கொடுத்து உள்ளேன்.

  . மக்கள் திலகத்துடன் ஒரு போட்டோ எடுக்கணும் என்று விரும்பி அவரிடம் கேட்டேன். அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் என் விருப்பத்தை அன்று நிறைவேற்றினார் மக்கள் திலகம்,.அன்று எடுத்த புகைப்படம்தான் இது ..

  மேலும் எனது சமகால நண்பன் நடிகர் சத்தியராஜ் தங்கை திருமணம் கோவையில் பிரமாண்டமாக 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது எம்ஜிஆர் / சிவாஜி இருவரும் பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

  நான் அருகில் சென்று இருவருக்கும் வணக்கம் சொன்னேன். அப்போது மக்கள் திலகம் என்னை அடையாளம் கண்டுகொண்டு ,, அன்று பேச இயலாத நேரத்திலும்.. இரண்டு கைகளையும் கூட்டி ( வயர் சுற்றி, டெலிபோன் டையல் செய்வது போல காண்பித்து) அவர்தானே நீங்கள்.."? என்று என்னை கேட்டார் மக்கள் திலகம்.

  நான், "அண்ணே.. நானேதான் என்று அவர் காலில் விழ சென்றேன் என்னை தாங்கி பிடித்து வாழ்த்தினார். சம்பவம் நடந்தது 1976 / என்னை அடையாளம் கண்டு வாழ்த்தியது 1987ல்" என கூறி மக்கள் திலகத்துடன் உள்ள சந்திப்பை கூறினார்.

  அண்ணே.. நான் வரேன்.." என்று புறப்பட்டபோது, என்னை மீண்டும் சந்திக்க சொன்னார். இன்றும் தொடர்பில் உள்ளேன். அருமையான சந்திப்பு . நிறைய கருத்துக்கள் சொல்வார். நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்.

  நன்றி..!.......... Thanks...

 8. #577
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  தெய்வம் மனிதவடிவில்! .........
  _________________________
  லண்டன் வீதிகளில்,
  மலேஷியா போன்ற நாடுகளில் வீடுகளில் எம் ஜி ஆர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்
  வாட்ஸாப் , முகநூல் போன்றவற்றில் அவருடைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இது எப்படி சாத்தியம்
  தான் வாழம் காலத்தில் உதவி செய்பவர்கள் வள்ளல்கள்
  ஆனால் மக்கள் திலகம் குறிப்பறிந்து தாய் உள்ளத்துடன் உடல் நலிவுற்ற நிலையிலும் உதவி செய்து கொண்டே இருந்தார் இதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன ...

  உண்டு ரசித்தவர்கள் நாங்கள்
  உண்ணவைத்து ரசித்தவர் மக்கள் திலகம் ...ஒருவரே !

  தெய்வம் மனிதவடிவில்
  இதற்கு சான்று கால் உனமுற்ற நிலையிலும் ...
  இவரின் மக்கள் திலகத்தின் பாதிப்பு பாரிர்.....!!!... Thanks........

 9. #578
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  கெலவரப்பள்ளி அணை :

  இந்த அணை எம்.ஜி.ஆரின் தொடர் முயற்சிகளால் கட்டப்பட்ட அணை.

  கர்நாடகாவில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக ஓடிவந்து கடலூர் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

  1977ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர்.,ஓசூர் தாலுகா விவசாயிகள் நலனுக்காக ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் அணை கட்டப்படும் என அறிவித்தார். அறிவித்தபடியே அணையை கட்ட ரூபாய் 5 கோடியே 51 லட்சம் பணத்தையும் ஒதுக்கீடு செய்தார்.

  1978ம் ஆண்டு அணையின் கட்டுமான பணிகள் துவங்கின.

  1982ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த கமலாம்மாள் என்பவர், திடீரென இந்த அணை கட்டும் இடம் தன்னுடைய இனாம் நிலம் எனவும், அதனால், அணை கட்டக்கூடாது எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார். தடையுத்தரவால் அணை கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

  தொடர்ந்து நான்கு ஆண்டு கிடப்பில் போடப்பட்ட கெலவரப்பள்ளி அணையை கட்டியே தீர வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர்., 1987ம் ஆண்டு ஓசூருக்கே நேரடியாக வந்து தங்கினார்.
  சிறப்பு அவசர கால பிரகடனம் திட்டம் மூலம் தடையானை வாங்கிய கமலாம்மாளிடம் இருந்து அணை கட்டப்படும் இனாம் நிலத்தை அதிரடியாக மீட்டார்.

  அதன் பின் மீண்டும் 1987ம் ஆண்டு கெலவரப்பள்ளி அணை கட்டும் பணி துவங்கியது. ஆனால், இந்த திட்டத்தை துவங்கிய எம்.ஜி.ஆர் அதே ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மறைந்தார்.

  அவர் மறைந்தாலும் இந்த திட்டத்தில் எந்த தடையின்றி கட்டுமான பணி நடந்து 1995ம் ஆண்டு வெற்றிக்கரமாக கட்டி முடிக்கப்பட்டது.

  இடது மற்றும் வலது புற காய்வாய் வெட்டி பாசனத்துக்கு அணையில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த போது, மீண்டும் கமலம்மாள் மகன் சத்தியநாராயணராவ் மூலம் அணைக்கு சோதனை வந்தது. அணையில் நீர் தேக்கினால் எங்களுடைய நிலங்கள் மூழ்கும் எனக்கூறி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அணையில் நீர் தேக்க தடை உத்தரவை பெற்றார்.

  இதனால், 2002ம் ஆண்டு வரை கெலவரப்பள்ளி அணையில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை.

  2002ம் ஆண்டு இரண்டாம்முறை முதலமைச்சராக அம்மா பதவிக்கு வந்தபிறகு இந்த அணை விவகாரத்தை விரைந்து முடிக்கக்கோரி அபூர்வா IAS அவர்களை ஓசூர் சப் கலெக்டராக நியமித்து உத்தரவிட்டார். அவர் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் தேக்க சிறப்பு அதிகாரிகள் நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அணையில் தண்ணீர் தேக்க வைக்கப்பட்டிருந்த தடையை உடைத்தது.

  2005ம் ஆண்டு தமிழக அரசு மீண்டும் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய்களை வெட்டி அணையில் தண்ணீரை தேக்கியது.

  ஓசூர் தொழிப்பேட்டைக்கு நீர் ஆதாரமாகவும்,
  முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களின் விவசாய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் (ஓசூர்) கெலவரப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்காக இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர்மட்ட அளவான 44.28 அடிகளில், தற்போது 40.07 அடி நீர் இருப்பு உள்ளது.

  1978 முதல் 2005வரை பல்வேறு தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து இந்த அணையை கட்டிக்கொடுத்த முதல்வர்கள் #MGR & #JJ
  .....
  #Krishnagiri | #KelavarapalliDa
  ...
  ...
  Nambikai Raj......... Thanks...

 10. #579
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  நான் சொல்வதெல்லாம்
  விஞ்ஞான உண்மை !..........
  _________________________
  சென்னையில் வசிப்பவர் குலதெய்வ கோவில் திருநெல்வேலியில் உள்ளது நான் செல்கிறேன் என்பார் என்னுள் கேள்வி இங்கு கோவில்கள் இல்லையா?
  புத்தகம் ஒன்றில் இதற்கு விஞ்ஞான உண்மை அறிந்தேன்

  நம்முடைய முன்னோர்கள் வழிவழியாக அக்கோவிலில் வழிபட்டு வந்திருப்பர் நம்முடைய சந்ததியினர் நலம்பெறவேண்டி மனம் உருகி வேண்டியிருப்பர் அந்த கோவிலில் நாம் வணங்கினால் நமக்கு பலன் எளிதில் ஈடேறும்

  இதற்கு காரணம் நம் முன்னோரகளின் பிரார்த்தனை vibration...
  எண்ண அலைகள்தான் காரணம் !

  இதை நான் விளக்க காரணம் எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது 1997 - ல் முதன் முதலில் மக்கள் திலகம் வீடு சென்றேன்
  என்னுள் விவரிக்கமுடியாத ஓர் உணர்வு இது தான் என் இடமோ எனற நினைப்பு
  சொல்லோண்ணா மெல்லிய இழையாக ஓர் சிலிர்ப்பு இது கதையல்ல நிஜம் !.........

  ........... Thanks to mr. Hayath...

 11. #580
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  4,652
  Post Thanks / Like
  2017 ஜூலை மாதம் அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட " அடிமைப்பெண் " திரைகாவியம் 2 வருடங்களாக தொடர்ந்து ஊர்கள்தோறும் வெற்றிப்பவனி வருகிறது..... இன்றைய இளைஞர்களுக்கும் ஆணழகன் எம்.ஜி ஆர்., தான்.......... Thanks...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •