Page 105 of 402 FirstFirst ... 55595103104105106107115155205 ... LastLast
Results 1,041 to 1,050 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1041
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *கிறிஸ்தவ மதமும் மக்களும்!*

    எம்.ஜி.ஆர் தன் படங்களில்
    சிலுவையில் அறைந்த இயேசு
    கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
    காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
    படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
    பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
    ரிக் ஷாக்காரன்
    படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
    சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
    என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
    பிடித்து நிற்கும் காட்சி வரும்.
    எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
    படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
    நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.

    பரமபிதா என்ற பெயரில் அவரை
    இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
    சவுக்கால் அடித்து அவர் தலையில்
    முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
    ரசிகர்கள் காணப் பொறுக்க
    மாட்டார்கள். திரையைக் கிழித்து
    விடுவர் என்று திரையரங்க
    உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.

    ஷூட்டில் எடுக்கப்பட்ட
    எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
    படம் கேரளாவில் பலர் வீடுகளில்
    மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
    உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
    கொளுத்துகிறார்களா’ என்று
    சிரித்தாராம்.

    எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
    சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
    திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
    அண்ணா ஆகியோர் படங்களோடு
    இயேசு கிறிஸ்து படத்தையும்
    மாட்டியிருப்பார். இதனால்
    கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
    கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
    ஆரம்பித்துவிட்டனர்.

    அவர் தனிக் கட்சி
    ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
    எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
    அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
    பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
    அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
    சம்மதித்தார்.

    அப்போது நோவா
    அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
    தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
    உடனே செய்து தருவதாக
    ஒப்புக்கொண்டார்.

    எம்.ஜி.ஆர்
    காலத்தில்தான் சிறை கைதிகளின்
    அறைகளுக்குக் கழிப்பறை வசதி
    கிடைத்தது. அதுவரை அறையில்
    வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
    இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
    மறுநாள் அதை கொண்டு போய்
    கொட்டிவிட்டு சுத்தம் செய்து
    கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.

    எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
    ஒரு மணி வரை உயிரோடு
    இருந்ததாக சில செய்திகள் வந்த
    போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
    கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
    கருதினர்.

    எம்.ஜி.ஆர் மீதிருந்த
    நன்மதிப்பு காரணமாக அவர்
    கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
    சாத்தான் குளம் தொகுதியில்
    நீலமேகம் என்ற இந்துவை
    நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
    கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
    வாக்களித்து அவரை வெற்றி பெறச்
    செய்தனர்.

    - வரலாறு இன்னும் வலம் வரும்...!

    - S. S. S......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1042
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டு பிள்ளை !
    _______________________
    ஒரு முறை இயக்குனர்
    P வாசு இல்லம் சென்றோம் பேசிக் கொண்டிருக்கையில்
    எங்க வீட்டு பிள்ளை படத்தில் மக்கள் திலகம் பத்திரம் படிக்கும் காட்சி
    என்னை வெகுவாக ஈர்த்தது என்று கூறி நடித்தும் காண்பித்தார் ,

    படித்து கொண்டே சட்டென்று நம்பியாரை பார்ப்பார் என்று மிகவும் சிலாகித்தபடி கூறினார் !

    மக்கள் திலகம் வீட்டுக்குள் நுழைந்ததும் கிட்ட தட்ட ஐந்து நிமிடம் பேசவே மாட்டார் ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்று படம் பார்பவர்களுக்கு புரியும் !

    ம்ஹூம் ... எத்தனையோ இயற்கை கோளாறுகளில் இதுவும்
    ஒன்று !
    என்று மிகவும் இயல்பாக கூறுவார் இதை வெகுவாக நான்
    நான் ரசித்தேன் ....
    நம்பியாரும் தன பங்குக்கு நன்றாக நடித்திருப்பார் !

    ஹயாத் !........... Thanks...

  4. #1043
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.*

    அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான்
    "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிப்படும் மயங்காதே
    ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன்வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு

    உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
    கலகத்தில் பிறப்பதுதான் நீதி
    மனம் கலங்காதே மதிமயங்காதே

    இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். "ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.

    இயக்குனர் : சங்கர்
    பாடியவர்: TMS ஐயா அவர்கள்
    இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
    படம் : பணத்தோட்டம் (1963)


    பகிர்வு
    *என்றும் அன்புடன்,*
    K.Venkatesan.9884105567.......... Thanks...

  5. #1044
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பேவா சில புதிய தகவல்கள்.

    வாத்தியார் நடிப்பு மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள் ஏ வி.எம். ஐயாவின் புதல்வர்கள்... எப்படியாவது ஒரு படத்தில் வாத்தியாரை நடிக்கவைக்க ஆர்வம்.

    ஒரு நாள் சரவணன் சார் வாத்தியாரை சந்திக்க விரும்பி தகவல் சொல்ல பட இருவர் சந்திப்பும் தோட்டத்தில் நடக்க நீங்கள் எங்கள் நிறுவன படத்தில் நடிக்க வேண்டும் கதை தயாராக உள்ளது என்று சொல்ல வாத்தியார் பெரியவரிடம் அனுமதி வாங்கியாட்சா என்று கேட்க இனிமேல் தான் என்று பதில் வர விஷயம் தன் மகன்கள் மூலம் அறிந்த அவரும் சம்மதிக்க.

    3 லட்ச ரூபாய் அப்போது சம்பளம் வாத்தியாருக்கு ஒப்பு கொள்ள எங்கள் நிறுவன படங்கள் பொங்கலுக்கு வரும் அதற்கு தகுந்தவாறு நீங்கள் கால்ஷீட் தர வேண்டும் என்று கேட்க

    ஆர் எம்.வீ மற்றும் தேவர் படங்களில் ஒத்துக்கொண்டு நடிக்க இருப்பதை வாத்தியார் சொல்ல மறுநாள் ஆர் எம் வீ... ஏ. வி.எம். நிறுவனம் சென்று என்ன எம்ஜியார் யாரை வைத்து படமா எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்ல

    சரோ அப்பா வேடத்தில் தங்கவேலு நடிக்கலாம் என்று வாத்தியார் யோசனை சொல்ல இல்ல அப்பாவுக்கு ராமச்சந்திரன் மிகவும் பிடிக்கும் அவரே நடிக்கட்டும் என்று சொல்ல சரி சரி நான் இப்படி சொன்னேன் என்று கூட பெரியவரிடம் சொல்ல வேண்டாம் என்று எம்ஜியார் சொல்ல. என்ன ஒரு பக்குவம் வாத்தியாருக்கு மரியாதை பெரியவர்கள் மேல்..

    நான் பார்த்திலேயே பாடல் ஒரு பள்ள தாக்கில் யாரும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். என்று படக்குழு சொல்ல பொதுவாக அரங்கத்தில் மட்டும் பாடல் காட்சிகள் எடுத்து வந்த எம்ஜியார் முதல் நாள் இரவு 2 மணி வரை ஒத்திகை பார்க்க மறுநாள் பாடல் படமாக்கும் போது 10,100,1000 என்று மக்கள் குவிய அப்பவும் பட்டையை கிளப்பி விட்டார் பாடலில்.

    அரங்கத்தில் எடுக்க பட்ட நாடோடி பாடல் அதைவிட அற்புதம்.

    தேவர் பட ஷூட்டிங்கில் இருந்த வாத்தியாரை ஏ. வி.எம்.குழு சந்திக்க வர இங்கே வரவேண்டாம் எம்ஜியார் அன்பேவா படத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று வீண் வதந்தி வரும் என்று சொல்ல அதுவும் கடந்து போக

    தன்னை விட 2 மடங்கு எடை உள்ள சிட்டிங்புல்ல சண்டை காட்சியில் தூக்கி போட

    பாடல்கள் நடனங்கள் நாகேஷ் கலாட்டாக்கள் என்று களை கட்டிய அன்பேவா 14.01.66 பொங்கல் அன்று வெளியாகி இன்றும் மறக்க முடியாத மக்கள் திலகத்தின் படங்களில் ஒன்றாக இருப்பதில் வியப்பு என்ன?

    எம்ஜியார் எம்ஜியார் தான்.... தொடரும்.

    பின்குறிப்பு
    படத்தில் ஏ வி.எம் முதலாளி மெய்யப்பர் அருகில் அமர்ந்து இருக்க குழந்தையை தூக்கி பின்னால் கொடுக்கும் எம்ஜியார் படம்............ Thanks...

  6. #1045
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
    வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே,
    அதற்கு என்ன காரணம்?
    எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
    அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
    - விகடன் பொக்கிஷம் ........... Thanks...

  7. #1046
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
    காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.......... Thanks...

  8. #1047
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் காட்சிகளுக்கு எல்லை வேண்டும்_ எம்ஜிஆர்

    ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் குணச்சித்திர வேஷத்தில் நடித்த எம். ஜி. ஆர்; அது வெளிவந்தபோது தனது ரசிகர்களோடு ‘பொம்மை’ (1967 ஜனவரி) பத்திரிகையின் மூலம் பேசினார்.

    அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்: “ ஒரு நடிகன் பல்வேறு குண விசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும், ‘இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு அறிமுகமாகாத நிலையில் முன்பு, ‘என் தங்கை’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் அது வெற்றி கண்டது.

    “நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப் பட்டுவிட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம் ‘ரசிகர்கள் உங்களுடைய சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்பது. அது மட்டுல்ல வினியோகஸ்தர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் அவர்கள் கூறும் காரணம்…”

    “சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. ‘படக் கதைக்குச் சம்பந்தமில்லாத – தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம்’ என்பதை உங்கள் ரசனை உணர்வுடன் உணர்த்தவும் வேண்டும்…”

    “ ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று ‘ஒன்றைப் போன்ற மற்றொன்று’ என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத் திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது…”

    “ அடுத்தது காதற் சுவை. சாதாரணமாகப் பாட்டுப் பாடி காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாத ஒன்று. பொதுப் பூங்காக்களில் படங்களில் வருவது போன்று காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும் நமது படங்களில் வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்த பாட்டுக்களாக எடுக்கிறார்கள். உவகைச் சுவை மனித உள்ளத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்…”............ Thanks...

  9. #1048
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    QUOTE=suharaam63783;1352221]ஆளே இல்லாத கடையில் ... டீ ஆத்துவது போல்...☺️ மிக குறைந்த ஆட்களை வைத்து �� படம் ஓட்டுவது ,பிரியாணி போடுவது ,புடவை தருவது இப்படி எல்லாம் செய்தும் எதிர்பாராத வெற்றியும் /,வசூலும் இல்லாத பட்சத்தில் இந்த விழா அவசியமா ,யாருக்கு புகழ் சேர்க்க பாடுபடுகிறார்கள் தெரியவில்லை... (இது மக்கள் திலகம் சார்ந்த பதிவல்ல....)[/QUOTE]


    உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது. (சுந்தரபாண்டியன் நடிகர் திலகம் திரியில்)
    சுஹராம் என்ன எழுதியிருக்கிறார் என பாருங்கள் சுற்தரபாண்டியன் m g r புகழா பாடியிருக்கிறார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1049
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உலகை #வென்ற #ரசிகர்

    மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

    சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

    அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.

    வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

    பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.

    படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

    படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

    ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.

    அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!

    உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது! ........... Thanks......

  11. #1050
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில்... கலையுலக ஆதர்ஷ காவலர் புரட்சி நடிகர் வழங்கும் காலத்தை வென்ற காவிய படைப்பு " அலி பாபாவும் 40 திருடர்களும் " டிஜிட்டல்... Qube வடிவில் வரவிருப்பதாக இனிய தகவல்.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •