Page 179 of 402 FirstFirst ... 79129169177178179180181189229279 ... LastLast
Results 1,781 to 1,790 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1781
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -25/10/19

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம்*

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும்*கூட்டாக வெளியிட்ட அறிக்கை .

    விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அ. தி.மு.க. தொண்டர்கள், வாக்களித்த பொதுமக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரு.ராமதாஸ், திரு.விஜயகாந்த், திரு.ஜி.கே.வாசன், திரு.சரத்குமார் ஆகியோருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், நன்றி தெரிவிப்பதோடு, இந்த வெற்றியை அ. தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு காணிக்கை ஆக்குகிறேன் .என்று அறிக்கை வெளியிட்டனர் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1782
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தினகரன் வெள்ளிமலர் 25/10/19---------------------------------------------
    old is gold

    பந்துலு கட்சி மாறிய கதை .------------------------------------------

    பி.ஆர். பந்துலு , சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனராக 1960களில்*தொடக்கத்தில் உருவெடுத்தார் .சிவாஜி கணேசனின் 100வது படத்தை தானே தயாரித்து, இயக்கி ,முரடன் முத்து என்கிற படத்தை வெளியிட முற்பட்டார் .

    ஆனால் ஏ.பி.என்.நாகராஜன் தயாரிப்பில் , 100வது* படமாக நவராத்திரி படத்திற்கு சிவாஜி கணேசன் அந்தஸ்து அளித்தார் .

    இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான பந்துலு, தான் இதுவரை இயக்காத* எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து ,* படம் தயாரிக்க விரும்பினார் .* *எம்.ஜி.ஆரும்* பச்சை கொடி காட்ட "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை பிரமாண்டமாக தயாரித்து பெரும் வெற்றி பெற்றார் . அதை தொடர்ந்து, நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை தயாரித்தார் .
    நன்றி திரு லோகநாதன் சார்.

    சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

    இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

    எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

    மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1783
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1784
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் நாளிதழில் நேற்று வந்த செய்தியில் ஒரு பக்கமாக தான் (எடிட்) பண்ணி எழுதியுள்ளனர். இதுவும் ஒரு காரணம் அவ்வளவே. மற்றபடி திரு பந்துலு தயாரித்து வெளியிட்டு நஷ்டப்பட்ட 1961 ம் வருடம் படம், பின்பு 1964 பொங்கலுக்கு வெளியிட்டு பெருத்த நஷ்டத்தை சந்தித்த படம் ( 100 நாள் கண்ட பின்பும் இழப்பை சரி செய்ய இயலாதலால்) அணி மாற நேரிட்டது. இது அந்த காலத்திலேயே திரைப்பட துறையினர் உட்பட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்த செய்தியே...

  6. #1785
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

    கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
    மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன்.

    அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார்.

    மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…
    தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ... இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.

    ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

    இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன்.

    அதற்கு அவர் ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."

    புரட்சி தலைவரின் அபிமானி! ............ Thanks.........

  7. #1786
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் இறைவன் ஆசிர்வாதம்... மக்கள் திலகம் நல்லாசியோடு இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்��.........

  8. #1787
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    நன்றி திரு லோகநாதன் சார்.

    சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

    இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

    எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

    மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)
    Quote Originally Posted by sivaa View Post
    நன்றி திரு லோகநாதன் சார்.

    சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.

    இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.

    எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு

    மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)
    சிவா அய்யா

    எங்கள் திரிக்கு வந்து விளக்கம் சொன்னதுக்கு நன்றி. அதனால், மீண்டும் உண்மயை விளக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுக்கும் நன்றி.

    மிகப் பெரிய பொருள் செலவு செய்து எடுக்கப்பட்ட கர்ணன் படம் போதுமான லாபத்தை தரவில்லை. பந்துலு நஷ்டம் அடைந்தார். உங்கள் திரியிலியே கூட விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு காட்டி பந்துலுவை ஏமாற்றி விட்டார்கள் என்று பதிவு போட்டு இருக்கிறார்கள். உங்களுக்கும் நினைவு இருக்கும்.

    எப்படியோ பந்துலுக்கு பணம் வரவில்லை. லாபம் கிடைக்கவில்லை.

    உங்கள் திரியிலே ஏற்கனவே சொல்லப்பட்டபடி, விநியோகஸ்தர்களால் பந்துலு ஏமாற்றப்பட்டாரே என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இது உங்கள் திரியிலேயே ஏற்கெனவே ஒப்புக் கொள்ளபட்ட விசயம்.

    நாங்களும், பந்துலு நஷ்டப்பட்டார். அதற்கு பின்னர், மக்கள் திலகத்தை வெச்சு ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்து லாபம் பார்த்து நஷ்டத்தில் இருந்து மீண்டார் என்றுதான் கூறுகிறோம்.

    மற்றபடி, பந்துலு உங்களை விட்டு பிரிவதற்கு கர்ணன் பட நஷ்டம்தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை.

    அப்படி அதனால் 2 பேரும் பிரிஞ்சிருந்தால் அப்புறம் முரடன் முத்து படத்தை எடுத்து இருப்பாரா?

    இது கூட எங்களுக்குத் தெரியாதா.

    நன்றி.

    சிவா அய்யா,

    உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். மக்கள் திலகம் ரசிகரான உங்கள் அண்ணன் பெரிய அய்யாவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  9. #1788
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    திரி நெரியாளர்கள், பதிவாளர்கள், பார்வையாளர்களுக்கும்


    மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும்

    தீபாவளி வாழ்த்துக்கள்.

  10. #1789
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு வணக்கம் .

    எனது பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததற்கு நன்றி.

    தங்களின் விளக்கமும் உங்கள் சொந்த கருத்து. வாதிடவில்லை.. அதுபற்றி பலவிதமான கருத்துக்கள் நண்பர்கள் பதிவு செய்கின்றனர் .உண்மை நிலவரம் பந்துலுக்கே தெரியும். மேற்கொண்டு கருத்து சொல்ல விருப்பமில்லை .

    தங்களின் நண்பர் , அகஸ்தியாவில் தரம் கெட்ட படங்களை தொடர்ந்து வெளியிட்டு* அரங்கின் புனிதமே கெட்டுவிட்டது . அதை* ராஜா சரி செய்வார் என்று தரம் தாழ்ந்து பதிவிடுவது சரியா .தரமான படங்கள் (தங்கள் நண்பரின் கூற்றுப்படி )ஒரு சில வெளியாகி தரம் இல்லாத வசூல் பெறுகிறது என்பது அவருக்கு தெரியுமா தரம் கெட்ட* படங்கள்தான் (நண்பர் கூற்றுப்படி ) தரமான வசூலை பெறுகின்றன .எனவேதான் விநியோகஸ்தரும்,அரங்க மேலாளரும் தொடர்ந்து எங்கள் தலைவரின் படங்களை அதிகம் வெளியிடுகிறார்கள். வெளியிடுவார்கள் .,

    எங்கள் தலைவரின் வசனம் : எதிரி கூட சமமாக இல்லையென்றால் அலட்சியப்படுத்துகிறவன் நான் . அதுபோல நாங்கள் தங்களின் நண்பரின் வார்த்தைகளை அலட்சியம் செய்கிறோம் .*

    மேலும் எங்க வீட்டு பிள்ளை 1965ல்* 7 அரங்குகளில் வெள்ளிவிழா சாதனையை*1979ல் தான் திரிசூலம் 8 அரங்குகளில் வெள்ளிவிழா கண்டு முறியடித்தது .11 அரங்குகள் என்பது தவறான செய்தி .

    ஞான ஒளி - பிளாசா 104, பிராட்வெ 69, சயானி 69, கமலா 56, தமிழ் நாடு 20 நாட்கள் என்பது சரி. ஆனால் உங்கள் பதிவில் பிளாசா 104, பிராட்வெ 76, சயானி 76, கமலா 69 , தமிழ்நாடு 41 என்று பதிவு ஆகியுள்ளது.* நாடோடி மன்னன் பற்றி கருத்து கூறும் தாங்கள் இதற்கு என்ன பதில் தர போகிறீர்கள். உண்மை தகவலை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் . நன்றி .

    உங்களுக்கும் ,உங்கள் சகோதரர் திரு.சுதானந்தன் அவர்களுக்கும் எனது சார்பிலும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பிலும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .




    *

  11. #1790
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப், திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.*நீண்ட நாட்களுக்கு பிறகு திரியில் சந்திக்கிறேன்.*

    இருவருமே தங்களின் தொடர்பு எண்ணை என்னிடமோ, அல்லது திரு.சுகாராம் அவர்களிடமோ தெரிவித்தால் விளக்கங்கள், சந்தேகங்கள் தீர்த்து கொள்ள ஏதுவாக இருக்கும் .

    தங்களின் சுவாரஸ்யமான பதிவுகளை வரவேற்கிறேன்.*இருவருக்கும் , மற்றும் ஏனைய பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •