Page 170 of 205 FirstFirst ... 70120160168169170171172180 ... LastLast
Results 1,691 to 1,700 of 2048

Thread: Makkal thilagam mgr- part 25

 1. #1691
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

  படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம். ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

  இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

  ‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.

  பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

  அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

  ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

  இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

  எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

  படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.

  தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

  அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

  தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.

  கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

  எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

  ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

  துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

  தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.

  ‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

  தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

  திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

  எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன.................. Thanks .............

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1692
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  பாரத் எம்ஜிஆர் நடித்த இதயவீணை வெளியான நாள் 20-10-1972.
  மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று20.10.1972

  மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 42வது ஆண்டு துவக்க தினம் .மக்கள் திலகம் தனி

  இயக்கம் கண்ட பின் வந்த படம் . ஆனந்த விகடன் திரு மணியன் அவர்களின் தயாரிப்பில்

  வந்த முதல் படம் .


  1972ல் மக்கள் திலகத்திற்கு இரண்டு மிகப்பெரிய விருதுகள் கிடைத்தன .


  இந்திய அரசாங்கத்தால் ''பாரத் '' பட்டமும் மக்கள் அரங்கத்தில் ''புரட்சித் தலைவர் '' பட்டமும்இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .

  எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்

  வெற்றி கண்ட படம் .

  முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .

  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

  இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ............ Thanks...........

 4. #1693
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .

  எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்

  வெற்றி கண்ட படம் .

  முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .

  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

  இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ......... Thanks...

 5. #1694
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .

  ''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .

  மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .

  மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .......... Thanks...

 6. #1695
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்..., பொன்னந்தி மாலைப் பொழுது பாடல் காட்சிகளில் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி என்றால், அதையும் தாண்டிய அழகு, குளிர்ச்சியுடன் தலைவர்.

  பொன்னந்தி மாலைப் பொழுது பாடலில் தலைவரின் 3 டிரஸ்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆடை மூடும் ஜாதிப்பூவில்... பாராவில் சுசிலா பாடும் ‘கண்ணோடு கண்... பண்பாடுமோ’ வரிகளின் போது சிவப்பு நிற டிரஸ்சில் தலைவர் லேசாக கொடுக்கும் ட்விஸ்ட் மூவ்மெண்ட் கிளாஸ். மஞ்சள் நிற டிரஸ்சில் இளமஞ்சள் நிற கூலிங் கிளாசுடன் வந்து அட்டகாசமாக ஸ்டெப்ஸ் போடும் தலைவருக்கு வயது 25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால்
  25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு பார்வையில் கோளாறு என்று அர்த்தம். இந்த பாடல் மட்டும் புலமைப்பித்தன். மற்றவை வாலி.

  ஒரு வாலும் இல்லே.. நாலும் காலும் இல்லே.. சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே... (நெஜந்தான் தலைவரே) கருத்தாழம் மிக்க பாடல். ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்...’ இளமை பொங்கும்.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் திமுகவில் இருந்து தலைவர் நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் பால் பாயசம் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி (அவர்தான் எப்போதும் தனியாக சாப்பிட்டதில்லையே) தானும் சாப்பிட்டதோடு, கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை கொலைப்பழி சுமந்து, காட்டில் பதுங்கியிருக்கும் தலைவருக்காக மஞ்சுளா கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் கொட்டிப் போக.... ‘கொண்டு வந்த பொங்கல் கொட்டிப் போச்சு..’ என்று கூறி சத்தமாக தலைவர் சிரிக்கும் அட்டகாச சிரிப்பும், காட்சியையொட்டி, ‘இந்த நேரத்தில் கூட எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’ என்று மஞ்சுளா கேட்கும்போது தலைவர் அளிக்கும் பதில், அவரது மனத்தின்மைக்கு சான்று மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் பாடம்........ Thanks...

 7. #1696
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
  கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை எடுத்திருக்கிறார். இதை மணியன் கூறியுள்ளார்.

  ‘ஏசுநாதர்’ என்ற படத்தில் தலைவர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் சரித்திரமாகி இருந்திருக்கும். வேடப் பொருத்தமும் ஏசுநாதர் போலவே இருக்கும். அந்த ஸ்டில் மிகவும் பிரபலம். ஏறக்குறைய அதேபோன்ற தோற்றம் கொண்ட தலைவரை ‘திருநிறைச் செல்வி...’ பாடலில் பார்க்கலாம்.

  படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, .... Thanks.........

 8. #1697
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  இதய வீணையை மீட்டுவோம்’

  உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி உதவிய, பத்திரிகையாளராக இருந்த திரு.மணியன் அவர்களை திரைப்பட தயாரிப்பாளராக தலைவர் உயர்த்திவிட்ட படம்.

  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர், அதிமுகவை தொடங்கிய 3வது நாளில் வெளியான படம்.
  கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின் இடையூறுகளையும் தகர்த்து சென்னை,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியதோடு பல சென்டர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம்......... Thanks...

 9. #1698
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  அந்த பதில்: ‘‘எந்த நேரத்திலும் என்னால் சிரிக்க முடியும். என் கவலையை மறக்க ஆண்டவன் எனக்குத் தந்த ஒரே வரப்பிரசாதம் அதுதான்’
  தலைவர் கூறியது முற்றிலும் சத்தியம். காஷ்மீர்... பாடல் காட்சியிலும் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா’’ என்பார் சமத்துவ தத்துவத்தை அறிந்த நம் தலைவர்.

  அவர் சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்த தமிழ்நாடு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அழுதது. காரணம்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் சத்திய வடிவமாய் வாழ்ந்த.. மன்னிக்கவும், வாழும் அந்த மனிதர்.... ஒரு புனிதர்......... Thanks...

 10. #1699
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like

 11. #1700
  Senior Member Veteran Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  2,810
  Post Thanks / Like
  "பாரத் " எம்ஜிஆர் நடித்த "இதய வீணை" வெளியான நாள் 20-10-1972.
  சென்னை குளோப் 105 நாள் ஸ்ரீகிருஷ்ணா 86 நாள் மகாலட்சுமி 70 நாள் ராஜகுமாரி 70 நாள் ஓடியது.
  சேலம் அலங்கார் 86 நாள் ஓடியது.
  கோவை இருதயா 70 நாள் நெல்லை லட்சுமி 63 நாள் ஓடியது.
  மதுரை ஸ்ரீதேவி 105 நாள் திருச்சி பேலஸ் 112 நாள் இலங்கை கொழம்பு நவா 100 நாள் ஓடியது...... Thanks.........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •