Page 101 of 402 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1001
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977-ஆண்டு சூன் 30-ந் தேதி, 14 பேர் கொண்ட அமைச்சர்களுடன் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றார் நமது #மக்கள்திலகம் அவர்கள்.

    1977-ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற #அதிமுக-வை ஆட்சி அமைக்க அன்றைய தமிழக ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

    அந்த அழைப்பினை ஏற்று, ஆளுனரை சந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் 14-பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலை கொடுத்தார்.

    தலைவரின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் பெயர்களும், இலாகா விவரமும்...

    01. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
    02. நாஞ்சில் மனோகரன் நிதி.
    03. நாராயணசாமி முதலியார் சட்டம்.
    04. எட்மண்ட் உணவு
    05. பண்ருட்டியார் பொதுப்பணி.
    06. ஆர்.எம்.வி. செய்தி,மக்கள் தொடர்பு
    07. அரங்கநாயகம் கல்வி.
    08. சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
    09. காளிமுத்து ஊராட்சி.
    10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
    11. பொன்னையன் போக்குவரத்து.
    12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
    13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
    14. கே.ராஜா முகமது கைத்தறி.

    (எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

    பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள்.

    கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு ஆளுனர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

    ஆளுனரின் வருகைக்கு பின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

    ஆளுனர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து ஆளுனருக்கு தனது அமைச்சரவை சகாக்களை எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் ஆளுனர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

    ஆளுனர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் ஆளுனர் ஆங்கிலத்தில் வாசிக்க, அந்த வாசகங்களை அழகுத் தழிலில் கூறி பதவி ஏற்றார் நம் அன்புத்தலைவர்.

    அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்து போட்ட புரட்சித்தலைவர். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும், ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி-யுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு ஆளுனர் புறப்பட்டுச் செல்கிறார்.

    பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினர் என் எக்கச்சக்மான பேர் வந்து சிறப்பித்தனர்.

    முதல் அமைச்சர் அறை...
    மணி காலை 11.15 மணி. அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்க.. அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்கிறார்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரும் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள்.

    அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

    எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும்.

    ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.
    மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார்.

    சிறையில் இருந்து விடுதலையான ஜேப்பியாரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

    1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
    0
    ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
    0
    சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
    எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
    வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது
    0
    "வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
    0
    ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
    பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
    0
    எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
    0
    எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
    எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
    0
    தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
    0
    சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
    தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    0
    கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
    0
    நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
    0
    சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
    0
    சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
    0
    மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
    0
    சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
    0
    மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
    எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
    0
    புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
    0
    மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.
    அண்ணண் Sendras Sendra அவர்களின் பதிவிலிருந்து.......... Thanks...

  4. #1003
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் தளத்தில் பதிவிடும் நம் ராமச்சந்திரன் பெயரை வைத்துக்கொண்டு தவறாக தகவல்கள், செய்திகள் வெளியிடும் சவுத்ரி ராமு... முதலில் உங்கள் இருப்பிடத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நன்றாக அறிந்து கொண்டு எழுதுவது நல்லது... சரி... திரையுலகிலும் சரி, அரசியலுலகத்திலும் சரி... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., தான் சக்கரவர்த்தி என்பதனை நீக்கமற நிரூபித்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... அவர்தம் ரசிகர்கள் ஆகிய தோழர்களுக்கு இனி மேல் எந்த கோட்டையை பிடிக்க போகிறோம்... அதனால் ஏற்பட்ட மன நிறைவால் நம்மவர்கள் நியாயமான முறையில் சென்று கொண்டிருக்கிறோம்... அதனால் படத்தை ஓட்ட புடவை, வேட்டி சேலை சாப்பாடு இத்யாதிகள் தந்தும்... ஆட்களை( பொருள் படைத்த வசதியான) வைத்து டிக்கெட்டுகள் கிழித்து அவலமான முறையில் செயல்பட அவசியமில்லை

  5. #1004
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் ஆரம்பத்தில் துணை நடிகராக அறிமுகமாகி படிப்படியாக உழைச்சு உயர்ந்து கதாநாயகனாகி 1947-ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ஆனார். அதன்பின் 30 வருசங்கள் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்தார்.
    ஒரு கம்பெனியில் சாதாரண பணியாளாக சேர்ந்து உழைத்து அந்த அலுவலகத்துக்கே பெரிய அதிகாரியாக ஆவதுதான் சிறப்பு தரும். அப்படிதான் துணை நடிகராக அறிமுகமான மக்கள் திலகம் கதாநாயகனக உயர்ந்து தமிழ் திரைப்பட உலகத்தில் சக்ரவர்த்தியாக விளங்கினார்.
    ஆனால், சிலர் பெரிய அதிகாரியாக கம்பெனியில் சேர்ந்து கடைசியில் ஆபிச் பாயாக மாறிய மாதிரி கதாநாயகனாக அறிமுகமான சில நடிகர்கள் கடைசியில் சிறுத்துப் போய் மாமா, அப்பா, பெரியப்பா, தாத்தா என்று துணை நடிகராகி வாழும் காலத்திலயே செல்வாக்கு இழந்து போனார்கள்.
    மக்கள் திலகம் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த வரையில் தென் இந்தியாவில் அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கியவர். அவர் சம்பளம் வேறு எந்த தமிழ் நடிகரும் வாங்கவில்லை.
    திரை உலகத்திலும் அரசியல் உலகத்திலும் மக்கள் திலகம் மக்களின் ஆதரவுடன் ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்தார். ஒரு துணை நடிகர் அரசியலில் நுழைந்து தன் சொந்த தொகுதியில் தோற்றுப் போய் மக்களால் விரட்டப்பட்டார்.
    அரசியல்லயும் சரி.. திரைப்படத்துறையிலும் புரட்சித் தலைவருக்கு யாரும் தண்ணி காட்டியது இல்லை. காட்டவும் முடியாது.
    ஒருவேளை தோற்றுப் போன விரக்தியில் தண்ணி அடித்துவிட்டு படுத்திருப்பார்கள். அதை சிலர் தண்ணி காட்டியதாக தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள்.

  6. #1005
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    வணக்கம் நண்பர்களே...அருமையான பதிவுகள்.

    வாழ்த்துக்களுடன்,
    ஜாக்

  7. #1006
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ச்சியாக........ " நாடோடி மன்னன்" கடந்த ஆண்டு மறு வெளியீடு கண்டபொழுது சென்னை - ஆல்பட்டில் 35 நாட்கள் ( 5 வாரங்கள்) எந்தவொரு தகிடுத்தனம் பண்ணாமல் தானாக வெற்றி முரசு கொட்டியதே... அதை உண்மையான மனசாட்சி உடையவர்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள்.....சரி...சரி... அதையெல்லாம் விடுங்கள்... நீங்கள் கக்கியதற்கு வசமான பதில் தர வேண்டுமல்லவா?! ஏனையா திருப்ப திரும்ப மனித குல மஹான் மக்கள் திலகம் அவர்களின் மக்கள் தானாக தந்த செல்ல படங்களில் சில... மக்கள் தலைவர், தலைவன், வசூல் சக்கரவர்த்தி, விளம்பரம் தேடா வள்ளல் என்ற மிக முக்கியமான பட்டங்களை நீங்கள் காப்பியடித்து போட்டு கொள்கிறீர்கள்... இதற்கெல்லாம் வெட்கமாக இல்லையா நண்பர்களே... முக்கியமாக மதுரையிலும் அதை தொடர்ந்து சென்னையிலும் பல பேர் சிரிப்பாய் சிரிக்கின்றனர்... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை எங்கள் நடிகர்... தலைவர் எங்களவர்களுக்கு ஒரு துளியும் ஏற்படுத்திடவில்லை...அப்புறம் நீங்கள் சவால் விடுவது இருக்கட்டும்... உங்க படம் திருவையாற்றில் லே ஓடாம அறுந்து போச்சே... கவுன்சிலர் ஆக கூட தகுதியில்லே என எல்லோரும் சொல்லும்படி ஆனதே.. தமிழ்நாட்டின் பெரிய சமூகம் எனும் முக்குலத்தோர் மானத்தை காற்றில் பறக்க விட்டதை எல்லாம் நீங்கள் ஆமோதிக்கிறீர் போல... பாவம்.. என்னவென்று சொல்வது?!......... Thanks..........

  8. #1007
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப் பெண் படத்த பார்த்து காப்பி அடிச்சு சங்கிலி படத்தில் ஒத்தை காலை கட்டிக் கொண்டு மகனோடு சண்டை போட்டு, பின்னாளில் துணை நடிகர் ஆனவருக்கு காப்பி அடிக்கிறது வரையிலும் எல்லாமே பின்னால்தான் . ஒரிஜினல் மாதிரி வருமா.. காப்பி காப்பிதான். அதிலும் நேர்மை கிடையாது.

    அவரோட விளங்காத ரசிகப் பிள்ளைங்களும் அப்படித்தான் உள்ளனர்.

    நம்பளை கிணற்றுத் தவளைகள் என்று கூறும் சொம்புத் தவளைகள் வெளியே வந்து பழய உண்மைகளை திரும்பிப் பார்க்கட்டும். இல்லாட்டி சொல்லித் தருகிறோம்.

    சரியான மக்குப் பிள்ளைகள்.
    Last edited by SUNDARA PANDIYAN; 16th August 2019 at 03:27 PM.

  9. #1008
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை திருப்பரங்குன்றம் - லட்சுமி DTS திரையரங்கம் புதியபொலிவுடன் ஞாயிற்றுக்கிழமை 18-08-2019 கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன் திரு செல்லூர் ராஜூ அவர்கள் திறந்துவைக்க இருக்கின்றார் புரட்சித்தலைவரின் "அடிமைப்பெண்", காவியம் வெற்றிப்பவனி வருகின்றார் அனைவரும் வருக வருக நன்றி ............. மதுரை.எஸ் குமார்.......... Thanks...

  10. #1009
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீடு காவியங்களின் வெற்றி வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் தரிசனம்..........இந்த வாரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.படங்கள் விவரம்........
    -----------------------------------
    15/08/2019 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்

    16/08/2019 முதல் சென்னை அகஸ்தியாவில் நல்ல நேரம் தினசரி 2 காட்சிகள் (மேட்னி/மாலை )

    16/8/2019 முதல் கோவை சண்முகாவில் குடும்ப தலைவன் -தினசரி 4 காட்சிகள்

    18/08/2019முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில்(முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது )-அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
    நடைபெறுகிறது............ Thanks...

  11. #1010
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அப்புறம்..... அவுங்க நடிகரின் பிள்ளைகள், சகோதர, சகோதரியின் வாரிசுகளெல்லாம் யாருடைய ரசிகர்கள் தெரியுமா?! விபரமறியாமல் எழுதும் நண்பர்களே... எவரையும் கவர்ந்திழுக்கும் புரட்சி நடிகரின் காவியங்களே... அதையெல்லாம் உணர்ந்து பக்குவமாக யோசித்து எழுதவும்... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •