Page 163 of 402 FirstFirst ... 63113153161162163164165173213263 ... LastLast
Results 1,621 to 1,630 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1621
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1622
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1623
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1624
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1625
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

    A. . உலக சாதனைகள் :

    1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

    2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

    3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

    4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

    5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

    6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

    7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !

    8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    B. ஆசிய சாதனைகள் :

    1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

    2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]

    C. இந்திய சாதனைகள் :

    1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

    2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

    4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

    5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

    8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    D. தமிழக சாதனைகள் :

    1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

    2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

    3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

    4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)

    5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

    6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

    7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

    8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

    திரையுலகின் முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி... எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட)........... Thanks.........

  7. #1626
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வழிச் செலவுக்கு கொடுத்த வள்ளல் :

    கிழக்கு கர்நாடகம் உடுப்பி அருகே சுப்பு புரொடக்ஷன்ஸ் இன்று போல் என்றும் வாழ்க
    படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது சிவகாசியைச் சேர்ந்த ஆறு வாலிபர்கள் மக்கள் திலகத்தை சந்திக்க நான்கு, ஐந்து நாட்கள் முயற்சி செய்தனர்.மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழகத் தொண்டர்களுமான அவர்கள் சிமெண்ட் குழாய் செய்யும் பணிக்காக வந்து அங்கே வேலை இல்லாமல் திண்டாடி ஊர் திரும்பவும் வழியில்லாமல் இருந்தனர்.இவர்களின் நிலைமையை,மக்கள் திலகம் அறிய வந்தபோது மனம் பதறி அவர்களை நேரில்
    சந்தித்து விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்கள் மீண்டும் திரும்ப ரயிலுக்கும்,வழிச்செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினார்.மொழி தெரியாத இடத்தில் வீடு திரும்பவும் பணமின்றி வாடித் தவித்த போது,வழிகாட்டி ஆறுதல் மொழி உரைத்து,பயணம் செய்ய பணமும் தந்த
    புரட்சித் தலைவரை,வாழ்த்தியபடியே அவர்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.

    -1976 ம் ஆண்டு வந்த செய்தி.

    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.......... Thanks.........

  8. #1627
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    48 years A.I.A.D.M.K anniversary 17/10/1972 - 17/10/2019 valargha Thalaivar pughaz...புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தாய் குலங்கள், பொது மக்கள் பேராதரவோடு...தனியாக கட்சி, இயக்கம் துவங்கிய திருநாள்.........17-10-1972 ...17-10-2019........... Thanks.........

  9. #1628
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *அண்ணா திராவிட. முன்னேற்றக்கழகம்*
    ஒரு பார்வை...
    ����������������������
    1949 ல் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க வின் கொள்கை கோட்பாடுகளை கண்விழிக்காத கிராமத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் மக்கள் திலகம் MGR...

    பெரியார் வழிதான் என் வழி என்று சுயமரியாதை பாதையில் சென்ற அண்ணாவை அரசியல் களம் காண பாதை அமைத்துக்கொடுத்தவர் மக்கள் திலகம் MGR..

    1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்பில்லை டெல்லிக்கு போவோம் என்று நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட அண்ணாவை
    துப்பாக்கி தோட்டாக்களை தொண்டையிலே சுமந்து 138 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற காரணமாக இருந்து டெல்லி போகவிருந்த அண்ணாவை சென்னைக்கு திருப்பி முதலமைச்சராக முடிசூடவைத்தவர் இதயக்கனி MGR.

    பேரறிஞர்அண்ணா இரண்டாண்டுக்குள் மறைந்து விட்டாரே..???
    அடுத்து யார்.?? என்ற கேள்வி எழுந்தபோது பலர் எதிர்ப்புகளை மீறி தன்னோடு திரையுலகில் பழகிய பாசத்துக்காக கருணாநிதி எனும் நச்சுப்பாம்பை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவர் மனிதப்புனிதர் MGR.

    கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கோடிகளை குவிக்கத்தொடங்கியது லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடியது எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் தி.மு.கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்..
    இதை கண்டு மனம் கொந்தளித்தார் மக்கள் திலகம் MGR.

    முதலமைச்சர் முதற்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்..
    அண்ணா பிறந்த செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பொதுக்கூட்டம் போட்டு கேட்டார்..
    தான் வளர்த்த கட்சி தன்னால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது கணக்கு வழக்குகளை பொதுக்குழுவிலே சமர்ப்பிக்க வேண்டுமென்று ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பொதுக்கூட்டத்தில் வீர முழக்கமிட்டார் மாசற்ற மன்னாதி மன்னன் MGR..

    ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த கொடியவன் கொடுங்கோலன், கொலைகாரன், திருட்டுபுத்தி,தீயசக்தி கருணாநிதியோ கணக்கா கேட்கிறாய் உன்கதையை முடிக்கிறேன் பார் என்று தி.மு.கழகத்தை விட்டே நீக்கினார்... உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவர் MGR அவர்களை..

    *நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் எந்தன் நிலைமாறும்*.

    மாற்றம் ஒன்றே மாறுதலுக்கு வழி என்று தீயசக்தியின் திருட்டுக்கூட்டத்தை ஒழிக்க 1972 அக்டோபர் 17 ல் அண்ணா திராவிட முனனேற்றக்கழகமாக தொடங்கி 1976 ல் *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமாக* செயல்படத் தொடங்கி 1977,1980,1984,1991,2001,2011,2016,என்று தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி இன்றும் அன்னைத்தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அண்ணா தி.மு.கழகத்திற்கு 48 வது பிறந்தநாள் விழா (17,10,2019)
    நமது வெற்றியை என்றுமே சரித்திரம் சொல்லும்..

    *வாழ்க புரட்சித்தலைவர் புகழ்*
    *வாழ்க புரட்சித்தலைவி புகழ்*
    என்றுமே வெற்றியை நோக்கி பயணிப்போம்..
    ������������������������
    *தஞ்சை க.இராசசேகரன்*
    தலைமைக்கழகப்பேச்சாளர்
    அ.இ.அண்ணா.தி.மு.கழகம்
    சென்னை-91
    ����������������������............ Thanks.........

  10. #1629
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கபிலர்மலை தொகுதிMLA வாக இருந்த cvவேலப்பன் அவர்கள் தலைவர் அண்ணா தி.மு.கழகம் தொடங்கியவுடன்,கட்சியில் இணைந்தார்,1973அல்லது1974என்று நினைக்கிறேன்,தலைவர் ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றார் வழியனுப்புவதற்கு சென்ற வேலப்பன்,தலைவர்சென்றதும் மீண்டும் கோபாலபுரம் சென்று தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார், பின் தலைவர் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியபோது,எஸ்.டி.எஸ் மூலம் கழகத்தில் இணைத்துக்கொண்டு,தலைவரை வழிஅனுப்பிய நான் வரவேற்காமல் போவேனா அதுதான் மீண்டும் கழகத்தில் இணைந்தேன் என்று சொல்லி அறிக்கை விட்டார் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தலைவரை வரவேற்றனர் ,புரட்சித்தலைவர்,சென்னைவந்தவுடன்,cvவேலப்பனை கட்சியை விட்டு நீக்கினார் ,அரசியல் நாகரீகம் வேண்டும் என்றார்... Thanks...

  11. #1630
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    48-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் *அஇஅதிமுக*

    வரலாற்றின் பரபரப்பான பக்கங்கள்…!

    1960-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில்..

    “விரைவில் திமுக பிளவுறும். *MGR* கட்சியை விட்டு வெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

    ஏன் பேரறிஞர் அண்ணா,MGR கருணாநிதியே கூட அதைப் படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது.

    48-ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது.தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த *கருணாநிதி* MGR என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழுந்த ஈகோ யுத்தம் திராவிட இயக்கத்தில் அதிமுக என்ற இன்னொரு புதிய பங்காளி உதயமாக காரணமானது.

    அதிமுக 1972-ல் உதயமானது என்றாலும் கருணாநிதி MGR என்ற இரு அத்யந்த நண்பர்களிடையே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் உருவாகிவிட்டது எனலாம்.இந்த மோதல் முற்றி திமுக MGR பிரிவு ஏற்பட்டது.

    'மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார் MGR' என திமுக பிளவுக்கு காரணம் சொன்னார் கருணாநிதி.

    'தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை துாக்கியெறிந்துவிட்டார்' என MGRரும் அதற்கு காரணம் சொல்லி வைத்தார்.

    உண்மையில் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற அறிவியல்தான் அந்த நேரத்து அரசியலை நிர்ணயித்தது.

    பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற சாணக்கியனை மீறி MGR என்ற பிரம்மாண்டம் திமுகவில் வளர்ந்து வந்தது.

    தலைவன் ஆவதற்கு MGR விரும்பவில்லை யென்றாலும் திமுகவின் தலைவர்களில் ஒருவராகவே பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து கருதப்பட்டார் MGR.

    பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த எதிர்ப்புகளை மீறி கருணாநிதி திமுக தலைவராகவும், முதலமைச்சர் ஆனதற்கும் MGRரின் பங்களிப்பு, தமிழக அரசியல் அறிந்த யாரும் அறிந்தது.

    முந்தைய சட்டமன்றத் தேர்தல்களின் போது வேட்பாளர்களின் வெற்றிக்கு ‘உதவிய’ MGRரால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.

    கருணாநிதியின் கைக்கு திமுக முழுமையாக வந்த பின் MGR என்ற ஆளுமையை கட்சிக்குள் அடக்கும் அங்குசம் கருணாநிதியிடம் இல்லை.

    கட்சியில் அத்தனை ஸ்திரமான இடத்தை பெற்றிருந்தாலும் அதை உறுதி செய்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள MGR என்ற இன்னொரு நபர் தேவைப்பட்டதை கருணாநிதியின் மனம் ஏற்க மறுத்திருக்கலாம்.

    அல்லது கருணாநிதிக்கான ஸ்தானத்தை தான்தான் உறுதி செய்தோம் என்ற எண்ணம் MGR மனதில் யாரோலோ விதைக்கப் பட்டிருக்கலாம்.முடிவு திமுக MGR பிளவு ஏற்பட்டது.

    கட்சிக்குள் MGR கருணாநிதி மனஸ்தாபம் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டம் முதன் முறையாக MGR கருணாநிதி இடையிலான பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

    1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் 'திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள்' என குற்றஞ்சாட்டினார் MGR.

    “பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்து விட்டனர்.திமுக மீது மக்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

    நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர்.

    அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்து விபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர்.

    இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்” என கொதிப்பாக பேசினார். இது திமுக தலைவர்களிடையே பரபரப்பு பொருளானது.

    மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த கருணாநிதிக்கு தகவல் போனது.அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய MGR இதே பிரச்னையை மீண்டும் கிளப்பினார்.

    கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில்.

    ”MGR என்றால் திமுக… திமுக என்றால் MGR என்றேன்.உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது.

    எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல்.உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே” என்று பேசிய MGR தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

    மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது.அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது.

    முதல் நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

    மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் MGR மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், ‘கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் MGR மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி’ அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதலமைச்சர் கருணாநிதி கையில் வந்தது.

    MGRரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது.

    'நேற்று இன்று நாளை' படப்பிடிப்பில் இருந்த MGRருக்கு இந்த தகவல் சென்றது.

    சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு MGRருக்கு அதிர்ச்சியளித்தது.

    கொஞ்ச நேரத்தில் MGR இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் MGR.

    "பேரறிஞர் அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்து விட்டது.
    அதன் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்"

    -என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் MGR.

    MGRரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.

    வெறும் வாதப் பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த MGR விவகாரம் உடுமலைப் பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்குப் பின் விபரீதமாகிப் போனது.

    MGR ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது.

    தமிழகம் முழுவதும் MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதை தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

    திமுகவில் MGRரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் MGR கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரி செய்ய முயன்றனர்.

    MGRரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகி விடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.

    ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர்,மற்றும் MGR ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது.

    'சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்க முடியாது' என உறுதியாக நின்றார் MGR.ஏதோ ஒரு முடிவை நோக்கி கருணாநிதி MGR இருவரும் தள்ளப்பட்டனர்.

    திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது.

    “கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட MGRருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர் மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக் கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் MGR கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி 'MGRரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கை வைப்பதற்கு சமம்' என கண்ணீர் விட்டபடி கூறினார்.

    ஆனால் MGR கருணாநிதி இரு தரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால் நிலைமை கை மீறிப்போயிருந்தது.

    பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்து வந்த தந்தை பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் MGRரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

    இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச் சொன்னார் MGR.

    இதற்கிடையே திமுகவினர் MGR மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக் கொண்டிருந்தது.

    இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் MGR நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் 'கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்' என அறிவித்தது திமுக தலைமை.

    தமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள்.பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில் ரீதியாக வளர்ச்சிபெற உதவிக் கொண்ட இரு ஆளுமைகள் எதிர் எதிர் அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.

    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது MGR இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் MGR பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த MGR கருவேப்பிலை போல் தான் துாக்கி யெறியப்பட்டதை தாங்கிக் கொண்டார்.

    ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்ல முடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.

    “MGR என் மடியில் விழுந்த கனி…அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன்” என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் பேரறிஞர் அண்ணா.

    MGRரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு “கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது” என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில் சொன்னார், கருணாநிதி.

    இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி பேரறிஞர் அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதி வாழ்க்கையை கழிக்க நினைத்த MGR அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

    “நான் இறக்கும் வரை பேரறிஞர் அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன்.நான் இறக்கும் போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்பட வேண்டும்”

    -என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த MGR,பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு.

    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சாரி சாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும்,திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.

    கழகத்தில் ஆரம்பகட்டப் பிளவை இருபெரும் ஆளுமைகளும் பேசித் தீர்த்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்ட நந்திகளும் இதற்கு முக்கிய காரணமானார்கள்.

    காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் MGRருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.

    எதிலும் பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் MGR கட்சிப் பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து *'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'* என்ற கட்சியை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17 நாளில் துவங்கினார்.

    திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்க வைத்துக் கொண்டார் MGR.

    அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 48 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை.அந்த சாதனைக்கு MGR என்ற தனிநபரே காரணம்.

    MGRரின் மறைவிற்குப் பின் சிதற இருந்த கட்சியை தன் சாதுர்யத்தாலும் திறமையாலும் கட்டிக்காத்து ஆளும் கட்சியாக நீடிக்கவைத்திந்தது *ஜெயலலிதா* என்ற இரும்புப் பெண்மணியின் சாதனை.

    *வாழ்க புரட்சி தலைவர் நாமம்��*........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •