Page 106 of 402 FirstFirst ... 65696104105106107108116156206 ... LastLast
Results 1,051 to 1,060 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1051
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

    கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
    கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
    பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
    மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
    இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

    இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.

    எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.

    மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
    காலத்தை வென்ற காவிய நாயகன்.

    வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1052
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!

    எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

    சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

    எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான, கோடானுகோடி கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
    இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று.

    ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள். 'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது. இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.

    உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
    அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
    எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.

    பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.

    இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
    இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

    எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

    — எஸ்.ஆர்.சாந்தி - நன்றி தினமலர் வாரமலர்........... Thanks...........

  4. #1053
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    கவுண்டமணி செந்திலின் ஒரு ரூபாவிற்கு 2 வாழைப்பழ பகிடிமாதிரி
    போகுது இந்த விபரீதத்தின் விளக்கம்
    சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வேண்டாம்
    இங்கு வந்து இத்திரியை பார்க்கும் ஏனைய ரசிகர்களே
    உங்களுக்காவது என்ன விபரீதம் என்ற விளக்கம் புரிந்ததா?

    (சுஹராம் போன்று எம் ஜீ ஆர் ரசிகன் யாராவது ஏனைய நடிகர்களின் ரசிகன் என்ற பெயரில் வந்து இதுதான் அந்தப்பழம் என்று சிலவேளை பதில அளிக்கக்கூடும்)
    சிவா அவர்களுக்கு,

    விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
    விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

    இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.



    விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

    பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
    நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

    உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.

    உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.

    உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.

    உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.

    உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.

    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    சிவா அவர்களுக்கு

    விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

    மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...

    அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.

    விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
    விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
    விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.

    இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

    இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

    எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

    ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.

    இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.

    இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .

    உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

    நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.
    சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?

    கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.


    புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.

    இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.

    உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.

    கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்

    நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..

    அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.

  5. #1054
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முஸ்லிம்கள் அனைவரும் குரானின் வசனங்களை கேட்க செல்வதில்லை,

    கிருஸ்துவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய செல்வதில்லை,

    இந்துக்கள் அனைவரும் சொற்பொழிவு கேட்க செல்வதில்லை,

    ஆனால் இவர்கள் அனைவரும் சினிமா பார்க்க செல்ல தவறுவதில்லை,

    அனைத்து மத நல்ல உபதேசங்களை சினிமாவில் சொன்னவர் #எம்ஜிஆர்,

    அவர் படத்தில் நடித்தது மட்டுமல்ல, அதை தன் சொந்த வாழ்விலும் வாழ்ந்துகாட்டியவர்,

    அதனால்தான் இன்றளவும் புகழோடு இருக்கிறார், இருப்பார்,

    அவரை நேசிப்பவர்கள் அவர்போல வாழமுடியாவிட்டாலும், அவரின் கொள்கைகளை பின்பற்றி வாழலாமே..?

    புறம்பேசுதல், மோசடி செய்தல், துரோகம் புரிதல், இவையெல்லாம் நீக்கி, சகமனிதருக்கு சொல்லாலும், செயலாலும், பொருளாலும் உதவிபுரிந்து வாழுங்கள்,

    சாதி, மத, இன பேதமற்ற மனிதராக வாழ முயற்சி செய்யுங்கள்.......... Thanks to mr.Hussain...

  6. #1055
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற 23-08-2019 வெள்ளிக்கிழமை முதல்... மதுரை - பழனி ஆறுமுகா DTS., தினசரி 3 காட்சிகள் ...புரட்சி நடிகர் அவர்களுக்கு இந்திய துணை கண்டத்தின் சிறந்த நடிகர் எனும் உன்னத, ஒப்பற்ற விருதான " பரத்" (பாரத்) பெற்ற "ரிக்க்ஷாக்காரன்" வருகிறார்... Thanks...

  7. #1056
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    அருமை சகோதரர் திரு செல்வகுமார் சார், மிக்க மகிழ்ச்சி..... எப்பொழுதும் போல நீங்கள் இங்கு வருகை தந்து, மற்ற சகோதரர்கள் போன்று மக்கள் திலகம் அவர்களின் இனிய பதிவுகள் அளிக்குமாறு நம் திரி உறுப்பினர்கள் சார்பில் பாசமுடன் வேண்டுகிறோம்..........
    நிச்சயமாக சகோதரரே ! மக்கள் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியில் எனது பங்களிப்பு இருக்கும். தங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நன்றி !

  8. #1057
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    சிவா அவர்களுக்கு,

    விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
    விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

    இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.



    விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

    பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
    நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

    உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.

    உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.

    உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.

    உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.

    உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.



    சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?

    கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.


    புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.

    இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.

    உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.

    கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்

    நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..

    அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.
    தொடர் அலுவல் காரணமாக என்னால் அடிக்கடி திரியில் பங்கேற்க முடிய வில்லை. இருப்பினும், எனது சார்பில் விளக்கம் அளித்த எனதருமை புதல்வன் திரு. சுந்தரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

  9. #1058
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிக பேரரசர் எம் ஜி ஆர், நடிப்புக்கு இலக்கணம் பானுமதி ராமகிருஷ்ணா, எம்என் ராஜம், சரோஜாதேவி, எம் ஜி சக்கரபாணி, பி எஸ் வீரப்பா, எம் என் நம்பியார், சந்திரபாபு, ஜி சகுந்தலா, முத்துலட்சுமி, ராம் சிங், ஜெமினி சந்திரா, டீகே பாலச்சந்திரன், பூபதி நந்தா ராம், திருப்பதிசாமி, என் எஸ் நடராஜன், குண்டுமணி, அங்கமுத்து, சேதுபதி மற்றும் பலர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற உயர்ந்த லட்சியங்களை கொண்ட ஈடு இணை இல்லாத திரைப்படம் "நாடோடி மன்னன்" 61 ஆம் ஆண்டு நிறைவு பிறந்தநாள் இன்று(22-8-1958). ஆயிரத்தி 940 இல் வெளியான பி யு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டாவது இரட்டை வேட திரைப்படத்தில் நடித்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். 1955 தொடங்கப்பட்டு பல சோதனைகளை கடந்து 1958 இல் வெளியிட்டார் புரட்சித்தலைவர். இன்று நாடோடி மன்னன் தரிசனம் செய்வோம்!............ Thanks...

  10. #1059
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறந்த சமூக படைப்பில் எக்காலத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சி கொண்ட திரைப்படமாக 1969 ம் ஆண்டு வெளியாகி அன்றும் இன்றும் என்றும்........ ஊரிலும் உலகத்திலும் உள்ள எல்லாத் துறையிலும் மக்களை ஏமாற்றி ஊழல் செய்யும் அரசியல் மற்றும் அதிகாரிகளின் அவலத்தை நம் நாடு காவியம் மூலம் நாட்டிற்கு தான் ஏற்ற துரை என்னும் கதாபாத்திரத்தின் வாயிலாக வெள்ளித்திரை மூலம் பாடம் தந்த தியாகசீலர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே ....... அரசியல் உலகில் முதல்வராக இருந்து தூய அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்தி கொண்டு மக்கள் பணியாற்றியவர்..... உண்மையான பாரத ரத்னா விருது பெற்றவர்.. தமிழகத்தில் தென்னகத்தில் மூன்று முறை முதல்வராக தொடர்ந்து கோட்டையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குறையறிந்து ஆட்சி செய்து தனக்கோ தன்னை சார்ந்த குடும்பத்தினர்கோ ஒரு சிறு உதவியையும் பெற்று தராத, ஒரு அடி நில மண் கூட அரசு பணத்தில் ஏற்படுத்தி கொள்ளாத மனிதநேய முதல்வர் உலகில் புரட்சித்தலைவர் ஒருவர் தவிர ஒருவரும் கிடையாது. அவரே நம் நாட்டின்( பாரத திருநாட்டின்) சிறந்த புனிதமான மனிதநேயம் கொண்ட மாமனிதர். நம் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற யுகபுரூஷர். வாழும் ஒரே வள்ளல். கடந்த நூற்றாண்டு களில் எவரும் பெறாத புகழின் அதிசயமே பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர் அவர்களே! எந்த அரசியல்வாதி களுடனும் ஒப்பிடமுடியாத அமுதசுரபியாக அன்னமிட்ட ஒரே தீர்க்கதரிசி இராமபுரத் தோட்டத்தில் எளிமையுடன் தான் ( கலையுலகில்) உழைத்து சம்பாதித்த பணத்தில் வாழ்ந்து அந்த பணத்தில் எண்ணிலடங்காத சேவைகள் செய்து கோடி பணமிருந்தும் கலைத்துறையிலும் அரசியல் துறையிலும் ஏழையாக வாழ்ந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்து, தன்னை அரசியலில் ஈடுபாடு கொள்ள வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பெயரையே முழு முச்சாக கொண்டு அந்த வரலாற்று நாயகனின் பெயரை தன்னை விட முன்னிலை படுத்தி அவரின் பெயரையே எங்கும் சூட்டி எங்கும் அண்ணா! எதிலும் அண்ணா! எப்பொழுதும் அண்ணா! என வாழ்ந்த உத்தமத் தலைவர் இந்நானிலத்தில் புரட்சித்தலைவர் மட்டுமே உயர்ந்தவர்! சிறந்தவர்! மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்! அப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து, வாழ்ந்த பிறவி பயனை பெற்றுள்ளோம். இனி ஒருவர் இவ்வுலகில் குறிப்பாக தமிழகத்தில் மக்கள் பொதுநல மறிந்து தோன்ற போவதில்லை! இன்றைய உலகில் வாழும் நாம் தினமும் அழிவுபாதையை நோக்கி தான் போகிறோம்..... மாற்றங்களும் நிகழப்போவதில்லை! மக்களும் மாறப்போவதில்லை..... கடைசியாக தலைவரின் பாடலுடன்.... " நாகரிகம் என்பதொல்லாம் போதையான பாதையல்ல"...... இன்றைய சினிமாவும் சின்னத்திரையும் ( குறிப்பாக விஜய், சன், ஜி தமிழ், மு.கருணாநிதி சேனல் இன்னும் பல இருக்கும் வரை தமிழ்நாடு மக்கள் சீக்கிரம் சீரழிவை நோக்கி தான் போக போகிறார்கள் .... ( இதுவே வரும் செப்டம்பர் மாதத்தின் உரிமைக்குரல் மாதஇதழின் தலையங்கமாகும்.) உரிமைக்குரல் பி.எஸ். ராஜு............... Thanks.....

  11. #1060
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியா திரையுலக வரலாற்றில் இயற்கைப்பேரரசு தன் காலத்தால் அழியாத காவியங்கள் மூலம் கணக்கில்லாத சாதனைகளை படைத்த மகத்தான வெற்றிகள் பற்பலவைகள்... முதல் என்ற வார்தையை முதன் முதலில் உருவாக்கியவைகள் ஏராளம்....... இரண்டு என்பதை குறிக்கும் வகையில் நடிகப்பேரொளியின் வெற்றிகள் பல.... மூன்று என்ற எண்ணிக்கையை வைத்து மக்கள் திலகம் தந்த வெற்றிகள் பல.... நான்கு என்ற நற்சாதனைகளை தந்த செம்மலின் வெற்றிகள் பல.... ஐந்து என்னும் வடிவில் நடிகப்பேரரசு தன் இமாலய வெற்றிகள் பல ....... ஆறு என்ற முத்திரையை மகுடமாக புரட்சியார் வெற்றியின் மூலம் தந்தவைகள் பல...... ஏழு என்ற வார்த்தையில் எழில்வேந்தனின் வெற்றிகள் எல்லோரும் வியக்கும் அளவில் பல........ எட்டு என்ற ஸ்தானத்தில் எம் தலைவர் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றிகள் பல.... ஒன்பது என்ற எண்ணில் இலக்கிய நாயகனின் சாதனைகள் எத்தனையோ.... பத்து என்ற எண்ணில் கலையிலும் அரசியலிலும் செய்த லெற்றிகளோ அசைக்க முடியாத வகையில் பல...... இதை ஒவ்வொன்றாக பதிவிட முன் சாதனையாக இந்த வரிசை...... உரிமைக்குரல் ராஜு.......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •