Page 185 of 402 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1841
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு*நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி .

    எனது 27,000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு என் பசுமையான நன்றி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1842
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ............ Thanks.........

  4. #1843
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனவரி 1972

    போருக்கு புரட்சித் தலைவர் உதவி

    இந்திய பாக்கிஸ்தான் போர் நீதிக்கும், பங்காள தேசத்து வளர்ச்சிக்கும் தனது ஒரு படத்தின் வருமானம் முழுவதையும் கொடுப்பதென்று சென்னையில் ஒரு கூட்டத்தில் புரட்சித் தலைவர் கூறினார். புரட்சித் தலைவி அவர்கள் போர் நிதிக்கு ரூ5000/= வழங்குவதாக அறிவித்தார். இந்த விழாவில் மத்திய திட்ட அமைச்சர் திரு. சி.சுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்.������........ Thanks...

  5. #1844
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நியூயார்க்கில் புரட்சித் தலைவர்

    நியூயார்க் தமிழ் சங்கம் நாவொம்பேர் மாதம் 16ஆம் தேதி மாலை சிறப்பானதொரு வரவேற்பு நல்கியது. கொலம்பியா பல்கலைக்கழக வட்டத்தில் "ஏரல் மண்டபத்தில்/Earl Auditorium" நடந்த நிகழ்ச்சிக்கு பல பகுதிகளில் இருந்து தென்நித்யா மக்கள் 500-600பேர் வந்து கலந்து கொண்டனர்.

    தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் முருகேசன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தை குறிப்பிட்டார்.......

    புரட்சித் தலைவர் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் தமிஸ்ஹாக வரலாற்றை உண்மையான வரலாற்றை வெளியிடும் பொது பல வித பிரச்சனைகள் குறுக்கிடும் என்றும் ......கழகம் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை வெளியிட அவனை செய்யும் என்றும், சமதர்மம், சகோதரத்துவம் தமது கட்சியின் அடிப்படை என்றார். தொடர்ந்து கேள்வி பதில் ...சில பதில்கள்:

    மாநில சுயாட்சி கழகம் கேட்காது.....

    ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய கிளர்ச்சி பற்றி பதில் கூறுகையில் ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும்.......இணையான அரசாங்கம் தான் எதிர்ப்பதாகவும் ... ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும் தலைமைப்பீடத்தில் உள்ளவர்கள் தூய்மையாக இருந்தால்தான் கீழே உள்ளவர்கள் அரசாங்க இயந்திரமும் லஞ்சம் ஊழலின்றி திகழும் என்றார்

    இறுதியில் சங்கத்தில் செயலாளர் திரு. சேகர் ஹென்றி அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு "உலகம் சுற்றும் வாலிபன்" திரையிடப்பட்டது........ Thanks SB., Sir...

  6. #1845
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்தில் இருக்கும் ராஜகோபுரம்.

    இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது யாரால்? நமது ராஜா ராஜன் புரட்சித் தலைவரால்.

    உய்ந்த புகைப்படத்தை எடுத்தவர், புகைப்படத்தில் இருக்கிறார் அனைவருடன் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். ������...... Thanks SB.,

  7. #1846
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன்

    சுபாங் சர்வதேச விமான நிலையம் ஏர் சிலோன் விமானத்தில் புரட்சித் தலைவர் குழுவினர்கள் அக்டோபர் ல் சென்று அடைந்தனர். நட்சத்திர கூட்டத்தை காண மக்கள் திரளாக வந்திருந்தனர். மக்கள் புரட்சித் தலைவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்புத் தொல்லைகளால் படப்பிடிப்பு சுமார் ஒரு மணி நீரால் தாமதம். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பின் பயணமான புரட்சித் தலைவர் அவர்கள் தான் திரும்பவும் பினாங்கு செல்ல இயலாது என்று தெரிவித்தார்.

    நடிகைகளிடம் நீங்கள் முத்தமிடம் காட்சிகளை பற்றி உங்கள் கருது என்ன என்று கேட்டதற்கு. அனைவருக்கும் ஏகோபித்த குரலில் இந்திய படங்களில் அதற்கு இடமில்லை, நாங்களும் தயாரில்லை என்றார்கள்.

    ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா இலங்கை முதலிய நாடுகள் இந்த பயணத்தில் அடங்கியது. ........ Thanks SB.,

  8. #1847
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
    எழுதிய கவிதை.
    --------------------------
    நீ
    இந்தியாவில் பிறந்து
    இலங்கைக்கு சென்ற-
    இராமச்சந்திரனல்ல;
    இலங்கையில் பிறந்து
    இந்தியா வந்த
    இராமச்சந்திரன்.!

    அந்த இராமச்சந்திரன்
    சூரிய குலத்தில் வந்தவன்.
    நீயும்-
    உதய சூரியனின்
    வழித்தோன்றல்தான்.

    அவனும்
    ஜானகி மணாளன்.
    நீயும்
    ஜானகி மணாளன்.

    அவனும்
    பதவி ஆசை பிடித்தவர்களால்
    வெளியேற்றப்பட்டான்.
    நீயும் அப்படியே.

    அவனும்
    நாடோடியாகத் திரிந்து
    மன்னனானான்.
    நீயும்-
    நாடோடி மன்னன்தான்.

    அவனிடத்தில்
    இருந்தது போலவே
    உன்னிடத்தில்லும்
    "வில் பவர்" இருந்தது.

    அந்த இராமச்சந்திரன்
    தெய்வமாக இருந்து
    மனிதனாக மாறியவன்.
    நீ-
    மனிதனாக இருந்து
    தெய்வமாக மாறியவன்.
    இதனால்தான் உன்னை
    இதய தெய்வம் என்கிறோம்.

    ஆனால் ஒன்று
    அவன்
    வாலியை
    அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
    நீயொ
    வாலியை
    அன்பு கொண்டு வாழ்த்தியவன்.

    நீயே
    எனக்கு
    நிஜமான கருணா(நிதி) .!
    வாலி..........இன்று மறைந்த திரு. வாலி அவர்கள் பிறந்தநாள்....... Thanks...

  9. #1848
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'சங்கதமிழன்' விஜயா, வாஹினி தயாரிப்பில் புதிய விஜய் சேதுபதி படத்தில் காவல்துறை அதிகாரி ஆக வருபவர் name badge இல் M. G. ராமச்சந்திரன் என்ற பெயர் காணப்படுகிறது...

  10. #1849
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் வணக்கம்...

    சமீபத்தில் அகஸ்தியா அரங்கில் சிவாஜி நடித்து வெளியான " ராஜா" திரைப்படம் வெளியானது
    அந்த படம் வெளியாவதை ஒட்டி ஒரு ரசிகர் கொடுத்த விளம்பரம் " தரம் கெட்ட
    படங்களை திரையிட்டு தரம் குறைந்து போன அகஸ்தியா திரை அரங்கை புனிதப் படுத்த வரப் போகிறார்
    ராஜா , அது மட்டுமா அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி(?) , உலகப் பேரழகன்(��), அட்டைக்கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன், வசூல் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் ஒரு
    நண்பர் விளம்பரப் படுதியிருந்தார் ரொம்ப
    நல்ல காரியம் ஆனால் இதுல பாருங்க ஒரு சின்ன சந்தேகம் இப்படி
    உங்களுக்குள்ளே விளம்பரப் படுத்தி மாறி மாறி கிச்சு கிச்சு மூட்டி
    சந்தோஷப் பட்டுக் கொள்கிறீர்கள் ரொம்ப
    மகிழ்ச்சி , நான் ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன் இப்படி விளம்பரம் செய்யும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்
    நேர அகஸ்தியா திரை அரங்குக்குப் போய் உரிமையாளர்/ மேலாளரைப் பார்த்து சார் இப்படி நீங்கள் தொடர்ந்து தரம் கெட்ட படங்களா போட்டுப் போட்டு தரம் கெட்டுப் போய் விட்டீர்கள் அதனால் நாங்கள் ஒரு 10 பேர் வாரியல், தூப்பான், பினாயில், டெட்டால் இவைகளுடன்
    வந்து கூடவே தீட்டு கழிக்கவும் ஒரு ஆளை கூட்டிக் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம்,( இப்படி ஒரு விளம்பரம் வந்தது அரங்கு ஓனருக்கு தெரிந்திருந்தால் நிலைமை என்ன ஆயிருக்குமோ தெரியவில்லை?) சரி அடுத்தது இந்த படத்தை
    திரையிட்டு எத்தனை லட்சம் வசூல் வந்தது?
    கழிந்த நான்காம் தேதி
    இதே அகஸ்தியா அரங்கில் திரையிடப் பட்ட தரம் குறைந்த படமான நாடோடி மன்னன் படத்திற்கு முதல் மூன்று நாளில் ஒரு லட்சம் வசூல், இறுதியாக ஒரு வாரம் ஓடி முடிய 1,85,000 வசூல் அதனால் கண்டிப்பாக மிகவும் தரமான படமான ராஜா
    படத்திற்கு கண்டிப்பாக
    இதை விட அதிக வசூல்
    கிடைத்திருக்க வேண்டும் ( நல்ல வேளை இப்போது சாந்தி அரங்கம் இல்லை அப்படி இருந்து
    இந்த படம் அங்கு வந்திருந்தால் கண்டிப்பாக ஒரு வாரத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் ஆகி இருக்கும்)
    சரி அடுத்தது " அட்டைக் கத்தி" சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்
    வசனத்துக்கு வருவோம்
    சரி அட்டைக் கத்தி பயன் படுத்தியது யார்?
    அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கத்திகளில் பெரும் பாலானவை தி.நகர் நினைவு இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளன இது எல்லோருக்கும் தெரியும் , வாள் சண்டை
    போடும்போது எத்தனையோ முறை நம்பியாருக்கும் காயம்
    பட்டிருக்கிறது எம். ஜி.ஆருக்கும் காயம் பட்டிருக்கிறது , ஒரு படத்தின் சண்டைக் காட்சியின் போது தலைவரின் கண் புருவத்தில் காயம் பட்டது அனைவரும்
    தெரிந்த ஒரு கதைதான்
    எனக்கு ஒரு சந்தேகம்
    என்னன்னா அட்டையில்
    செய்த கத்தி இப்படி காயத்தை உண்டாக்குமா? விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் please, அடுத்து மன்மதன்( ஊருக்குள்ள
    சொல்லிக்கிட்டாக) ஏம்ப்பா எழுதும் போதே
    உங்களுக்கே சிரிப்பு
    வரலையா? 1968 க்குப் பிறகு கொஞ்சம் வயிறையும் குறைத்து விக்கையும், மீசையை பென்சில் போல வைத்த
    வுடன் மன்மதன் ? சரி இருந்து விட்டுப் போகட்டும் அடுத்து அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி? அடடா கையில ஒரு பாட் மிண்டன் ராக்கெட்டை வைத்துக் கொண்டு நின்றவுடன் ஸ்டைலா?
    அதுவும் உலகத்தையெல்லாம் வம்புக்கு இழுத்திருக்கிறார்
    ஒளி விளக்கு படத்தில்
    துவக்கக் காட்சியில்
    freeze style காட்சி எல்லாம் வைத்திருப்பார்கள்,மற்றபடி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியாருடன் சண்டையிடும் முன் வாளை உருவி எடுப்பதிலே ஒரு ஸ்டைல் காண்பித்திருப்பார் இதையெல்லாம் என்ன என்று சொல்வீர்கள் அன்பரே, இடையில் அட்டைக் கத்தி சமாச்சாரத்தில் ஒன்றிரண்டு விட்டுப் போய் விட்டது உங்களின் அபிமான அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி கூட வணங்கா முடி, தங்க மலை ரகசியம், மருத நாட்டு வீரன், உத்தம புத்திரன் போன்ற படங்களில் அட்டைக் கத்தி வைத்துக் கொண்டுதானே மெரினா பீச்சில் ஓடும்
    குதிரை மாதிரி முன்னங் கால்களை தூக்கித் தூக்கி சண்டை
    போட்டிருப்பார் ( ஸ்டண்ட் சோமு கெட் டார் போங்கள்) அதுமட்டுமல்ல சமீபத்தில் கூட ஒரு எழுத்தாளர் சிவாஜி சண்டை என்ற பெயரில்
    புல் வெட்டுவார் என்று சொல்லி அது ஒரு வாரப் பத்திரிகை யில் வெளிவந்தது, பைபிளில் ஒரு வாசகம்
    வரும் " உங்களில் குற்றம் இல்லாதவன் எவனோ அவன் முதல் கல்லை எறியட்டும்" அதுபோல் அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் தன்னையும் கொஞ்சம்
    நினைத்துப் பார்க்க வேண்டும் அதுதான் புத்தி சாலித் தனம்
    நீங்கள் அட்டைக் கத்தி என்று கூறும் நபர்தான்
    சாதாரண சினிமா நடிகராக இருக்கும் போது அமெரிக்கா, ரஷ்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் அரசு விருந்தினராக
    கௌரவப் படுத்தப் பட்டார் என்பதை நினைவில் கொள்க
    உடனே குதித்துக் கொண்டு எங்க ஆளும்
    ஒரு நாள் மேயர் பதவி
    எல்லாம் வகித்திருக்கி றார் என்று சொல்லி விடாதீர்கள் அந்த ஒரு நாள் மேயர் பதவி வெறும் சினிமாவுக்காக
    கொடுக்கப் பட்ட ஒரு நிகழ்வு ஆனால் இங்கே
    நன்றாக கவனியுங்கள்
    வெறும் சினிமா நடிகனாக பார்க்காமல் ஒரு நாட்டின் பிரதமரை
    போன்று அதிகாரப் பூர்வமாக கொடுத்த அழைப்புகள் இன்னொரு முக்கிய விஷயம் மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா வின் போது அதன் அதிபர் ராம்கூலம் அவர்களின்
    அருகிலேயே அமர வைக்கப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டவர்தான் உங்களால்
    விமர்சிக்கப் படும் இந்த
    அட்டைக் கத்தி வீரர்
    அதனால் இந்த மாதிரி
    மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புற
    சமாச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்
    முதலில் உங்களின் நடிகரின் பெயரால் பத்திரிக்கை ஏதாவது வந்தால் அதை ஆதரித்து வெளியிடும்
    நபரை வாழ வையுங்கள் , சமீபத்தில்
    ஆளில்லாமல் ஆல்பர்ட்
    அரங்கில் ஒரு வாரம் பிறகு மூன்று நான்கு பேரை வைத்து ஒரு 55 நாள் பிறகு கடைசியாக
    அக்டோபர் மாதத்தில்
    ஒரு ஷோ வெளியிட்டு
    நூறாவது நாள் விழா
    எடுத்தீர்களே அந்த படத்தின் பெயரால் ஒருவர் ஒரு பத்திரிக்கை வெளியிட்டு பாவம் கடைசியில் ஒன்றிரண்டு மாதத்துடன் போட்ட முதலைக் கூட எடுக்க
    முடியாமல் Back to pavilion ஆன கதை எல்லோரும் அறிந்ததுதான் , இறுதியில் மக்கள் திலகம் மலர் மாலை1 என்ற பெயரில் ஆல்பம்
    வெளியிட்டு சிரமத்தில்
    இருந்து மீண்ட கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்த
    ஆல்பம் எப்படி நீ வெளியிடலாம் என்று சொல்லி நீங்களெல்லாம் பாய்ந்தது ஒரு பக்கம் இருக்க சீக்கிரமே மக்கள் திலகம் மலர் மாலை2 புத்தகமும் விரைவில் வெளியாகப்
    போகிறது, எப்போதாவது தலைவரின் ரசிகர்கள்
    உங்கள் நடிகரை அவமானப் படுத்துவது
    மாதிரி ஏதாவது சினிமா
    விளம்பரங்கள் போடுகிறார்களா? அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஏன் இப்படி குமுறி சாகிறீர்கள்? அந்த காலம் தொட்டே இந்த குமுறல்கள் உங்களுக்கு புதிதல்ல
    இப்படி குமுறுகிறவர்கள் உங்கள் நடிகரை ஒரு
    வார்டு மெம்பராக வாவது ஆக்கியிருக்கலாம்
    அதையும் செய்யவில்லை
    கடற்கரையில் இருந்த சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்லி கேஸ் போட்டது
    காங்கிரஸ் காரர் கடைசியில் பழி தலைவர் மீது, கே. எஸ் அழகிரி சாபம் வேறு கொடுக்கிறார் அந்த சாபத்தை காங்கிரஸ் தியாகி சீனிவாசன் குடும்பத்துக்கு கொடுக்கட்டும் அதை விட்டு தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிய
    கதையாக பாய வேண்டிய இடத்தை விட்டு விட்டு எங்கேயோ
    பாய்வது
    தயவு செய்து இந்த மாதிரி பதிவுகள் போடுவதை நிறுத்திக்
    கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும்
    நல்லது

    வணக்கம்!.......... Thanks mr. J W.,

  11. #1850
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    சுகாராம் அய்யா,

    உங்கள் பதிவு பற்றி (பதிவு எண் 1850)

    சரி விடுங்கள். பிரச்சினை முடிஞ்சி போச்சு. மாற்று திரி நண்பர்கள் ஏதாவது சொன்னால் பதில் சொல்லலாம். சும்மா சண்டை வலிச்சாலும் போர் அடிக்கிறது.

    மாற்று முகாம் ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் ஏதாவது சொன்னால் அதை அப்படியே போட வேண்டுமா?


    (உதாரணம்... அட்டை கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்) இதை எல்லாம் தவிர்க்கலாமே, நம்ம திரியிலேயே இதைப் படிக்கும்போது மனசு கஷ்டமாக உள்ளது சார்.

    நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •