Page 98 of 402 FirstFirst ... 488896979899100108148198 ... LastLast
Results 971 to 980 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #971
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
    தங்களின் கவனத்திற்கு


    ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் வெளியீட்டிற்கு பிறகு 2017ம் ஆண்டு முதல்
    தமிழகத்தில் வெளியான அரங்குகள் பட்டியல் .
    -----------------------------------------------------------------------------------------------------------------------

    3/3/17 சென்னை மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் -2 வாரங்கள் .

    25/08/17 -மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்

    17/11/17 -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்
    மதுரை - அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்

    23/02/18-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்

    13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

    11/05/18- சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்

    28/12/18-காரைக்கால் பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் - தினசரி 3 காட்சிகள்

    11/01/19 -சேலம் அலங்கார் -தினசரி 3 காட்சிகள் - 2 வாரங்கள்

    தூத்துக்குடி -சத்யா - தினசரி 3 காட்சிகள்

    19/07/19- மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்
    சாத்தூர் -இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்

    26/07/19-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்

    02/08/19-பழனி -சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்

    திண்டுக்கல் -என்.வி.ஜி.பி. - தினசரி 4 காட்சிகள்


    புதுவை நண்பர் மூலம் அறிந்த தகவல்
    ------------------------------------------------------
    கடந்த 10/8/19 அன்று புதுவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது டிக் டாக் வீடீயோஸ்
    கடையில் சில டிவிடிக்கள் வாங்க நண்பருடன் சென்றேன். 2012ல் கர்ணன், வேட்டைக்காரன் டிவிடிக்கள் தலா 200 வந்ததாகவும் அவற்றில் கர்ணன் 30 டிவிடிக்களும் , வேட்டைக்காரன் 150 டிவிடிக்களும் விற்பனை ஆனதாக
    தகவல்கள் தெரிவித்தனர் .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #972
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புதுவை எம்.ஜி.ஆர். பேரவை-பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் உயர்திரு. முருகு பத்மனபின் அவர்கள் நடத்திய எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் 10/8/2019 அன்று நடைபெற்றது.

    விழா சிறப்பாக நடந்ததாக விழாவில் கலந்துகொண்டவர்கள் சொன்னார்கள் மற்றும் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்த உயர்திரு. முருகு பத்மநாபன் அவர்களுக்கு நன்றி .
    விழாவில் மூன்று புத்தகங்களை வெளியிடப்பட்டது, அதன் விவரம் வருமாறு:

    புதுவையின் பாவலர் வடுகை கு.கண்ணன் அவர்களின் :புரட்சித் தலைவரின்பிள்ளை தமிழ்"

    திரு. கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "என்றும் வாழும் எம்.ஜி.ஆர்" Rs.175/=

    மூன்றாவது "ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் நாயகி" . இந்த புத்தகம் வந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.������........... Thanks...

  5. #973
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -புதுவை -11/08/19


  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #974
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " நல்ல நேரம்" 1972 ம் ஆண்டின் (Blockbuster movie of that year) பிரம்மாண்ட வெற்றி வசூல் சித்திரம்... சென்னை - அகஸ்தியா 70MM அரங்கில் 16-08-2019 வெள்ளிக்கிழமை முதல் தரிசனம்...

  8. #975
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா துறையில் எம்.ஜி.ஆர்., என்ன சாதித்தார் ?

    ஒரு ரசிகரை காட்டிலும் , பத்திரிகையாளர்கள் பார்வை காட்டிலும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் நிதர்சனமான உண்மை எம்ஜிஆர் சாதாரண நடிகராக அறிமுகமானாலும் தன்னுடைய திறமைகளால் முன்னேறி கருணாநிதியின் வசனங்களை அழகாக உச்சரித்து மக்கள் மனதில் இடம் பெற்றார் . பிற்காலத்தில் தன்னுடைய தொழிலில் இணையாக வந்த நடிகர் சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர்., படங்கள் வெளிவந்த நேரத்தில் ...எம்ஜிஆரின் "நாடோடிமன்னன் " 1958ல் சாதனை படைத்தது . நாடோடிமன்னன் இதிகாசம் என்று கூறினார்
    1958க்கு பிறகு எம்ஜிஆர் பல வெற்றி படங்களை தந்து முதலிடத்தில் தன்னை தக்க வைத்து கொண்டார் .


    எம்ஜிஆரின் சிறப்புகள்

    கடைசிப்படம் வரை கதாநாயகன் .
    அதிக சம்பளம் வாங்கிய நடிகர்
    அதிக வெற்றி படங்கள் தந்தவர்
    திரை உலக வசூல் சக்கரவர்த்தி .
    மரணத்தை வென்ற மக்கள் திலகம்
    மறு வெளியீடுகள் - சாதனைகள் தொடரும் படங்கள்
    1947 முதல் 2019 வரை 72 ஆண்டுகள் ...தொடர்ந்து திரை அரங்கில் எம்ஜிஆர் படங்கள்
    7 தலை முறைகள் தொடரும் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் மன்றங்கள்
    பாரத் பட்டம் -1972 ல் கிடைத்தது
    எம்ஜிஆரின் இயற்கையான நடிப்பு , சிறந்த பாடல்கள் , கொள்கை பாடல்கள் தத்துவ பாடல்கள் , காதல் பாடல்கள் இன்றும் மக்களால் ரசிக்கபப்டுகிறது .

    எம்ஜிஆரின் பன்முக திறமைகள்... கொண்ட சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன .

    எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆரின் அழகு முகம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , சுறுசுறுப்பு நடிப்பு மறக்க முடியுமா ?

    இனி என்ன வேண்டும் ?.......... Thanks...

  9. #976
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ம் தேதி நவீன டிஜிட்டலில் வெளியாகிய மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவருவதற்கு முன் 9 மாத இடைவெளி தான் இருந்தது. இப்படம் பார்க்காதவர்களே அதிகம் கிடையாது. அது மட்டுமல்ல... எல்லா தொலைக்காட்சியிலும் எண்ணற்ற முறை திரையிட்ட படமாகும். திரையிடாத திரையரங்குகள் ஆயிரத்தில் ஒருவனுக்கு குறைவு தான். சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பல முறை திரையிடப்பட்ட திரைப்படமாகும். அப்படியிருந்தும் சென்னை சத்யம் ( ஸ்டுடியோ 5 ) அரங்கிலும் ஆல்பட் காம்பளக்ஸிலும் டிக்கட் எண்ணிக்கை குறையாது ஒடிய திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். தினசரி ரிப்போர்ட் வாங்கி பார்த்தால் தெரியும். அது மட்டுமின்றி 50 நாள் 100 நாள் எல்லாம் பெரிய தியோட்டரில் அரங்கு நிறைந்து சாதனையாகும். முதல் வாரத்தில் தேவிபாரடைஸ், சாந்தம், ஆல்பட், எஸ்கேப் திரையிட்ட படமாகும். எந்த இடைவெளியில்லாது சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் வெற்றியா..... அல்லது முதல் வெளியீட்டிற்கு (1964) பின் தமிழகமெங்கும் சரிவர வெளிவராத கர்ணன் படத்தை யாரும் அறிந்திருக்க முடியாது. சென்னையில் 1987 ல் ஒருமுறையும், 2001 ல் ஒரு முறையும் திரையிட்டபடம். 2012 ல் டிஜிட்டலில் திரையிட்ட இப்படத்திற்கு திவ்யா பிலிம்ஸ் கிட்டதட்ட 1 கோடிக்கு மேல் செலவு செய்தார். புதுப்படம் போல் தான் மக்களுக்கு அறிமுகமானது... மகாபாரத்தின் கதையை மையப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. ஆந்திர நடிகரான என். டி. ஆர். நடிப்பும் முக்கிய காரணமாகும். 2012 க்கு பிறகு (மூன்று ஆண்டுக்கு பின்) 2016 ல் மீண்டும் வெளியான கர்ணன் படம் வெளியிட்ட அரங்குகளில் எல்லாம் படுத்தோல்வியை தான் தழுவியது.... ஆனால் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 2017 ல் மீண்டும் சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இரண்டு வாரம் ஒடி 2 லட்சத்து 50 ஆயிரம் வசூலை தந்தது. 2018ல் மீண்டும் ஒரு வாரம் ஒடி லட்சத்தை பெற்றது. அகஸ்தியாவில் 2017 2018. 2019 மூன்று முறை திரையிட்டு 2019ல் 2 காட்சியில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பெற்று தந்துள்ளது.
    மற்றும் ஸ்ரீனிவாசா கிருஷ்ணவேணி சரவணா பாலாஜி பிராட்வே பாட்சா என இருக்கும் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்துள்ளது. கர்ணன் படநிலவரம் என்ன? இன்னும் முக்கியமான ஒன்று.... சிவாஜி கணேசனின் கர்ணன் வெற்றி என்றால் ஏன் சிவாஜி கணேசனின் மற்ற சரித்திர, பக்தி சமுக, புராணப் படங்களை திவ்யா பிலிம்ஸ் டிஜிட்டலில் வெளியிட முன் வரவில்லை? தயக்கமென்ன அவருக்கு....
    பாசமலர் வெள்ளிவிழா படம். டிஜிட்டலில் அப்படம் வெளி வந்து சத்யம் அரங்கில் 3 நாள்தான். சிவாஜிகணேசன் ரசிகர் பூமிநாதன் பல லட்சங்களை இழந்தார். இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார் ! ஆளே இல்லை... அதன் மர்மம் பல உள்ளது. திருவிளையாடல் டிஜிட்டல் என்ன ஆனது... ? சொர்க்கம் படம் ஒரு சென்டருடன் முடிந்தது...?. ராஜா படம் ஏன் ஆல்பட்டில் ஒரு வாரத்துடன் முடிந்த பின் சென்னையில் எங்கும் வரவில்லை....? ஸ்ரீசினிவாசாவில் அரங்கில் சிவகாமியின் செல்வன் மொத்தமே 100 நாள் ஒட்டப்பட்டு 2000 பேர் கூட பார்க்கவில்லை.... ? ராஜபார்ட் படத்தை ஒட்டிய பின் எங்கும் கண்ணில் படவில்லை.... ஏனே? இப்பொழுது வசந்த மாளிகை படம் மட்டும் ஆல்பட்டில் ஒட்டபடும் ரகசியம் என்ன..... ? பின் எங்கும் திரையிட முடியாது அதனால் தானா? கர்ணன் ஒரு படத்தை வைத்து சில படங்களை நீங்களே வாங்கி செலவு செய்து நீங்களே கைதட்டும் நாள் என்று தான் முடியுமோ... இதற்கு எல்லாம் ஒரே காரணம் என்ன தெரியுமா.... திருவாளர் ( சொக்கலிங்கம்) கர்ணனை டிஜிட்டலில் தயாரித்ததனால் தான்..... அந்த. தொடர்ச்சியால் தான் சிவாஜி கணேசன் ரசிகர்களை டிஜிட்டலில் படம் எடுக்க வைத்து வேதனைக் கடலில் தள்ளியுள்ளார். (எங்களுக்கு எல்லாம்
    ஒட்டி விழா கொண்டாடும் பழக்கத்தை எங்கள் தலைவர் அன்றும் இன்றும் என்றும் தந்ததில்லை) உங்களின் நூறு படங்களின் வெற்றிக்கு எங்கள் ஆயிரத்தில் ஒருவர் சமம் ! நாடோடி மன்னன் ரிக்க்ஷாக்காரன் அடிமைப்பெண் எங்கவீட்டுப்பிள்ளை நினைத்ததை முடிப்பவன் .... இப்படங்கள் யாவும் எப்பொழுது திரையிட்டாலும் எங்கும் ஒடும் வெற்றி பெறும். வசூலை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகும். பணம் கொடுத்து ஒட்டுவதென்றால் ஆல்பட்டில் நாடோடி மன்னனை 100 நாள் செய்திருக்க முடியாதா.... அன்று திரையில் நடிகர் சிவாஜி கணேசனார் கற்று தந்ததை இன்று சரியாக செய்து வருகின்றார்கள். எங்கள் தலைவரின் சாதனைகள் அமைதியான வெற்றிக்கு அறிகுறியாகும். உங்களை போல ஆர்ப்பாட்டம் , ஆணவம், விளம்பரம் , தம்பட்டம், அகராதி இல்லாத பல வெளியீடுகளை காண்பது , காணுவது தான் எங்கள் வெற்றி! உரிமைக்குரல் ராஜு. ......... Thanks.........

  10. #977
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில் கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் வருகை தருகிறார்... கலையுலக காவலர் புரட்சி நடிகர் " குடும்ப தலைவன்".......இதுவன்றோ மறு வெளியீடு கறுப்பு வெள்ளை சாதனை சிகரம்.......

  11. #978
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அந்தி மழை மாத இதழ் -ஆகஸ்ட் 2019





    ஹாத்தி மேரா சாத்தி இந்தியிலும், நல்ல நேரம் தமிழிலும் வெற்றிப்படங்களை எடுத்தார் .எம்.ஜி.ஆரை வைத்து 100 நாள் படங்கள் நிறைய எடுத்தவர் தேவர்.
    தேவர் பிலிம்ஸ் பேனரில் வந்த படங்கள் கொட்டிக் குவித்த பணத்தை வைத்து
    தண்டாயுதபாணி பிலிம்ஸ் பெயரில் சிறிய பட்ஜெட் படங்களாக தெய்வம்,துணைவன்,,அக்கா தங்கை, ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய வெற்றிப்படங்கள் எடுத்தார் .

  12. #979
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (16/08/19) சென்னை அகஸ்தியாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நல்ல நேரம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .


  13. #980
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    வரும் வெள்ளி முதல் (16/08/19) கோவை சண்முகாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "குடும்ப தலைவன்" தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •