Page 235 of 402 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2341
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2342
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2343
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2344
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் , அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*

  6. #2345
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் (2020 -புத்தாண்டில் ) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*திரைப்படங்களின் விவரம் .
    -------------------------------------------------------------------------------------------------------------------
    திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் 31/12/2019 அன்று இரவு சிறப்பு காட்சியாக புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை " திரையிடப்பட்டது .

    01/01/2020 புதன் முதல் கோவை டிலைட்டில்* தேவரின் "தாயை காத்த தனயன் "* * * * * * * * * *தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

    03/01/2020 வெள்ளி முதல் கோவை சண்முகாவில் தேவரின் "நல்ல நேரம் "* * * * * * * * * *தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    03/01/2020 வெள்ளி முதல் திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் அரங்கில்** * * * * * * * * *"நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    03/01/20* திருச்சி முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.



    05/01/2020* ஞாயிறு மாலை சிறப்பு காட்சியாக கோவை செந்தில் குமரன் அரங்கில்** * * * * * * * * * *டிஜிட்டல் வடிவில் உருவான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "நம்நாடு"* * * * * * * * * * * கோவை* எம்.ஜி.ஆர். பக்தர்களுக்காக பிரத்யேகமாக* * திரையிட படுகிறது .* * * *
    Last edited by puratchi nadigar mgr; 4th January 2020 at 05:56 PM.

  7. #2346
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்* கலையுலகின் "கலங்கரை விளக்கம் " ஒரு வார வசூலாக*சுமார் ரூ.1,20,000/- ஈட்டி அபார சாதனை. பிரிண்ட் படு மோசமாக இருந்த நிலையில்*இந்த வசூலானது பிரமிப்பாகவும், வினோதமாகவும் உள்ளது என மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .

  8. #2347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -03/01/2020* -என்றென்றும் கண்ணதாசன்*
    ----------------------------------------------------------------------------------

    பாடல் எழுதுகின்றபோது சில சமயம் அந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை கேட்பார் அப்பா .* வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரை பாடலில்*சேர்ப்பார் .* சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக*சொல்வார் .* சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லி விடுவார் .* பாடலுக்கு பாடல் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று அப்பா நினைப்பார் .**

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படம் பணத்தோட்டம் . அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல் .

    சரோஜாதேவியை கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.* அதுமட்டுமில்லை .* சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ் அந்த காலத்தில் மிகவும் பிரபலம் .அத்துடன் சரோஜாதேவியின் உடலமைப்புக்காகவே* பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை**( back shot) காட்டுவார்கள் .அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர். பாடுவதாக*

    பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா*கோவில் கொண்ட சிலையா - கொத்துமலர் கொடியா*

    என்று அப்பா எழுதினர் , எம்.ஜி.ஆர். கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும் .**அவர் கேரளா மேனன் குடும்பத்தை சார்ந்தவர் .* இன்றைய கேரளம் அன்றைய சேர நாடு .ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் . என்பதும் அனைவருக்கும் தெரியும் .* அதனால் சரோஜாதேவி பாடுவதாக*

    பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா*சேரனுக்கு உறவா - செந்தமிழர் நிலவா*

    என்று எழுதினார் ,* இந்த வரிகளை சாதாரணமாக பார்த்தால்* ஒரு காதல் பாடல் போல தோன்றும் . ஆழமாக பார்த்தால்தான் அனைத்தும் விளங்கும் .

    இந்தப்பாடல் பதிவு செய்யப்பட பிறகு எம்.ஜி.ஆர். அந்த பாடல் வரிகளை கேட்டுவிட்டு புன்னகை செய்தார் .* அடுத்த சில தினங்களில் அவர் அப்பாவை ஒரு ஸ்டுடியோவில் பார்த்தார் .**
    என்ன கவிஞர் , சேரனுக்கு உறவா என்றார் எம்.ஜி.ஆர். ஆமாம் பாரிவள்ளல் மகன் . அவர்தான் செந்தமிழர் நிலவு* என்றார் அப்பா .* எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார் .
    இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்* அதனை ஏற்றுக் கொள்வதற்கும் நல்ல மனம் வேண்டும் .இருவருக்கும் இரண்டும் இருந்ததால்தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன .

  9. #2348
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -03/01/2020* - இது உங்கள் இடம் .
    ---------------------------------------------------------------

    மற்றவர்களை பார்த்து ரஜினியும் பகல் கனவு .-* ஆர். ராஜகோபால் .
    -----------------------------------------------------------------------------------------------------

    தமிழக வரலாற்றில் எந்த ஒரு நடிகனும் முதல்வராக முடியாது என வாசகர் ஒருவர் இதே பகுதியில் கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கு என் பாராட்டுக்கள்*

    பாக்யராஜ், சீமான் , டி. ராஜேந்தர் , போன்றோர் கட்சி ஆரம்பித்து எப்படியாவது தமிழக முதல்வராக வந்துவிட வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு வந்தனர் .**அது கனவோடு முடிந்தது. அவர்களால் வெற்றி பெற முடியவில்லை .

    நடிகர் கமல் போன்றோர் என்ன தத்தி கிணத்தம் போட்டாலும் தேர்தலில் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது .* டிபாசிட் காலி ஆவதுதான் மிச்சம் .எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளாக திரைப்படத்தில் இருந்து , சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் .* மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் ஏழையின் சிரிப்பின் இறைவனையும் கண்டவர் .**

    அவர் திரைப்படத்தில் நடிப்பாலும் , பாடல்களாலும், வசனங்களாலும் , ஒவ்வொரு மக்கள் மனதிலும் , ரசிகர் மனதிலும் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் .* அவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் .* அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் , அவர் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் .**

    மேடையேறி வாய் கிழிய பேசும் சீமான், கமல், பாக்யராஜ் போன்றவர்கள் சாதாரண மக்களுக்கு என்ன செய்துள்ளனர் . எம்.ஜி.ஆர். இடத்தை எந்த நடிகனாலும் , நிரப்ப முடியாது . அவர் இடத்திற்கு , எந்த நடிகனும் வர முடியாது .**
    எம்.ஜி.ஆரை போல் தங்களுக்கும் மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற* செய்வர்* என*தப்பு* கணக்கை ரஜினியும் போட்டுள்ளார் .

    ஒவ்வொரு தேர்தலிலும், நடிகர் சீமான் அதலபாதாளத்தில்* தள்ளப்பட்டுள்ளதை*அறிந்தும் நடிகர் ரஜினியும் ஏன் பகல் கனவு காண்கிறாரோ தெரியவில்லை .

  10. #2349
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர்* - மனக்கதிர்*
    ------------------------------------

    எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிடாதீர - எஸ். ராமசுப்பிரமணியன்*
    ---------------------------------------------------------------------------------------------------

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்பாராத சூழ்நிலையில் , உரிய கால கெடுவுக்குள் வருமான வரிபாக்கி 11 லட்சம் ரூபாயை* செலுத்த மறந்து விட்டார் .அது நாளிதழ்களில் வெளியானது .**

    இதை படித்த மதுரையை சேர்ந்த, எம்.ஜி.ஆரின் ரசிகரான, வயதான ஒரு முஸ்லீம் மூதாட்டி, , தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து, 11 லட்சம் ரூபாயை* பெற்று இருந்தார் . தன மகனையும் உடன் அழைத்து சென்னை வந்தார் .

    எம்.ஜி.ஆரை சந்தித்து , 11 லட்சம் ரூபாயை கொடுத்து ,, வருமான வரியை கட்டி கொள்ளுங்கள் என்றார் . ஏது* இவ்வளவு பணம் ,என கேட்ட எம்.ஜி.ஆரிடம் , நிலப்பத்திரத்தை அடமானம் வைத்த* விபரத்தை மூதாட்டி கூறினார் .

    இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார் .* என் வரி பாக்கியை நான் கட்டி கொள்கிறேன் .* இதற்காகவா நிலத்தை அடமானம் வைத்து, பணத்தை கொண்டு வந்தீர்கள்.* இதுமாதிரி , இனி செய்யாதீர்* என, எம்.ஜி.ஆர் அறிவுரை கூறினார் .**

    அத்துடன் கடனுக்கு பிடித்தம் செய்திருந்த வட்டி தொகையையும் , வழி செலவுக்கும் பணமும் வழங்கி, முஸ்லீம் மூதாட்டியை வழி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*
    கட்சி ஆரம்பிக்க போறேன், , முதல்வர் ஆகா போகிறேன், என புருடா விட்டு நடிகர் ரஜினி பிலிம் காட்டுகிறார் .* இவர் சொந்தமாக தயாரித்த சில படங்களில் நடித்து, அவை சரியாக ஓடவில்லை .* கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது .இவர் வைத்திருந்த கடன் பாக்கியை செலுத்த, எந்த ரசிகராவது பணத்துடன் வந்தார்களா ....

    நாட்டில் ஓடும் நதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பதற்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என ரஜினிஅறிவித்தாரே , இதுவரை, அவர் சல்லி காசு கூட அரசுக்கு தரவில்லை .* இந்த லட்சணத்தில் கட்சி ஆரம்பிக்க போறாராம்.* முதல்வர் ஆகா போறாராம் .

    நடிகர் ரஜினி , அரசியலிலும் இறங்க மாட்டார். கட்சியும் ஆரம்பிக்க மாட்டார் .அவர் நடித்து வெளிவரும் படம் ஊத்தி கொள்ளும் பயத்தால், இப்படி கூறி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்றொரு மாமன்னனுடன் , இவரை யாரும் ஒப்பிட்டு பேசாதீர்கள்*.**

  11. #2350
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்னியின் செல்வன்!!!

    புரட்சி நடிகர் காவியத்தின் நாயகன்
    வசனம் : கலைஞர்/"முரசொலி" சொர்ணம் அல்லது திரு. ஆர்.கே.சண்முகம்.

    சண்டை பயிற்சி " ஸ்டண்ட் சோமு.

    இசை: எஸ்.எம்.எஸ்/கே.வி.மகாதேவன் அல்லது மெல்லிசை மன்னர்கள்

    உடைகள் - முத்து

    இயக்கம் - எம்.ஜி.ஆர்

    புரட்சித் நடிகரின் வாள் வீச்சு, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள்....இதை தானே நாம் எதிர்பார்த்தோம்!.

    ஆனால் இன்று நவீன பொன்னியின் செல்வன்!!!! காவியத்தின் நாயகனாக புரட்சித் நடிகரை தவிர யாரையும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை.

    நவீன பொன்னியின் செல்வன் .....படத்தில் கிராபிக்ஸ் வாள் வீச்சு கண்டிப்பாக இருக்கும்!!!!!

    சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •