Page 126 of 402 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1251
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் 20-09-2019 கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் பிரம்மாண்ட தயாரிப்பு..."அடிமைப்பெண்" டிஜிட்டல்... படைப்பு திருநெல்வேலி - ரத்னா dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண வருகை�� �� ��.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1252
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    . Highest Grossing Tamil Movies from 1947 to 1980... Thanks...

  4. #1253
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த சில வாரங்களாக வெளியாகி* வெற்றிநடை போட்ட* மக்கள் தலைவர்*எம்.ஜி.ஆர்.அவர்களின் திரைப்படங்களின் பட்டியல் .---------------------------------------------------------------------------------------------------------------------------02/08/19* -பழனிநகரம் சாமி தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * கோவை டிலைட் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *திருச்சி முருகன் - ரிக்ஷாக்காரன்* - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * சேலம் சரஸ்வதி -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *2 வது வாரம்*
    09/08/19* * -சென்னை பாலாஜி - காவல்காரன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * சேத்தூர் -வி.பி.எஸ்.தியேட்டர் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * கோவை சண்முகா - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * **
    16/08/19* * * சென்னை அகஸ்தியா* -நல்ல நேரம் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * ரெட்ஹில்ஸ் நடராஜா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்*15/08/19* * * *ஸ்ரீ வில்லிப்புத்தூர் ரேவதி - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*16/08/19* * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- தேடி வந்த மாப்பிள்ளை -* 4* காட்சிகள்** * * * * * * * * * கோவை சண்முகா - குடும்ப தலைவன்- தினசரி 4 காட்சிகள்*18/08/19- போடிநாயக்கனூர் -ஓ.ஆர். சினிமாஸ் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * * திருப்பரங்குன்றம் லட்சுமி -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

    23/08/19* * * *சென்னை பாலாஜி - பல்லாண்டு வாழ்க - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *மதுரை பழனிஆறுமுகா -ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *கோவை சண்முகா -நீதிக்கு தலை வணங்கு - தினசரி 4 காட்சிகள்*27/08/19* * * *திருப்பரங்குன்றம் லட்சுமி - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    30/08/19* * * * மதுரை ராம் தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * கோவை டிலைட் -ஊருக்கு உழைப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * *திருச்சி கெயிட்டி -ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*31/08/19* * * * *நத்தம் சென்ட்ரல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

    06/09/19* * * *சென்னை பாலாஜி -விக்கிரமாதித்தன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *திண்டுக்கல் என்.வி.ஜி.பி.-ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *பண்ணைபுரம் (தேனீ) தியாகராஜா -ஆயிரத்தில் ஒருவன்** * * * * * * * * * *கோவை நாஸ் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *திருப்பூர் மணீஸ் - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜா -ரிக்ஷாக்காரன்-தினசரி 3 காட்சிகள்*

    13/09/19* * *மதுரை திருமங்கலம் ஆனந்தா -ஆயிரத்தில் ஒருவன் -4 காட்சிகள்*

    20/09/19* * *சென்னை அகஸ்தியா -குடியிருந்த கோயில் _தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை ரத்னா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *மதுரை சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *கோவை டிலைட் -சிரித்து வாழ வேண்டும் -தினசரி 2 காட்சிகள்*
    பட்டியல் தொடரும் !!!!!!!!!!!* * * * * * * * *** * * * * * * * * * *

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1254
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15- 08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
    பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
    குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
    சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
    ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
    மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
    விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
    கலையரசி. ..பல போட்டிகள்
    தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
    காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
    பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
    தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
    அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
    பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
    படகோட்டி. ...படகு போட்டி
    காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
    அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
    நம்நாடு. ..தேர்தல் போட்டி
    பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
    ரிக்க்ஷாக்காரன். ..ரிக்க்ஷா போட்டி
    குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
    நல்ல நேரம். ..யானை போட்டி. ...
    பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
    நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
    பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
    நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
    மீனவநண்பன். ...வாள் சண்டை போட்டி
    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ..பாட்டு போட்டி .........

    இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
    அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
    சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
    தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
    மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
    அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும். ............ Thanks............

  7. #1255
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகம் யாருக்கெல்லாம் பெருமைகள் சேர்த்ததோ அதை பற்றி எந்த பெருமையும் கிடைக்காத விரக்தியில் தரம் தாழ்ந்து கேவலமான எழுத்தில் பதிவிட்டு திருச்சி ரசிகன் என்பவனும் ஒரு மன நோயாளி என்பதை உணர்த்தியுள்ளார் .மன நோயாளிகள் கருத்து மிகவும் பரிதாபம் . எந்த ஜென்மத்திலும் ஆன்மா சாந்தி அடையாது, அமைதி காணாது, நிம்மதியோ ஒரு துளியும் உணர இயலாது.......... Thanks...

  8. #1256
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் fuse பீஸ் போனதா சொல்லி ரொம்ப வருத்த பட்டாங்களே... உண்மையா தோழர்களே?!

  9. #1257
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட பதிவு
    கொஞ்சம்
    பொறுமையாக
    முழுவதும்
    படித்து பாருங்கள்
    இதை
    இன்றைய
    இளைய தலைமுறைக்கு
    எடுத்து சொல்லுங்க
    தலைவரின் புகழை மட்டும்
    பரப்புவது மட்டும்
    நோக்கம் அல்ல
    தலைவர்
    பின்பற்றிய
    நல்ல வழியில்
    அடுத்த தலைமுறையும்
    நல்வழியில்
    நடைபோட
    இந்த பதிவு

    ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!
    எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!

    திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?

    உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

    கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?

    மக்கள் திலகம்

    கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

    பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

    கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

    மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

    என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

    அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

    எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!

    வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!

    அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 32ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!

    எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!

    ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!

    அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.

    பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����......... Thanks.........

  10. #1258
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -25/09/19
    திரைத்துறையில் இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகாதது எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஏக்கமாக உள்ளது. இந்த ஏக்கம் எப்போது தீரும்.- ஜே. லூர்து, மதுரை.*
    எம்.ஜி.ஆர். திரைப்பட துறையை பொறுத்தவரை உண்மையிலேயே புரட்சி தலைவர்தான் .* அவர் ரசிகர்களுக்கு " தாயை வணங்க வேண்டும்.* புகை , மது கூடாது. பெண்களிடம் கண்ணியம் .இதெல்லாம் ஒவ்வொரு படத்திலேயும்* *இடைவிடாது சொன்னார் . எந்த படத்திலும் சட்டத்தை மீற மாட்டார் . அந்த வழியில் வில்லனை அழிக்க மாட்டார் .அவர் நினைக்க நினைக்க ஆச்சர்யம் .

  11. Thanks orodizli thanked for this post
  12. #1259
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
    நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.

    இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.

    அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.

    அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.

    ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.

    இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.

    வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.

    பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.

    பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.

    கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.

    திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.

    பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
    பாதையில் தவிக்குதடா-சில
    பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
    தினம் தினம் பறிக்குதடா!
    மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்.............. Thanks.........

  13. #1260
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

    இம் மூன்று தலைவர்களை உண்மையாக அறியாத எந்த ஒரு அரசியல் தலைவர்கள் எவரும் மக்களின் மனதில் நிற்பவர் இல்லை?

    அதற்கு மரியாதைக்குரிய திரு.கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் இந்த விளக்கமே சாட்சி...

    " பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.

    பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!

    எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய
    திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப்
    போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "

    - கவிஞர் முத்துலிங்கம் ........... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •