Page 157 of 402 FirstFirst ... 57107147155156157158159167207257 ... LastLast
Results 1,561 to 1,570 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1960,1965ஆம் ஆண்டுகளில் ,மல்யுத்த வீரர் தாராசிங்(சினிமாவிலும் நடித்துள்ளார்)கிங்காங்,ஆகிய இருவரும் சண்டையிடும் காட்சிப் போட்டி நாடு முழுவதும் நடக்கும்,அப்படி தமிழகத்தில் ஒருமுறை நடக்கும்போது,தாராசிங் ஒரு பேட்டியில் தென்னிந்திய நடிகர்கள் சினிமாவில் மட்டுமே சண்டையிடுவர்,நிஜத்தில் எங்களைப்போல் போட முடியாது,வலு இல்லாதவர்கள் என்று ஒட்டு மொத்த நடிகர்களையும் கேலி செய்தார்,அதற்கு எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை,ஆனால் அன்றைய நம் புரட்சிநடிகர் சிங்கம்போல் சிலிர்தெழுந்து,தாராசிங்குடன் நான் மல்யுத்தப் போட்டியில் மோதுவதற்குத் தயார் என்று சவால் விட்டார் ,புரட்சித்தலைவரின் சவால் அப்போது பரபரப்பாகியது........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1562
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1563
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1564
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1565
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1566
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1567
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியிலேருந்து குலைக்கும் முட்டாளுக்கு
    திருவையாறில் உங்க நடிகன் தோற்றுவிட்டார் என்றுதான் சொன்னேன். டெபாசிட் வாங்கவில்லை என்று நான் எங்கே சொன்னேன். ஆனால் அந்த டெபாசிட் கூட ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து எம்ஜிஆர் ரசிகர்கள் அதிமுகவின் ஒரு பிரிவினர் ஓட்டு போட்டதால்தான் கிடைத்தது என்பதை இப்போது சொல்கிறேன். புரட்சித் தலைவர் ஜானகி அம்மாளை அரசியலுக்கு கொண்டுவரவில்லை. அந்த அம்மாதான் வந்தார். அதனால்தான் தோற்றார். அதேநேரம் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் ஜெயிச்சதே. அது புரட்சித் தலைவரால்தான் என்பது உன் மரமண்டைக்கு புரியலையா. ஆனால், உங்கள் நடிகர் செல்வாக்கு இல்லாமல் தான் நின்ற இடத்திலேயே தோற்றுப் போனார்.
    உங்க நடிகன் மட்டும் பர்மிட் வாங்கிவைத்துக் கொண்டு பாரின் சரக்கு குடிப்பான். ஊரில் இருப்பவன் கள்ளச்சாராயம் குடிச்சு சாகணுமா. அதுனாலதான் உங்களை மாதிரி குடிகாரப் பசங்களுக்காகத்தான் புரட்சித் தலைவர் கடையை திறந்தார்.
    உங்கள் பக்கம் சிவாதான் முதலில் எங்கள் தலைவரை மனநோயாளி என்று எழுதினார். அதற்குதான் தம்பி சுந்தர பாண்டியன் பதிலுக்கு உங்கள் நடிகரை மனநோயாளி என்று சொன்னான்.
    சிவா சொன்னதற்கும் அதற்கும் சரியாகப் போய்விட்டது.
    ஆனால், அதற்கு நீ என்னவெல்லாம் எங்கள் தலைவரைப் பற்றி நீ எழுதிநாய்.
    அதை திரும்ப சொல்லவிரும்பவில்லை.
    நீ போட்ட பதிவ திருப்பி படிச்சு பார் அறிவை விற்றுவிட்ட முண்டமே. நாகரிகமாக பேசு. இல்லை என்றால் மரியாதை கெட்டுவிடும்.
    Last edited by MASTHAAN SAHEB; 14th October 2019 at 07:09 PM.

  9. #1568
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை

    ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு

    வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.

    அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு

    நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.

    அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .


    இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை

    என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.

    ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு

    புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்

    அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட

    அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

    அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்

    ஏன் சிவா,
    அதிமுக சென்டிமெண்ட் என்று போட்டு மக்கள் திலகத்துடன் ஜானகி அம்மாளும் ஜெயலலிதாவும் இருக்கும் படத்தை போட்டு இவர்களில் யாருக்கும் குடும்பமும் கிடையாது. வாரிசும் கிடையாது. என்றால் என்ன அர்த்தம்.
    குற்றமுள்ள நெஞ்சு உங்களுக்குத்தான் குறுகுறுக்கிறது.
    எங்கள் தலைவரைப் பற்றி உங்கள் திரியில் எவ்வளவு கேவலமாக எல்லாம் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் என்ன கேவலமான பதிவு போடுவீர்கள். பெண்களோடு தொடர்பு என்று எல்லாம் எழுதுவீர்கள். உங்கள் நடிகரும் அதற்கு விதிவிலக்கு இல்லையே.
    ‘‘‘சி.ஐ.டி. ....’’’ யாக செயல்பட்டு நாங்கள் பட்டியல் போடவா.
    நாடோடி மன்னன் டூப்ளிகேட் விளம்பரம் என்று சொல்கிறீர்கள்.
    உங்கள் திரியில் மனோகாரா படம் ஒரே வாரத்தில் வசூல் 10 லட்சம் என்று தமிழக அரசியல் பத்திரிகையில் வந்ததை நீங்கள் எடுத்து உங்கள் திரியில் போட்டீர்கள். அதைப் பற்றி சுந்தர பாண்டியன் கேட்டதற்கு எழுதியவரைத்தான் கேட்க வேண்டும் என்று சாமர்த்தியமாக பேசுகிறீர்கள். நழுவுவது நீங்கள்தான்.
    சரி . அப்படிப் பார்த்தால் நீங்களும் போலி விளம்பரத்தை எதற்கு எங்கள் திரியில் போட வேண்டும். தயாரித்தவரை கேளுங்களேன். இங்க வந்து ஏன் கேட்கிறீர்கள். நீங்கள் கேட்டதால்தான் பதிலுக்கு நாங்கள் அதைக் கேட்க வேண்டி இருக்கிறது.
    அதைத் தயாரித்தது எம்ஜிஆர் ரசிகர் என்று சொல்வீர்கள் என்றால் பத்து லட்சம் வசூல் என்று பொய் எழுதியதும் நாஞ்சில் இன்பா என்ற உங்கள் நடிகரின் ரசிகன்தான்.

    இதுபோன்ற பொய்கள் ஒரு உதாரணம்தான். நானும் உங்கள் நிறைய பொய்களை சொல்ல முடியும்.

    உங்கள் நடிகரின் படங்களும் 100 நாட்கள் ஓடியது, சில படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது என்பதை நாங்கள் மறுக்கவே இல்லை. ஆனால், வசூல் சக்ரவர்த்தி என்று 1971-ம் ஆண்டு பேசும்படத்தில் வந்த கேள்வி பதில், 1973-ம் ஆண்டு பொம்மையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் எம்ஜிஆர்தான் என்று வந்த பதில் எல்லாம் ஏற்கெனவே போட்டாச்சு.

    உங்களுக்கும் தெரியும். தெரியாத மாதிரி நடிக்காதீர்கள்.

  10. #1569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #நல்லாயிட்டாரு.............

    எம்.ஜி.ஆரு.,க்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

    குண்டு பாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்ஜிஆர்.

    அந்த சமயத்தில் "பெற்றால்தான் பிள்ளையா" படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்) மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

    அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை "குடியிருந்த கோயில்" ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

    சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக "குடியிருந்த கோயில்" படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்ஜிஆர். அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

    படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

    சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக் கவனித்து விட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

    ‘’உன் விழியும் என் வாளும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று #மொத்த #கூட்டமும் #அவர் #வாயையே #பார்த்துக்கொண்டிருந்தது.

    அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி (சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.
    அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா #வாத்தியார் #நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
    இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் "காவல்காரன்" படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.


    வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும்

    #பழையபடி #பார்க்கமுடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் விசிலடித்துக்கொண்டும், உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்........... Thanks.........

    நன்றி : நக்கீரன்

  11. #1570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்ததை முடிப்பவர் எம்.ஜி.ஆர்.

    M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

    அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

    கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

    என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

    அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

    கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

    அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

    ‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

    அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

    ‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

    இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

    இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

    ‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

    அந்த வாசலில் காவல்கள் இல்லை

    அவன் கொடுத்தது எத்தனை கோடி

    அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’........ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •