Page 107 of 402 FirstFirst ... 75797105106107108109117157207 ... LastLast
Results 1,061 to 1,070 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1061
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் முதல் புரட்சிக்காவியம் மருதநாட்டு இளவரசி ! தலைவரின் முதல் சமூக காவியம் அந்த மான் கைதி! தலைவரின் முதல் வெள்ளிவிழா காவியம் மதுரைவீரன்! தலைவரின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும். தலைவரின் முதல் தேசிய விருது மலைக்கள்ளன்! தலைவரின் முதல் 100 காட்சி அரங்கு நிறைந்த படம் மதுரைவீரன். தலைவரின் முதல் இரட்டை வேடம் நாடோடி மன்னன். தலைவரின் முதல் 200 நாள் படம் எங்க வீட்டுப்பிள்ளை! தலைவரின் முதல் ஈஸ்ட்மென் கலர் படம் படகோட்டி! தலைவரின் முதல் 100 நாள் படவிழா நெல்லையில் மலைக்கள்ளன் விழா! தலைவரின் முதல் வசூல் புரட்சிபடம் மர்மயோகி! தலைவரின் படவிழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்துக் கொண்ட முதல் படம் நாடோடி மன்னன். எம்.ஜி.யார். பிக்சர்ஸின் முதல் படம் நாடோடி மன்னன்! கும்பகோணத்தில் முதல் 100 நாள் படம் மதுரை வீரன்! திருவண்ணாமலையில் முதல் 100 நாள் படம் நாடோடி மன்னன்! தர்மபுரியில் முதல் 100 நாள் படம் எங்க வீட்டுப்பிள்ளை! சென்னை புறநகர் பகுதியில் 100 நாள் கண்ட முதல் படம் எங்க வீட்டுப்பிள்ளை ( பல்லாவரம்) அடுத்து 2 வது படம் உலகம் சுற்றும் வாலிபன் ( வில்லிவாக்கம்) முதலில் ஒடி முடிந்த பின் அடுத்த வெளியீட்டில் 50 நாளை சென்னையில் கடந்த முதல் படம் நாடோடி மன்னன் ( சன் தியோட்டர் - 70 நாள்) 2 வது திரைப்படம் எங்க வீட்டுப்பிள்ளை ( ஸ்ரீ னிவாசா 50 நாள்) தொடரும்...... பதிவுகள்! உரிமைக்குரல் ராஜு.............. Thanks.......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் ’இதயக்கனி’க்கு 44 வயது!
    Published: 22 Aug, 19 12:38 pmModified: 22 Aug, 19 12:38 pm

    AMP

    வி.ராம்ஜி

    சினிமாவுக்கென, வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு. அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா... எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்... ‘இதயக்கனி’.

    திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். தன் கட்சிக் கொடியை திரையில் காட்டினார். கொடியைப் பார்த்ததுமே கைத்தட்டிய ரசிகர்கள், வசனம் பேசும் போது ஆர்ப்பரித்துத் தெறித்தனர். சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.


    மிகப்பெரிய எஸ்டேட் முதலாளி மோகன், தொழிலாளர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பவர். அவர் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஊர்மக்கள் ஒருமாதிரியாகப் பேச, அவளைத் திருமணம் செய்கிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியைப் பார்க்க மோகன் செல்கிறார். அப்போதுதான், அவர் ரகசிய போலீஸ் என்பது ஆடியன்ஸூக்குத் தெரிகிறது. பெங்களூருவில் நடந்த ஒரு கொலைவழக்கைக் கண்டறியும் பணி மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுகுறித்த பணியில் இறங்கும் போது அவருக்கு ஓர் அதிர்ச்சி... கொலை செய்தவள் ஒரு பெண். அதுமட்டும் அல்ல... அவள் மோகனின் மனைவி.

    அதிர்ந்த மோகன், அடுத்தடுத்து பெங்களூரு செல்கிறார். அங்கே ஒரு கூட்டத்தைச் சந்திக்கிறார்.மனைவியையே கைது செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பையும் அவர்களின் செயல்களையும் கண்டுபிடிக்கிறார். தன் மனைவி குற்றவாளி அல்ல எனும் உண்மையை உணர்த்துகிறார்.

    77ல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். 75ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். அறுபதுகளிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கூட, தன் படங்களில் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தானே கட்சி ஆரம்பித்ததும் இன்னும் கவனம் செலுத்தி, காட்சிகளைப் புகுத்தினார்.

    படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.


    அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

    எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

    எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் அப்பவே வேற லெவல்தான்.

    ராதாசலூஜா டபுள் ஆக்ட் போல் காட்சிப் படுத்திவிட்டு, திரைக்கதை விறுவிறுப்பாகும். ஆனால், கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாலாவும் எம்ஜிஆரின் மனைவி லக்ஷ்மியும் ஒருவரே என்பதை க்ளைமாக்ஸில் விவரிக்கும் போது, ஸ்கிரிப்டின் நுட்பம் வியக்கச் செய்தது. ஒகேனக்கல், பெர்க்காரா, சிதம்பரம் பிச்சாவரம் என எல்லா இடங்களிலும் அழகு கொஞ்ச விட்டிருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். படத்துக்கு வில்லன் இல்லை. வில்லி. இதுவும் பேசப்பட்டது. மேலும் படத்தில், ஒரு ஆங்கிலப்பாடல். இதை உஷா உதூப் பாடியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் தன் இசையாலும் மெட்டுக்களாலும் படத்துக்கு பிரமாண்டம் கூட்டியிருப்பார்.

    வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன்,ராண்டார்கை ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். என் பேர் பிளாக் . அவர் பேரு ரெட்.எம்.ஜி. ரெட்’ என்பார் தேங்காய் சீனிவாசன். இந்தப் படத்துக்கு ராதாசலூஜாவின் மழலைக் குரலும் அவரின் கிளாமரும் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தன. ஏ.ஜெகநாதனின் இயக்கம் படு கச்சிதம். பின்னாளில், வெள்ளைரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார் ஜெகநாதன்.

    ’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்றெல்லாம் வசனம் வரும்.

    1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரிலீசானது ‘இதயக்கனி’. படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனங்களில், நிரந்தரமாகவே இருக்கிறது... இருக்கிறார்... இதயக்கனியும் இதயக்கனியான எம்ஜிஆரும்!

    வசூலிலும் வெற்றி... படத்துக்கும் நல்லபெயர்... எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது... என எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது......... Thanks to The Hindu Tamil......

  4. #1063
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் M.G.R.பெற்ற விருதுகள்
    1.படம்:மலைக்கள்ளன் 1954 ம் வருடம்
    சிறந்த நடிகர் 2-ம் பரிசு
    இந்திய அரசு வழங்கியது.
    2. படம்:எங்க வீட்டுப் பிள்ளை.
    வருடம்:1965. சிறந்த நடிகர்
    பிலிம் பேர் விருது.
    3.படம்:காவல்காரன்.வருடம்:1967
    சிறந்த படம்.முதல் பரிசு.
    தமிழக அரசு.
    4.படம்:குடியிருந்த கோயில்.
    வருடம்:1968.சிறந்த படம்.
    முதல் பரிசு.தமிழக அரசு.
    5.சிறந்த நடிகர்.வருடம்:1968
    இலங்கை அரசு.
    6.படம்:அடிமைப் பெண்.வருடம்1969
    சிறந்த படம்.முதல் பரிசு.
    தமிழக அரசு.
    மொத்தம் 14.இன்னும்8இருக்கு அனுப்புகிறேன். சிஸ்டர்.
    7.படம்:அடிமைப் பெண்.வருடம்:1969.
    சிறந்த படம்.முதல் பரிசு.பிலிம் பேர் விருது.
    8.படம்:Rikshakaran. வருடம்:1971.
    சிறந்த நடிகர். முதல் பரிசு.
    சிங்கப்பூர் ரசிகர்கள்.
    9.அண்ணா விருது.வருடம்:1971.
    தமிழக அரசு.
    10.பாரத் இந்திய அரசு.வருடம்:1971
    11.படம்:உலகம் சுற்றும் வாலிபன்.வருடம்:1973.சிறந்த படம்.
    பிலிம் பேர் விருது.
    12.கௌரவ பட்டம்:அரிசோனா பல்கலை கழகம். அமெரிக்கா.
    வருடம்:1974.
    13.டாக்டர் பட்டம்.வருடம்:1983.
    சென்னை பல்கலை கழகம்.
    14.19.03.1988 அன்று M.G.R.அவர்களுக்கு
    "பாரத ரத்னா"விருது வழங்கப்பட்டது.
    இந்தியக் குடியரசுத் தலைவர்
    R.வெங்கட்ராமன் அவர்கள்
    திருமதி:ஜானகி ராமச்சந்திரனிடம்
    இப்பட்டத்தினை வழங்கினார்.
    15. 20. 09.1983 அன்று மெட்ராஸ் பல்கலை கழகம் "கௌரவ சட்ட முனைவர்"
    பட்டத்தை வழங்கியது.
    மக்கள் தலைவரை No.1.ஆக உயரத்திய படம் 1950-ல் வந்த
    "மந்திரி குமாரி".
    1950-ல் வெளிவந்த மந்திரி குமாரியிலிருந்து 1977-ஆம் ஆண்டு
    வெளிவந்த"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"வரை 27 வருடங்கள்
    முடிசூடா மன்னனாக திரையுலகில்
    வலம் வந்தார்.
    1956-ல் வெளிவந்த"மதுரை வீரன்"
    பெற்ற வெற்றியைத் தொடர்ந்து
    கல்யாணம் என்ற ரசிகர்
    M.G.R.ரசிகர் மன்றம் தொடங்கினார்.
    1958-ல் நாடோடி மன்னன் வெற்றி
    பெற்றதைத் தொடர்ந்து M.G.R.அவர்களின் புகழ் காட்டுத் தீயைப் போல் நாடெங்கும் பரவியது.
    இதைத் தொடர்ந்து மதுரையில்
    நடைபெற்ற மாபெரும் விழாவில்
    110-சவரனில் செய்யப்பட்ட தங்க வாள்
    மக்கள் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
    "கொடுத்து சிவந்த கரம்"அந்த மன்னன் தங்கவாளை மூகாம்பிகை
    அம்மனுக்கு காணிக்கையாக
    வழங்கினார்
    1980-ஆம் ஆண்டு ரசிகர்கள் மக்கள்
    தலைவருக்கு வெள்ளி வாள்-பரிசாக
    வழங்கினார்கள்.
    தலைவர் அந்த வெள்ளி வாளை
    மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு
    சாண்டோ சின்னப்பதேவர் நினைவாக வழங்கினார்.
    பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?
    பாடலுக்கு ஏற்றபடி வாழ்ந்து
    காட்டினார் இதயக்கனி......... Thanks...

  5. #1064
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

    இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

    ‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

    நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

    எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

    அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

    ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

    என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

    பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

    எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

    தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

    இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

    - சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
    ' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து .......... Thanks mr. Guru nathan...

  6. #1065
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரிடம் சிவாஜி தன் அம்மா சிலையை திறந்து வைக்க சொல்லியெல்லாம் அனுப்பி இருக்க மாட்டார் நேராக குடும்பத்துடன் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார், அப்புறம் தஞ்சையில் சாந்தி கமலா தியேட்டர் கட்டுவதற்கு பல அனுமதிகள் பேங்க் of தஞ்சாவூர் வங்கியில் கடன் வசதி ஆகியன செய்ததினால் தலைவர் தான் வந்து திறந்து வைக்க வேண்டும் என அழைத்ததால் வந்து திறந்து வைத்தார்........ Fan's Comments... from wa.,

  7. #1066
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    தொடர் அலுவல் காரணமாக என்னால் அடிக்கடி திரியில் பங்கேற்க முடிய வில்லை. இருப்பினும், எனது சார்பில் விளக்கம் அளித்த எனதருமை புதல்வன் திரு. சுந்தரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !
    நன்றி அப்பா.
    மக்கள் திலகம் பற்றி யார், எங்கு தவறாக கூறினாலும் புலி போல பாய்ந்து வந்து நேர்மையாக விளக்கம் அளிக்கும் உங்களுக்கு புரட்சித் தலைவர் அருள், ஆசீர் என்றும் உள்ளது. இருந்தாலும் கடினமான வேலைச் சுமைக்கு நடுவிலே இதற்கு நீங்கள் வரவேண்டுமா. நான் பார்த்துக்கறேன்.

    சிவா அவர்கள் யார்? அவரது அண்ணன் மக்கள் திலகம் தீவிர ரசிகர். நமது ரத்தத்தின் ரத்தம். அப்படிப் பார்த்தால் அவருடன் உடன் பிறந்த சிவாவும் நம் ரத்தம்தான். அவரது அண்ணனுக்கு தெரிந்ததுபோல மக்கள் திலகத்தின் புகழ், பெருமை, சாதனைகள் எல்லாம் சிவாக்கும் தெரியும். நாம் அளித்த விளக்கமும் புரியும். இருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் அந்தப் பக்கத்து நண்பர்கள் அவரை கோவிச்சுக் கொள்வார்கள். அதனால், தெரியாத மாதிரி, புரியாத மாதிரி சும்மாங்காட்டியும் நடிக்கிறார். அதான் விசயம். மத்தபடி சிவா அய்யா நல்லவர்.

  8. #1067
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    சிறப்பான பல்டி

    நான் கூறிய கூற்றை உங்கள் அன்பு மகனாக நீங்கள் பாவிக்கும் நபர் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்
    சிவா அய்யா,

    விளக்கம் புரியாத மாதிரி நடிக்கும் உங்கள் நடிப்புக்கு முன் நான் தோத்துப் போய்விட்டேன். உங்கள் நிலைமை புரிகிறது. பரவாயில்லை. இங்கே வெளிப்படையாக ஒப்புக்கொள்ள சங்கடமாக இருந்தால் கூச்சப்படாமல் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

    மக்கள் திலகத்தின் ரசிகரான உங்கள் அண்ணனை , பெரிய அய்யாவை விசாரித்ததாக சொல்லவும்.

    நன்றி.

  9. #1068
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தஞ்சாவூர் நகரத்தில் சாந்தி, கமலா உட்பட 5 அரங்குகள் ஒரே காம்ப்ளெக்ஸில் G V நிறுவத்தினால் வாங்கப்பட்டு ஜி வி ஸ்டுடியோஸ் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் 14- 04- 1984 ம் வருடம் (தமிழ் புத்தாண்டு) புரட்சி தலைவர் அவர்களால் அந்த திரையரங்க வளாகம் தொடங்கப்பட்டபோது முதன் முதலில் சாந்தி அரங்கில் " இதயக்கனி" காவியம் திரையிடப்பட்டது நினைவில் அகலாத நிகழ்ச்சி...... Thanks.......

  10. #1069
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    சுகாராம் அய்யா

    சிவா அய்யாவை தாக்கி இனிமேல் பதிவு போடாதீர்கள். அவரும் நம்மாளுதான். அதை நம்பகிட்ட வெளிப்படையா காமிச்சுக்க மாட்டார். அப்பிடி காமிச்சால் அந்தப் பக்கம் உள்ள நம்ப பங்காளிகள் அவரை கோவிச்சுப்பார்கள். அதனால், சும்மானாச்சும் நடிக்கிறார்.

    நம்மளை விட மக்கள் திலகம் பெருமை சிவா அய்யாக்கு நன்றாக தெரியும்.

    மக்கள் திலகம் ரசிகரான அவரது அண்ணனே அவருக்கு மக்கள் திலகம் பெருமைகளை சொல்லியிருப்பார். அவருக்கும் புரிஞ்சுருக்கும்.

    இருந்தாலும் ரத்தத்தின் ரத்தமான சிவா அய்யாக்கு ஒரு வீராப்பு.. அப்பதான் அந்தப் பக்கத்தில் அவருக்கு பாராட்டு கிடைக்கும். போகட்டும் விடுங்கள்.

    நன்றி.

  11. #1070
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று " நாடோடி மன்னன்" மற்றும் " இதயக்கனி" முறையே 62ம் ஆண்டு, 45ம் வருடம் "பிறந்த நாள் " நல்வாழ்த்துக்கள்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •