Page 220 of 402 FirstFirst ... 120170210218219220221222230270320 ... LastLast
Results 2,191 to 2,200 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2191
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
    "ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."

    எம்.ஜி.ஆர்.அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?

    எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"

    எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி ............ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2192
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.ராஜீவ் காந்தி பிரதமராகஇருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளிபிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர்.கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவை படுவதாக தெரிவித்தனர்.

    ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின் போது எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதைமட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

    பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு ‘‘மாலையில்வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரைசந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும்சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்" என்றார் எம்.ஜி.ஆர்.!

    ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒரு வேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    இந்த திட்டங்களை யெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை.......... Thanks.........

  4. #2193
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #முதுமையை #வென்ற #வாத்தியார்........

    எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார்.

    அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார். அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார்.

    அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது.

    எம்.ஜி.ஆர் ., வயதான காலத்திலும் தனக்கு வாய்ப்பு வந்தால் அதற்கு, தான் தகுதி உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதிலேயே குஸ்தி, சிலம்பம், பளுதூக்குதல். உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். ஐசோமெட்ரிக் பயிற்சிக்குரிய கருவி வாங்கக் காசு இல்லாத காரணத்தால், ஒரு மரத்தில் குனிந்து சாய்ந்து நின்று அந்தப் பயிற்சியைச் செய்து வயிற்றையும் மார்பையும் வனப்பாக வைத்திருந்தார்.

    பளுதூக்குவதில் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றும் நம்பியாரைத் தோற்கடிக்கும்வகையில் அதிக பளுதூக்கிக் காட்டுவார்.
    இதனால்தான் ‘அன்பே வா’ படத்தில் ‘ஃபைட்டிங் புல்’ என்ற வீரரை அவரால் உயரே தூக்கி கீழே எறிய முடிந்தது. வேறு பல சண்டைக் காட்சிகளிலும் அவர் வில்லனையும் ஸ்டண்ட் ஆள்களையும் முதுகில் தூக்கி கீழே எறிவது அவருக்கு சிரமமில்லாமல் இருந்தது.

    கடின முயற்சிகளை மேற்கொண்டு, வாத்தியார், மற்ற நடிகர்கள் போல் வெறும் மேக்கப்பினால் தன் இளமையைக் காண்பிக்காமல், உடலை வலுவாக்கும் கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டு முதுமையை வென்று, தனது 60 வயதிலும், 20 வயதுடைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தன் இளமையை நிரூபித்துக்காட்டினார் என்றால் அது மிகையாகாது............ Thanks..........

  5. #2194
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிறந்த நாள் கொண்டாடும் மதுரை நண்பர் திரு.எஸ். குமார் அவர்கள் இன்று* போல் என்றும் எல்லா வளமும் , நலமும் பெற்று ,இன்புற்று, பல்லாண்டு காலம் வாழ்க என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் நல்வாழ்த்துக்கள்.

  6. #2195
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை ஞாயிறு முதல் (15/12/19) ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " படகோட்டி " நீண்ட இடைவெளிக்கு பிறகு*தூத்துக்குடி சத்யா அரங்கில் தினசரி 3 காட்சிகளில்* வெள்ளித்திரைக்கு வருகிறது .

    தகவல் உதவி :நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

  7. #2196
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (20/12/19) ஏழைகளின் இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு* ,மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில்*மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  8. #2197
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    27/12/19* வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் "* தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

  9. #2198
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் குறள் அரங்கில் வெள்ளி முதல் (13/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது*

  10. #2199
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    20.12.2019 வெள்ளிகிழமை முதல் புரட்சித்தலைவரின் நினைவுநாள் வருவதையொட்டி மதுரை அனுப்பானடி -பழநி.ஆறுமுகா DTS.,திரையரங்கில் மற்றும் திண்டுக்கல் - N.V.G.B. DTS.,திரையரங்கிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் இருவேடநடிப்பின் மகத்துவத்தில் வெள்ளிவிழாகண்ட "எங்கவீட்டுப்பிள்ளை ", வெற்றிப்பவனி வருகின்றார் ......... நன்றி மதுரை எஸ் .குமார்...... Thanks.........

  11. #2200
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இயற்கையை படைத்த இறைவன் தங்கள் லீலைகளை ஒழுக்கம், பண்பு, வள்ளல் குணம், வீரம், அழகு, நேர்மை, வசீகரம், இரக்க உள்ளம், ஆளுமை என்று ஒன்று சேர காட்சிபடுத்திய உருவம் தான் புரட்சி தலைவர். .........அந்த மகத்தான தெய்வம் தன் லீலைகளை நிறைவேற்றி கொண்டு தன் இருப்பிடம் நோக்கி சென்ற 32 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பக்தர்கள் ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஊர்வலம் செல்ல அனைத்து பக்தர்களின் நீண்ட நாள் ஆவல். அதை நிறைவேற்ற சென்ற(2018) வருடம்தான் பிள்ளையார் சுழியே போடப்பட்டது.அதன் தொடக்கமாக இந்த வருடம் மேலும் விரிவுபடுத்த 08.12.2019 அன்று ஆலோசனை கூட்டம் தி.நகரில் திரு முருகு பத்மநாபன் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அமைப்புகளில் இருந்து அனைவரும் கலந்து கொண்டு பலதரபட்ட வாகனங்களில் தலைவர் புகைபடத்துடனும் பதாகைகளுடனும் நீண்ட வரிசையில் சென்னை வாலாஜா சாலை யில் உள்ள பேறறிஞர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக சென்று தலைவரின் வங்ககடலோரம் உள்ள நினைவாலயத்தில் மலர்வளையம் வழிபாடு செய்வதென ஆலோசிக்கப்பட்டது.அந்த கூட்டத்தில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம், பொன்மனசெம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம், மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள், அனைத்துலக எம்ஜிஆர் திரைபட திறனாய்வு சங்கம், தர்மம் தலைகாக்கும் எம்ஜிஆர் நற்பனி மன்றம், எங்கள் தெய்வம் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, வெற்றி தேவன் எம்ஜிஆர் மன்றம் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.மற்றும் சைதை கலையுலக பேரோளி எம்ஜிஆர் தலைமை மன்றம், சென்னை கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள், பொன்மன பேரவை, மகளிர் முன்னேற்றம் கழகம், புரட்சி மன்னன் எம்ஜிஆர் மன்றம், பொன்மன செம்மல் எம்ஜிஆர் பக்தர்கள் குழு ஆகிய அமைப்புகள் தொலைபேசி யில் ஒத்துழைப்பு வழங்கின. அதன் பொருட்டு ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக ஆலோசிக்க 15.12.2019. ஞாயிறு அன்று 11.05 மணிக்கு சென்னை ராஜாஜி ஹால் அருகில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவாளர்கள் முருகு பத்மநாபன், பேராசிரியர் செல்வகுமார்,மனோகரன், தேவசகாயம், மின்னல்பிரியன், ரங்கராயல் ரங்கராஜன், S.சிவா சந்திரசேகர், மதிப்பிற்குரிய அம்மா அவர்கள், M.சத்யா, N.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக திருவாளர்கள்.பாஸ்கரன், லோகநாதன், ஷிவபெருமாள், கலைமணி, சாந்தகுமார், வேலு, வேதா, D.ரவி, பாபு,ராமமூர்த்தி, சிவா, மணி, சீனிவாசன், சரவணன், ராஜேந்திரன், காதர், ராஜேஷ், பக்தா, ரவி, R.சரவணன், கோவிந்தராஜன், சந்தானம், கணேசன், ஏழுமலை, யுவராஜ், குட்டி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு 31 வருடங்களாக தொடர்ந்து போஸ்டர் அடித்து தலைவர் திருவுத்திற்கு மாலை அணிவித்து, அன்னமிட்டு, மலர்வளையம் வழிபாடு செய்யும் அதே சேவையை 32வது வருடமும் அதே வாலாஜா சாலையில் உள்ள பாரகன் தியேட்டர் அருகில் செய்வதென முடிவெடுத்து திரு. வெற்றி லை.குமார், ம.சோ.நாராயணன், M.மகேந்திரன் தாயார் அவர்களின்(14.12.2019) மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவன். ஷிவபெருமாள். செயலாளர்.கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை .......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •