Page 67 of 401 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #661
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட வருடங்களுக்குப் பிறகு, பெங்களூரில் வசிக்கும் இறைவன் எம்ஜிஆரின் பக்தர்களுக்கு நிஜமான பொங்கல்,தீபாவளி,கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத் திருவிழா.....ஆம் பெங்களூர் வினாயகா திரையரங்கில் 21/12/2018 வெள்ளிக்கிழமை முதல்...27/12/2018 வரை, மக்கள் திலகம் நடித்த மாபெரும் சாதனை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளில், அவரை மறக்க முடியாத உண்மை பக்தர்கள்...மறக்க முடியாத புரட்சித் தலவரின் காவேரியங்களை கண்டு மகிழ்வோம்.
    திரைத்திலகத்தின்
    திரைப்படங்களை திரையில் காணும் திருவிழாவை ஏற்பாடு செய்த, அ.இ.அ.தி.மு.க.(கர்நாடக மாநில) இணைச்செயலாளர் அண்ணன் S.D.குமார் அவர்களுக்கு,
    பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" வும்..."உழைக்கும் குரல்" மாத இதழ் சார்பாகவும்,🙏யினை தெரிவிக்கின்றோம்.
    கானா.க.பழனி (நிறுவனர்)
    எம்ஜிஆர் பித்தன்
    அ.அ.கலீல் பாட்சா
    (ஆலோசகர்)
    சார்லஸ் மூர்த்தி
    (செயலாளர்)
    என்.பாஸ்கரன்
    (பொருளாளர்)
    எம்.ராஜா
    (துணைத்தலைவர் 1) மு.தமிநேசன்
    (துணைத்தலைவர்2) பிரகாஷ்/முருகன்
    (துணைச்செயலாளர்) மற்றும்
    நிர்வாகப் பெருமக்கள்...... Thanks....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #662
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் நினைவு நாளை நினைவில் கொள்வோம்.

    வாழந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்!....

    திரையில் நடித்தவருக்கே இது பொருந்தும்!..🙏🙏🙏. Thanks a lot.........

  4. #663
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #முதல்வர் #எம்ஜிஆரின் #சிலம்பாட்டம்

    தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
    ஆண்களும், பெண்களுமென அலைமோதியது.. அதனால் நெரிசல் அதிகமாகியது...

    வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

    இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "காவலர்கள் தங்களிடமுள்ள லத்திக்கம்புகளை உடனே மேடையில் ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்... நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

    நிகழ்ச்சி முடியும் போது எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா ?

    கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே தனது வரை சென்று, மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

    இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தனர்...

    பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

    #முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #எம்ஜிஆர் #பாசமிகு #வாத்தியார் #தான்.... Thanks.....

  5. #664
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பற்பல மக்கள் திலகம் நற் பதிவுகள் இடும் திருவாளர்கள் வினோத், மற்றும் க.விநாயகம் மற்றும் ஏனைய நம் சகோதரர் எல்லாம் நிறைய புரட்சி நடிகர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இட வேண்டி விரும்பும் சக தோழன்...

  6. #665
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி அகோபிலமடம் ஜீயர் -எம்.ஜி.ஆரை எம்.ஜீயர் என்றார்.ஆம் நீ எம்.ஜி.ஆர் என்ற மானுட அவதாரம் எடுத்தாய்.மண்ணில் மகத்துவம் நேயத்திற்கும்,கலைக்கும்,அரசியலுக்கும் பல்கலை வேந்தானாய் அருள் புரிந்தாய். அவதாரம் எடுத்தவர்கள் மறைவதில்லை.வாழும் தெய்வமே ,உனக்கு பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது.இறைவனுக்கு ஆராதனைகளும்,அபிஷேகங்களும்,கும்பாபிஷேகங்களும்,குடமு ழுக்கும் நடைபெறுவது சகஜம் தானே.இறைவனை யாரேனும் மறப்பரோ. வணங்குகிறோம்.
    நெல்லை ப.இளமதி
    நெல்லை எஸ்.எஸ்.மணி.
    நெல்லை எம்.ஆதம்...........
    Thanks.....

  7. #666
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்.ஜி.ஆர்.

    அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்)மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

    அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

    சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

    அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

    படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

    சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

    ‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று மொத்த கூட்டமும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தது.

    அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி(சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.

    அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா வாத்தியார் நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

    இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

    வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும் பழையபடி பார்க்க முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

    தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர். : மக்கள் திலகத்தின் ஆஸ்த்தான புகைப்படக்கலைஞர் ஆர்.என்.நாகராஜராவ். அவரின் மருமகனும், உதவியாளருமான எ.சங்கர்ராவ், மக்கள் திலகத்தின் 34 படங்களுக்கு பணிபுரிந்திருக்கிறார். அந்த வகையில் மக்கள் திலகம் பற்றி அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கிறார்.

    ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று மக்கள் திலகம் பற்றிய நினைவுகளை சங்கர்ராவ் சொல்ல எழுத்தாக்கம் செய்திருக்கிறார் கதிரவன்.

    இதை படிக்கும்போது மக்கள் திலகத்தின் கொடையுள்ளம், அன்பு,பாசம், வீரம், தன்னம்பிக்கை,உழைப்பு, சிரிப்பு, அழுகை, எல்லாம் கண் முன் தெரிகிறது.

    (டிசம்பர் -24 இன்று 31வது நினைவு தினம்)அவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆனபின்னும் மக்கள் திலகம் என்னும் அந்தப் பெருமழையின் ஈரம் கொஞ்சமும் காயாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. கோடான கோடி பேர் அந்த ஈரத்திலேயே நிற்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த புத்தக காற்று குளிர்வீசும்; சிலிர்க்க வைக்கும்.என்றும் அவர் புகழ் பாடும் வீடியோ சண்முகம் கணபதி கொங்கு கோவை... Thanks............

  8. #667
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நினைவு நாள் சிறப்பு பதிவு...👇💐🌹💐🌹👇
    Courtesy : Google

    படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.

    இசை நால்வர்
    எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்”. பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

    இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

    இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

    பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

    படம்: படகோட்டி (1964)
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
    வரிகள்: வாலி

    ராகம் : சுத்ததன்னியாசி

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்வேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்

    தொட்டால்…

    கண்கள் தொடாமல்
    கைகள் படாமல்
    காதல் வருவதில்லை ஹோ!
    காதல் வருவதில்லை

    நேரில் வராமல்
    நெஞ்சை தராமல்
    ஆசை விடுவதில்லை ஹோ!
    ஆசை விடுவதில்லை

    தொட்டால்…

    இருவர் ஒன்றானால்
    ஒருவர் என்றானால்
    இளமை முடிவதில்லை ஹோ!
    இளமை முடிவதில்லை

    எடுத்து கொண்டாலும்
    கொடுத்து சென்றாலும்
    பொழுதும் விடிவதில்லை ஹோய்
    பொழுதும் விடிவதில்லை

    தொட்டால்…

    பக்கம் இல்லாமல்
    பார்த்து செல்லாமல்
    பித்தம் தெளிவதில்லை ஹோய்
    பித்தம் தெளிவதில்லை

    வெட்கம் இல்லாமல்
    வழங்கி செல்லாமல்
    வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
    வர்க்கம் தெரிவதில்லை

    தொட்டால்…

    பழரச தோட்டம்
    பனிமலர் கூட்டம்
    பாவை முகமல்லவா ஹோ
    பாவை முகமல்லவா

    அழகிய தோள்கள்
    பழகிய நாட்கள்
    ஆயிரம் முகமல்லவா ஹோய்
    ஆயிரம் முகமல்லவா...... Thanks..........

  9. #668
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் சலனம்!!
    -----------------------------------
    24--12----???
    ஒவ்வொரு ஆண்டும் ,,தன் தொண்டர்களின் உருக்கமான உள்ளக் குமுறலைக் கேட்ட வண்ணம் எம்.ஜி.ஆர் சற்றே புரண்டு படுக்கும்--
    எம்.ஜி.ஆர் நினைவு நாள்!!
    இக்கட்டில் இருக்கும்போது நிச்சயம் வருவேன்!--அதுவரை--
    இக்---கட்டில்--என்னும் கண்ணாடிப் பேழைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பேன் என்று உறுதி பூண்டிருக்கும் எம்.ஜி.ஆர்??
    இந்த வருடம்,,சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று நம் ஓமப்பொடியார் உள்ளத்தில் எழுந்தது?
    நினைவிடத்தில் பணிபுரியும் ஏழை சகோதரிகளுக்கு சேலை வழங்கினால் எப்படியிருக்கும்??
    ஜம்பமாக இன்று அக்கட்சியில் பலர் இருப்பினும்--
    எம்.ஜி.ஆரின் ஈகை எனும் குணத்தின்--
    பிம்பமாக பவனி வருபவர் நம் சைதையார் தானே?
    அவரிடம் எங்கள் சிந்தனையை சிந்தியபோது--
    சிலருக்கு மட்டும் சேலை!! எனறும்--செலவுக்கு மட்டும் நன்கொடை!! என்று இருக்க வேண்டாம்!! அத்தனை பேருக்குமே அடியேனே வாங்கித் தருகிறேன்! என்று கணமும் தாமதிக்காது சைதையார் சொன்னதில் நாங்கள் ஆடிப் போய்விட்டோம்!!
    500 ரூ பெறுமானமுள்ள சேலைகள் அவர் வழங்கியது சுமார் 200 பேர்களுக்கு??
    நினைவு அஞ்சலி செலுத்த அதிகாலையில் இருந்தே ஒட்டு மொத்த வங்கக் கடலையே விழிப்புறச் செய்த தொண்டர் கூட்டம்??
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சாரி சாரியாக விசுவாசிகள் வந்த விதம்?
    சென்னையின் மீது ஒட்டு மொத்த தமிழகம் ஒரே இரவில் படையெடுத்து வந்து விட்டதோ???
    அங்கிருந்த ஒரு டீக் கடை அதிபர்--ஆந்திராக்காரர்--ஆச்சரியத்தோடு நம்மிடம் கேட்ட கேள்வி-??
    31 வருடங்கள் கழிந்துமா இவ்வளவு பேர்கள் ஒருவரை இன்னமும் தமது நினைவில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்??
    அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம்--கலைவேந்தன் எம்.ஜி.ஆர் சங்கம்--உலக எம்.ஜி.ஆர் பக்தர்கள் கூட்டமைப்பு--திரைப்பட திறனாய்வு சங்கம்--தர்மம் தலை காக்கும் சங்கம்--இப்படி அனைத்து சங்கங்களும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்து மௌன ஊர்வலம் மேற்கொண்டு--இதய தெய்வத்துக்குத் தம் அஞ்சலியை செலுத்திய விதம் நேற்றையப் பொழுது--மார்கழித் திங்களா--ஆடி மாதமா?/ என்ற ஐயத்தை எழுப்பும் அளவுக்கு புழுதியைக் கிளப்பி சென்னையை அதில் புதைத்தது??
    உதயப் பொழுது ஆறு மணிக்கு மிகச் சரியாகத்-தம்-
    இதய வேந்தனுக்கு தம் அஞ்சலியை செலுத்த வந்த சைதையார் அங்கு சேலைகளை வழங்கியவர்--
    நண் பகலில் மறுபடியும் வந்து,,எம்.ஜி.ஆர் சங்கள் செலுத்திய அஞ்சலியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு--அவர் அங்கே ஆற்றிய--
    மற்றுமொரு மகத்தான மனித நேயக் காரியம்--??
    கொத்து ஆயிரம் எனக் குவியல் குவியலாக வந்த--
    பத்து ஆயிரம் பேர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்ன தானம் செய்த அருமை!!
    அங்கு வந்த அனைவருக்கும் மட்டுமன்றி--ஜெ டி.வி உட்பட்ட ஊடகங்கள்--காவல்துறையினர் அனைவரும் களிப்போடு உண்டதை நெகிழ்ச்சி கலந்த ஜொலிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பது மிகை அல்ல?
    ஆதாயம் தேடும் கூட்டம் அளவோடு வந்து செல்ல--ஆகாயம் அதிர வந்த அடிப்படை விசுவாசிகள் தான் இங்கே மறு மலர்ச்சியை மறுபடியும் உண்டாக்கப் போகிறார்கள் என்பதை நேற்றையக் கூட்டம் நிரூபித்தது!!!
    200 பேர்களுக்கு உயர் தர சேலை!
    10000 பேர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு!!
    தன் தம்பி சைதையை உருவாக்கிவிட்டு வந்திருக்கிறோம் என்ற நிம்மதியால் தான் இன்னமும் நித்திரையைத் தொடர்கிறார் எம்.ஜி.ஆர்??
    சைதையைப் போன்றவர்கள் சடுதியில் மீண்டும் பொது வாழ்வுக்கு வருவது அவர்களின் கடமை!!
    அதே சமயம்--சைதையைப் போன்றவர்களை ஆதரிப்பதன் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கு--மக்கள் திலகத்தின் மாண்புகளைக் கொண்டு செல்லவும்--அடிப்படை மக்களின் அத்தியாவசியங்களை நிறைவேற்றவும் இயலும் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அத்தகையோரின் தலைமையை ஏற்கத் தயாராவதும் நம் கடமை என்பதில் சந்தேகமில்லையே சொந்தங்களே???!!! 👌.... Thanks Friends.........

  10. #669
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கெங்கும் சிறப்பாக நினைவு கூறப்பட்ட மக்கள் திலகம் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏராளம்... சகோதர நண்பர்கள் பங்கெடுக்க வேண்டுகிறோம்...........

  11. #670
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "“#மிஸ்டர்_ராமச்சந்திரன்!""

    எம்.ஜி.ஆர். உட்பட கலைஞர்கள் அனைவரும் திகைப்புடன் திரும்பிப் பார்க்க ,
    படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் பானுமதி

    "ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல.
    நீங்களே இந்தப் படத்தோட
    ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க.
    நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க . முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க.
    இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க.
    இல்லனா டைரக்சன் கத்துட்டு படம் பண்ணுங்க.
    நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன்.
    நீங்க பண்றத பாத்து இன்னிக்கு எனக்கு மூட் அவுட் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...”
    அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு,
    சட்டென்று எந்த பதிலும் எதிர்பாராமல் அங்கிருந்து புறப்பட்டுப் போய் விட்டார் பானுமதி !

    இது நடந்தது “நாடோடி மன்னன்”
    படப்பிடிப்பில்.....

    ஆம்..!
    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,
    ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !

    ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஏகப்பட்ட அவமானங்கள்தான் இருக்கின்றன..!
    அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.”
    .
    “நாடோடி மன்னன்” – இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம்.
    அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ...
    திரும்ப திரும்ப ஒரே காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர்..!
    காரணம்... அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக...!
    ஆனால் படத்தின் கதாநாயகி பானுமதிக்கு கோபம் வந்து விட்டது.

    ஆனால் .... எம்.ஜி.ஆர். ஆத்திரம் கொள்ளவில்லை..!

    அமைதியாக அமர்ந்து சிந்தித்தார் .

    பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு ,
    புதுமுக நடிகை சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து , அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

    சரி ..!
    பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை ,
    பழிக்குப்பழி வாங்க வேண்டுமே..?

    என்ன செய்தார் எம்.ஜி.ஆர். ?
    எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா..?
    ஆண்டுகள் கடந்தன..

    அவர் தமிழக முதல்வராக ஆனபின் ....
    தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக யாரை நியமிப்பது என்று அதிகாரிகள் ஆலோசித்தார்கள் .

    பல நாட்களாக ஆலோசித்து , பல பிரமுகர்களின் பெயரை அதிகாரிகள் சொல்ல ...
    அத்தனை பேர் பெயரையும் அடித்து விட்டு ... எம்.ஜி.ஆர். எழுதிய பெயர்
    பானுமதி ராமகிருஷ்ணா !

    அது மட்டுமா..?
    1983 இல் “கலைமாமணி” விருதையும் பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.

    #பலர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியவருக்கு
    பதவியும் , பாராட்டுக்களுமா..?

    ஆச்சரியமாக இருக்கிறது!
    இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது!

    குணம் வருகிறதோ இல்லையோ...
    ஒரு குறள் நினைவுக்கு வருகிறது !
    .
    #ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.”.

    #தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்;
    பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.”

    இந்த குறள் எம்ஜிஆரை பெருமைப்படுத்தவே எழுதிய குறளோ?..

    ""பலர் முன்னிலையில் உங்களை அவமானப்படுத்திய பானுமதிக்கு
    எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்க தோன்றியது?""
    எம்ஜிஆரிடம், பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு...
    எம்ஜிஆரின் பதில் என்னவாக இருக்கும்?

    பதில் தெரிந்தவர்கள் கமண்ட் பண்ணுங்க....

    மீண்டும் அடுத்த பதிவில்............. Thanks....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •