Page 388 of 401 FirstFirst ... 288338378386387388389390398 ... LastLast
Results 3,871 to 3,880 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3871
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தவறுக்கு #தண்டனை................

    புரட்சித்தலைவர் உடல்நலம் தேறி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நாள் முதல், அவருக்கு பேச்சுப்பயிற்சி கொடுத்துக் கூடவே இருந்து கவனித்துக்கொண்டவர் டாக்டர்.ராஜாமணி...

    தலைவருக்கு இவர் மேல கொள்ளை அன்பு. தனது சகோதரன் போல நடத்தினார். டாக்டருக்கும் தலைவர் தான் எல்லாம்...

    இப்படி போய்க்கொண்டிருக்கையில் ஒரு நாள்...ராமாவரத்திற்கு வழக்கம் போல கிளம்பிக்கொண்டிருக்கையில்,
    தலைவரின் உற்ற. நண்பரான ஒரு விஐபிக்கு சிகிச்சை அளிக்கக்கோரி ஒரு போன் வருகிறது. டாக்டரும் அந்த விஐபிக்கு சிகிச்சை அளித்து விட்டு ராமாவரம் செல்கிறார்...வழக்கத்தை விட லேட் ஆயிடுச்சு. எம்ஜிஆர் என்ன நினைப்பாரோன்னு ஒரே பதட்டம்..." கார் டிரைவர் ஆவணங்களைக் காட்டாததால் டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டதால் லேட் ஆகிவிட்டது..." என்று கூற அன்றைய பொழுது நகர்ந்தது.

    இறைவனிடமும், வாத்தியாரிடமும் பொய்சொல்லிட முடியுமா என்ன???
    ஓரிரு நாட்களில் எம்ஜிஆர், உண்மையான காரணத்தை அறிந்து மிகவும் வருந்துகிறார்...

    மறுநாள் வந்த டாக்டர் ராஜாமணியிடம், 'ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க' ன்னதும் திடுக்கிட்ட டாக்டர் தனது செய்கைக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறார்...

    அதற்கு வாத்தியார்..."உங்களின் எண்ணத்தில் குற்றமில்லை என்பதை நானறிவேன். அந்த விஐபி வீட்டுக்கு சிகிச்சை அளிக்கப்போனேன் என்று சொன்னால் நான் உங்கள் மீது கோபமா படப்போகிறேன்...நீங்கள் பொய்யான காரணத்தைச் சொன்னதால் தான் என் மனம் வேதனைப்படுகிறது..." என்றார் தழுதழுத்த குரலில்...

    மேலும் தொடர்கிறார்...

    சரி! அதெல்லாம் விடுங்க...இன்று மாலை டிவியில நான் நடிச்ச படம் போடறாங்க...சீக்கிரம் போய்ப் பாருங்க! என்கிறார் ஒரு குழந்தையைப் போல...

    உங்க வீட்ல என்ன டிவி வெச்சிருக்கீங்க.? என்ற எம்ஜிஆரிடம், "சாலிடர் ப்ளாக் & ஒயிட் டிவி" என்கிறார் டாக்டர்..

    இந்த படம் கலர்படமாச்சே...கலர்டிவியில் பார்த்தா தானே நல்லாயிருக்கும்...என்ற எம்ஜிஆர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்பவே டாக்டருக்கு ஒனீடா கலர் டிவி வாங்கிக்கொடுத்துடுங்க...' என்று கட்டளையிட்டவர்...தனது பணியாளர்களை சிறிது விநாடிகள் நோட்டமிட்டு...'டாக்டருக்கு கலர்டிவி வாங்கும்போது இங்குள்ள 22 பேருக்கும் கலர்டிவி வாங்கி அவர்கள் வீட்டில் சேர்த்துடுங்க..." என்கிறார்.

    வாத்தியாரின் அகராதியில் '#தவறுக்கு #தண்டனை' என்பது இது தானோ !!!

    நன்றி : திரு. மணவை பொன்மாணிக்கம் எழுதிய, "புகழ்மணச்செம்மல்" என்ற நூலில் இருந்து.............. Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3872
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ர் 1968ல் ஜெய்ப்பூர் ந*க*ரில் அடிமைப்பெண் ப*ட* ஷூட்டிங் சென்ற* ச*மய*ம் அவ*ருக்கு ந*ண்ப*ர் ஒருவ*ர் வெண்மை நிற தொப்பி ஒன்றை அந்த* ஊரின் வெயிலின் தாக்க*ம் க*ருதி ப*ரிசாக அளித்தார். அதை அவ*ர் அணிந்துகொண்ட*தும் ஜான*கி அம்மையார் உட்ப*ட ப*ட*க்குழுவின*ர் அனைவ*ரும் அழ*காக இருப்ப*தாக கூறிய*தால் தொட*ர்ந்து அணிந்தார். துப்பாக்கியால் சுட*ப்ப*ட்டு ஆஸ்ப*த்திரியில் அனுமதிக்க*ப்ப*ட்ட*போதும், அண்ணா ம*றைவின் போதும் அணியவில்லை. மற்ற*ப*டி அவ*ர*து நிர*ந்த*ர* அடையாள*ங்க*ளில் ஒன்றாக*வே அந்த* தொப்பி ஆகிவிட்ட*து.

    த*மிழ*க முத*ல்வ*ரான பிற*கு பிர*ஸ்மீட் ஒன்று 1980ல் ந*ட*ந்த*போது அவ*ர*து தொப்பியை க*ழ*ட்டி மேஜை மீது வைத்து ரிலாக்ஸாக அம*ர்ந்தார். ப*த்திரிக்கை யாள*ர்க*ளுக்கோ இன்ப அதிர்ச்சி. அந்த*க் காட்சியை புகைப்ப*ட*ங்க*ளாக*வும் வீடியோவாக*வும் எடுத்து த*ள்ளின*ர். மறுநாள் இதுவே த*லைப்புச் செய்தியான*து............. Thanks wa.,

  4. #3873
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கலைவாணர் அரங்கில் 1982ஆம் ஆண்டு காமராஜரின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் புரட்சித்தலைவர் பேசியது.
    _________________

    #என்னிடம் பணமும், உதவியும் பெற்ற போது நான் வேற்று ஆளாக தெரியவில்லையா?"

    #என்னை மலையாளி என்று சொன்னதால்தான் நீ தமிழனா என்ற கேள்வி வந்தது.

    #நான் கேட்டேன். பொருளாளராக இருக்கும் போது மலையாளியாக தெரியவில்லையா?

    #அண்ணா என்னை இதயக்கனி என்ற போது மலையாளியாக தெரியவில்லையா?

    #துப்பாக்கியால் சுடப்பட்டு நான் மருத்துவமனையிலிருந்த போது மக்கள் எனக்குத் தந்த பணத்தை தேர்தலுக்காக தந்தேனே அப்போது மலையாளியாக தெரியவில்லையா?

    #புரட்சிநடிகர் என்று பட்டம் கொடுத்தது யார் தெரியுமா? இதே கருணாநிதிதான். அப்போது நான் மலையாளியாக தெரியவில்லையா?

    #நான், கருணாநிதி, டைரக்டர் காசிலிங்கம் மூவரும் ஒன்றாக இருந்தவர்கள். என் தாய் உணவு போட்டிருக்கிறார். அப்போது மலையாளியாக தெரியவில்லையா?

    #இடையிலே இரு கட்சிகளும் சேர பேசப்பட்டபோது நீ முதலமைச்சராக இரு. நான் கட்சித்தலைவராக இருக்கிறேன் என்ற போது மலையாளியாக தெரியவில்லையா?

    #புரட்சித்தலைவரின் உதவியைப் பெற்று முதலமைச்சரானவர்தான் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கருணாநிதி. ............... Thanks wa.,

  5. #3874
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1."உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் ...............

    2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
    சாதனைகள் அதைவிட ஏராளம்.

    3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
    திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
    ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.

    4. தினமலர் வாரமலரில் கடந்த வருடம் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
    தொடரிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

    5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
    வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
    புரட்சி தலைவர் தன் வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
    சேர்த்தார் என்பது வேறு விஷயம்.

    6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
    ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

    7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
    அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.

    8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
    மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்

    9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
    அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
    படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
    எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

    10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
    தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
    பயன்படுத்தப்பட்டது.

    11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

    12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

    13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
    பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
    நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
    ஒரே சாதனை திரைப்படம்.

    14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.

    15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது

    16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
    தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

    17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
    தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.

    18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

    19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.

    20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
    (வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
    உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
    கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..

    21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

    22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.

    23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
    சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
    வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
    என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.

    24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.

    25 தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
    களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
    ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.

    26.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
    காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
    ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
    ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
    வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.

    27,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
    உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.

    28. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
    தூண்டுவதுபோல் அமைந்தது.

    29. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
    இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
    படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
    எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

    30.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
    , ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
    காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
    படைத்தார்.

    31. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.

    32. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன............. Courtesy : fb.,

  6. #3875
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் 11 வது நினைவு நாள் இன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில் இன்று (04/06/19) அனுசரிக்கப்பட்டது .திரு.விஜயன் அவர்களின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது . சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, திண்டுக்கல் மற்றும் பல நகரங்களில் இருந்து எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரளாக வந்திருந்து நினைவஞ்சலி செலுத்தினர்

  7. Thanks orodizli thanked for this post
  8. #3876
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes orodizli liked this post
  10. #3877
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3878
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #3879
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  15. #3880
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  16. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •