Page 350 of 401 FirstFirst ... 250300340348349350351352360400 ... LastLast
Results 3,491 to 3,500 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3491
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3493
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3494
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக அரசியல் வார இதழ் -13/04/2019



  6. #3495
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக அரசியல் வார இதழ் -17/04/2019




  7. #3496
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.,
    1967 - பொதுத்
    தேர்தலுக்கு முன், நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது...
    தலைவர் கலைஞர், நாவலர் நலம் விசாரித்த காட்சி.....!

    எம்.ஜி.ஆர்., பின்னர் தி.மு.க.வேட்பாளராக பரங்கிமலை
    சட்டமன்றத் தொகுதியில்
    போட்டியிட்டார்.

    எம்.ஜி.ஆர். பின்னால் நிற்பவர், இரா.சம்பந்தம்.
    (சென்னை மேயராகவும் இருந்தவர்.)............. Thanks wa.,

  8. #3497
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய திரைஉலகில்

    இந்த திரைப்பட சாதனையை

    இது வரை எந்த படமும் தொட்ட தும் இல்லை

    இனி தொடப்போவதும் இல்லை என்ற
    பெருமையோடு
    இந்த பதிவை இன்றைய
    இளைய தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறேன்

    படித்து பாருங்கள்

    46 வருடங்களுக்கு முன்பு -
    11-05-1973 அன்று வெளியான -
    தலைவரின் #உலகம்சுற்றும்வாலிபன்
    படத்துக்கு ஆனந்த விகடனின் விமர்சனம்.
    ======================================

    பிரமாண்டமான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஓர் ஏக்கம் வரும்.

    "இப்படிப் பிரமிக்கவைக்கும் வெளிப்புறக்காட்சி அமைப்புகளுடனும், தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா?' என்று.

    அந்த ஏக்கத்தைத் தீர்ப்பதற்குக் கம்பீரமாக வெளி வந்திருக்கிறான் "உலகம் சுற்றும் வாலிபன்"

    பயங்கர இடி, மின்னல்களுக்கு மத்தியில்
    ஓர் இளம் விஞ்ஞானி (எம்.ஜி.ஆர்.) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை
    நம்மை ஒரு புது உலகத்துக்கே அழைத்துச் சென்று, நிமிடத்துக்கு நிமிடம் கண்ணைக் கவரும் வெளிப்புறக்காட்சிகளால் பிரமிக்க வைக்கிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்ஜிஆர்.

    மகத்தான படங்களைத் தந்து புகழ்பெற்ற
    ஸெஸில் பி டெமிலியின் முழுச்சாயலை எம்ஜிஆரிடம் கண்டு பெருமைப்படுகிறோம்.

    படத்தின் பெரும்பகுதி கதை நிகழும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்,
    மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப் பட்டிருக்கிறது.

    அதுவே நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது. தமிழில் இப்படிப் பெரிய
    அளவில் அயல்நாட்டு வெளிப்புறக் காட்சிகள் அமைந்திருப்பது இதுவே முதல் படம்.

    "பேராசை பிடித்திருக்கிறது" என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,
    இந்தப் படத்தில் உபயோகிக்கப் பட்டிருக்கும் காமிராவைத் தான் சொல்லவேண்டும்.

    அப்படி ஒரு தாகத்துடனும் வேகத்துடனும் கிழக்காசிய நாடுகளின் அழகுகளையெல்லாம் ஒன்று விடாமல் வாரி வாரித் தன்னுள் அடக்கிக் கொண்ட இருக்கிறது. அந்தக் காட்சிகள் வெள்ளித்திரையில் வண்ண வண்ணமாக விரியும்போது, அந்த அழகுக் கொள்ளையில் நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

    சந்திரகலாவும் எம்.ஜி. ஆரும் காரில் போகும்போதும், படகில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும்போதும், அவர்களுக்கு மேலாகப் பறக்கும் விமானத்தைக் கூடப் புத்தி சாலித்தனத்துடன் அழகாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

    வாலிபன் - இல்லை, வாலிபர்கள். (எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்) சந்திக்கும் பெண்கள் நால்வர். சந்திரகலா, மஞ்சுளா, லதா, தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத்.

    தன் கள்ளமற்ற சிரிப்பு ஒன்றினாலேயே நம் மனத்தை வசீகரித்துக் கொள்பவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத். அவருக்கு ஒரு சபாஷ்.

    சந்திரகலாதான் மற்றவர்களுள் அதிக வாய்ப்புள்ள கதாநாயகி. அடக்கமும் உணர்ச்சியும் நிறைந்த நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவருக்கு ஒரு சபாஷ்.

    லதாவுக்கு அழகான முகம். அவருடைய கச்சிதமான உடலமைப்புக்கு எடுப்பாக
    ஆடை அணிவித்து முதல் படத்திலேயே
    அவரை ரசிகர்களின் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். புதிய நடிகை என்ற சாயல் துளிக்கூட இல்லாத இயற்கையான நடிப்பு. லதாவுக்கு ஒரு சபாஷ்.

    மூத்த எம்ஜிஆரின் காதலியாக வரும் மஞ்சுளாவுக்கு கண்ணீர் வடிக்கவும்
    சந்தர்ப்பம் கொடுத் திருக்கிறார்கள்.
    அவருடைய நடிப்பைவிட, அசோகனால் கற்பழிக்க முயலப்படும் காட்சியில் அவர் துடிக்கும் துடிப்பு ரசிகர்களை அதிகமாகக் கவருகிறது. 'தோரஹா' கெட்டது போங்கள்.

    பிரதான வில்லன் அசோகன் தான் என்றாலும், நம் பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்கிற வில்லன் நம்பியார்தான். அவருடைய பல்லழகே அழகு! எம்ஜிஆர் எறிந்த பெட்டியை எடுத்துக் கொள்வதற்கு அவர் நப்பாசையுடன் தயங்கித் தயங்கி விழிப்பது சுவையூட்டும் காட்சி.

    வெகு நாட்களுக்குப் பின் பழைய நாகேஷைப் பார்க்கிறோம். பல காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தாய்லாந்துப் பாணியில் குச்சிகளால் சாப்பிட முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு 'ஓஹோ' என்று சிரிக்க வைக் கிறது. அவருக்கு ஒரு சபாஷ்!

    வெளிப்புறக்காட்சிகளையும் உட்புறக் காட்சிகளையும் பேதம் கண்டுபிடிக்க முடியாதபடி இணைத்து, படத்துக்குக் கம்பீர வடிவம் தந்திருப்பது பெரிய சிறப்பு. அதற்குத் துணையாக, பிரமிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும்படி பொருத்தமாக உட்புறக் காட்சிகளை அமைத்திருக்கும் (உதாரணம்: புத்தர் கோயில்) ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவுக்கு ஒரு சபாஷ்.

    எக்ஸ்போ 70' காட்சிகளை, அங்கு நேரில் சென்றவர்கள் கூட இப்படித் தேர்ந்தெடுத்து ரசனையுடன் பார்த்திருப்பார்களா? என்று சந்தேகப்படும்படி அற்புதமாகப் படமாக்கியிருக் கிறார்கள்.

    அதே போல, தண்ணீருக்குள் எம்ஜிஆர் - லதா சம்பந்தப்பட்ட பாலே காட்சியும், சறுக்கு விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியும்கூட மறக்க முடியாதவை. இப்படி காமிராவை அற்புதமாக இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்திக்கு ஒரு சபாஷ்!

    படம் வெளியாகுமுன்னே
    பிரபலமாகிவிட்டவை,
    இந்தப் படத்தின் பாடல்கள்.

    'சிரித்து வாழ வேண்டும்'
    'பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல்கள்
    எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காதவை. பாடல்களுக்கான இசையமைப்பையும் மிஞ்சி நிற்கிறது ரீ-ரிக்கார்டிங்! மெல்லிசை மன்னர் விசுவநாதனுக்கு ஒரு சபாஷ்!

    ஏற்கெனவே 'நாடோடி மன்னன்', 'அடிமைப் பெண்' போன்ற மகத்தான படங்களைத் தயாரித்தவர் தான் எம்ஜிஆர்.

    ஆனால், அவற்றை யெல்லாம் மிஞ்சி இப்படத்தின் மூலம் இதுவரை யாருமே
    எட்டாத உயரத்துக்கு எழுந்து நிற்கிறார் அவர்.

    தமிழ்த்திரையுலகமே, ஏன் இந்தியத் திரையுலகமே பெருமைப்படத்தக்க தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் எம்ஜிஆருக்கு எத்தனை 'சபாஷ்' வேண்டுமானாலும் போடலாம்.

    Addition :

    #உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*த்தின் பாட*ல்க*ளை எழுதிய*வ*ர்க*ள் விவ*ர*ம்#

    க*விஞ*ர் க*ண்ண*தாச*னின் கைவ*ண்ண*த்தில்..
    1. அவ*ள் ஒரு ந*வ*ர*ச* நாட*க*ம்.
    2. லில்லி மலருக்கு கொண்டாட்டம்
    3.உலகம் அழ*குக*லைக*ளின் சுர*ங்க*ம்

    க*விஞ*ர் வாலியின் வார்த்தை ஜாலத்தில்...

    1. ப*ன்சாயி! காத*ல் ப*ற*வைக*ள்
    2, நிலவு ஒரு பெண்ணாகி
    3. ஓ! மை டார்லிங்
    4. ப*ச்சைக்கிளி முத்துச்ச*ர*ம்
    5. த*ங்க*த்தோனியிலே
    6. நினைக்கும்போது த*னக்குள் சிரிக்கும் மாது..

    புலவ*ர் புலமைப்பித்த*னின் புக*ழ்சேர்க்கும்...

    1. சிரித்து வாழ*வேண்டும் பிற*ர் சிரிக்க* வாழ்ந்திடாதே.

    புலவ*ர் வேதாவின் வேத*வ*ரிக*ள்.
    1. ந*மது வெற்றியை நாளை ச*ரித்திர*ம் சொல்லும்..
    நன்றி சிவபிரகாஷ்

    அன்புடன்
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍🏼............... Thanks wa.,

  9. #3498
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

    ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தையும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

    ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

    ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித்தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், பண நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
    வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

    ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
    அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி பெரும் வெற்றி கண்ட ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

    அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

    {Palaniappan Subbu, S/o:..........
    Kaviyarasu Kannadasan in Tamil Images Group, Facebook}...... Thanks wa.,

  10. #3499
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இயக்குனர்
    எம்.ஜி.ஆர்
    தயாரிப்பாளர்
    எம்.ஜி.ஆர் மற்றம் ஆர். எம். வீரப்பன்
    கதை
    சொர்ணம்
    இசையமைப்பு
    ம. சு. விசுவநாதன்
    நடிப்பு
    எம்.ஜி.ஆர்
    நாகேஷ்
    லதா
    சந்திரலேகா
    மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை)
    மஞ்சுளா
    எஸ். ஏ. அசோகன்
    இரா. சு. மனோகர்
    எம். என். நம்பியார்
    ஒளிப்பதிவு
    வி. ராமமூர்த்தி
    படத்தொகுப்பு
    எம். உமாநாத்
    கலையகம்
    எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
    விநியோகம்
    எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
    வெளியீடு
    11 மே 1973
    கால நீளம்
    178 நிமிடங்கள்
    நீளம்
    4305 மீட்டர்
    நாடு
    இந்தியா
    மொழி
    தமிழ்
    மொத்த வருவாய்
    4.2 கோடி
    அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது........ Thanks wa.,

  11. #3500
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நெஞ்சம் #மறப்பதில்லை

    சத்யா ஸ்டூடியோவில் பணிபுரிந்த ஜோதிபிரபா புரட்சித்தலைவர் பற்றிய தனது அற்புதமான நிகழ்வுகளைப் பகிர்கிறார்:

    ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!

    எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

    ‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

    இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

    அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

    தான் ஒரு சி.எம். என்ற #பந்தாவே #இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

    அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

    யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

    தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் #அதிகாரத்தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், #தன்னிடமே #வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

    சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து #விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.

    அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

    நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

    அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

    தலைவருக்கு ‘‘#அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

    தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

    சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

    தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் #சாப்பாடு #இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது #எந்தத்தலைவரும் #சாதிக்கமுடியாத எளிமையான அணுகுமுறை!

    நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

    தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

    ‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது #பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

    திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

    தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

    தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

    அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

    இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்........... Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •