Page 319 of 401 FirstFirst ... 219269309317318319320321329369 ... LastLast
Results 3,181 to 3,190 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3181
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3182
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3183
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3184
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3185
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3186
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .... தமிழ் இந்து நாளிதழில் வந்ததவை.... 21-4-19ன் தொடர்ச்சி...

    M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

    வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

    அ ந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.

    அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.

    பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.

    கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.

    அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.

    தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரியாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.

    ‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.

    அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்...........
    Thanks wa.,

    ..

  8. #3187
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    When 'he' said about the miseries of his childhood days, the fellow actor's eyes filled with tears…!
    நடிகர் எஸ்.எஸ்.ஆர் கூறியது...
    1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உணர்வைத் தெரிவிக்க, அப்போது சென்னைக்கு வரவிருந்த நேருவுக்கு, விமான நிலையத்தில் மிகப் பெரும் அளவில் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என கழகத்தின் முடிவை அண்ணா தெரிவித்திருந்தார்.
    அப்போதெல்லாம் கழகத்திற்கு அதிக நிதி வசதி கிடையாது. இது போன்ற நிலைமைகள் ஏற்படும்பொது எம்.ஜி.ஆரும், நானும் தான் அதற்கான முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ், எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் ஆகிய சினிமா கம்பெனிகளுக்குச் சொந்தமான தையல் மிஷின்கள், இரவு பகலாக கறுப்புக் கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
    அண்ணாவும் மற்ற முன்னணி தலைவர்களும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனர். போலீஸ் என்னையும் எம்.ஜி.ஆரையும் கண்கானித்தது.
    மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் எனக்கு போன் செய்து "இன்னும் சிறிது நேரத்தில் உங்களைக் கைது செய்ய வரப்போகிறோம், தயாராக இருங்கள்" என்றார். அதன்படி நான் கைது செய்யப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன்.
    அங்கே போனவுடன், எனக்கு முன்பாக எம்.ஜி.ஆரைக் கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிந்தது. நான், அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "என்னையும் அவர் கூடவே இருக்கும்படி சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பிவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டேன். இரு காவல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம். இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் நிலைமை சமாளிக்க முடியாது எனக் கூறி எங்கள் இருவரையும் அன்றிரவு முழுக்க வெவ்வேறு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
    மறுநாள் காலை என்னை மத்திய சிறைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு முதல் மாடியில் முதல் அறையில் கொண்டு போய்விட்டார்கள்.
    அங்கே ஆச்சரியம். எனக்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர் இருந்தார். இருவருக்கும் ஒரே அறை என்றதும் எனக்கு சிறைச்சாலைக் கூடமே சித்திரக்கூடமாகத் தெரிந்தது. மிகச் சிறிய அந்த அறையில் பயன்படுத்துவதற்கு திண்ணை போல ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அழுக்கடைந்த, மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மெத்தை, அதில் படுப்பதும் தூக்குமேடையில் தொங்குவதும் ஒன்றுதான். அதைக் கீழே தூக்கிப் போட்டோம்.
    எங்கள் இருவருக்கும் கைகள்தான் தலையணை. வெறும் தரையில் படுத்துக் கொண்டோம். பேச்சுவாக்கில் மனம் திறந்து அவர் தன்னுடைய இளமை கால பருவத்தை நினைவு கூர்ந்தார்.
    "கும்பகோணத்தில், என்னுடைய அம்மா அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலை செய்பவர். அங்கிருந்துதான் சோறும் குழம்பும், பொரியல் எல்லாம் கொண்டு வருவார். எனக்கு அதுவரை பசி தாங்க முடியாது. இடுப்பில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி படுத்திருப்பேன்" என்று அவர் சொன்ன போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த் துளிகள். இளம் வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் அவர் என்ற விபரம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
    பகல் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு உணவு தரப்பட்டது. வட்ட அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சோறு. சிரமப்பட்டு சாப்பிட்டபடியே எம் ஜிஆரைப் பார்த்தேன். அவர் எவ்வித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமாதிரி சாப்பாட்டை நான் சாப்பிட்டது இல்லை. என் நிலையை புரிந்து கொண்ட அவர், "சிறு வயதிலேயே சாப்பிட்டுப் பழகி விட்டேன். அதனால் இது எனக்கு புதிது கிடையாது" என்றார்.
    அங்கு ஒரு மண்பானை இருந்தது. அருகில் ஒரு தகர டப்பா. அதில் தண்ணீர் எடுத்துக் குடித்துக் கொள்ளவேண்டும். அந்த மண்பானைக்கருகில் இரு மண்சட்டிகள் இருந்தன. 'அவை எதற்கு?' என்று அண்ணனிடம் கேட்டேன்.
    " அவை இரவு கழிப்பிட வசதிக்காக.." என்றார்.
    " எப்படி இதையெல்லாம் பயன்படுத்துவது.." என தர்மசங்கடத்துடன் அவரைக் கேட்க,
    "வேறு வழி? இது மாதிரி ஒரே அறையில் ஐந்தாறு பேர் கைதிகளாக இருக்கிறார்களே அவர்களது நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்" என என்னைச் சமாதானப் படுத்தினார்.
    நாங்கள் சிறையிலிருப்பது தெரிந்து பல பட அதிபர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் எங்களைக் காண வந்தனர். வந்தவர்கள் கூடை கூடையாகப் பழங்கள் வாங்கி வந்தனர். எல்லாவற்றையும் சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தோம்.பெரும்பாலான கைதிகளுக்கு நாங்கள் யாரென்றே தெரியவில்லை. அவர்கள் அனைவரும், தியாகராஜ பாகவதரும, என்.எஸ்.கிருஷணனும் சிறைச் சாலையில் இருந்த காலத்தில் உள்ளே வந்த ஆயுள் கைதிகள்.
    பிரதமர் நேருவுக்கெதிரான கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு பத்து மணியளவில் அண்ணாவையும் மற்ற பிரமுகர்கள் பலரையும் போலீஸ் விடுதலை செய்தது. அடுத்த நான் காலையில் என்னையும் எம்.ஜி்ஆரையைம் விடுதலை செய்தனர். அன்றைய தினம் பகல் உணவை எங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டுத்தான் ராயப்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் போனார் அண்ணன். சிறையில் அவருடன் இருந்த அந்த வித்தியாசமான அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று.
    ---------------------
    (1970 ல் வெளியான 'என் அண்ணன்' படத்தில்
    கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசனின் பாடலை டி.எம்.எஸ் பாடுகிறார்)
    .................. Thanks wa.,

  9. #3188
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (26/04/2019) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் , இரு கரங்களில் வாள் வீச்சில் அசத்திய
    "நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  10. #3189
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் அடிமைப்பெண் பொன்விழா நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
    மேடையில் அமைக்கப்பட்ட பேனரின் தோற்றம்

  11. #3190
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •