Page 259 of 401 FirstFirst ... 159209249257258259260261269309359 ... LastLast
Results 2,581 to 2,590 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2581
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    வெளியான தேதி -10/05/1963. கோவை ராயலில் -100நாட்கள்
    கோவை டிலைட்டில் 20 நாட்கள் ஓடியது .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2582
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  4. #2583
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த ஞாயிறு (24/03/2019) அன்று க்ளஸ்டர் திரைப்பட கல்லூரி, (ஹோப்ஸ் கல்லூரி மற்றும் மணீஷ் தியேட்டர் அருகில்,) சிங்காநல்லூர், கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .தேர்தல் விதிமுறைகள் காரணமாக சுவரொட்டிகள், பேனர்கள், பதாகைகள் எங்கும் சாலைகளில் தென்படவில்லை .கல்லூரி வளாக வாயிலில் பலூன் அலங்காரம் .
    புரட்சி தலைவர் உருவம் பொருந்திய வரவேற்பு பேனர்கள், பெருமளவில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன .சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மாநகர மேயர் ) அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்திருந்தனர் .
    விழா நடைபெறும் அரங்கத்தின் ஒரு பகுதியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள், மற்றும் அரசியல் குறித்த புகைப்படங்கள்
    ஆகியன புகைப்பட கண்காட்சியாக எம்.ஜி.ஆர். பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன .

    கோவை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் விழா வெற்றிகரமாக நடைபெறும் வகையில் , உள்ளூர் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு , செங்கல்பட்டு, பெங்களூரு , அரியலூர் ,புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து பெருந்திரளாகவந்திருந்த பக்தர்கள்
    அனைவரையும் வரவேற்று நன்கு உபசரித்தனர் .

    காலை 8 மணியளவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது . காலை 10 மணியளவில் சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மேடையில் நாட்டுப்புற இசையில் மேள தாளத்துடன் வாத்தியங்கள் முழங்கின .
    காலை 10.30 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படம்
    திறந்து வைக்கப்பட்டது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
    திரு.எம்.ஏ.முத்து (உடைஅலங்கார நிபுணர் ), பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா, திரு.தசரதன் (நவரத்தினம் -துணை இயக்குனர் ),
    திரு.ரத்னவேலு (ஆர்.எச் .ஆர். ஓட்டல் அதிபர் ), ஜூபிடர் பிக்ச்சர்ஸ் வாரிசுகள், திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் ), கோவை ராயல் தியேட்டர் அதிபர்,,பேராசிரியர் திருமதி ராஜேஸ்வரி, மதுரை,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு ,திரு.சந்திரகுமார் ,வர்ணனையாளர் ,திரு.ஷாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ),திரு.வாசுதேவன், சூலூர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு பொறுப்பாளர்கள் திரு.காளியப்பன், திரு.கனக சுப்ரமணியம், திரு.கணபதி தாஸ், திரு.சேகர், திரு.கமலக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து விழா
    ஏற்பாடுகளை மற்றும் சில கோவை பக்தர்களுடன் சேர்ந்து செய்திருந்தனர் .

    காலை 11 மணியளவில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன . பெங்களூரில் இருந்து சிறுவர்கள் சுமார்
    20 பேர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு மேடையில் காட்சி அளித்தனர் . அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார் . பின்பு திரு.சைதை துரைசாமி சுமார்
    ஒரு மணி நேரம் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆருக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் பல செய்திகள், நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி
    அனைவரின் கைதட்டலை பெற்று அசத்தினார் .

    அவரை தொடர்ந்து மற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள். திரு.
    ஷாகுல் ஹமீது ,(ஸ்டண்ட் நடிகர் ) உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் மான் கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்கு பதிலாக சில காட்சிகளில் டூப்பாக நடித்ததை நினைவுபடுத்தினார் .

    பிற்பகல் 1 மணிக்கு உணவு இடைவேளை . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தனர் .
    சுமார்500 பேர் விழாவில் கலந்து கொண்டதாக பக்தர்கள் தகவல்
    அளித்தனர் . பிற்பகல் 2.30 மணியளவில் எடிசன் ஆர்கெஸ்டராவின்
    இன்னிசை மழையில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன .

    1.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
    2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
    3. ஆடலுடன் பாடலைக் கேட்டு - குடியிருந்த கோயில்
    4. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன்
    5.புத்தன் இயேசு காந்தி - சந்திரோதயம்
    6..குமரிப்பெண்ணின் உள்ளத்திலே -எங்க வீட்டு பிள்ளை
    7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
    8..தங்கப்பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்
    9. உன்னை அறிந்தால் - வேட்டைக்காரன்
    10.பச்சைக்கிளி முத்துச்சரம் -உலகம் சுற்றும்வாலிபன்
    11. உலகம் பிறந்தது எனக்காக - பாசம்
    12..சக்கரைக்கட்டி -பெற்றால்தான் பிள்ளையா - நடன பாடல்
    13. ஏய் நாடோடி - அன்பே வா - நடன பாடல்
    14. நான் உங்கள் வீட்டு பிள்ளை -கோவை தியாகராஜன் -நடனம்
    15. .நாங்க புதுசா - ஒளி விளக்கு - சிறுவன் -சிறுமி நடனம்
    16. என்னை தெரியுமா - கு.கோயில் -கோவை தியாகராஜன் -நடனம்
    17. பச்சைக்கிளி முத்துச்சரம் -உ.சு.வாலிபன் - நடன பாடல்
    18. ஆடலுடன் பாடலை - கு.கோயில் - நடன பாடல்
    19. நான் உங்கள் வீட்டு பிள்ளை -நாமக்கல் எம்.ஜி.ஆர். - நடனம்
    20.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
    21. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
    22. அன்று வந்ததும் இதே நிலா - பெ. இ. பெண் -நடன பாடல்
    23 அச்சமென்பது மடமையடா - மன்னாதி மன்னன்
    24. பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை .
    25.எங்கே போய்விடும் காலம் -தாழம்பூ -நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடனம்


    மாலை 5.30 மணியளவில் யோகா பயிற்சி சிறுவர்-சிறுமி
    மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிவரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்த கம்பு சண்டை, சிலம்ப சண்டை, ஜூடோ, வாள் சண்டை, மான்கொம்பு சண்டை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் மாணவ மாணவியர் சுறுசுறுப்பாகவும்,
    விறுவிறுப்பான சண்டை காட்சிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .இடையில் வர்ணனையாளர் திரு.சந்திரகுமார்
    திரைப்பட பழைய பாடல்களுக்கு , ரீ மிக்சிங், புதிய வடிவம், புதிய கலைஞர்கள் நடிப்பது , பாவனை காட்டி நடிப்பது இப்போது கைவந்த கலை . ஆனால் அந்த காலத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள்
    நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், மதுரை வீரன், நாடோடி மன்னன், தாயை காத்த தனயன், பெரிய இடத்து பெண் , முகராசி, நீரும் நெருப்பும், மாட்டுக்கார வேலன் ,ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உழைக்கும் கரங்கள் மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
    ஆகிய திரைப்படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த இந்த பட காட்சிகள் எந்த காலத்திலும்
    வேறு எந்த நடிகரோ , கலைஞரோ, நடிக்க முயல்வது இயலாத காரியம் .என்று குறிப்பிட்டு அனைவரின் கரகோஷத்திற்கிடையே
    தனது உரையை முடித்தார் .
    இரவு 8 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது .
    Last edited by puratchi nadigar mgr; 27th March 2019 at 12:28 AM.

  5. #2584
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று கோயமுத்தூரில் நடந்த "வானவில் " புரட்சி தலைவரின் பிறந்தநாள் விழாவில் இதுவரை கண்டிராத சிறப்பு,

    தமிழ் கலாச்சார முறைப்படி கோவையில் புகழ்பெற்ற "பறைமேளம் " இசையுடன் துவங்கி,
    " சிலம்பாட்ட " கலையுடன் நிறைவுபெற்றது,

    விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை முன்னாள் மேயர், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர், உலக எம்ஜிஆர் பேரவை தலைவர், அண்ணன் திரு. சைதை துரைசாமி அவர்களின் பேச்சு அனைத்து தலைவரின் பக்தர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது,

    விழாக்குழுவை சிறப்பாக நடத்திய புரட்சி தலைவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்த அண்ணன் காளியப்பன் அவர்களுக்கும், "விசாரணை " பட இயக்குனர் சந்திரகுமார், மற்றும் நண்பர்கள் வாசுதேவன், சேகர், மற்றும் பெயர் தெரியாத குழுவை சார்ந்தவர்களுக்கும் நன்றி..! நன்றி..!!.......... Thanks wa.,

  6. #2585
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே கேள்வி!!
    -------------------------
    இந்தப் பதிவின் நாயகரே மு.க.ஸ்டாலின் தான்?
    ராகுல் காந்தி,,தம் தேர்தல் பிரச்சாரத்தில் --
    கர் நாடகத்தில் பேசியிருக்கும் ஒரு விஷயம்?
    விஷயம் அல்ல--விஷமம்!
    விஷமம் கூட அல்ல!--விஷம்??
    நீங்கள் பி.ஜே.பிக்கு ஓட்டு போட்டால்,,பி.ஜே.பியும் எடியூரப்பாவும் சேர்ந்து ஒட்டு மொத்தக் காவிரி நீரை தமிழகத்துக்கு தாரை வார்த்து விடுவார்கள்??
    எவ்வளவுக் கேவலமான--
    பிரிவினையைத் தூண்டுகின்ற--
    பொது நலம் சிறிதும் இல்லாத--
    ஈவு இரக்கம் அற்ற பேச்சு??
    பிரிவினையைத் தூண்டி,,வன்முறையை வளர்க்கச் செய்யும் இந்த ஒரு பேச்சுக்காகவே சட்டப்படி ராகுல் மீது வழக்கு தொடர முடியும்!!
    நம் ஸ்டாலினிடம் நாம் கேட்கும் கேள்வி--
    ஐயா புண்ணியவானே!!
    தமிழுக்கும்,,தமிழகத்துக்கும்--நீங்களும் உங்கள் தந்தையும் பலமுறை உயிர் விட்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?
    அதை வைத்து இதைக் கேட்கிறோம்!
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு உங்கள் பதில் என்ன??
    உங்கள் கூட்டணியில் நாளையப் பிரதமர் வேட்பாளர் என்று உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ராகுல் தான் இப்படிப் பேசியிருக்கிறார்!
    கூட்டணிக் கட்சி என்ற முறையில்,,ராகுல் பேசியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா??
    அப்படி ஏற்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு நாங்கள் துரோகம் இழைக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்!!
    காவிரியை மீட்கக் களம் சென்றோம் என்று கதை விட்டவரின் அருமை மகனே??
    நீங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கும் தமிழக மக்களுக்குத் தேவையான தண்ணீரை தரக் கூடாது என்று--உங்கள் கூட்டணியின்,,பிரதமர் வேட்பாளர் ராகுல் பேச்சுக்கு நீங்கள் சொல்லப்போகும் சமாதான மழுப்பல் தான் என்ன??
    முக நூல்--ட்விட்டர் போன்றவற்றில் முழ்ங்கி வரும் நீங்கள்--இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறீர்கள்!!
    தமிழக வாக்காள சொந்தங்களே---
    உங்களுக்கு ஒரு வார்த்தை!!
    தண்ணீர் கொடுக்காத உங்கள் நாட்ட்டில்--ஒரு குவளை நீர் கூடக் குடிக்க மாட்டேன்!!
    சொன்னது எம்.ஜி.ஆர்! பெங்களூரில்--தமிழகத்துக்காக!!
    நடுவர் மன்ற அரசாணை!!
    வெளியிட்டது ஜெ!!---தமிழகத்துக்காக!!
    தவித்த வாய்க்கு தண்ணீர் தராதே என்று--
    அவித்த அனல் போல் பேசும் ராகுலோடு---கூட்டில் இருக்கிறார் ஸ்டாலின்!!!
    முதல் போட்டு லாபம் தேடுவதில் இவர்கள்!
    முடிவு உங்கள் கையில்!!!......சமுதாய, சமூக நலன் கருதி இந்த பதிவு... Thanks wa.,

  7. #2586
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படத்துறையின் சக்தியாக வலம் வரும் பொன்மனச்செம்மலின் திரைப்பட சாதனையில். வேலூர் மாநகரில் தலைவரின் படங்களே அதிக அளவில் இரண்டு திரையரங்குகளில் வெளிவந்து சாதனை நிகழ்த்தியுள்ளது. நகரில் அதிக நாள் ஒடிய முதல் படம் மதுரைவீரன் -.ராஜா அரங்கில் 147 நாள் ஒடி சாதனை. 1958 ல் நாடோடி மன்னன் 127 நாள் ஒடியது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் காவியங்களே முன்னனி பெற்று வந்துள்ளது.. நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

  8. #2587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் அபிமானிகள் பக்தர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. தலைவர் மறைந்து தமிழகத்தில் நடைப்பெற்ற பொதுதேர்தல் ஆகட்டும் பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும் தமிழகத்தை பொறுத்த வரை திராவிட ஆட்சிகள் தான் ஆண்டு வருகிறது.தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க தலைவருடன் முடிந்து விட்டது.அவரது கட்சியை வைத்து சின்னத்தை வைத்து கொடியை வைத்து பலர் எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் ஏமாற்றி வந்து ஒட்டுகளை வாங்கி பதவி சுகம் பணசுகம் அதிகார சுகம் இதைவிட எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து நம்மவர்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள். இவர்களால் தலைவரின் அபிமானிகளுக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. மேலும் ஜெயலலிதாவின் பாதையிலேயே தமிழ்நாட்டை இப்பொழுது இருக்கும் கட்சி ஆட்சி நபர்கள் கொண்டு செல்கின்றனர். தலைவரின் கடந்த கால ஆட்சியை எடுத்து சொல்ல கூட ஆள் இல்லை. கடந்த 29.ஆண்டுகளில்1991. 2001,2011,2016. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும்.. 1989 1996.2006 ஆகிய தேர்தலில் தி.மு.க. என்ற கட்சியை மிக பெரிய அளவில் அதிமுக வளர்த்து விட்டு 3 முறை ஆட்சியை பிடிப்பதற்கு சாதகமாக்கிவிட்டது. இனி வரும் தமிழக பொதுத் தேர்தலில் தலைவரின் உள்ளங்கள் தலைவரின் புகைப்படத்தை போட்டு 234 தொகுதிகளிலும் சுயேச்சை ஆக போட்டியிடவேண்டும். அப்பொழுது கூட இவர்கள் தலைவர் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். ஜெ.ஜெ. எனவும் மோடி டாடி என்றும் பேட்டி கொடுப்பார்கள். தலைவரின் பெயரை கட்சியிலும் ஆட்சியிலும் 100 சதவீகிதம் புகழ் பாடுவதாக இருந்தால் நாளைய தலைமுறைக்கு தலைவரின் பெயர் கால காலமாக நிலைக்கும்.இதை விடுத்து எல்லாவற்றிலும் ஜெ படம் இபிஎஸ் படம் ஒபிஎஸ் படம் கட்சி காரர்கள் படம் வேட்பாளர்கள் படம் எல்லாமே பெரிதாக போட்டு கட்சி நிறுவனர் படமில்லாது போஸ்டர் பேனர் தலைமை கழகத்தில் தலைவர் படமின்றி பேனர் இப்படி எல்லாவற்றிலும் தலைவரை மறைத்த கூட்டம் திருந்துமா... தலைவரின் பக்தர்கள் கண்னை முடி வாயை போத்தி காதை அடைத்து தான் இருக்கவேண்டுமா? சிந்தித்து பார்த்து செய்கை மாற்றி தலைவரின் புகழைப்பட உருப்படியான முடிவு எடுங்கள். நன்றி!. உரிமைக்குரல் ராஜு.......... Courtesy: fb.,

  9. #2588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை எந்த கருத்தையும் செய்திகளையும் செல்லாதவர்கள் தற்போது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் திலகம் எம்ஜிஆரை பற்றி சொல்லும் பல தகவல்கள் உண்மைக்கு மாறாக இருப்பதை உணர முடிகிறது . தங்களை முன்னிலை படுத்தி பெருமை படுத்தி கொள்வதில் என்ன லாபம் ?

    இன்றைய ஆளும் கட்சி பதவியில் இருப்பவர்கள் கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆரை மறந்து தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் . மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்கள் மட்டுமே என்றுமே அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை .

    மக்கள் திலகத்தை மறந்தவர்களையும் , நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி எம்ஜிஆரின் புகழை சீர் குலைக்கும் நபர்களையும் காலம் நமக்கு அடையாளம் காட்டி விட்டது . இனி ஏமாற மாட்டோம் .

    இனியாவது திருந்துங்கள் ......

    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்

    பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
    வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
    அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
    வார்த்தையில் அடங்கவில்லை..

    எதுவும் இதில் அடக்கம் -
    இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! .......... Thanks wa.,
    .

  10. #2589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.

    இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை ...அதற்கு காலம் தக்க சமயத்தில் தகுந்த பதில் வழங்கும்......... Thanks wa.,
    காலைவணக்கம்அனைவருக்கும்♥♥♥♥

  11. #2590
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையிலேயே களம் கண்ட வேங்கை, சிங்கம் , எங்கள் தங்கம்....தலைவரின் வெற்றி சாதனையில் ஈரோடு மாநகர். நகரில் 1968 குடியிருந்த கோயில் 100 நாள். 1969. அடிமைப்பெண் 100 நாள் 1970 மாட்டுக்கார வேலன் 140.நாள் 1971 ரிக்க்ஷாக்காரன் 138 நாள் தொடர்ந்து 4 வருடம் தலைவர் படம் சாதனையாகும். 1968 ஒளி விளக்கு 85 நாள் 1969 நநம்நாடு 96.நாள் 1070 என் அண்ணன் 83 நாள் 1971. குமரிக் கோட்டம் 78.நாள். 1968.ரகசியபோலிஸ் 77 நாள் 1970.எங்கள் தங்கம் 84 நாள் ,.தேடி வந்த மாப்பிள்ளை70 நாள் 1971.நீரும் நெருப்பும் 66 நாள். சாதனையில் மக்கள் திலகமே நகரில் என்றும் முன்னனி. உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •