Page 231 of 401 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2301
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #தொப்பியின் #தையற்காரர்...???

    தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள்.

    நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.

    மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள்.

    “சத்யா ஸ்டுடியோ”வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் செம்மறிஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார்.

    பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார்.

    அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால் எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.

    தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், #அண்ணே #என் #வாழ்நாளில் #அல்லாவையே #பார்த்த #உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் #பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார்.

    படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை “மேக்அப்” அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம்.

    தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை #அவருக்கு #எல்லோரும் #சமம். மேலும் அவர் தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார்.

    அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார். #பாய் #வரும் #வரை #மக்கள்திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு #தரையில் #உட்கார்ந்து #சாப்பிடுகிறார்கள்.

    இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே #மக்கள்திலகத்திற்கு #சாப்பாடு #தினமும் #இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார்.

    மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார். மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார்.

    பாய், "மக்கள்திலகத்தின் குணத்தை எண்ணி, ஆனால் பணத்தை எண்ணாமல் " தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்............. Thanks wa.,...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2302
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதய தெய்வம் புரட்சித்தலைவரின் விசுவாசிகளே வணக்கம்
    இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்து கொடுத்து சிவந்த கரம்படைத்தவரும்
    என்றும் ஏழைகளின் இதயத்தில் குடிக்கொண்டு உள்ள நம்முடைய இதய தெய்வம் புரட்சித்தலைவரின் விழாவுக்கு வருக வருக என அழைக்கிறேன்
    தாங்களும் தாங்களின் நண்பர்களும் வருக வருக என அன்போடு புரட்சித்தலைவரின் பக்தன் என்கின்ற முறையில் அழைக்கிறேன்
    " நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
    அன்புடன் சம்பங்கி Gsr Bangalore
    பெங்களுருசுதர்சன்..... Thanks wa.,

  4. #2303
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    🤗🤝🏽👍🏼முருகனுக்குககந்த சந்தோச செவ்வாய் காலைவணக்கங்கள்! மார்ச் 5 ல்...வெளியான 3 மக்கள் திலகம் காவியங்கள்! 1.நாம்-5.3.1953 2.குடியிருந்தகோயில்-5.3.1968. 3.நவரத்தினம் 5.3.1977... Thanks wa.,...

  5. #2304
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கபஸ்மம் சாப்பிட்டார் அதனால் தான் பொன்நிறமாக மின்னினார் எம் ஜி ஆர்
    நடிகர் ஆனாதால் வென்றார் முதல்வர் ஆனார்
    என கருதி முதல்வர் ஆக துடிக்கும் நடிகர்கள் உணரவேண்டும்
    உடல் மட்டும் பொன்னாக மின்னவில்லை உள்ளமும் பொன்னாக மின்ன வாழ்ந்தார் அதனால் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஆனார் எவரும் அடைய முடியாத வெற்றிகளை அடைந்தார் எம் ஜி ஆர்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்........... Thanks wa.,...

  6. #2305
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விழா அழைப்பு
    ******************
    அதிசயங்களையும் ஆக்கப்பூர்வமான வெற்றிகளை மட்டுமே தன வாழ்நாளில் சந்தித்த ,
    வெற்றித் திருமகன்...
    வீரப் புரட்சியாளர் ,
    பொன்மனச்செம்மல் ,
    கண்கண்ட கடவுள் எம்ஜிஆர் அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு அன்பு வணக்கம்.
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடனும் ,
    திரு. சம்பங்கி GSR , க. ராஜசேகர் , பிரகாஷ் @ முருகன் இவர்களது மேற் பார்வையிலும் , திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா அவர்களது ஆலோசனை பேரிலும் ,
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பிலும் நடைபெறும்,
    "புரட்சி தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019" வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது.
    இவ்விழாவிற்கு, முதல் முறையாக மலேசியா நாட்டிலிருந்து சிறப்பு வருகை புரிகிறார் திரு. டாக்டர் நெல்சன் முருகன் அவர்கள்.
    அவரைப் போல இன்னும் பலர் சிறப்பு வருகை புரிய இருக்கிறார்கள்.
    இவ்விழாவின் சிறப்பம்சமாக மலேசியா புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் அவர்கள் வழங்கும் ....
    சாதனைச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958 , 68 ,78ம் ஆண்டுகளில் வெளிவந்த காவிய திரைப் பாடல்களின் மனதை விட்டு நீங்காத பாடல்களை பாடி அசத்த வருகிறார்கள்...மலேசியா புகழ் திரு. மேகநாதன், மதியழகன், DK. குமார், சிவா - பார்வதி, பத்மினி, மற்றும் ஜெயந்தி மோகன் அவர்கள்.
    வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்கள் தங்களது பெயர் விவரங்களை திரு. சம்பங்கி GSR, க. ராஜசேகர், டி. பிரகாஷ் இவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.
    மேடை விளம்பரம்...
    மேடை புகழ்... மாலை மரியாதை எதிர்பார்ப்போர் தயவுசெய்து தங்களது வருகையை தவிர்க்கவும்...காரணம் இது மனிதக் கடவுள் எம்ஜிஆர் புகழ்பாட மட்டுமே நடைபெறும் விழா என்பதை தெரியப்படுத்துகிறோம் நன்றி.
    விழா நடைபெறும் இடம் :
    CKC. GARDEN , LALBAGH ROAD 1st CROSS, BANGALORE - 27
    தொடர்புக்கு :
    Sampangi GSR
    9731185524
    Rajashekar
    9880825975
    D. Prakash ...
    தொடர்பு எண் கீழே....... Thanks wa.,...

  7. #2306
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை பற்றிய ஒரு தகவல் :

    நாம். 05-03-1953

    "நாம் "1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 -ம் தியதி வெளிவந்த நமது தலைவர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் ( குமரன் என்ற கதாபாத்திரத்தில் ) நடித்திருந்தார்
    இ்ப்படத்தை
    எம். ஜி. ஆர், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.

    நாம் :

    இயக்குனர்v: ஏ. காசிலிங்கம்
    தயாரிப்பாளர் : ஜூயூப்பிட்டர் &
    மேகலா பிக்சர்ஸ்
    கதைதிரைக்கதை :
    மு. கருணாநிதி
    இசையமைப்பு : சி. எஸ். ஜெயராமன்
    கதாநாயகன் : எம். ஜி. ராமச்சந்திரன்
    கதாநாயகி : வி.என். ஜானகி
    வெளியீடு : 05-03-1953

    இதில் எம் ஜி ஆர் ,
    எம் ஜி சக்ரபாணி
    எம். என். நம்பியார்,
    பி. எஸ். வீரப்பா,
    வி. என். ஜானகி
    பி. கே. சரஸ்வதி, S.R.ஜானாகி,R.M.சேதுபதி, S.M.திருப்பதிசாமி, T.M.கோபால், தேவர்
    மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    "நாம்" ஜூபிடர் பிக்சர்ஸ் மற்றும் மேக்லா பிக்சர்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். கருணாநிதி, திரைக்கதை, உரையாடல் மற்றும் பாடல்களை எழுதினார். காசி கன்னீர் (லவ் கண்ணீர்) கதையின் அடிப்படையில்.
    கதை, கு மரன் (எம்.ஜி.ஆர்), வாழ்க்கை மற்றும் சமுதாயத்தைப் பற்றிய முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட இளம் இளைஞனைப் பற்றியது. அவர் ஒரு ஜமீன்தார் தோட்டத்திற்கு வாரிசு, அவர் இறந்த படுக்கையில் தனது தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறார். எனினும், விருப்பம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏற்பாடு ஒரு தீய மலையாளி (வீரப்பன்) மறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற டாக்டர் சஞ்சீவி (எம்.ஜி. சக்ரபானி) சொத்துக்களில் ஆர்வமாக உள்ளார், குமரனை திருமணம் செய்து கொள்ள அவரது மகள் (சரஸ்வதி) விரும்புகிறார். ஆனால், குமரன் மலயப்பாவின் சகோதரி மீனா (ஜானகி) காதலிக்கிறார். ஆனால், அவள் சித்தியடைந்தால், குமரன் தனது நோக்கங்களை சந்தித்து, கிராமத்தை விட்டு வெளியேறினார். நகரத்தில், அவர் ஒரு குத்துச்சண்டை சாம்பியன் ஆனார். இதற்கிடையில், மலையாப்பன் குமரனின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவர் இறந்துவிட்டார் என நம்புகிறார், ஆனால் அவர் மீனாவால் காப்பாற்றப்படுகிறார். காணாமல் போனது பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, மற்றும் ஒரே நேரத்தில், யாருடைய முகம் சீரழிந்து, இரவில் சுற்றி நகர்கிறது, கிராமத்தில் ஒரு பேய் பற்றி வதந்திகள் எழுப்ப. எனினும், உண்மையை இறுதியாக வெளிப்படுத்தி, காதலர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஒரு திறமையான ஆசிரியரான ஏ.எஸ். கசிலிங்கம் திரைப்படத்தை இயக்கினார் மற்றும் படத்தின் மீதும் அதன் கதை பற்றியும் நல்ல கட்டுப்பாட்டை வைத்திருந்தார். இசையமைத்த பாடகர் சிதம்பரம் எஸ். ஜெயராமன் ('இண்ட்ரு போயி நாலை வ ..' புகழ்) எழுதியுள்ளார். ஜெயராமை தவிர, நாகர் ஹனிஃபா, ஏ.எம். ராஜா, ஜிகி, எம்.எல். வசந்தகுமாரி, ஏ.பீ. கோமாலா, கே.ஆர். செல்மாமுத்து மற்றும் டி.ஆர். கஜலட்சுமி அவர்கள் குரல்களைக் கொடுத்தார். இந்த வரிசை மற்றும் அர்த்தமுள்ள பாடல் போதிலும், இசை பிரபலமாகவில்லை. இந்தத் திரைப்படம், கருணாநிதியின் ஸ்கிரிப்ட், காசிலிங்கத்தின் இயக்கமும் நடிகருடனான சுவாரஸ்யமான நடிப்புகளும் கூட வெற்றிகரமாக இல்லை. இது எம்.ஜி.ஆரின் புகழ்க்கு பங்களிக்கவில்லை...... Thanks wa.,

  8. #2307
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முதல்வர் எம்.ஜி.ஆர்!!
    -----------------------------------------
    எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மை!!
    எம்.ஜி.ஆரின் ஏழைகள் பால் இரக்கம்!
    எம்.ஜி.ஆரின் மனித நேயம்!
    சரி! எம்.ஜி.ஆரின் நிர்வாகம் எப்படி இருந்தது??
    இந்த நிகழ்வைப் பார்த்துட்டா போச்சு??
    அது முதன் முதலாக எம்.ஜி.ஆர் ராஜ்ய-பரிபாலனத்தை ஏற்றிருந்த நேரம்!!
    முதல்வர் எம்.ஜி.ஆர்,,கோட்டைக்குச் சென்று கொண்டிருக்கிறார்!!
    நல்லவன் எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னால்--
    பல்லவன் பேருந்து ஒன்று பிதுங்கியபடி சென்று கொண்டிருக்கிறது!
    பொங்கியபடி தலையெடுக்க வேண்டிய மாணவர்களோ--
    தொங்கியபடி பேருந்தில்??
    தன் காரை பேருந்துக்கு முன்னால் விடச் சொன்ன எம்.ஜி.ஆர்,,பேருந்தை நிறுத்துகிறார்?
    பதறிப் போன மாணவர்கள்--
    சிதறிப் போன நெல்லிக்கனி மாதிரி உதிர்கிறார்கள்!!--மனதுக்குள் அதிர்கிறார்கள்?
    எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க பெற்றோர் உங்களைக் கல்லூரிக்கு அனுப்பறாங்க?
    இப்படியா தொங்கிக்கிட்டு வருது?
    முதல்வரின் கேள்வியில் ஒரு அன்னையின் பாசம்!
    அவர்கள்,,பிரசிடென்ஸி கல்லூரி மாணவர்கள்!!
    சார்,,எங்க காலேஜ்,,எத்திராஜ் காலேஜ்,,ராணி மேரி காலேஜ்ன்னு இந்த ரூட்டிலே நாலைஞ்சு காலேஜ் இருக்கு. ஆனாலும் இந்த வழித் தடத்தில் பேருந்துகள் எண்ணிக்கைக் குறைவா இருக்கு. நாங்க என்ன சார் செய்யறது??
    மறு மொழி சொல்லா மக்கள் திலகம் காரில் ஏறுகிறார்!
    கோட்டைக்குள் நுழைந்தவுடனேயே அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு பொன்னையனை மின்னல் வேகத்தில் அழைக்கிறார்!
    நாம் ஏற்கனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்தில் இருக்கிறோமே என்று ஆரம்பித்தப் பொன்னையன் பேச்சை கத்தரிக்கிறார் முதல்வர்?
    அதுக்கெல்லாம் பல மாதங்கள் ஆகும்!
    சென்னை--சென்னைப் புற நகர் பகுதிகளில் மக்கள் குறைவாகப் பயணம் செய்யும் 15 வழித் தடங்கள் பட்டியலை உடனேக் கொண்டு வாருங்கள்!!--ரத்தின சுருக்கமான உத்தரவு!!
    மிரண்டு போன அமைச்சர்,,பத்தே நிமிடங்களில் விபரங்களோடு வர--
    அடுத்த உத்தரவு ஏவுகணை போல் பிறக்கிறது எம்.ஜி.ஆரிடமிருந்து?
    இந்தப் பதினைந்து வழித் தடங்களில்,,ஒவ்வொரு வழித் தடத்திலிருந்தும் ஒரு பேருந்து வீதம் குறைக்கப்பட்டு அந்தப் பதினைந்து பேருந்துகளையும் இந்தக் கல்லூரிகள் இருக்கும் வழித் தடத்தில் நாளை முதல் இயக்குங்கள்!!
    அதிக பட்சம் அரை மணி நேரத்துக்குள் மாணவர்களின் அத்தியாவசியத் தேவை எம்.ஜி.ஆரால் நிறைவேற்றப் படுகிறது!!1
    இத்த வேகத்திலும்--பயணிகள் குறைவாகப் பயணம் செய்வோர்களின் பேருந்துக்கள் எண்ணிக்கையையும் பெரிய அளவில் குறைக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்!!
    பின்னல் சிக்கிக் கொண்டது போன்ற சிக்கலை-
    மின்னல் வேக மதியூகத்தால் எம்.ஜி.ஆர்,,தீர்த்து வைத்ததைப் போல் எவரேனும் செய்திருக்கிறார்களா??
    இதற்குப் பெயர் தான் எம்.ஜி.ஆர் நிர்வாகம்!!!!!....... Courtesy: fb.,

  9. #2308
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  10. #2309
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  11. #2310
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •