Page 149 of 401 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #1481
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக அரசியல் வார இதழ் - 9/2/19



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1482
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினிக்கூத்து மாத இதழ் -பிப்ரவரி 2019



  4. #1483
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சூப்பர் ஹீரோ மாத இதழ் -பிப்ரவரி 2019

  5. #1484
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1485
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1486
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    காமதேனு வார இதழ் -06/02/19



  8. #1487
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் அம்மாபேட்டையில் உள்ள வைஸ்யா திருமண மண்டபத்தில் கடந்த
    ஞாயிறு (03/02/2019) அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .

    திருமண மண்டபத்தின் உட்பகுதி, வாயில்,மண்டபத்தின் அருகில் உள்ள ரவுண்டானா, மண்டபத்தின் அருகில் உள்ள மூன்று சாலைகள் ஆகியவற்றில்
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன

    சென்னை, வேலூர், திருவண்ணாமலை,சேலம், ஆரணி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, நெல்லை, விருதுநகர் , பெங்களூரு , பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர் ,கள்ளக்குறிச்சி , சின்ன சேலம் ஆகிய நகரங்களில் இருந்து பெருவாரியான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

    சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா ஆகியோர்
    சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

    காலை 9 மணியளவில் திரு.சைதை துரைசாமி அவர்கள் முன்னிலையில் சேலம் அம்மாபேட்டையில் அமைந்துள்ள பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் ஆகியன முடிந்ததும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன அதன்பின் திரு.துரைசாமி அவர்களின் திருக்கரங்களால் , பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு ,மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது .

    பிற்பகல் 12 மணியளவில் செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் முடிந்ததும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .

    காலை 6 மணிமுதல் மண்டபத்தின் அருகில் உள்ள சாலைகளில் ஒலிபெருக்கி மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கை பாடல்கள், தத்துவப்பாடல்கள் , காதல்பாடல்கள் இடைவிடாது ஒலித்தன .

    பிற்பகல் 3 மணிமுதல் கருத்தரங்கம் நடைபெற்றது . கீழ்கண்ட பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினர்

    திருவாளர்கள் :சங்கரன்,ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர், கள்ளக்குறிச்சி ,
    சேரன், சின்ன சேலம், குமார், சேலம் ,பாலு, பொதட்டூர்பேட்டை
    குமரேசன், சேலம், விஸ்வநாதன், திண்டுக்கல்,
    கலீல் பாட்சா, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்,
    திருவண்ணாமலை, பால்ராஜ் , தூத்துக்குடி, ஆர். லோகநாதன்,
    சென்னை, எம்.எஸ். மணியன் ,சென்னை .ஆகியோர்.

    மாலை 4.30 மணியளவில் தேநீர் இடைவேளை .

    மாலை 5 மணிக்கு திரு.கே.ஆனந்த் வழங்கும் தீபஸ்வரங்கள் ஆர்க்கெஸ்ட்ரா
    குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சி துவங்கியதும்
    திருமண மண்டபத்தில் சுமார் 700 பேர் திரளாக வந்திருந்து இன்னிசையை கேட்டு ரசித்தனர் . நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் வரிசை பின்வருமாறு .

    1. மன்னாதி மன்னன் - அச்சம் என்பது மடமையடா .
    2. பல்லாண்டு வாழ்க - ஒன்றே குலம் என்று பாடுவோம்
    3. ஆயிரத்தில் ஒருவன் - பருவம் எனது பாடல்
    4. தேடி வந்த மாப்பிள்ளை -வெற்றி மீது வெற்றி (நடனம் )
    5. நாளை நமதே -- நாளை நமதே
    6. எங்கள் தங்கம் - தங்க பதக்கத்தின் மேலே (நடனம் )
    7. விவசாயி - நல்ல நல்ல நிலம் பார்த்து
    8. ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்த பறவை
    9. உரிமைக்குரல் - விழியே கதை எழுது (நடனம் )
    10. சக்கரவர்த்தி திருமகள் - டேப் வசன பாடல்
    11. படகோட்டி - பாட்டுக்கு பாட்டெடுத்து
    12. நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே (நடனம்)
    13. இதயக்கனி - இன்பமே உந்தன் பேர் பெண்மையோ (நடனம் )
    14. ஆயிரத்தில் ஒருவன் - ஏன் என்ற கேள்வி
    15. நினைத்ததை முடிப்பவன் - ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (நடனம்)
    16. நீதிக்கு தலை வணங்கு -இந்த பச்சைக்கிளிக்கு
    17. நேற்று இன்று நாளை - பாடும்போது நான் (நடனம் )
    18. இன்று போல் என்றும் வாழ்க -அன்புக்கு நான் அடிமை
    19. எங்க வீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால் (நடனம் )
    20. உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி முத்துச்சரம் (நடனம் )

    இரவு 8 மணி முதல் 8.30 வரை இதுவரை யாரும் காணாத அளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுத்தல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வருகை, விமானம்
    மருத்துவமனையாக காட்சிஅளித்தல் , அமேரிக்கா புறப்படுதல், அமெரிக்க மருத்துவர்கள் ஆலோசனை, பெரியவர் சக்கரபாணி மகள் திருமதி லீலாவதி
    பேட்டி, சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள், சிகிச்சை தள்ளிவைப்பு,
    சிகிச்சை வெற்றி, உடல் நலம் முன்னேற்றம் பற்றிய தகவல்கள், காட்சிகள் ,
    உடல்நலம் குன்றியபோது நடைபெற்ற சர்வமத கூட்டு பிரார்த்தனை காட்சிகள்,
    முன்னாள் அமைச்சர்கள் ஹண்டே, அரங்க நாயகம், பொன்னையன்,ஆர்.எம்.வீரப்பன் நடிகர் எஸ். வி.சேகர் , திரு.ஓமப்பொடி பிரசாத், திரு.சைதை துரைசாமி, திரு.எம்.ஏ. முத்து , திரு.ஜி. பழனி பெரியசாமி , திருமதி லீலாவதி மற்றும் பலரின் பேட்டிகள், தாயகம் வருகை, பரங்கிமலை மைதானத்தில் மக்கள் வெள்ளம் , மேடையில் காட்சி அளித்தல் , அமெரிக்காவில் ராதா சுப்ரமணியம் என்கிற பின்னணி பாடகி புரட்சி தலைவரை புகழ்ந்து பாடும்
    காட்சிகள் ஆகியன தொகுத்து வீடியோ காட்சிகள் பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டன . அதைக்கண்டு எண்ணற்ற பக்தர்கள் கண்கலங்கி சோகம்
    அடைந்தனர் .

    பின்பு மீண்டும் இன்னிசை நிகழ்ச்சி துவங்கியது .

    21. இதயக்கனி - நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
    22. மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும்
    23. படகோட்டி - பாட்டுக்கு பாட்டெடுத்து ( 2ம் முறை )
    24. குடியிருந்த கோயில் - துள்ளுவதோ இளமை (நடனம் )
    25. படகோட்டி - தொட்டால் பூமலரும்
    26. படகோட்டி -கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (நடனம் )
    27. இதயக்கனி - தொட்ட இடமெல்லாம்
    28. படகோட்டி - தரைமேல் பிறக்க வைத்தான் - (நடனம்)
    29. உலகம் சுற்றும் வாலிபன் - நிலவு ஒரு பெண்ணாகி
    30. ஒளி விளக்கு - இறைவா உன் மாளிகையில்

    முக்கிய விருந்தினர்கள் திரு.எம்.ஏ. முத்து, திரு .துரை கருணா ஆகியோருக்கு பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
    கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள்
    முக்கிய நபர்களுக்கு பொன்னாடைகள் அணிவிக்கபட்டன , விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்த திரு.மாணிக்கம், திரு.குமார், சேலம், திரு. பி.எஸ். ராஜு,, சென்னை ஆகியோருக்கும் பொன்னாடைகள் , நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன

    இரவு 10மணியளவில் நிகழ்ச்சி முடிந்ததும், அனைத்து பக்தர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது

  9. #1488
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சந்தரோதயம் படத்தில் வரும்
    புத்தன் ஏசு காந்தி பிறந்தது
    என்ற பாடல் படமாக்க பட்ட போது
    தேவைப்பட்டது ..
    ஒரு ஆட்டுக்குட்டி ...
    25 துணை நடிகர்கள். ..
    10 குழந்தைகள். ....
    50 அண்டாக்களில் நிரப்பப்பட்ட தண்ணீர்.

    தலைவர் ஸ்டுடியோவுக்குள் வந்ததும்
    முதலில் கவனித்தது குழந்தைகளை. ..

    பின்னர் பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு
    முன் குழந்தைகள் நனையும் காட்சி
    என்பதால் தண்ணீரை தொட்டுப்பார்த்தார்
    தண்ணீர் சில்லென்று இருந்ததால்
    அது குழந்தைகளுக்கு ஒத்து வராது
    என்பதால் சுடு தண்ணீரில் படப்பிடிப்பு
    நடத்த உத்தரவிட்டார். ...

    தயாரிப்பாளர் ..தண்ணீரை சுட வைத்து
    படப்பிடிப்பு நடக்க சிறிது நேரம் ஆகும்
    என்றார். ...தலைவர் சரியென்றார்....

    பொன்மனச்செம்மல் ...குழந்தைகள்
    பசியோடு இருக்கக்கூடாது என்று
    உடனே தனது சொந்த பணத்தில்
    பால் மற்றும் சக துணை நடிக நடிகர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு
    செய்தார். ....

    நண்பர்களே நீங்கள் நன்றாக பாடலை
    பார்த்தால் குழந்தைகள் வயிறு
    நிரம்பி இருப்பதை பார்க்கலாம். ....

    பாடல் படப்பிடிப்பு தொடங்கியது...
    ஆட்டுக்குட்டியை தலைவர் தூக்கி
    பாட ஆரம்பிக்க வேண்டும். ...

    ஆடுக்குட்டி மிரண்டு ஓடியது. ...
    மீண்டும் மீண்டும் காட்சி படமாக்கப்பட்டது. ...
    குழந்தைகள் நனைந்து நின்றுக்கொண்டு
    இருந்தனர்.....

    தலைவர் உடனே ஆட்டுக்குட்டியின்
    காலை கட்ட சொன்னார் நனைந்த சின்ன
    குழந்தைகளுக்கு தொப்பி அணிய சொல்லி மீண்டும் படப்பிடிப்பை
    ஆரம்பித்தார். ....

    நண்பர்களே நாம் அனைவரும்
    இந்த பாடலை ஆயிரக்கணக்கான
    முறை பார்த்து கேட்டு ரசித்திருப்போம்
    ஆனால் இந்த பாடல் எடுக்கப்பட்டதற்கு
    பின்னால் இருக்கும் அந்த மனித நேயத்தை என்னவென்று சொல்லுவது....

    நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு
    பாசமிக்க தலைவரை இறைவன்
    நமக்கு அளித்தார் என்று பெருமிதம்
    கொள்வோம்............. Thanks wa.,

  10. #1489
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த
    நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ்
    உரிமையாளர் பரமசிவ முதலியாருடன்
    வாக்கிங் போவது வழக்கம். அப்படி
    செல்லும்
    வழியில் ஒரு பாட்டியம்மாள்
    புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.
    தூரத்திலிருந்து வரும்போதே வாசம்
    மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த
    அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக
    சென்ற
    எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன் "மறுநாள்
    வாங்கி கொள்வதாக" கூறி
    நகர்ந்திருக்கிறார்.
    "ஏன் வேண்டாம் என்று
    சொல்லுகிறீர்கள்
    என்று கேட்ட பாட்டியிடம்,
    "தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும்
    சேர்த்து வாங்க வேண்டும் என்றும்
    அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை" என்றும்
    பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
    ""பரவாயில்லே!
    நாளைக்கு வரும்போது காசு குடு'' என்று புட்டை
    பொட்டலம் கட்டிக் கொடுத்த
    பாட்டியிடம், "நாளைக்கு நான்
    காசு கொண்டு வராம உன்ன
    ஏமாத்திட்டா என்ன பண்ணுவே'' என்று
    கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
    "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது,
    வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத்
    தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல
    சேர்ந்துடும்''
    என்று பாட்டியின் பதில்
    எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
    சொன்னபடி மறுநாள் காசைக்
    கொடுத்துவிட்டார்.
    பாட்டியம்மாவும் சில
    நாட்கள் கழித்து இடம் மாறி
    சென்றுவிட்டார்.
    பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர்
    ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி
    விசாரித்த
    எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச்
    சென்று பொருளுதவியும்
    செய்திருக்கிறார்............ Thanks fb.,

  11. #1490
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "ஒளிவிளக்கு" காவியம் வரும் 22-02-2019 முதல் மதுரை - சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் வெளியாவதாக மதுரை ரசிகர்கள் குழுவினர் இனிப்பான இன்ப தகவல்... ......அகில உலக மறு வெளியீட்டு பழைய கருத்து காவியங்களின் ஏகோபித்த ஒரே வசூல் சக்ரவர்த்தியின் திருமுகத்தை தரிசிக்க கூடுவோம்.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •