Page 44 of 401 FirstFirst ... 3442434445465494144 ... LastLast
Results 431 to 440 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #431
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #432
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,088
    Post Thanks / Like
    Moderator's Message: Kindly refrain from posting personal news and images that are not relevant to this thread.
    You can use the following thread for such purposes:
    http://www.mayyam.com/talk/showthrea...-Corner/page60

    All irrelevant posts will be deleted without further notice.
    Thank you.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #433
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இளைய தலைமுறையே

    நீங்கள் எங்கள் பொன்மனச் செம்மலை
    தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
    இந்த பதிவு
    தலைவர் போல நம்மால் முடியாது
    குறைந்த பட்சம்
    அவர் பாதையில் நாம் செல்வோம்
    நாடும் வீடும் நலமாய் விளங்கும்

    மதுரையை சார்ந்த #முத்தழகு என்ற வயதான தாய் ஒருவர் வாழ வழியின்றி, தலைவரை காண சென்னை வருகிறார்...

    அப்படி வந்த அந்த தாயின் கையில் மதுரை லாலா மிட்டாய் கடை பூந்தி பொட்டலம் வேறு..

    சென்னையில் தலைவரை பற்றி விசாரிக்கும் போது தலைவர் 'புதிய பூமி' பட ஷூட்டிங்கில் இருப்பதை அறிந்து நேரே தலைவர் இருக்கும் இடத்திற்கே
    சென்று விடுகிறார்..

    'நான் உங்கள் வீட்டு பிள்ளை
    இது ஊரரிந்த உண்மை'

    -என்ற பாட்டு சீனுக்காக தலைவர் தயாராகிக்கொண்டு இருந்த போது, தாய் முத்தழகு வந்த தகவல் தலைவரிடம் சொல்லப்படுகிறது.

    தலைவர் உடனே அவரை அழைத்து நலம் விசாரிக்க, அந்த வயதான தாயோ தலைவரை பார்த்த ஆனந்ததில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னைப்பற்றிய விவரத்தை கூறி..

    'மகனே உனக்காக நான் மதுரை பூந்தி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடு ராசா'

    -என்று தனது முந்தானையில்
    முடித்து வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து தலைவருக்கு ஊட்டி விட..

    தனக்கென்ன எதுவுமில்லாத நிலையிலும், எனக்காக அன்போடு ஒரு பூந்தி பொட்டலத்தை வாங்கி வந்த தாயாரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

    அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

    தலைவர் இயக்குனரின் காதில் ஏதோ
    ரகசியமாக ஒன்றை கூற..

    அந்த தாய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு
    வரவழைக்கப்பட்டார்....

    'எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே
    என்னை ஆளும்..'

    -என்ற பாடல் வரிகள் வரும் இடத்தில், தலைவர் லாவகமாக திரும்பி சரியான டைமிங்கில் அந்த தாய் முத்தழகுவை
    கட்டி அணைக்கும் காட்சி அப்போது படமாக்கப்பட்டது.

    அதற்கு பிறகு அந்த தாயிற்கு
    தேவையான அனைத்து வாழ்வாதார
    உதவிகளையும் தலைவர் செய்து கொடுத்தார்..

    அந்த அம்மையார் தனது கடைசி
    மூச்சுள்ளவரை பசியில்லா உணவும்
    இருக்க ஒரு வீடும் தலைவர் ஏற்பாடு
    செய்துகொடுத்தார்....

    தனது அன்பை எப்படி விளம்பரம் இல்லாமல் தலைவர் செய்துள்ளார்
    பாருங்கள் அருமை நண்பர்களே.....

    அந்த தாய் முத்தழகை கட்டியணைக்கும் அந்த அருமையான கட்சிதான் இந்த வீடியோ..

    நன்றி:திரு.சிவகுமார்
    ...
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி... Thanks Friends...

  5. #434
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு
    Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
    Ads by Google
    தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
    COMMENT (13) • PRINT • T+
    3

    ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி (கழுத்தில் துண்டு அணிந்திருப்பவர்), ஈ.வி.கே.சம்பத். - ‘பாகவதர் கிராப்’பில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றம்.
    எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.
    ‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.
    கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.
    விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.
    அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.
    திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.
    காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.
    அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
    விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.
    விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.
    மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
    திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
    1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.
    தொடரும்..

    எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்
    Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
    Ads by Google
    தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
    COMMENT (6) • PRINT • T+
    3

    தனக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியாருடன் எம்.ஜி.ஆர்.

    சென்னை வந்த போப்பாண்டவரை முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொடக்க விழாவில் தெரசாவுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகே பரூக் அப்துல்லா.
    M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
    தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
    வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
    அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
    தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
    1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
    அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
    அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
    1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
    பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
    இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
    மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
    வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
    அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
    தொடரும்..
    எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்
    Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
    Ads by Google
    தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
    COMMENT (9) • PRINT • T+
    3

    காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

    காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
    M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
    காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
    1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
    ‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
    ‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
    அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
    ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
    வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
    ‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
    இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.

    எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
    எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.
    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்..... Thanks Friends...

  6. #435
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் -30/11/18



  7. #436
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -05/12/18
    Last edited by puratchi nadigar mgr; 29th November 2018 at 03:01 AM.

  8. #437
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  9. #438
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #439
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    கோவை ராயலில்

  11. #440
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக வசூல் சக்ரவர்த்தி, மறு வெளியீடு காவியங்களின் நிதர்சன நாயகர் மக்கள் திலகம் வழங்கும் "ராமன் தேடிய சீதை" சென்னை- ஸ்ரீனிவாசா dts தினசரி 3 காட்சிகள் வெளியாகிறது (30-11-2018), மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் " தர்மம் தலை காக்கும்" திரையிட படுகிறது... இதுவன்றோ சாதனையின் சிகரம்...👍 👌

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •