Page 95 of 401 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #941
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத் தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. லோகநாதன் அவர்களின் பதிவுகள் நெஞ்சத்தை நிறைவடைய செய்கின்றன. தலைவரின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வலம் வரும் பதிவுகளும் மற்ற நினைவு பிறந்த நாள் பதிவுகளும் அவரது கடின உழைப்பைக் காட்டுகின்றன. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


    உலகத் தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 11th January 2019 at 11:19 PM.

  4. #943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    With high esteem he kept one small booklet as the greatest asset in his underground room…!
    எம்.ஜி.ஆர் ராமாவரம் வீட்டைக் கட்டும் போது ஒரு நிலவறை வைக்கச் சொன்னார். அதன்படி வைத்தார்கள். கருப்புப் பணத்தை பதுக்க அவர் அப்படிச் செய்கிறார் என அவரை எப்போதும் தூற்றுபவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
    ஆனால் அந்த சுரங்க அறையில் ஒரு பெரும் நூலகத்தை அமைத்தார். பல்லாயிரக்கணக்கான நூல்கள்.ஏராளமான தமிழ்க் காவியங்கள்.
    ஒருமுறை எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, "ஏன் இந்தூல்களை கீழறையில் வைத்திருக்கிறீர்கள் ?" என்று கேட்டபோது, "அறிவு தண்ணீரைப் போன்றது.அது கீழ் நோக்கியே தேங்கும். ஆணவம் நெருப்பைப் போன்றது.அது மேல் நோக்கியே எரியும்" என விளக்கம் கொடுத்தாராம் எம்.ஜி.ஆர்.
    வள்ளல் சீதக்காதி பேரில், அவரது உயிர் நண்பர் படிக்காசுப் புலவர் ஒரு நொண்டி நாடகம் என்ற பிள்ளைத் தமிழ் காவியம் எழுதினாராம். அது அன்றைய காலகட்டத்தில் ராணி மங்கம்மா, சீதக்காதி இல்லத்திற்கு வந்த போது அரங்கேற்றம் செய்யப்பட்டதாம். 'இந்த நொண்டி நாடகத்துக்குப் பரிசாக நானாக எதையும் கொடுக்க முடியாது. என் பொக்கிஷத்தைத் திறந்து விடுகிறேன். வேண்டியதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அழைத்துப் போய் கோடிகோடியாய் நிறைந்துள்ள முத்து,வைர, வைடூரியங்களைக் காட்டினாராம் சீதக்காதி.
    ஆனால் படிக்காசுப் புலவர் அங்கு சற்று உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு வெள்ளி மூக்குத்தியைக் காட்டி, 'இது என்ன?' என்று கேட்க, 'இதுதான் என்னுடைய ஒரே பெரும் சொத்து. என் தாய் அணிந்திருந்த ஒரே நகை. அதைமட்டும் யாருக்கும் தரமாட்டேன்' என்றாராம் சீதக்காதி.
    அதைப் போலவே, எம்.ஜி.ஆரின் அந்த நிலவறை நூலகத்தில் தன் அன்னையின் படத்தின் முன் ஒரு சிறு கண்ணாடி பேழையில் ஒரு சிறு பழைய புத்தகம் இருந்தது. அது மலையாளத்தில் இருந்தது. குருவாயூரப்பன் சுலோகம். "என் அன்னை தினமும் அதை பாராயணம் செய்து வருவார். அது ஒன்றுதான் என் பெரும் சொத்து " எனறு கூறினாராம் எம்.ஜி.ஆர்..... Thanks Friends.........

  5. #944
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் படங்கள் - ஒரு கண்ணோட்டம் . என்னுடைய பார்வையில் .............

    மக்கள் திலகம் எம்ஜியார் கதாநாயகனாக நடித்த படங்கள் -115

    மக்கள் திலகத்தின் சிறந்த படம் - நாடோடிமன்னன் -1958

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு படம் - பெற்றால்தான் பிள்ளையா -1966

    மக்கள் திலகத்தின் சிறந்த பொழுது போக்கு படம் - அன்பே வா -1966

    மக்கள் திலகத்தின் சிறந்த நகைச்சுவை படம் - சபாஷ் மாப்பிளே -1961

    மக்கள் திலகத்தின் சிறந்த சரித்திரப்படம் - மர்மயோகி -1951

    மக்கள் திலகத்தின் சிறந்த சமூக படம் - திருடாதே -1961

    மக்கள் திலகத்தின் சிறந்த இரட்டைவேட சிறப்பு படம் - எங்கவீட்டு பிள்ளை - 1965

    மக்கள் திலகத்தின் சிறந்த துப்பறியும் படம் - ரகசிய போலீஸ் 115. -1968

    மக்கள் திலகத்தின் சிறந்த தேசபக்தி படம் - நம்நாடு -1969

    மக்கள் திலகத்தின் சிறந்த இஸ்லாமிய காப்பியம் - அலிபாபாவும் 40 திருடர்களும்

    மக்கள் திலகத்தின் சிறந்த ராஜ -ராணி படம் - சக்ரவர்த்தி திருமகள் -1957

    மக்கள் திலகத்தின் சிறந்த பிரமாண்டமான படம் - உலகம் சுற்றும் வாலிபன் -1973

    மக்கள் திலகத்தின் சிறந்த காதல் காவியம் - பணக்கார குடும்பம் -1964

    மக்கள் திலகத்தின் சிறந்த கௌ பாய் படம் - வேட்டைக்காரன் -1964

    மக்கள் திலகத்தின் சிறந்த கற்பனை காவியம் - அடிமைப்பெண் -1969

    மக்கள் திலகத்தின் சிறந்த நாவல் காவியம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978

    மக்கள் திலகத்தின் சிறந்த நடிகருக்கான விருது தந்த படம் - ரிக்ஷாக்காரன் -1971

    மக்கள் திலகத்தின் சிறந்த ஜனாதிபதி விருது தந்த படம் - மலைக்கள்ளன் -1954

    மக்கள் திலகத்தின் சிறந்த மேலைநாட்டு படம் போல் வந்த படம் - ஆயிரத்தில் ஒருவன் -1965

    மக்கள் திலகத்தின் சிறந்த காதல் கீதங்கள் - ராமன் தேடிய சீதை - 1972

    மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகள் - நீரும் நெருப்பும் -1971

    மக்கள் திலகத்தின் சிறந்த குழந்தைகள் படம் - நல்ல நேரம் -1972

    மக்கள் திலகத்தின் சிறந்த கருப்பு வெள்ளை படம் - அரசகட்டளை -1967

    மக்கள் திலகத்தின் சிறந்த வண்ணப்படம் - ஒளிவிளக்கு -1968

    மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் ஒரு புத்துணர்வு

    மக்கள் திலகத்தின் பாடல்கள் - நடிப்பு பார்க்கும் போது கிடைக்கும் ஆனந்தம்

    உலகில் எந்த ஒரு நடிகராலும் , வேற்று மொழி யாலும் தர முடியாது ...... Thanks...

  6. #945
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அமேரிக்கா அரசின் பல்கலை கழகங்களின் அதிகார பூர்வ அழைப்பின் பெயரில் அமேரிக்கா சென்று எம் ஜி ஆர் சுற்று பயணம் முடித்து வாஷிங்டன் விமானநிலையம் வருகிறார் இந்தியா திரும்ப பிரமூகர்கள் பின் தொடர விமான நிலைத்தில் நுழைகிறார் எம் ஜி ஆர் திடீர் என எம் ஜி ஆர் கண்கள் ஓரத்தில் நின்று ஒரு குழந்தையோடு ஒரு பெண்மணி அழுது கொண்டிருப்பதை பார்க்கிறார் அமேரிக்காவில் எவரும் அடுத்தவர்களை அதிகம் கண்டு கொள்வதில்லை எம் ஜி ஆர் நேராக அவரிடம் சென்று ஆங்கிலத்தில் விசாரிக்கிறார் அதற்க்கு அவர் நான் நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன் ராணுவத்தில் பணிபுரியும் கணவரை காண வந்த இடத்தில் கைபை திருடபட்டது அதில் தான் பாஸ்போட்பணம் போன் எல்லாம் இருக்கிறது இனி என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுவதாக கூறி அழ உடனே எம் ஜி ஆர் தன்னுடன் வந்த பிமூகர்களில் தன் நெருங்கிய நண்பரிடம் நீங்கள் இவருடன் இருந்துஇவருடைய பிர்சசனையை தீர்த்து வைங்கள் என்று கூறி அந்த பெண்மணிக்கு அறுதல் கூறி எல்லாம் இவர் சரி செய்து விடுவார் என கூறி விடைபெறுகிறார்
    இதை அருகில் இருந்து பார்த்த என் மனதில் பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ என்ற பாடல் ஒலித்தது
    வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்றார் வள்ளலார்

    வாடிய மனிதர்களை கண்ட போது எல்லாம் அவர் வாட்டம் தீர்த்த வள்ளல் எம் ஜி ஆர் ஒரு தெய்வபிறவியே

    ஆதாரம்
    டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து
    வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks....

  7. #946
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தவாரம் மதுரை அரவிந்த். டீ.டீ.எஸ் புரட்சித்தலைவரின் தர்மம்தலைகாக்கும் சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் ரிக்சாக்காரன் கோவை.. நாஸ். டி.டி.எஸ் நினைத்ததைமுடிப்பவன் எத்தனையாண்டுகள் ஆணாலும் இது எந்தநாளிலும் எந்தநடிகருக்கும் அமையவேஅமையாது மதுரை.எஸ் குமார்..... Thanks...

  8. #947
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -11/01/19

  9. #948
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் - திரைகதம்பம் -11/01/19

  10. #949
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #950
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி
    -------------------------

    மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் முதுபெரும் அதி தீவிர பக்தராகிய திரு.தம்பாச்சாரி என்கிற தாமோதரன் (போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ) அவர்களின் அன்பு தாயார் திருமதி பத்மாவதி அம்மாள்-94 வயது ( திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் மனைவி ) நேற்று காலை (11/01/19) சென்னை ராயபுரத்தில் காலமானார் என்கிற துயர செய்தியை திரு. தம்பாச்சாரி இன்று தகவல் அளித்தார். சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாகவும் , தனது தங்கை வீட்டில் (ராயபுரம் ) இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாலும் உடனடியாக நண்பர்களுக்கு தெரியப்படுத்த முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார் .

    அன்னாரது பூத உடல் நெருங்கிய உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின்,
    காசிமேட்டில் உள்ள இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

    தனது தாயை இழந்து தவிக்கும் திரு.தம்பாச்சாரி ,மற்றும் குடும்பத்தினருக்கும்
    என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

    திரு.தம்பாச்சாரி அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •