Page 45 of 401 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #441
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி முதல் (30/11/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #442
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து முகநூல் நண்பர்களுக்கும்,
    தாய்மார்களுக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும்,
    அனைவருக்கும் என் அன்பு நிறைந்த காலை வணக்கம்.

    உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் தலைவர்......

    உழைப்பவனே உயர்ந்தவன் என்ற தத்துவத்தை முழுமையாக தன் உழைப்பின் மூலமாக நிகழ்த்தி காட்டிய மாமனிதர் புரட்சி தலைவரே!
    தான் நடிக்கின்ற எந்த கதாபாத்திரத்திலும் (ஏற்றுக்கொள்ளும் வேடத்திலும்) உழைக்கும் மக்களின் மகத்துவத்தையும் எடுத்துரைக்க தவறியதில்லை.
    உழைக்கும் வர்த்தகத்தின் உயர்ந்த நோக்கத்தை திரைப்பட துறையில் புரட்சி மன்னர் சொன்னதை
    போல வேறு எந்த உலக நடிகரும் விளங்கியது கிடையாது.....

    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
    புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
    நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே.... Thanks Friends...

  4. #443
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Thanks to MR. V p sathiya

  5. #444
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #445
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஈரோட்டில் ராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கருணாநிதி.

    இந்த சம்பவம் நடந்து ஒரிரு வாரங்களில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

    அதன்பின் நடத்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்..

    அவர் பெயர் M.G.#ராமச்சந்திரன் என்ற MGR!

    எந்த ராமனை இழிவுபடுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்டவரிடம் தோற்றார் கருணாநிதி.

    எம்.ஜி.ஆர். தொடரந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்..

    அதாவது கருணாநிதியை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ.ராமச்சந்திர பிரபு..

    இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

    கர்மாவை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்...-rangan srinivasan... Thanks Friends...

  7. #446
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (30/11/18) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த , தேவரின் "வேட்டைக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  8. #447
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து 30/11/1974ல் வெளியான வெற்றிப்படம் "சிரித்து வாழ வேண்டும் " 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .முஸ்லீம் மற்றும் இன்ஸ்பெக்டர் வேடங்களில் கன கச்சிதமாக நடித்து கைதட்டல் பெற்றார் .இந்தியில் வெளியான ஐஞ்சீர் திரைப்படத்தின் தழுவல் .

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் டைட்டில் பின்னணி இசை மிக பிரமாதம் ,
    அப்துல் ரஹ்மானாக அறிமுக பாடல் அமர்க்களம் . சூதாட்ட விடுதியில் அப்துல் ரஹ்மானும், இன்ஸ்பெக்டரும் மோதிக்கொள்ளும் காட்சி புதுமையாகவும், ஆக்ரோஷமாகவும் இருந்தது .நீ என்னை விட்டு போகாதே பாடலில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மிரள வைத்தார் . கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லதா ஜோடி 8 விதமான வண்ண உடைகளில்
    பக்தர்களை பரவசம் அடைய செய்து கைதட்டல்களை வாங்கியது நினைவு கூறத்தக்கது மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். - ஜஸ்டின் குளியலறையில் சண்டை காட்சி முற்றிலும் புதுமை .விறுவிறுப்பு, சுறுசுறுப்பு நிறைந்தது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -வி.எஸ். ராகவன் கல்லறையில் நேரில் உரையாடும் காட்சிகள் உணர்ச்சிகரமானது . பொன்மனச்செம்மலை புண்பட செய்தது யாரோ பாடல் இனிமை.

    சிரித்து வாழ வேண்டும் என்கிற டைட்டில் முற்போக்கு சிந்தனையுடன் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளிக்கக் கூடியது .காவல் நிலையத்தில் அப்துல் ரஹ்மானுக்கு இருக்கையில் அமரவிடாமல் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் ,மற்றும் தேங்காய் சீனிவாசனுடன் உரையாடும் நகைச்சுவை மிகுந்த காட்சிகள் ரசிக்கத்தக்கவை . தனது வீட்டில் தொழுகை செய்யும்போது அசல் முஸ்லீம் போலவே காட்சியில் நடித்து கைதட்டல்கள் வாங்கினார் மக்கள் திலகம் .இன்ஸ்பெக்டர் எம்.ஜி,ஆர்.லதாவுடன் உரையாடும் காதல் காட்சிகளை கண்டு ரசித்து கிண்டல் செய்யும் காட்சியில் அப்துல் ரஹ்மான் நடிப்பில் அபாரம் .

    ஆர். கே.சண்முகம் வசனம் பல காட்சிகளில் பளிச்சிட்டது . நம்பியார் ஒரு காட்சியில் தனது காதலியிடம் , ஆண்களில் பத்தினியும் உண்டு. இந்த இன்ஸ்பெக்டர் ராமு (எம்.ஜி.ஆர். ) அந்த ரகம். ஒரு இடத்தில இரு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது. விவாதம்தான் நடக்கும் . கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும் . போன்றவை .

    மனோகர் லாரி விபத்தில் கொன்ற குழந்தைகளை மருத்துவமனையில் கிடத்தி இருக்கும்போது, குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி லதாவை கேட்டுக் கொள்ளும்படி உரையாடும் காட்சி உணர்ச்சிமயம் . சோக நடிப்பிலும் மக்கள் திலகம் நன்கு சோபித்திருப்பார் . எதிரிகள் இன்ஸ்பெக்டர் ராமுவை கொல்ல முற்படும்போது கனா கண்டு, விரைந்து ஆட்டோவில் அப்துல் ரஹ்மான் சென்று காப்பாற்றும் காட்சிகள் அற்புதமானவை .

    கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 25 வயது இளைஞன் போல
    அந்த கால பெல்ஸ் அணிந்து அறிமுகம் ஆகிய காட்சியில் அரங்கமே அதிர்ந்தது .
    வித்தியாசமான பாடல் , மற்றும் சண்டை காட்சியில் எடிட்டிங் , விறுவிறுப்பு
    குன்றாமல் இயக்குனர் எஸ்.எஸ். பாலன் இயக்கியிருந்தார் .

    உரிமைக்குரல் வெளியாகி வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சிரித்து வாழ வேண்டும் 23 நாட்கள் இடைவெளியில் வெளியாகியது இதனால் இரண்டு படங்களுமே சற்று பாதிப்படைந்தன . சற்று இடைவெளியில் வெளியாகியிருந்தால் உரிமைக்குரல்
    சுமார் 20 அரங்குகளில் 100 நாட்களும் (12 அரங்குகளில் ஓடியது . மதுரை , நெல்லையில் வெள்ளிவிழா ). 100 நாட்கள் ஓடியிருக்கும். சிரித்து வாழ வேண்டும் மதுரையில் நியூ சினிமாவில் 104 நாட்கள் ஓடியது . சென்னை பிளாசா, ஸ்ரீகிருஷ்ணா வில் 83` நாட்கள் , மகாலட்சுமி, கிருஷ்ணவேணியில் 62 நாட்கள் ஓடியது உரிமைக்குரல் பாதிப்பினால் 100 நாட்கள் அதிக அரங்குகளில் இல்லை என்றாலும் வசூலில் குறைவில்லை .அதிக அரங்குகளில் 50 நாட்களுக்குமேல் ஓடியது குறிப்பிடத்தக்கது .
    .

  9. #448
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #449
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #450
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •