Page 7 of 401 FirstFirst ... 567891757107 ... LastLast
Results 61 to 70 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #61
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #63
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #64
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #65
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #66
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #67
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகநடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் நடிப்புலகிலிருந்து விலகிய வரையிலும் அவரால் எந்தபடமும் வெளிவராமல் நின்று போனதில்லை. தான் கதாநாயகனாக நடிக்கின்ற படங்கள் எந்தக் காரணத்திற்காக வெளிவராமல் நின்றுப் போனாலும் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று திரையுலகில் பேசத் தொடங்கி விடுவார்கள் என்பதால் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுவார்.

    ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இயக்குநரால் படத்தை சரியாக இயக்க முடியுமா? தயாரிப்பாளரால் படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா? போன்ற விஷயங்களை விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகுதான் படத்தை ஏற்றுக் கொள்வார். சினிமாவில் நுழைந்து நடித்து வளர்ந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால்போதும் என்று ஆர்வக் கோளாறினால் ஏற்றுக்கொண்ட சில படங்கள் பூஜையோடும், சில நாட்கள் நடந்த படப்பிடிப்போடும் நின்று போயிருக்கின்றன.

    அவர் முதன்முறையாக நடித்த 'சாயா' படமும் எடுத்துமுடித்து வெளிவராமல் போனது. 'அதிரூப அமராவதி' என்ற படமும் நடித்து முடித்து கொடுத்தும் வெளிவராமல் நின்றுபோனது. 'மாடிவீட்டு ஏழை' நடிகர் சந்திரபாபுவின் தவறான நடவடிக்கைகளால் நின்றுபோனது. ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த 1970ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவன்' படம் நீண்ட மாதங்கள் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டே போனது. பி.ஏ. தாமஸ் தனது தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து புதிய இயக்குநர் சிங்கமுத்துவுடன் இணைந்து இயக்கினார். இதில் எம்.ஜி.ஆர்.வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக 'கண்ணன் என் காதலன்' (1968) படத்திற்கு பிறகு வாணிஸ்ரீ இணைந்து நடித்தார்.

    இவர்களுடன் எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், ஒ.ஏ.கே.தேவர், நாகேஷ், ஜோதிலட்சுமி, மனோரமா, சி.எஸ்.பாண்டியன், திருச்சி சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். வசனம் ஆர்.கே.சண்முகம், ஒளிப்பதிவு பி.எல்.நாகப்பா, சண்டைப்பயிற்சி மாடக்குளம் அழகிரிசாமி. கருப்பு வெள்ளை படத்திலிருந்து கலருக்கு மாறிவிட்ட காலம் அது.


    எம்.ஜி.ஆரின் 'ரகசிய போலிஸ் 115' (1968), 'குடியிருந்த கோயில்' (1968), 100வது படமான 'ஒளிவிளக்கு' (1968), 'அடிமைப் பெண்' (1969), 'நம்நாடு' (1969) போன்ற படங்கள் கலரில் எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகி பெரும் வெற்றி கண்டன. 'தலைவன்' (1970) படம் மட்டும் எடுத்து முடிக்கவும் முடியாமல் வெளியிடவும் முடியாமல் கருப்பு வெள்ளையில் சிக்கிக் கொண்டது. அதன்பிறகு எடுக்கப்பட்ட படங்களான 'என் அண்ணன்' (1970), 'மாட்டுக்கார வேலன்' (1970), 'எங்கள் தங்கம்' (1970), 'தேடி வந்த மாப்பிள்ளை' (1970) ஆகிய படங்கள் கலரில் வெளி வந்தன.

    'ஒரு தாய் மக்கள்' (1971), 'அன்னமிட்ட கை' (1972) போன்ற படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டதால் 'தலைவன்' படத்தையும் கருப்பு வெள்ளையிலேயே எடுத்தனர். ஆனால் பி.ஏ.தாமஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் படத்தை முடித்து வெளியிட முடியாமல் போனது. இந்த தாமதத்துக்கு எம்.ஜி.ஆர் எந்த வகையிலும் காரணமல்ல, தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸும் காரணமல்ல, பைனான்ஸ் பிரச்சனையும் இல்லை. ஆனால் 'தலைவன்' படத்தை எடுத்து முடிக்க முடியாமலும் வெளிட முடியாமலும் திணறிக் கொண்டிருந்தார்கள்.

    எம்.ஜி.ஆர். சரியாகக் கால்ஷீட் கொடுக்காததால் படத்தை முடிக்க முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு, தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பைனான்ஸ் கேட்டு அலைந்துக் கொண்டிருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இதையறிந்த எம்.ஜி.ஆர். தயாரிப்பாளரை நேரில் அழைத்துப் பேசினார். "என்ன பிரச்சனை? ஏன் படப்பிடிப்புகளை முடித்து படத்தை வெளியிட முயற்சி செய்ய மாட்டேங்கறீங்க? ஏதாவது பைனான்ஸ் பிராப்ளமா? நான் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்," என்று கேட்டார்.

    "பைனான்ஸ் பிராப்ளம் ஒன்றுமில்லை. என்ன முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் ஏன்னு புரியவில்லை," என்று தயாரிப்பாளர் தாமஸ் தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் 'தலைவன்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து வெளியிடுவதற்கான பொறுப்பைதானே ஏற்றுக் கொண்டார். தயாரிப்பாளரும் படப்பிடிப்பிற்கான மொத்த செலவுக்கான பணத்தை எம்.ஜி.ஆரிடமே ஒப்படைத்தார்.

    எம்.ஜி.ஆரும் கவனமாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் ஏதாவதொரு தடை வந்துக் கொணடிருந்தது. 'என்ன இது... ஒரே மர்மமாக உள்ளதே' என யோசிக்கத் தொடங்கினார் எம்ஜிஆர். படத்தின் வசனகர்த்தா ஆர்கே சண்முகத்தை வரவழைத்து படத்தின் மொத்த வசன காட்சிகளையும் படித்துக் காட்டச் சொன்னார். ஆர்.கே.சண்முகமும் படத்தின் முழு வசனத்தையம் படித்துக் காட்டினார். அதில் தடை ஏற்படுகின்ற வகையில் எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. அதன்பிறகு படத்தின் பாடலாசிரியர் கவிஞர் வாலியை வரவழைத்து படத்தின் தாமதம் குறித்துப் பேசினார். அதற்கு கவிஞர் வாலி படத்தின் தயாரிப்பாளர் பெயரும், நிறுவனத்தின் பெயரும்தான் அதற்கு காரணம் என்று கூறிவிட்டார். தயாரிப்பாளர் தாமஸ், தாமஸ் பிக்சர்ஸ். படம் 'தாமஸ'மாவதற்கு இதுதான் காரணம் என்றார்.

    எம்.ஜி.ஆர்.விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "ஓ... இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்று சொன்னார். "இந்தப் படத்திற்காக நீங்கள் எழுதிய பாடல் வரிகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்," என்றார் எம்.ஜி.ஆர். வாலி தன் பாடல் வரிகளை சொல்லத் தொடங்கினார். 'அறிவுக்கு வேலைக் கொடு...', 'பாய் விரித்தது பருவம்...', 'ஓடையிலே ஒரு தாமரைப்பூ...', 'நீராழி மண்டபத்தில்...' என்று பாடல் வாரிகளைச் சொன்னார்.


    குறுக்கிட்ட எம்.ஜி.ஆர், "நீராழி மண்டபத்தில்...' பாடல் வரிகளை விளக்கமாகச் சொல்லச் சொன்னார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள், நாடாளும் மன்னவனின் இதயத்தின் சிறையில் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' என்று வாலி பாடல் வரிகளைச் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "போதும் போதும் நிறுத்துங்க... இந்தப் பாடலில் உள்ள 'தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள் தனிமை தாளாமல் தவித்திருந்தாள்...' இந்த வரிகளில் உள்ள அறச் சொல்தான் படத்தை இந்தப் பாடுபடுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே என்படங்களில் வசனத்திலோ, பாடல்களிலோ இது போன்ற அறச்சொல் வராமல் பார்த்து கொள்வேன், என் படம் பார்க்கின்றவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் தான் வசனமும் இருக்கும் பாடல்களும் இருக்கும்.

    பொதுவாக யாரேடும் பேசும்போதோ, பாடும்போதோ, பாடல் எழுதும்போதோ, இதுபோன்ற அறச்சொல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலநேரங்களில் நமது வாழ்க்கையையே கூடபாதித்துவிடும்... ஏனென்றால் தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்," என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்.சொன்னது உண்மை. தமிழின் வல்லமை, மகத்துவம் அப்படி.

    பல திரையுலகக் கலைஞர்களின் வாழ்க்கையையே இதுபோன்ற அறச்சொற்கள் பாதித்திருக்கின்றன என்பது உண்மைதான். இப்படித்தான் எம்.கே.தியாகராஜபாகவதர் தான் நடித்த ஒரு படத்தில் 'பாடமாட்டேன் இனி பாடமாட்டேன் அப்பனை (சிவன்) பாடிய வாயால் இந்த சுப்பனை (முருகன்) பாடமாட்டேன் என்று பாடினார். இதேபோன்று நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி அப்படித்தான் ஒரு படத்தில் 'பாட மாட்டேன் இனி பாட மாட்டேன் வாய்திறந்து இனி பாடமாட்டேன்' என்று ஒரு படத்தில் பாடி நடித்தார். அதன்பிற்கு அவர் எந்தப்படத்திலும் பாடி நடிக்கவில்லை. அத்தோடு இந்த மாபெரும் கலைஞர்களின் கலையுலகப் பயணமும் முடிந்தது. எம்ஜிஆர் சொன்னது போலவே, அந்த அறச் சொற்கள் மாற்றப்பட்ட பிறகு, 'தலைவன்' பட வேலைகள் பரபரவென தடையின்றி முடிவடைந்தன. 'தலைவன்' படத்தை எம்.ஜி.ஆரே வெளியிட்டார்.

    Courtesy - net

  9. #68
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

    * எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.

    * எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

    * எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

    * எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த '.குடும்பத்தலைவன்

    * எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

    * எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

    எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

    எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

    எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

    எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

    எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

    எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

    எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

    எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

    எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

    எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

    எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

    எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).

    எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 NAL விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

    எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

    எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

    அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

    எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

    எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

    எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

    எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

    எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

    எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

    எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

    எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

    எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.

    'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

    Ccourtesy net
    Last edited by esvee; 10th November 2018 at 10:49 AM.

  10. #69
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் 'மனவலிமை''

    1969ல் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திமுக கட்சியின் பொருளாளராகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படமான ''நம்நாடு '' அரசியல் படமாக தீபாவளிக்கு வெளிவந்தது .
    படம் முழுவதும் அரசியல் . நாட்டில் நடந்த அரசியல் கொலைகள் , கொள்ளைகள் லஞ்சம் அநீதியான தலைவர்களின் போக்கு என்று தைரியமாக எக்காலத்திற்கும் பொருத்தமான படமாக மக்களுக்கு தந்தார் .
    எம்ஜிஆரின் இந்த தைரியம் எந்த ஒரு நடிகருக்கும் என்றுமே வந்தது இல்லை . இனி வரப்போவதும் இல்லை .

    மக்களின் அன்றாட பிரச்சனைகளை முன் வைத்து எடுத்த படம் நம்நாடு
    அனல் பறக்கும் வசனங்கள் படத்திற்கு பெருமை சேர்த்தது .
    அருமையான பாடல்கள் . எம்ஜிஆரின் யதார்த்தமான நடிப்பு பிரமாதம்
    நம்நாடு - மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வசூலில் முதலிடம் பெற்றது

  11. #70
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழியில் விஜய் செல்கிறார் என ரசிகர்கள் சொல்கின்றனர். விஜய் போல் வேறு எந்த நடிகரும் சமீப காலங்களில் சமூகப் பிரச்சனையை பேசியது இல்லை என்றும், எம்ஜிஆரைப் போலவே திரைப்படத்தில் சமூக பிரச்சனையை கையாளுவதாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.
    Sarkaar comments

Page 7 of 401 FirstFirst ... 567891757107 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •