Page 255 of 255 FirstFirst ... 155205245253254255
Results 2,541 to 2,549 of 2549

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

 1. #2541
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

  எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது...... Thanks wa.,

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2542
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  கோவை ராயலில் இன்று முதல் (22/3/2019) திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கிய
  ",பெரிய இடத்து பெண்"
  தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது... Thanks wa.,

 4. #2543
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  பங்குனி உத்திரம் முன்னிட்டு 21/3/2019 முதல் நாகர்கோவில் தங்கம் முக்கூடல் சண்முகாவில் (நெல்லை மாவட்டம் )
  "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..... Thanks wa.,

 5. #2544
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  🤝🏽🤔👍🏼🎺🍬சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும்,மக்கள்திலகத்தின் மகத்துவத்தை பார்போற்றுபவருமான மாண்புமிகு "சைதை துரைசாமி" ஐயா அவர்கள், கோவை மாவட்ட 'வானவில் எம்ஜிஆர் 102 விழா'வில் பங்கேற்பதோடு, "மக்கள்திலகம்-புகைப்பட கண்காட்சி"யினை திறந்து வைப்பார்களென மகிழ்வுடன் கூறி...அனைவரையும் வருக,வருகவென வரவேற்கிறோம்!👏👏... Thanks wa.,

 6. #2545
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  வணக்கம்,
  கடந்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய பேசும் தலைமை நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒளிபரப்ப முடியவில்லை.. எனவே இந்த வாரம் ஒளிபரப்பாகிறது.

  மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
  திரு. சைதை ச துரைசாமி
  அவர்களின் சிறப்பு நேர்காணல்
  நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
  வரும் ஞாயிறு
  (24/03/2019) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
  அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
  ஒளிபரப்பாகும்
  நன்றி.
  www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும்......... Thanks wa.,

 7. #2546
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  இந்திய திரையுலகில் என்றும் சக்கரவர்த்தி மக்கள் திலகமே! தலைவரின் பட வரிசையில் "ஆ" நெடில் வரிசையில்.... சூப்பர் ஹுட் திரைப்படங்கள். வண்ணத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் 1965 ல் வெளிவந்து முதல்வெளியீட்டில் மகத்தான வெற்றி கண்டது. அடுத்தடுத்து பல வெளியீடுகளில் வசூல் பல நாடு நகர கிரமப் புறங்களிலும் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி மறு வெளியீட்டில் புதிய நவீன முறையில் (.டிஜிட்டலில்) 2014.ல் உலகம் முழுதும் திரையீட்டு சென்னையில் ஆல்பட் திரையரங்கில் 190 நாளும் சத்யம் காம்பளக்ஸில் 161 நாட்களும் ஒடியது. மற்றொன்று என்ன வென்றால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று (.2019.) வரை திரையரங்கில் ஓடி வருகிறது என்பதும் சாதனையே! . இப்படத்தின் வெளியீடுகள் கணக்கில் அடங்காதது. மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரித்து பொருள் இழந்தவர்களுக்கு கருணை உள்ளமாக அவர்கள் கரை சேர கை கொடுத்து ஆயிரம் நடிகர் திரையில் வந்து மின்னி மறைந்தாலும் நம் ஆயிரத்தில் ஓருவராக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வாழ் வழிப்பவர் திரை வானில் மக்கள் திலகமே!. ஆ - வரிசையில் ஆசைமுகம் திரைப்படம் 1965 ல் வெளிவந்து 50 நாளில் பெற்ற வசூல் மகத்தானது. இன்றும் தலைவரின் இயற்கை முகம் வெள்ளித்திரையில் விநியோகஸ்தர்களின் ஆசைமுகமாக அன்பு முகமாக வெற்றி முகமாக வலம் வருவது நாம் யாவரும் என்றும் அறிந்ததே! பாடல்களும் சூப்பர் ஹீட் காலத்தால் அழியாத ஆயிரத்தில் ஒருவன், ஆசைமுகம் இரண்டு காவிங்களும் 1965 ல் வெளிவந்து கலரிலும், கறுப்பு வெள்ளையிலும் சாதனையாகும். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா 105 நாள். மறு வெளியீடு 2014 ஆல்பட் 190 நாள், சத்யம் (.ஸ்டுடியோ அரங்கு) 161 நாள் ஒடியது. ஆசைசேமுகம் சென்னையில் 4 அரங்கில் வெளிவந்தது.
  பாரகன் பிராட்வே நூர்ஜகான் சரஸ்வதி அரங்கில் 50.நாளை கடந்து ஒடியது. மேலும் வெற்றிகள் தொடரும்.... நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,Sharings

 8. #2547
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  வெள்ளித்திரையின் நாயகன் மக்கள்திலகம் அவர்களே என்றும் வசூல் பேரரசு ! கடந்த
  1988.ஆண்டு முதல் 2017 வரை 30
  ஆண்டுகள் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் ஏற்படுத்திய வெற்றிகளில் சென்னையில் மட்டும் சில முக்கிய தகவல்கள். 1.படகோட்டி - 1988 தேவிபாரடைஸ் 2 வாரம் 2. பாரகன் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம் 3.மோட்சம் 1988 அடிமைப்பெண் 2 வாரம் 4. நடராஜ் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம். 5 நாகேஷ் - 1988 ஒளி விளக்கு 3 வாரம். 6.நடராஜ் -1988 ஒளிவிளக்கு 3 வாரம் 7.பிளாசா -1988 ஒளிவிளக்கு 2 வாரம். 8.ஜெயராஜ் - 1988. ஒளிவிளக்கு 2.வாரம் 9. ஈகா -.1988. இதயக்கனி 2 வாரம் . 10. அனுஈகா -1988. ரிக்க்ஷாகாரன் .2.வாரம் 11. மினி மோட்சம் 1988. மாட்டுக்கார வேலன் . 2 வாரமும் , குடியிருந்த கோயில் 2 வாரமும் . 12. பிராட்வே - 1988 உலகம் சுற்றும் வாலிபன் 2வாரம். தொடரும்..... உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

 9. #2548
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  தலைவர் எம்.ஜி.ஆரின் தனிப்பெரும் சாதனைகள் ! சென்னையில் முதன் முதலில் 4 அரங்கில் 100 நாளை கண்ட காவியம். புரட்சியாரின் படைப்பு மதுரைவீரன் ஆகும்! (பிரபாத் சித்ரா சரஸ்வதி காமதேனு) தனிப்பெரும் நாயகனே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த இறுதி வரை இதுவே ரிக்கார்ட் ஆகும். ஒடிய மொத்த நாட்கள் 462. இத்திரைப் படத்திற்கு பின் கறுப்பு வெள்ளை படங்கள் பல முன்னனி நடிகர்கள் நடிகையுடன் வந்தாலும் தலைவரின் மதுரை வீரன் போல் பின் நாளில் தொடர் வெற்றியை திரையில் எப்படமும் கண்டதில்லை ! 1962.ல் நடிகர் சிவாஜிகணேசன் எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடித்த ஆலயமணி திரைப்படமும் 1964.ல் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்டு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி சென்னையில் 4 அரங்கில் 100 நாள். ஆனால் மதுரைவீரன் மதுரையில் வெள்ளி வீழாவும் ஒடியது. 31திரையரங்கில் 100 நாளை கடந்தது. அடுத்து கை கொடுத்த தெய்வம் படமும் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்ட படமாகும். இதில் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் எஸ். எஸ். ஆர். என பலர் நடித்தனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக நடித்து சென்னையில் 4 அரங்கில் 100 நாள் ஒடிய கறுப்பு வெள்ளை படங்கள் கிடையாது. கறுப்பு வெள்ளை படங்களில் தலைவரின் சமுக படங்களும் சரித்திர படங்களும் ஒடியது போல் வேறு நடிகர்களுக்கு நிரந்தரமாக இன்று வரை தொடர் வெற்றி கிடையாது. 1956 ல் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் 1957 ல் சக்கரவர்த்தி திருமகள்,புதுமைப் பித்தன் 1958 ல் சென்னையில் நாடோடி மன்னன் 3 அரங்கில் வெளிவந்து ஒடிய நாட்கள் போல் அது வரை சினிமாவில் எந்த நடிகர் படமும் கிடையாது. கிருஷ்ணா 147 நாள் பாரகன் 133 நாள் உமா 126 நாள் சன் தியோட்டர் 70 நாள் மொத்தம் - 476 நாட்களாகும். மதுரை வீரன்,நாடோடி மன்னன் சென்னையில் முதல் வெளியீட்டில் பெற்ற சாதனையை 1965 வரை எந்த தனி நடிகராலும் முறியடிக்கப்படவில்லை என்பது உண்மையான தகவலாகும். 1961.ல் தலைவரின் திருடாதே தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன் 1963.ல் பெரிய இடத்துப் பெண் 1964 வேட்டைக்காரன் பணக்கார குடும்பம் தெய்வத்தாய் 1966 முகராசி,பெற்றால் தான் பிள்ளையா 1967 காவல்காரன் வரை 100 நாட்கள் ஒடியது. கறுப்பு வெள்ளையில் 3 அரங்கில் 7 படமும் 2 அரங்கில் 2 படங்களும் ஒரு அரங்கில் ஒரு படமும் ஓடியது. 1961முதல் 1967வரை மொத்தம் 10 படங்கள் மக்கள் திலகம் தனிபெரும் கதா நாயகனாக பவனி வந்து ஓடியவை களாகும். அதன் பின் 1968ல் 5 படமும் 1970,71,72 தலா ஒரு படம் மட்டுமே வெளிவந்தது.6 வருடத்தில் 8 படங்கள் வந்தது. ஆனால் மற்ற நடிகர்களின் கறுப்பு வெள்ளை படங்கள் 1961 முதல் 1974 வரை 80 படங்களுக்கு மேல் வெளிவந்தது. இதில் பல முன்னனி நடிகர்களுடன் பல படங்கள் வெளிவந்தது, குறிப்பாக பாவமன்னிப்பு பாசமலர் கை கொடுத்த தெய்வம் ஆலயமணி பச்சை விளக்கு என...அடுத்தது தன் சொந்த அரங்கில் ஒடியது. ஒரு அரங்கில் மட்டும் 100 நாள் என ஓட்டப்பட்டது. வசூல் இல்லாது 100 நாள் விழா கொண்டாடியது... இப்படி பல தகவல்கள். உயர்ந்த மனிதன், இருமலர்கள் வெலிங்டன்னிலும். பிளாசாவில் ஞானஒளி குலமா குணமா படங்களும் பைலட் அரங்கில் தவப்புதல்வன் படமும் காஸினேவில் அன்னை இல்லம் படமும் சாந்தியில் மட்டும் சாந்தி படமும் சாந்தி கிரவுனில் கலாட்டா கல்யாணம் படமும் மற்றும் சாந்தி கிரவுன் புவனேஸ்வரி அரங்குகளில் 1965 முதல் 1972 வரை ( எட்டு ஆண்டுகளில்)100 நாள் படங்கள் மூன்று தியேட்டரில்... 1969 ல் தெய்வமகன் 1970 ல் வியட்நாம் வீடு 1971ல் பாபு 1972 ல் ப.பட்டணம்மா உட்பட மூன்று அரங்கில் அதுவும் இவர்களின் சொந்த மற்றும் குத்தகை அரங்குகளாகும். 8 ஆண்டில் 4.படம் தான் மூன்று அரங்கில் 100 நாள் காண்பித்தார்கள். ஆனால் மக்கள் திலகம் 1964 ல் மட்டும் 3 படங்கள் மூன்று அரங்கில் தனி பெரும் நாயகனாக வலம் வந்து படைத்தார். வெவ்வேறு அரங்கில் சாதனை. சித்ரா பிளாசா பிராட்வே மேகலா கிரவுன் புவனேஸ்வரி என ஆறு அரங்கில் வெற்றி. 1967 ல் - காவல்காரன் 4 அரங்கில் வெளி வந்து 3 அரங்கில் (குளோப் அகஸ்தியா மேகலா )100 நாள் 1966 ல் - பெற்றால் தான் பிள்ளையா 4 அரங்கில் வெளிவந்து இரண்டு அரங்கில் (ஸ்டார் மகாராணி)100 நாள் ஒடியது. குறைந்த எண்ணிகையில் 75 கறுப்பு வெள்ளை படங்களில் நடித்து 25 படங்கள் 100.நாளும் 25 படங்கள் 85 நாட்களும் 15 படங்கள் 10.வாரமும் 5 படங்கள் 50 நாளை கடந்தும் ஒடியுள்ளது. 75 கறுப்பு வெள்ளை படங்களில் (கடந்த 30.ஆண்டுகளில்) சுமார் 70. படங்கள் பல வெளியீடுகளில் வெளி லந்து சாதனை படைத்துள்ளது.இன்றும் (2018) சுமார் 30 படங்கள் சென்னையில் மட்டும் திரையிட படுகிறது.இதுப்போன்ற கறுப்பு வெள்ளை படவரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது.தனிபெரும் நாயகன் என்றும் மக்கள் திலகமே திரையுலகை ஆள்கின்றார் என்பதற்கு சில வரலாறு இது மட்டுமே! இனியும் தொடருவோம்... நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,

 10. #2549
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,607
  Post Thanks / Like
  நிலையான சாதனை யில் என்றும் திரையுலக மன்னன் மக்கள் திலகமே! 1.1956. -. மதுரை வீரன் 33 அரங்கு 100 நாள் .2. 1958 நாடோடி மன்னன் 16 அரங்கில் 100.நாள்.3.1965 எங்கவீட்டுப் பிள்ளை 17 அரங்கில் 100.நாள் 4 1968 குடியிருந்த கோயில் 10 அரங்கில் 100 நாள்.5.1969 அடிமைப்பெண் 15 அரங்கில் 100.நாள். 6.1970 மாட்டுக்கார வேலன் 12 அரங்கில் 100 நாள் 7. 1971 ரிக்க்ஷாக்காரன் 12 அரங்கில் 100 நாள்.8. 1973 உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்கில் 100 நாள். 9.1974 உரிமைக்குரல் 12 அரங்கில் 100 நாள். 10. 1975 இதயக்கனி 10 அரங்கில் 100 நாள்.தமிழகத்தில் மட்டும் 10, 15,20,30.அரங்குகளை 1956 முதல் 1975 வரை பெற்ற காவியங்களில் மக்கள் திலகமே முன்னனி. நடிகர் சிவாஜி கணேசன் படங்களில் 1952 முதல் 1977 வரை 193 படங்களில் நடித்து அதிக பட்சமாக அதிக அரங்கில் ( 10 அரங்குக்கு மேல் 100 நாள் படங்கள் 4 மட்டுமே) பாவமன்னிப்பு (11) திருவிளையாடல் (13) வசந்த மாளிகை (12) தங்கப்பதக்கம் (11) மொத்தமே 4.படங்கள் 13 அரங்குக்கு மேல் 100 நாள் கிடையாது. தலைவரின் மதுரை வீரன் , நாடோடி மன்னன் இரண்டு படங்கள் மட்டும் 100 நாள் ஒடிய அரங்கு 49 . அதே சிவாஜி கணேசன் நடித்த 4 படங்கள் சேர்த்து 100 நாள் அரங்கு 47 ஆகும் ! தலைவரின் மீதி 8 படங்கள் 108 அரங்கு 100 நாள். 10.படங்கள் 157.தியோட்டரில் 100.நாள் ஒடி தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனையாகும்.மேலும் வெற்றிகள் தொடரும். நன்றி.உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •