Page 244 of 244 FirstFirst ... 144194234242243244
Results 2,431 to 2,434 of 2434

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

 1. #2431
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,571
  Post Thanks / Like
  மதுரை- சென்ட்ரல் dts அரங்கில் மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு திரையிடுவதாக இருக்கும் சூழ்நிலையில் தேர்தலை காரணம் காட்டி திரையிட கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சொல்வதாக தகவல் வருகிறது... இப்போதும் புரட்சி தலைவர் படத்தை கண்டு பயப்படுவதை நாம் என்னவென்று சொல்ல??? !!!

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2432
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,571
  Post Thanks / Like
  புரட்சித்தலைவர் மறைந்துவிட்டாரா? யார்சொன்னது வரும் மதுரை சித்திரைத்திருவிழா மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "குடியிருந்தகோயில் "படம் வெளியிட தேர்தல் அதிகாரி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தடைசெய்கின்றனரே கேட்டால் புரட்சித்தலைவர் அரசியல் தலைவராம் மறைந்துவிட்ட மாமனிதர் இன்னமும் இருக்கின்றார் தானே , அதனால்தான் அவர்படம்போட்டால் அவருடைகட்சி ஜெயித்துவிடும் என்ற சந்தேகம் பயம் சிவாஜி நடித்த தியாகம் படம் போடத்தடை ஏதுமில்லை இன்னமும் அனைவரையும் தெறிக்கவிட்டு என்றும் வெல்லும் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக மதுரை.எஸ் குமார்.......... Thanks wa.,

 4. #2433
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,571
  Post Thanks / Like
  அன்றும் இன்றும் என்றும் மக்கள் தலைவர் எம். ஜி .ஆர் .உடலால் மறைந்தாலும் உருவம் கண்டு மக்கள் வாக்கு அளித்து விடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகள் ,எதிர்க்கட்சிகள் அலறும் நிலையை பாருங்கள் .தலைவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் ஆனால் ஆட்சியாளர்கள் இன்னும் தலைவரின் மதிப்பு செல்வாக்கு ஆகியவற்றை உணர்வதாக தெரியவில்லை... Thanks wa.,

 5. #2434
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,571
  Post Thanks / Like
  நிஜம்!! சுடாது?
  --------------------------
  எம்.ஜி.ஆருக்கு மோட்ச தீபம் ஏற்றினார் காஞ்சிப் பெரியவர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்!!
  அதைப் பற்றி கொஞ்சம் ஆராயலாமா??
  சுந்தரம் ஐயர்!!
  1992இல் காலமானவர்.
  காஞ்சிப் பெரியவரின் தீவிர பக்தரான இவரது அறுபதாம் கல்யாணத்தையே காஞ்சி முனி தான் ,,தமது சங்கர மடத்தில் நடத்தி இவருக்கு அருள் பாலித்தார்!!
  அவர்,,அடியேனிடம் சொன்ன நிகழ்வு தான் இந்தத் தகழ்வு!!
  அது 1987 டிசம்பரில் சந்திரன்--கார் முகிலுக்குள் புகுந்து கொண்ட துயரமான நாள்??
  அகிலம் எங்கும் அரற்றலுடன் கூடிய தருணம்!
  காஞ்சி மடத்திலோ கனத்த மௌனம்?
  தவ நிலை கலையாது சவ நிலையில் அசையாது --
  சிவ சிலையாகக் காஞ்சிப் பெரியவர்??
  குளிர்ந்த பூ என்னும்--
  தண் மலர் என்ற கண் மலர் திறக்கும் காஞ்சிப் பெரியவரின் வாயில் இருந்து--
  பொன் மலர் வார்த்தைகள் வெளிப்படுகின்றன?
  ராமச்சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏத்தணும்!!
  காஞ்சியைக் காக்கும் காமாட்சிக் கோயிலில் ஒரு அகல் விளக்கு--சில ஆன்மாக்களின் அருளைப்-- புகல் விளக்காக இந்தப் பிரபஞ்சத்தில் பொழிந்து கொண்டே இருப்பது தான் அந்த விளக்கு நமக்கு விளக்கும் உண்மை!!
  ஆட்சி தீபம் அருமையாக இருப்பதற்கு--
  சாட்சி தீபம் மட்டுமல்லாது சில அதிர்வுகளின்-
  காட்சி தீபம் தான் அந்த மோட்ச தீபம்!!
  காந்தி,,நேரு,,இந்திரா --இப்படி எல்லோருக்கும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு மட்டும் இப்படி ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன லாபம்??
  சீடர் அனைவரும் சிந்தை குழம்ப--
  வேடர் தம் கவனத்தைப் போல் தம் காரியத்திலேயே கருத்தாகக் காஞ்சிப் பெரியவர்??
  பணியை முடித்தப் பெரியவர்--
  பனியை ஒத்த அருள் குரலில் ரத்தினச் சுருக்கமாக காரணத்தை விளக்கியது இரண்டே வாக்கியங்களில்?
  சிலரது ஆத்மாக்கள்!!
  எனது கடமை!!
  இவ்வளவு சுருக்கமாகப் பெரியவர் சொன்னதன் பொருளில் தான் எவ்வளவு உருக்கம்??
  எம்.ஜி.ஆரின் ஆன்மா ஒரு சாதாரண மானிட ஆன்மாவே அல்ல?
  செத்த புருஷர்கள் அனைவரைப் போலில்லாது-மத்த புருஷர்களோடு ஒப்பிட முடியாத--
  சுத்த புருஷர்!! சுருங்கச் சொன்னால் எம்.ஜி.ஆர் ஒரு----
  சித்த புருஷர்!!
  கவனிக்க வேண்டும் இங்கே!!
  காஞ்சிப் பெரியவர்,,நம்மைப் போல் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விசில் அடித்தவரல்ல??
  அவரிடம் உதவி பெற்ற கட்சிக்காரரும் இல்லை??
  ஆன்மிகம் என்னும்--
  அற நெறியில் இருப்பவர்களுக்குப்--
  பிற நெறியில் இருப்பவர்களின் உண்மையான-
  நிற நெறி நிச்சயம் தெரிந்திருக்கும் !!அவர்களின்--
  புற நெறிப் புரிந்திருக்கும் தானே???
  உண்மை சுடும்! என்பார்கள்!--ஆனால்??
  இந்தப் பதிவு நிஜம்! ஆனால் சுடவில்லை??
  அதிசயம் ஆனால் உண்மை என்பார்கள்!!
  இங்கேயோ--இது---
  அதிசயமில்லை?? ஆனால் உண்மை!!
  ஒப்புக் கொள்ளலாம் தானே உறவுகளே????.. ............ Thanks wa.,

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •