Page 292 of 401 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2911
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (12/4/19) வேலூர் குறள் அரங்கில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் " எங்க வீட்டு பிள்ளை "
    தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .


    தகவல் உதவி : வேலூர் பக்தர் திரு.ராமமூர்த்தி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2912
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2913
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2914
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு கொண்ட தலைவரின் அபிமானிகளுக்கு ஒரு செய்தி..... மேலே உள்ள படத்தில் இருப்பவர் நம் புரட்சித்தலைவருக்காகவே வாழ்ந்தவர். வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆம் தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 100 படங்களுக்கு உடையலங்காரம் செய்தவர். அது மட்டுமல்ல தலைவர் வாழ்ந்த காலத்தில் வேஷ்ட்டி முதல் ஜிப்பா வரை தைத்தவர். தலைவர் ரிக்க்ஷாக்காரர்களுக்கு கொடுத்த 6000. மழைக்கோர்டை உருவாக்கியவர். அண்ணன் இருக்கும் இந்த இடம் 1954ல் இருந்து இன்று வரை வாடகை கொடுத்து வருகின்றார். இது ஒரு புனிதமான இடமாகும். சென்னை ராயப்பேட்டை கெளடிய மடம் தெருவில் போலீஸ் நிலையம் பின்புரத்தில் இன்றும் உள்ளது. உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக அண்ணனிடம் கேட்ட பல கேள்விகளில் ஒரு சில ....தலைவர் லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் போது காரில் இங்கு பல முறை வருவார். நாடோடி மன்னன் அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு அனைத்து நடிகருக்கும் இங்கு தான் ஆடைகள் உருவாக்கப்பட்டது என்று சொன்னார். அடுத்து தலைவர் வெளியூர் சென்றால் முத்து அண்ணன் தான் தலைவருக்கு உதவியாக இருந்தார். அப்பப்பா...!!!.... பல்வேறு நிகழ்வுகள் தலைவரை பற்றி..... என்றும் தலைவரை மறவாது வாழும் அண்ணன் திரு எம்.ஏ. முத்து அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தலைவரின் பெருமைகளை போற்றட்டும்... நன்றி. ......உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

  7. #2916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று வரை எம்.ஜி.ஆர்!!
    -------------------------------------------------
    புதுச்சேரியில் 1974இல் முதல்வர் என்னும்--
    கச்சேரியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் இன்றுவரைத் தம் கச்சேரியை நிறுத்தவே இல்லை?
    காவலர் என்ற பெயரில் எவர் ஆண்டாலும்
    மூலவர் எம்.ஜி.ஆரை வைத்துத் தானே அந்தக் கட்சிக்கு வெற்றி முகவரியை விரும்பி அளிக்கிறார்கள் மக்கள்??
    சரி!! அவரது வெற்றியின் ரகசியம் தான் என்ன??
    ஒரு கட்சியின் வெற்றித் தலைவராக அவர் ஒளிர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் தான் என்ன?
    அடி மட்டத் தொண்டனையும் அரவணைத்ததா?
    அள்ளிக் கொடுத்ததா?
    கண் அசைவில் கட்சியை வைத்திருந்ததா?
    இப்படி--ஆ--ஆ--ஆ--என்று பல கேள்விகள்!!
    சுகி.சிவம் சொன்ன ஒரு நிகழ்வைக் கேட்டு-
    சுகி மனமே??
    கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டுவிட்டு --
    கர் நாடகா வரை சென்று வருவோமா?
    அது குண்டு ராவுக்கும் ஹெகடேக்கும் இடையில் நடக்கும் தேர்தல்!!
    தமக்கு ஆதரவாக எம்.ஜி.ஆரைப் பிரச்சாரத்துக்கு அழைக்கிறார் குண்டு ராவ்!!
    அதாவது--
    குண்டு ராவ்! உனக்கு நிச்சயம் வெற்றி--
    உண்டு ராவ்!! உடனேயே எம்.ஜி.ஆரை இங்கே-
    கொண்டு ரா ? என்று அவரது நண்பர்கள் ஆலோசனை வழங்க,,பிரச்சாரத்துக்குப் போகிறார் எம்.ஜி.ஆர்!!
    பெங்களூரில் 20000 பேர் திரண்டிருந்த அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசும்போது எழுகின்ற உற்சாக ஒலிகளை வைத்தேத் தம் வெற்றியை அப்போதே உறுதி செய்துகொள்கிறார் குண்டு ராவ்!!
    பேசி விட்டுக் காரில் ஏறிய எம்.ஜி.ஆர்,,குண்டுராவை அருகில் அழைத்து இப்படிச் சொல்கிறார்?
    உங்களுக்கு இந்தத் தொகுதியில் வெற்றி கிடைப்பது சந்தேகம் தான்??
    இருண்டு போன முகத்தோடு அரண்டு போன குரலில் குண்டுராவ் விளக்கம் கேட்க--
    அமைதியாக பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்--
    நான் வந்து இறங்கியவுடனேயே ஆரவாரமாக என்னை வரவேற்க வேண்டிய மக்கள்--நான் வணக்கம் சொன்னவுடன் தான் பதில் வணக்கம் சொன்னார்கள்?
    அந்தக் கணமே உங்களது வெற்றி எனக்குக் கேள்விக் குறி ஆகிவிட்டது??
    அவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் கொண்ட அபிமானத்தால் தான் என் பேச்சை உற்சாகமாகக் கேட்டார்கள்!
    அந்தத் தேர்தலில் குண்டுராவ் தோற்றுப் போகிறார்!!
    ஒரு கணத்தில் 20000 மக்களின் நாடித் துடிப்பை மிகத் துல்லியமாக அளக்கின்ற சக்தி??
    ஒரு தலைவனுக்குஇருக்க வேண்டிய--
    இன்றி அமையாத சக்தி எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் தானே--
    இன்றும் அமைந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் நம் ஆழ் மனங்களில்???
    மக்கள் மனோ நிலையை இப்படி ஒரு கண நேரத்தில் அளந்த தலைவர் வேறு எவராவது உண்டோ???........... Courtesy: fb.,

  8. #2917
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை தோழரே, இன்று 13-04-1956 - 13-04- 2019 என்றென்றும் திரையுலக சக்கரவர்த்தி, சகலக்கலாவல்லவன் அளிக்கும் "மதுரை வீரன்" வெளிவந்து 64 ஆண்டுகள் தொடங்கும் நன்னாள்... இந்த காவியத்தின் அட்டகாச வெற்றியின் முழு வீச்சை, விபரங்களை இங்கே பதிவிடிக்கிறார் நண்பர்....

  9. #2918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் மொழியை போற்றிய தலைவரின் பாடல்கள் சில..... 1.தமிழன் என்றொரு இனமுண்டு . தனியே அவருக்கொரு குணமுண்டு. அமிழ்தம் அவனது மொழியாகும். அன்பே அவனது வழியாகும். திரைப்படம் மலைக்கள்ளன் 2. செந்தமிழாய் எழுந்து வாராயோ...உன் சிங்கார தாய் மொழியை தாராயோ.....திரைப்படம் மதுரை வீரன் 3. செந்தமிழ் நாடொனும் போதினிலே... இன்பதேன் வந்து பாயுது காதினிலே..திரைப்படம் ராஜராஜன்.4. ஒன்றல்லா இரண்டல்ல தம்பி .... சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ் நாட்டில்.... திரைப்படம் தாய் மகளுக்கு கட்டியத்தாலி 5.அன்புக்கு நான் அடிமை. தமிழ் பண்புக்கு நான் அடிமை. நல்ல கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை..... படம். இன்று போல் என்றும் வாழ்க. 6.பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்.... திரைப்படம். ஊருக்கு உழைப்பவன். 7. தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்... திரைப்படம்.நான் ஆணையிட்டால்.8.தமிழில் அது ஒரு இனிய கலை உன்னை தழுவிக்கண்டேன் அந்த கவிதைகளை.... திரைப்படம். சங்கே முழங்கு 10.பால் தமிழ் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பாள்... திரைப்படம் ரகசிய போலிஸ் 115 இப்பாடல்கள் யாவும் தமிழில் தொடங்கும் பாடல்கள். ஆனால் 100 க்கும் மேற்ப்பட்ட பாடல்கள் சரணத்தில் தமிழை போற்றும் விதமாக தலைவர் பாடல்களில் வருகிறது..... தமிழ் மொழியில் மட்டும் நடித்து உலகப்புகழ் பெற்ற ஒரே தீர்க்கதரிசி நம் மக்கள் திலகம் மட்டுமே. நன்றி ! உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

  10. #2919
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னகத் திரைப்பட உலகம் தோன்றிய 1931 முதல் 1955 வரை எந்த மொழி படங்களும் செய்யாத புகழ்மிகு சாதனை என்று சொல்லுவதை விட இமாலய சாதனை, சரித்திர சாதனை, பிரமாண்டமான சாதனை, ஏன் தென்னகப் படயுலகம் அது வரை காணாத சாதனை ! வசூல் என்றால் சினிமா உலகில் இப்படி ஒரு பிரளயமான வசூலை கண்டது நம் நடிகப்பேரரசின் மங்காத இயற்கை நடிப்பில் 13.04.1956 ஆம் ஆண்டு வெளியாகிய சரித்திரப் படைப்பான கிருஷ்ணா பிக்சர்ஸின் மதுரை வீரன் காவியம் படைத்த சாதனையே உயர்ந்தது ஆகும். இக்காவியத்தின் சூறாவளி வெற்றியை கண்டு அன்று திரைப்படவுலகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இக்காவியத்தின் வரலாற்று சிறப்புகளை தலைவர் சினிமா துறையில் இருந்தது வரை மட்டுமல்ல.... 1987 வரையிலும் எந்த நடிகரின் படங்களும் 18 திரையரங்குகளுக்கு மேல் 100 நாளை எட்டியதில்லை... ஆனால் தலைவரின் மதுரை வீரன் 1956 ல் முதல் வெளியீட்டில் வெளியான 42 திரையரங்கில் 31 திரைப்பட அரங்கில் 100 நாளை கண்டு, திரையரங்கு தோறும் விழா கோலம் பூண்டது. முதன் முதலில் என்ற அகராதியை தமிழ் சினிமாவில் பல ஊர்களில் 100 நாள் விழாவுடன் முத்திரை பதித்தது. 1944 ல் வெளியான எம் கே. தியாகராஜபாகவதரின் படமான ஹரிதாஸ். 1948ல் வெளியான எம்.கே.ராதாவின் படமான சந்திரலேகா 1953 ல் வெளியான கே.பி.சுந்தரம்மாளின் ஒளவையார் இவை தான் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அன்று திகழ்ந்தது.. அப்படங்கள் பெற்ற வெற்றியை விட 10 மடங்கு வெற்றியை 1956 ல் வெளியான நம் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் பெற்றார். அன்றைய முன்னனி நடிகர்களில் முதன் முதலில் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் தான் மதுரை சென்ட்ரல் சினிமாவில் 180 நாட்கள் ஒடி முதல் சாதனையை பதித்தது. அன்று 180 நாள் வசூல் ரூ.3,67,686.74 பைசா. அடுத்து இப்படம் 110 தியோட்டர்களில் 50, 75, 90, நாட்களை கடந்தது.6 மாதத்தில் 77 லட்சத்தை பெற்று தென்னகப் படவுலகில் 1 வருட காலத்தில் 1கோடியை கடந்த முதல் திரைப்படம் மதுரை வீரன் ஆகும். சென்னையில் முதன் முதலில் நான்கு ( சித்ரா பிரபாத் சரஸ்வதி காமதேனு) அரங்கில் 100 நாளை கடந்து சாதனை. திருச்சி 169 நாள், சேலம் 161 நாள், காஞ்சிபுரம் 154 நாள், வேலூர் 147 நாள், கோவை 147 நாள் நெல்லை 132 நாள் சென்னை பிரபாத் 126 நாள், சரஸ்வதி 126 நாள் . மற்றும் விருதுநகர் கடலூர் விழுப்புரம் கும்பகோணம் கரூர் மன்னார்குடி பழனி பட்டுக்கோட்டை புதுக்கோட்டை திருவாருர் பரமகுடி நாமக்கல் பொள்ளாச்சி ஊட்டி விருத்தாசலம் பண்ருட்டி பவானி தஞ்சாவூர் ஈரோடு திண்டுக்கல் மயிலாடுதுறை மற்றும் கம்பம் 97 நாள் நாகர் கோவில் 97 நாள் போடி 93 நாள் புதுச்சேரி 91 நாள் தூத்துக்குடி 88 நாள் ஆத்தூர் 86 நாள் தென்காசி 84 நாள் இப்படி பல அரங்குகளில் சாதனை. இக்காவியம் சென்னையில் 1984 முதல் 2001வரை பல அரங்குகளில் தொடர் சாதனை புரிந்துள்ளது. 1991 ல் திருப்பூரில் 21 நாட்கள் ஒடியுள்ளது. மதுரையில் பல முறை வெளியிடப்பட்டு 2,3,4,வாரங்கள் ஒடியுள்ளது. கோவையில் மதுரையில் திருச்சியில் சேலத்தில் இன்று வரை இடைவிடாது திரையிடப்பட்டு வரும் சரித்திரக்காவியம். இன்னும் பற்பல சாதனைகள் புரிந்து வரும் மக்கள் திலகத்தின் மதுரை வீரன் காவியத்திற்கு 2016ல் உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக வைரவிழா எடுத்து மலர் வெளியீட்டுள்ளோம். 13.4.2019 இன்று 63 ஆண்டை நிறைவு செய்து 64 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் உண்மையாக பவனி வரும் காவியம் மதுரை வீரன் காவியமே !சரித்திரத்திலும் சாதனையிலும் தமிழ்ப்படயுலகில் நீடித்து நிலைத்து நிற்கும் அழியாத பொக்கிஷமாகும். கடைசியாக..... தலைவரின் " ம " வரிசையில் புரட்சி ஏற்படுத்திய ஐந்தாவது திரைப்படம் - மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன் , மதுரை வீரன் எல்லாமே வெற்றிதான்! மதுரை வீரன் மகத்தான வெற்றிக்கு மேல் வெற்றிதான். இன்று நம் வீரனாம் மதுரை வீரனுக்கு 63ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்புடன் கூடிய பிறந்த நாள். நன்றி!.உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

  11. #2920
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "மதுரை வீரன்", வெளியாகி இன்று 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64 வருடங்கள் துவக்கம் காணும் இந்த நாளில் சில வருடங்களுக்கு முன் நடந்ததாக வந்த தகவல்... அதாவது "மதுரைவீரன்" 100 வது நாள் 21-07-1956 ம் நாளிதழ் புகழ்பெற்ற சென்னை கன்னிமரா நூலகத்தில் இருப்பதை கேள்விப்பட்டு பார்க்க செண்டிருந்த வேளையில், அதற்குமுன் அறிந்திருந்த மாற்று முகாம் தோழர்கள் அந்த நாளிதழ் விளம்பரத்தை பக்குவமாக கிழித்து ஆவணத்தை எடுத்து சென்று விட்டனர் என்ற விபரம்.... அதன் மேலதிக தகவல்களை அறிந்தவர் இங்கு பகிரலாம்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •