Results 1 to 10 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா நாளிதழ் – 8 ஜூன் 1983
    சைதை துரைசாமிக்கு செல்வி ஜெயலலிதா பாராட்டு.
    புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய்.
    சென்னை ஜூன் 8: புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய் என்று சைதை துரைசாமியை சிந்தனை செல்வி ஜெயலலிதா பாராட்டினார்.
    சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிந்தனை செல்வி ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது : -
    இந்தக் கூட்டம் சைதை துரைசாமிக்கு பாராட்டு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைதை துரைசாமி இளைஞர், லட்சிய வீரர், புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய். புரட்சித் தலைவர் வெட்டி வா என்று கட்டளையிட்டால், வெட்டி கட்டிக் கொண்டு வருபவர் சைதை துரைசாமி.
    1972ம் ஆண்டு நமது இதய தெய்வமாம் புரட்சித் தலைவர் அவர்களை கருணாநிதி கழகத்திலிருந்து வெளியேற்றினார். 26 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே செய்த முடிவு அது. புரட்சித் தலைவரை கழகத்திலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் கருணாநிதி நின்றுவிடவில்லை. தனது செயலை நியாயப்படுத்திப் பேச இதே சைதைக்கு அப்போது கருணாநிதி வந்தார்.
    கருணாநிதி பேச எழுந்தபோது ஒரு இளைஞர் மேடைக்கு வந்தார். கருணாநிதிக்கு 26 எலுமிச்சம் பழங்கள் கோர்த்த மாலையை அணிவித்தார். அந்த இளைஞர்தான் சகோதரர் சைதை துரைசாமி.
    எலுமிச்சம் பழம் எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. பைத்தியம் தெளிவிக்கவும் பயன்படுகிறது. கருணாநிதிக்கும் அவரோடு சேர்ந்த 25 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தலையில் தேய்த்துக் கொள்ளவோ என்னவோ அந்த இளைஞர் 26 எலுமிச்சம் பழங்களை மாலையாகக் கட்டி அணிவித்தார். அந்தத் துடிப்புமிக்க துணிச்சல்மிக்க இளைஞர்தான் சைதை துரைசாமி.
    புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம் என்பதை உணர்த்தவே சைதை துரைசாமி, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலையை அணிவித்தார். சைதை துரைசாமி செய்தது சரிதான் என்பதை பின்னால் காலம் உணர்த்தியது.
    புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு நீக்கியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை காலம் உணர்த்தியது என்றாலும் இன்னமும் எலுமிச்சம் பழம் மாலை அணிவிக்க வேண்டிய நிலையில்தான் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு இன்னும் தெளியவில்லை.
    இப்போது ஜனநாயகத்தைக் காக்க படைபட்டாளத்தோடும் ஆள் அம்புகளோடும் கருணாநிதி கிளம்பி இருக்கிறார். எந்த கருணாநிதி தெரியுமா? சகோதரர் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகளைப் போட்ட கருணாநிதி; சகோதரர் சைதை துரைசாமி 10 ருபாய் பிக்பாக்கெட் அடித்ததாக ஒரு பொய் வழக்கு, கருணாநிதி மகன் படத்தையும் ஒரு தியேட்டரையும் கொளுத்தியதாக இன்னொரு பொய் வழக்கு; அவர் மீது கொலை வழக்குக்கூட சுமத்தப்பட்டது.
    ஜனநாயக ஜாம்பவான் கருணாநிதி ஏன் இத்தனை பொய் வழக்குகளை அடுக்கடுக்காக போட்டார்? சகோதரர் சைதை துரைசாமி தனக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டது எத்தனை நியாயம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் கருணாநிதி சரம்சரமாக பொய் வழக்குகளைத் தொடுத்தார்.
    இவ்வாறு செல்வி ஜெயலலிதா கூறினார்................ Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •