Page 114 of 401 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #1131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர். " தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு முறையும் இரவு தூங்கும் முன் ஒரு முறையும் கீழ் கண்ட மந்திரத்தை கண்மூடி சொல்லி தன் இறுதி காலய் வரை "இறைவனை " பிரார்த்தனை செய்வார்! நாமும் இம் மந்திரத்தை சொல்லி பயன் அடைவோம், வாழ்வில் பல வெற்றிகளை பெறுவோம்!!

    1.கல்லாத பிழையும்!
    2.கருதாத பிழையும்!!
    3.கசிந்து உருகி நில்லாத பிழையும்!!!
    4.நினையாத பிழையும்!!5.நின் அஞ்செழுத்தை சொல்லாத பிழையும்!
    6.தொழாத பிழையும்!
    7.துதியாத பிழையும்!
    8.எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய்!
    9.எல்லாம் வல்ல "இறைவா "

    சித்தர்கள் சொன்ன மந்திரங்கள்!!
    1.மழை வேண்டும்!
    2.பயிர் வேண்டும்!
    3.பசுமை வேண்டும்!
    4.நல் உயிர்கள் தழைக்க வேண்டும்!
    5.அறம் ஓங்க வேண்டும்!
    6.அன்புபெருக வேண்டும்!
    7.எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும்!!

    அன்புடன்,
    எம்.எஸ்.ஆர்.மணி!
    நன்றி! "காலை வணக்கம்! "..... Thanks Friends....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1132
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு 17-01- 2019 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் திரைப்படங்கள்
    ஜெய மூவீஸ் காலை 7 மணிக்கு ஒரு தாய் மக்கள், காலை 106ணிக்கு குமரிக் கோட்டம், பகல் 1 மணிக்கு பட்டிக்காட்டு பொன்னையா , இரவு 10 மணிக்கு தர்மம் தலை காக்கும்
    ஜெய தொலைக்காட்சியில் பகல் 1.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன்
    மெகா தொலைக்காட்சியில் பகல் 12 மணிக்கு குடியிருந்த கோயில், மாலை 4 மணிக்கு விவசாயி... .... Thanks...

  4. #1133
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal Thilagam MGR Thread Part 24

    ..... Thanks.....

  5. #1134
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் பிறந்த நாள் உலகம் எங்கும் கொண்டாடபட்டது
    எம் ஜி ஆர் என்றாலே கடந்த ஐம்பது ஆண்டுக்கு மேல் மக்கள் இவ்வளவு அன்பு செலுத்த காரணம்
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சொறு பார்த்தால் போதும்
    இதோ
    எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் மிக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடந்து முடிகிறது எம் ஜி ஆர் அனைவரையும் தன்னோடு சாப்பிட அழைத்து சாப்பாடு தோட்டத்தில் பிரம்மாண்டமாக பலவகை கறியுடன் நடக்கிறது இதன் பிறகு பலநாட்கள் சென்று அன்று உணவு உண்ட ஒரு அதிகாரிக்கு எம் ஜி ஆர் தோட்டத்தில் இருந்து தீடீர் அழைப்பு உடனே புறப்பட்டு தோட்டம் வாருங்கள் என்று இனி அவர் எழுதியது தீடீர் என எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு வர மனம் பயத்தோடு எண்ணியது நாம் ஏதாவது தப்பு செய்து விட்டோமா என தப்பு செய்தால் எவராக இருந்தாலும் எம் ஜி ஆர் விடமாட்டாரே என்ற கலக்கத்தோடு தோட்டம் சென்ற என்னை தோட்டத்தில் உள்ளவர்கள் சின்னவர் உங்களுக்காக தான காத்திருக்கிறார் என கூறி அழைத்து சென்றனர் எம் ஜி ஆரிடம் என்னை பார்த்த எம் ஜி ஆர் என்ன நல்லா இருக்கிறீர்களா என விசாரித்து வாங்க சாப்பிட போகலாம் என நடக்க தொடங்கினார் எனக்கு பதட்டம் என்னை அழைத்த விபரம் என்ன என்று தயங்கி கேட்க எம் ஜி ஆர் ஒன்றும் இல்லை அன்று நீங்கள் இங்கு சாப்பிட்ட போது ஒரு கறியின் பெயர் சொல்லி அதை விரும்பி சாப்பிட்டீர்கள் அது அபூர்வமாக இங்கு தயார் செய்யும் கறி இன்று அந்த கறி சாப்பாட்டில் உண்டு இந்த கறியை பார்த்த உடன் உங்கள் ஞாபகம் வந்தது உங்களுடன் உணவு உண்ண வேண்டும் என அதனால் தான் அழைத்தேன் வாருங்கள் சாப்பிடலாம் என நடக்க தொடங்கினார் எம் ஜி ஆர்

    ஒருகணம் எனக்கு அங்கு எம் ஜி ஆர் தெரியவில்லை என் அம்மா தெரிந்தார் எம்ஜி ஆர் வடிவில் ஒரு தாய் தான் ஒரு உணவு சமைத்த உடன் இதை என் மகன் விரும்பி உண்பான் அவனுக்கு கொடுக்கணும் என எண்ணுவார் அதன் பின்தான் தான உண்பார் அந்த தாய் மனதை அன்று எம் ஜி ஆரிடம் கண்டேன் தாய் ஆகி தமிழ் மக்களைகாக்கும் மனம் தான் எம் ஜி ஆர் இவ்வளவு புகழ் அடைய காரணம் என அன்று உணர்ந்தேன் என அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்

    எம் ஜி ஆர் புகழ் இவ்வளவு உயர காரணம் அறிய சிறு உதாரணம் இந்த சம்பவம்
    வாழ்க எம ஜி ஆர் புகழ்.... Thanks Friends.........

  6. #1135
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்தில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . தன்னுடைய ரசிகர்களும் கொண்டாட அனுமதிக்கவில்லை .
    17.1.1988ல் மக்கள் திலகம் மறைந்து 24 நாட்கள் ஆனதால் அவருடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை
    .
    17.1.1989 முதல் இன்று 17.1.2019 வரை தொடர்ந்து 31 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாளை உலகமெங்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் .ஊடகங்கள் எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் சிறப்புக்களை ஒளிபரப்பி பெருமை சேர்த்தார்கள்
    பத்திரிகைகளில் எம்ஜிஆர் சிறப்பு கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளது . முகநூல் , வாட்ஸ் ஆப் , டுவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலை தளங்களில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் எண்ணப்பகிர்வுகள் பரிமாற்றம் நடந்தது .

    உலக வரலாற்றில் எம்ஜிஆருக்கு கிடைத்த ஆதரவு போல் எந்த ஒரு தனி மனிதருக்கும் இது வரை கிடைக்கவில்லை
    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த பெருமை ஒன்று போதுமே ...... Thanks.........

  7. #1136
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் மறைந்து 32 வருடம் கடந்தும் இன்னும் பல நாடுகளில் ஏன் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி எப்போதும் பேசறாங்க?

    எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள்?

    ஏன் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அரசியல் சார்பற்று எம்.ஜி.ஆர் உலக பேரவை பிரநிதிகள் மாநாடு நடத்தினாங்க?

    இதற்க்கான காரணங்களை கூறும் காணொளி பதிவு தவறாம 30 நிமிடம் பொறுமையாக காணுங்கள்... Thanks...

  8. #1137
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    17-01-2019 புதுயுகம் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு . அரச கட்டளை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு மாட்டுக்கார வேலன் , பகல் 1.30 மணிக்கு ரகசிய போலீஸ் 115,
    வேந்தர் தொலைக்காட்சியில் பகல் 1 மணிக்கு நீதிக்கு பின் பாசம் ஆகிய
    மக்கள் திலகம் திரைப்படங்கள் ஒளிபரப்பாகியது...அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.... நன்றி மதுரை ராமகிருஷ்ணன்.

  9. #1138
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அகில உலகிலேயே புரட்சி தலைவருக்கு பக்தர்கள் என்ற அமைப்பில் தொடர்ந்து 30 வருடங்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளும் கொண்டாடுவது கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை மட்டுமே.இந்த சாதனையை முறியடிக்க மற்றவர்களுக்கு 30 வருடம் தேவைப்படும். இது நடக்காத காரியம். ஆகவே எங்களுக்கு இந்த பாக்கியம் தந்த எங்கள் இதய (MGR) தெய்வத்திற்கு நன்றியை காணிக்கையாக செலுத்தி இந்த 17.1.2019 புனித நந்நாளில் வாழும் தெய்வத்திடம் வாழ்த்தும் வேண்டுகிறோம்....... Thanks ..........

  10. #1139
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. தமிழகத்தின் முதல்வர் என்றாலும்கூட, சில விஷயங்களில் அரசுத்துறை அல்லது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் தனிப்பட்ட முறையில் தானே தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். அதிலும் கூட அவரது மனிதாபிமானமே மேலோங்கியிருக்கும்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கவும் ஆன்மிகப் பிரசங்கம் செய்யவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது மறை வுக்குப் பிறகு அந்தப் பணி அவரது மகளுக்கு வழங்கப்பட்டது. அறநிலை யத்துறை மூலம் அவருக்கு மாதச் சம்பளமும் உண்டு. அந்தப் பெண்மணி அவரது தாயாரைப் போல இல்லாமல், சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பயிற்சியில் சேருவோருக்கு முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்றும் புகார்கள், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தன.

    மதுரைக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றிருந்த நேரத்தில் ஒருநாள், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 9 மணிக்கு மேல் உதவியாளர்களிடம் ‘‘மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக வேண்டும். அங்கு ஒரு வேலை இருக்கிறது. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். பக்தர் களுக்கு இடைஞ்சல் இருக்காது’’ என்று சொன்னார். போலீஸ் அதிகாரிகளையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார். கோயில் அதிகாரிகளுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததுடன், தனது வருகை யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்!

    கோயிலுக்குச் சென்ற எம்.ஜி.ஆரை நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தனக்கு எந்தவித விசேஷ மரியாதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தரிசனம் முடித்து பிரசாதம் கொண்டு வந்த அர்ச்சகருக்கு பணம் கொடுத்துவிட்டு, கோயிலை சுற்றிப் பார்த்தார். நிர்வாகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கோயில் யானையைத் தட்டிக் கொடுத்து அதன் பராமரிப்பு, அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டறிந்தார்.

    கோயில் அலுவலகத்துக்குச் சென்று அர்ச்சகரிடம் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுக்கும் பெண்மணியை தன்னை வந்து பார்க்கச் சொல்லும்படி எம்.ஜி.ஆர். கூறினார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அருகிலேயே அந்தப் பெண்மணிக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அவ ருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார்கள் குறித்து விசாரிக்கத்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். அழைக்கிறார் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிட்டது.

    பயத்தில் கோயில் அலுவலகத்துக்கு அழுதுகொண்டே வந்தார் அந்தப் பெண்மணி. அவரை எம்.ஜி.ஆர். உட்காரச் சொன்னார். ஆனால், அந்தப் பெண் தொடர்ந்து விக்கி விக்கி அழுதபடியே நின்றார். மீண்டும் எம்.ஜி.ஆர். வலியுறுத்தி சொன்னதும் உட்கார்ந்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர். கனிவுடன், ‘‘அழாதேம்மா, தப்பு உங்கள் பேரில் தானே. உங்கள் தாயார் இந்தப் பணியை எவ்வளவு சிறப்பாக செய்தார்? நீங்களும் அதேபோல பணியாற்றுவீர்கள் என்று நம்பித்தானே உங்களுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்? தெய்வீகமான விஷயங்களை நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கும் பணியில் இருக்கும் நீங்கள், அதை பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டாமா?’’ என்றார்.

    அந்தப் பெண் அழுதவாறே, ‘‘இனி மேல் ஒழுங்காகப் பணியாற்றுகிறேன் ஐயா. பணியில் கவனமாக இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம்’’ என்றார். ‘‘உங்களை நம்புகிறேன். கவனமாக பணி யாற்றுங்கள். நான் அழைத்ததும் வந் ததற்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என் றார். அதன் பின்னர், அந்தப் பெண்மணி ஈடுபாட்டோடு பணி செய்தார்.

    எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டே நீக்கி யிருக்கலாம். அல்லது அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் நட வடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கலாம். மதுரை வந்தபோது, தானே நேரில் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்மணியை அழைத்து அறிவுரை வழங்கினார் என்றால், அதற்கு அந்தப் பெண்மணியின் குடும்பச் சூழலை அறிந்து வைத்திருந்த எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்தான் காரணம்!.... Thanks...

  11. #1140
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M G R ம்.. சௌராஸ்ட்டிரரும்..
    ========================

    இந்திய அரசியல் வரலாற்றில் திரை உலகில் முதன் முதலாக ஹீரோ வாக நடித்து மக்கள் மனதில் நிஜ ஹீரோவாக உயர்ந்து, மக்கள் திலகமாகப் பரிணமித்தது தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தவர் எம் ஜி ஆர்..

    சிறு வயதில் வறுமையுடன் போராடியதால், பசியின் கொடுமையினை உணர்ந்தவர்.. அதனாலாயே காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக உயர்த்தியவர்..

    எம் ஜி ஆரும் அவரது அண்ணன் சக்கரபாணி அவர்களும் கும்பகோணத்தில்
    சிறு வயதில் பசியால் வாடும் போது..அடுத்த வீட்டில் இருந்த சௌராஸ்ட்ரப் பெண்மணி ருக்மணியம்மாள் வாஞ்சையுடன் அரவணைத்து, உணவிட்டதை எம் ஜி ஆர் தன் இறுதிக் காலம் வரையிலும் நினைவில் கொண்டிருந்தார்..

    எம்ஜிஆர் வளர் இளம் பருவத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் போது, முதன் முதலில் நாடகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை வழங்கியவர் அய்யம் பேட்டை கே கே பெருமாள் என்கிற சௌராஸ்ட்ரர்...

    திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை எம் ஜி ஆருக்கு முதன் முதலில் வழங்கியதும் ஒரு சௌராஷ்டிரர்..

    மதுரையைச் சேர்ந்த ஒண்டிவில்லு ராஜாராம் என்கிற சௌராஸ்ட்ரர் தான் முதன் முதலில் வீர ஜெகதீஷ் என்கிற திரைப்படத்தில் எம் ஜி ஆரை நடிக்க வைத்தார்..

    இப் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் சதிலீலாவதி படம் எம்ஜிஆருக்கு முதல் படமானது.. வீர ஜெகதீஷ் இரண்டாவது படமானது...

    முதன் முதலில் ஒரு சௌராஷ்டிரர் தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக உயர்ந்ததும் எம்ஜிஆர் காலத்தில் தான்..

    ஆம் நன்றி மறவாமல் கும்பகோணம் எஸ் ஆர் ராதா அவர்களை அமைச்சராக்கி அழகு பார்த்தார்...

    உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், துணை முதலமைச்சராக்க எஸ் ஆர் ராதா அவர்களை விரும்பினார் என்பதும் வரலாறு..

    கையில் கடிகாரம் கூட இல்லாமல் எளிமையாக வாழ்ந்த அந்த அமைச்சருக்கு, தன்னுடைய கையில் இருந்த கடிகாரத்தை கழட்டிக் கொடுத்தவர் எம் ஜி ஆர்..

    அதுமட்டுமல்ல கும்பகோணத்தில் அந்த அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற ஐந்து திருமணங்களை தானே முன் நின்று நடத்தியவர் எம் ஜி ஆர்..

    பாத் அஸ்கி சொக்கட்ஷே என்று சௌராஸ்ட்ர மொழியில் விருந்து உபச்சாரம் செய்த சௌராஸ்ட்ரர்களைப் பார்த்து பாராட்டியவர்...

    எம்ஜிஆர் அரசியல் வாழ்கையின் வெற்றிக்கு பெரிதும் துனை நின்றது அவர் வாயசைத்துப் பாடிய தத்துவப் பாடல்கள்தான்..

    அந்தப் பாடல்களுக்கு குரல் கொடுத்து உயிரோட்டம் வழங்கியதும் ஒரு சௌராஷ்டிரர்தான்..

    ஆம் அவர்தான் T M சௌந்தர் ராஜன்..

    அரசியல் கட்சியை எம் ஜி ஆர் துவக்கிய நேரத்தில்... இரட்டை இலைப் பாடலைப் பாடி அரசியல் வெற்றிக்கு இட்டுச் சென்றவர் T M S என்பதும் வரலாறு..

    நீ சு பெருமாள்
    கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி நூல் ஆசிரியர் பரமக்குடி... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •