Page 108 of 401 FirstFirst ... 85898106107108109110118158208 ... LastLast
Results 1,071 to 1,080 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #1071
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் /வாரமலர் -13/01/19


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1072
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -13/01/19

  4. #1073
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    All postings about Our MakkalThilgam matters too good... Mr.Loganathan 's register fine... Happy "Pongal" Greetings to All.........

  5. #1074
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்...

    நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றம் மோடுக்கு முழுசாக மாறிவிட்டது.

    ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதி.. சுட்டது எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறையை கட்டுப்படுத்த 9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

    எம்ஜிஆர், ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும்.ராயப்பேட்டையில் போலீசார் கடும் சிரமப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்...

    உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..!!

    கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....

    பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர் பிரச்சா ரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது.!!

    எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் சொல்லும்!!

    இன்னொரு பக்கம் சுடப்பட்டு கம்பீரமான குரல் போனதால் எம்ஜிஆரின் சினிமா அவ்ளோதான் என்றார்கள்.. டப்பிங் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்று கூட அறிவுரை சொன்னார்கள்.

    என்னை நேசிக்கும் தமிழக மக்கள், என் குரலை காரணம் வைத்து கைவிடமாட்டார்கள், நானே தத்தி தத்தி பேசுகிறேன்.. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம், அவர்கள் முடிவு..என்று எம்ஜிஆர் திடமாக இருந்துவிட்டார்.

    மக்கள் திலகத்தை எந்த அளவுக்கு மக்கள் நேசித்தா ர்கள் தெரியுமா? சுடப்பட்ட பின்தான் எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்பைக்காட்டிலும் தெறி ஹிட்....

    காவல்காரனில் தொடங்கி ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், நம்நாடு, அடிமைப்பெண் எங்கள் தங்கம், மாட்டுக்கார வேலன், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என அது ஒரு பெரிய பிளாக் பஸ்டர் பட்டியல்!!

    எம்ஜிஆர் சுடப்பட்டு தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மறக்கமுடியாத
    ஜனவரி12_1967....... Thanks..........

  6. #1075
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் இருந்தது என்னவோ பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத்தான்?

    ஆனாலும் நல்ல கருத்துகளுக்காக நல்ல தலைவர்களை கை காட்டுவதில் சிறிதும் புரட்சி தலைவர் தயங்குவதில்லை என்பதற்க்கு இந்த பாடல் காட்சிகள் சான்று...

    "இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் என்னப்படி பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி அது பஞ்சம் இல்லை எனும் "அன்னக்கொடி"...

    என்று அவர் பாடுவதுபோல் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கொள்கைகள் கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்....

  7. #1076
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் எஸ் வி அவர்கள் மெட்டுக்கள் இட்டு இட்டு மக்கள் திலகத்தின் தொடர் தொல்லை தாளாமல் எம் எஸ் வி அவர்கள் கடும் கோபம் கொண்டு எம் ஜி ஆரையே இசையமைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறி ஆர்மோனியப் பெட்டியை எம் ஜி ஆர் வீட்டிற்கே கொடுத்தனுப்பினார்
    பிறகு மக்கள் திலகம் சமாதானம் செய்து எம் எஸ் வி அவர்கள் தொடர்ந்து இசையமைத்தார் எனக்கு பாடல்கள் திருப்தி இல்லை என்று கூறி அவர் எதிர்பாரத தொகை கொடுத்து எம் எஸ் வி யை திக்குமுக்காடவைத்தார்
    உலக அரங்கில் சிறந்த இயக்குனர் சிறந்த தயாரிப்பாளர் என்று தமிழனின் பெருமை பேசப்பட்டது

    உள்ள மட்டும்
    அள்ளிக் கொள்ள
    மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம்
    துள்ளிச் செல்லும் உடல் வேண்டும் !

    73-ம் ஆண்டில் நம்மை அதிரவைத்த படம்

    உலகம் சுற்றும் வாலிபன்!

    இந்த வீடியோவை காணுங்கள் !.... Thanks...

    ஹயாத்!

  8. #1077
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பலருக்கு தெரியாத புது விஷயம்...
    எம்ஜிஆர் படத்தை அறிஞர் அண்ணா திறந்துவைத்தார்...
    வடசென்னை-பழைய வன்னாரபேட்டையில்
    சர்.தியாகராயா கலை கல்லூரி உள்ளது..
    இது 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது...
    நீதிக்கட்சி தலைவரின் பெயரில் இது உள்ளதால் இக்கல்லூரி
    நிதி நெருக்கடியில் தவித்தபோது
    அப்போதைய காங்கிரஸ் அரசு மூட திட்டமிட்டது..
    அக்கல்லூரி தாளாளர்கள் இதை
    பேரறிஞர் அண்ணாவிடம் தெரிவித்தனர்..
    பேரறிஞர் உடனே எம்ஜிஆரை அழைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றார்...அதற்கு எம்ஜிஆர் உடனே ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வந்த வசூலுடன் தனது பணத்தையும் போட்டு நிதி நெருக்கடியிலிருந்து அக்கல்லூரியை காப்பாற்றினார்...
    அந்த விழாவில் பேசிய அண்ணா அவர்கள், அக்கல்லூரி ஸ்திரமான நிலையை அடையும் வரை எம்ஜிஆரை அக்கல்லூரியின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும்படி கேட்டு கொண்டார்..
    அதன் படி எம்ஜிஆர் அக்கல்லூரியின் அறங்காவலராக
    1960 முதல் 1962 வரை இருந்தார்...
    அந்த சமயத்தில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை அக்கல்லூரி வளாகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்துவைத்தார்...அக்கல்லூரி இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது... Thanks Friends.........

  9. #1078
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாட்ஸாப்பில் எம் ஜி ஆர் குழக்கள் எத்தனையோ உள்ளன ஒவ்வொன்றிலும் எண்ணில் அடங்கா செய்திகள் அதுவும் மற்றவர்களுக்கு உதவிய செய்திகள் தான் பெரும்பங்கு வகிக்கின்றன
    அண்ணா அறிவாலயம் அமைக்க எம் ஜி ஆர் இரண்டு இலட்சம் கொடுத்தார் என்று படித்து முடிக்க உடன் செய்தி தியாகராய கல்லூரிக்கு எம் ஜி ஆர் உதவினார்
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் எம் ஜி ஆரை பொருத்தமட்டில் இது தவறு மக்கள் திலகம் தெய்மாகத்தான் இம்மண்ணில் பிறந்துள்ளார் அறியும் செய்திகள் இதைத் தான் ஊர்ஜிதப்படுத்துகின்றன !
    ....
    ஹயாத் ?.... Thanks....

  10. #1079
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இதயம் கனிந்த "பொங்கல்" திருநாள் நல்வாழ்த்துக்கள்... மக்கள் திலகம் அற்புதமாக கொண்டாடிய திருநாள்...

  11. #1080
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *DMK Fails*
    *கருணாநிதி எம் எல் ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார் என்று கூறும் முரசொலி ….*

    *எங்கள் தங்கம்" திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் மக்கள் திலகம் , செல்வி ஜெயலலிதா , கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..*

    *அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:*

    *முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் . உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த "எங்கள் தங்கம்" படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகபெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர். எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,...*

    *அதே விழாவில் திரு கருணாநிதி..*

    *மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி( செல்வி ஜெயலலிதாவைத் தான் இப்படி குறிப்பிடுகிறார் ) ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்..*

    *இதை அடுத்த நாள் முரசொலி தலைப்புச்செய்தியாக முழுப்பக்கம் பிரசுரித்தது என்பதை இப்பொழுதைய முரசொலியின் நன்றிகெட்ட தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறோம் …..* Thanks Friends..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •