Page 245 of 245 FirstFirst ... 145195235243244245
Results 2,441 to 2,448 of 2448

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

 1. #2441
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  💚இன்றைய சிந்தனை..( 19.03.2019..)..
  ...........................................

  "ஒரே முறைதான் வாழப் போகிறோம்..''..
  ...........................................

  ஆணவம் கொண்டவன் எப்பொழுதும் திமிரின் உச்சத்தில் இருப்பான்,

  இவன் நினைத்ததை செய்தே தீருவான், பிடிவாதம் கொண்டவன் என பல பெயரில் சொல்லிக்கொண்டு போகலாம்.

  அப்படிப்பட்ட ஆணவக்காரர்கள் அடக்கம் செய்யபப்ட்ட கல்லறையில் எழுதியவை வாசங்கள்...

  *உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..

  "உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

  *மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.

  இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு,இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."

  அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப் போனான்.

  அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது.,

  ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள்.

  இவ்வளவுதானா வாழ்க்கை..? ஆம்.,அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப் போனது.,

  நாம் *எதை* ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?

  நமது *பதவியா? *நாம் சேர்த்த சொத்து சுகங்களா?

  நமது *படிப்பா? *நமது *வீடா? *நம் முன்னோர்களின் நமக்காக சேர்த்து வைத்த சொத்தா?

  * நமது *அறிவா?* நமது *பிள்ளைகளா?*எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?

  ''ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கியபின் யாருமே நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

  கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் இன்றைய சமூகத்தில் வாழும் நாம்தான் எச்சரிக்கையோடு நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.

  ஆம்.,நண்பர்களே..,

  *பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து ,மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

  *ஒரே முறை வாழப் போகிறோம்.நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்.

  நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம்.

  அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.

  *பிறரை வாழ வைத்து வாழ்வோம்.*💐🙏🏻🌺...இந்த கட்டுரையில் "உண்ண உணவு, உடுக்க உடை"...... சொற்றொடர்கள் மக்கள் திலகம் வாழ்வியல் நடைமுறைகளை நினைவு படுத்துகிறார் பாருங்கள்... Thanks wa.,

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2442
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  Shivajibabu Murugesan பொன்மன செம்மலின் ரத்தத்தின் ரத்தங்களே இந்த படத்தில் புரட்சி தலைவர் படம் இல்லாதது குறித்து திருவண்ணாமலையை சேர்ந்த எனது நண்பரிடம் கேட்க பட்ட தகவல்...

  திருவண்ணாமலை தொகுதி சந்தவாசல் பகுதியை சேர்ந்த சில ( தினாகரனுக்கு வேண்டிய) ஆசாமிகள் புரட்சி தலைவரின் தொண்டர்களுக்கு அதிமுக எனும் ஆலமரத்தின் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட கீழ் தரமான செயல் இது...

  மக்கள் திலகத்தின் உண்மை விசுவாசிகளை அவர்கள் பக்கம் இழுக்க செய்யப்பட்ட செயல்...

  கடந்த மார்ச் 6ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொது கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது செருப்பை கழட்டி விட்டு புரட்சி தலைவரின் திரு உருவ படத்திற்கு மலர் மரியாதை செய்தார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்

  எங்கள் தங்கத்தின் புகழ் இவ்வயகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்...🙏🙏🙏

  குறிப்பு தேவை ஏற்பட்டால் என் நண்பரின் கைபேசி எண்ணையும் தருகிறேன்..... Thanks wa.,

 4. #2443
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  உண்மையான, எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்பொழுதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பழுதிலா பக்தர்கள் உள்ள குமுறகளின் சில பதிவுகள்...
  எங்களை வாழவைத்து கொண்டிருக்கும் மாபெரும் இயக்கமான அண்ணா திமுக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி அவருடைய ஆசீர்வாதத்துடன் என் உரையை துவக்குகிறேன்

  என்று இப்படி பேச அண்ணா திமுக இரட்டை தலைமைக்கோ , அல்லது மந்திர்களுக்கோ கட்சி நிர்வாகிகளுக்கோ ஏன் மனம் வரவில்லை ?
  கட்சி வேண்டும் ,பதவி வேண்டும் ஆனால் எம்ஜிஆர் படத்தை மேடையில் பெரியதாக வைக்க மனமில்லை .எம்ஜிஆர் புகழ் பாட வாய் வரவில்லை .
  இவர்களை எம்ஜிஆர் பக்தர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் ?... Thanks wa.,

 5. #2444
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  இடையில் வந்தவர்கள் இடையில் போகிறார்கள் .கவலை பட ஏதுமில்லை . உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதா துரத்தி அடித்தார் .அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள் . எம்ஜிஆரை மறந்த இன்றைய அதிமுக கூடாரம் இனியாவது விழித்து கொள்ளட்டும் .
  எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டும் விளம்பரங்களில் மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எம்ஜிஆர் படத்தை போட்டும்
  எம்ஜிஆரை மறந்து விட்ட நபர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு எம்ஜிஆரை முன்னிலை படுத்த விரும்பாதது .இன்று மக்கள் ஜெயலலிதாவை மறந்து வருகிறார்கள் ,இது உண்மை .... Thanks wa.,

 6. #2445
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  எம்ஜிஆர் பக்தர்களுக்கு ஜெயலலிதாவை பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன ?

  1971ல் மக்கள் திலகத்தை பற்றி மறைமுகமாக தாக்கி சிவாஜி விழாவில் பேசியது .

  1971ல் ரிக் ஷாக்காரன் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது .

  1984ல் கட்சியில் பிரச்சனைகளை உருவாக்கியது .

  1987ல் புரட்சித்தலைவர் வெறுக்கும் அளவிற்கு அரசியல் நடவடிக்கைகள் செய்தது

  1988ல் கட்சியை பிளவு படுத்தியது சின்னத்தை முடக்கியது

  1989ல் மீண்டும் அதிமுக .இரட்டை இலை சின்னம் மீட்பு . ஆனாலும் எம்ஜிஆரை பெயரளவில் உச்சரித்தது

  1991 -2016 தொடர்ந்து எம்ஜிஆர் புகழ் அறவே நிறுத்தப்பட்டு விட்டதால் எம்ஜிஆர் பக்தர்களின் கோபத்திற்கு ஆளானது .

  இப்போது புரிந்து கொள்ளுங்கள் . ..... Thanks wa.,

 7. #2446
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
  வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
  அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
  தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
  நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான, கோடனுகோடிகணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
  இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
  அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
  இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை ...... Thanks wa.,

 8. #2447
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு என்றுமே பிடிக்காத செயல்கள் .

  1. காலில் விழும் கலாச்சாரத்தை ரசிப்பது .
  2. குனிந்து கைகூப்பி வணங்குவது
  3. அளவிற்கு மேல் புகழ்வது
  4. நான் என்ற திமிர் கொள்வது
  5. தொண்டர்களை உதாசீனம் செய்வது
  6. ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது
  7. நல்லவர்களை ஒதுக்கி வைப்பது
  8. கூடா நட்பை விரும்புவது
  9. மிரட்டி பணிய வைப்பது ....... Thanks wa.,

 9. #2448
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,585
  Post Thanks / Like
  எம்ஜிஆர்

  சொத்து சேர்க்கவில்லை
  வழக்கில் சிக்கவில்லை
  நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
  குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
  எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
  சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
  கண்ணீரை கண்டதில்லை
  கூடா நட்பை அனுமதித்ததில்லை

  சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
  மகன்கள் மகள்கள் பேரன்கள்
  பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
  உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை

  மக்களை ஏமாற்றியதில்லை
  தொண்டர்களை வெறுத்ததில்லை
  நன்றி மறந்தவரில்லை
  உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்

  உலகமெங்கும் வாழும் கோடானு கோடிக்கணக்கான மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
  குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை............. Thanks wa.,

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •