Page 43 of 401 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #421
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு லோகநாதன் சார், இலங்கை திரு. சதானந்தன் அவர்கள் கூறியதால் மட்டுமே மக்கள் திலகம் இலங்கை திரைப்பட வசூல் சக்ரவர்த்தி அல்ல, அங்கும் உண்மையில் புரட்சி நடிகர் அவர்களே திரையுலக வசூல் சக்ரவர்த்தி... அதனை எப்போதும் நிரூபித்தார் நம் மக்கள் திலகம்...👍 👌...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    மக்கள் திலகம் அவர்தான் என்றும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி என்பதற்கு இந்த புயல், மழையிலும் சென்னையில் "உழைக்கும் கரங்கள்" ஓடி கொண்டிருப்பதே அத்தாட்சிகள்...👌 👍...

  4. #423
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    20/07/1972 அன்று பினாங் (மலேசியா ) வருகை புரிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது . புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் மலேசியா பிரபல நடிகர் திரு.ராம்லீ .பினாங் நகரின்
    பிரபல ஸ்டேடியம் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது . அதற்கு $3 கட்டணம் மற்றும் $10, $20 ஆகியவை கிடைக்கப் பெறாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
    அரங்கத்தின் முன் திரண்டனர் .

    இரு பெரும் நடிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரசிகர்கள் வாழ்த்தொலியும் முழக்கங்களும் எழுப்பினர் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் நாகேஷ்,நடிகை ஜெயலலிதா ஆகியோர் உடன் சென்றிருந்தனர் .பினாங்கில் அப்போதைய முதல்வர் டாக்டர் லிம் சோங் யூ அவர்களையும் மக்கள் திலகம் சந்திக்க ஏற்பாடு
    செய்யப்பட்டிருந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் இந்த வருகை வரலாற்று சிறப்பு மிக்கது ஏனென்றால் விமான நிலையமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த புகைப்படத்தை மலேசியாவை சார்ந்த திரு. மணிவாசகம் அவர்கள் கொண்டுவந்து போர்ட் பிளேயரில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ரசிகர்கள் /பக்தர்களுக்கிடையே பலத்த கரகோஷத்தோடு காண்பித்தார் .

  5. #424
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இவர்கள்
    தலைவர்கள்,,,

    ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது.

    எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள்.

    அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார்.

    பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

    கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

    மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன்.

    அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்.

    அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள்.

    அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…

    பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார்.

    அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது.

    அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.

    ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

    இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள்.

    இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார்.

    உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘

    ’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’.
    ...
    இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."... Thanks Friends...

  6. #425
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சில விவஸ்தை கெட்ட ஜென்மங்கள் ஊர், நாடு, உலகம்... என்று உண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறைத்து, திரித்து வாங்கிய காசுக்காக பொய்யை மெனக்கெட்டு உமிழும் ஒரு சில நாதாரிகள் மக்கள் திலகம் அவர்களின் இணையே இல்லா வள்ளல் தன்மையினை கொஞ்சமும் கூச்சப்படாமல் வேறு நடிகர்களோடெல்லாம் ஒப்பிட்டு மிஞ்சினார் கெஞ்சினார் என வீண் வாதங்கள் செய்ய விட்டுள்ளனர்.. அந்தோ... பரிதாபமாக இருந்தது, மானமுள்ள எவரும் நன்கு புரிந்து கொண்டு அவர்கள் தங்கள் மான மரியாதையை காவந்து செய்யட்டும்...

  7. #426
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -25/11/18

  8. #427
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று (25/11/18) மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பிறவி கண்ட தனிப்பிறவி என்கிற தலைப்பில் புரட்சி தலைவரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன . அதன் பேனர் மற்றும் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு

  9. #428
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #429
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #430
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •