Page 54 of 56 FirstFirst ... 4445253545556 LastLast
Results 531 to 540 of 554

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #531
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    1,265
    Post Thanks / Like
    2017
    ________
    ராணி சீதை ஹால்
    ________________________
    வீரப்பன் அவர்கள் தலமையில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா !
    ___________
    இங்கு அனைத்து கட்சியின் தலைவர்களும் எம் ஜி ஆர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டனர் இதோ இந்த கடிதம் பாருங்கள் எம் ஜி ஆர் மறைவிற்கு பிரபாகரன் எழதிய கடிதம் இது ஒன்றே போதும் தமிழர்களுக்கு அவர் செய்த உதவிக்கு எடுத்துக்காட்டு !

    கடிதத்தை காட்டியவர்
    ப ம க தலைவர்
    டாக்டர் ராமதாஸ் அவர்கள்!

    காமராஜர் அரங்கம்
    _____________________
    நாம் பிரபாகரன் அவர்களை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினால் அதில் 45 நிமிடங்கள் மக்கள் திலகம் செய்த உதவிகளைப் பற்றித்தான் பேசுவார் !


    வை கோ அவர்கள்!


    ஹயாத்!... Thanks Friends...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #532
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    1,265
    Post Thanks / Like
    நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழா வேலூரில் 10 -12 - 1958 அன்று நடந்துள்ளது. அதற்கான விளம்பரம் இது. வேலூர் தாஜ் தியேட்டரில் நாடோடி மன்னன் வெற்றி விழா கொண்டாடி உள்ளது. இந்த விளம்பரத்தில் கீழே விழா நடக்கும் அன்று தாஜ் கொட்டகையில் பகல் 12 மணிக்கு ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளது. நிச்சயம் அதற்கான செலவு புரட்சித்தலைவர்தான் செய்திருப்பார் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தன் படத்தின் வெற்றி விழாவன்று படம் பார்க்க வரும் ஏழைகளுக்கு சோறு போட வேண்டும் என்ற எண்ணம் எத்தனை நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு வரும். எந்த நடிகரும் தயாரிப்பாளரும் தங்கள் படத்தின் வெற்றி விழாவில் தியேட்டரிலேயே ஏழைகளுக்கு சாப்பாடு போட்ட வரலாறு இல்லை. இனிமேலும் யாரும் அப்படி செய்யப்போவது இல்லை.

    அதிலும் முக்கியமாக இதுபோன்ற அன்னதானம் எல்லாம் புரட்சித் தலைவர் விளம்பரப்படுத்தியதே இல்லை. இந்த போஸ்டரில் கூட இலவச உணவு ஏற்பாடு என்று அவர் பெயர் இல்லை.இதெல்லாம் புரட்சித் தலைவர் செலவு இல்லாமல் யார் அப்பன் வீட்டு செலவு. புரட்சித் தலைவரின் கடல்போன்ற வள்ளல்தன்மையில் இது ஒரு துளிதான். எனவே தொலைக்காட்சி விவாதங்களில் மதி மாறன்கள் புரட்சித் தலைவரை விட வேறு நடிகர்கள் நிறைய தானம் செய்தார்கள் என்று என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் எட்டாவது வள்ளல் என்றால் அது புரட்சித் தலைவர்தான். இது மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்து விட்டது. அதை யாரும் அழிக்க முடியாது.... Thanks Friends...

  4. #533
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    1,265
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான நீதிக்குத் தலைவணங்கு வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
    எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி




    உரிமைக்குரல் படத்தில் எம்.ஜி.ஆரின் அசத்தல் போஸ்.


    எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு நின்றுபோன மற்றும் ஒரு படமான நானும் ஒரு தொழிலாளி படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர்.
    M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.
    ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் காதலிக்க நேரமில்லை படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. புதுமுக நடிகர்களை போட்டு கலரில் காதலிக்க நேரமில்லை படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.
    அன்று சிந்திய ரத்தம் படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.
    ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.
    ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம் என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
    இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
    வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
    ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
    அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும் என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய உரிமைக்குரல் திரைப்படம்.
    அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே அன்று சிந்திய ரத்தம் படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
    அதுதான் எம்.ஜி.ஆர்.


    தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த தசரா புல்லோடு படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க உரிமைக்குரல் ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
    நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு... பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய உரிமைக்குரல், 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

  5. #534
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    1,265
    Post Thanks / Like
    மக்கள திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter என்பதை திரை உலகிலும் அரசியல் உலகிலும் நிருபித்து காட்டியவர் .

    மலைக்கள்ளன் - நாடோடி மன்னன் - திருடாதே - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா - அடிமைப்பெண் ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் - இதயக்கனி போன்ற படங்களின் தாக்கம் எம்ஜிஆர் ஒரு trend setterஎன்பதை நிருபித்து .

    1957 / 1962/1967 /1971 தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கியது . 1977/1980/1984 தேர்தல்கள் எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.1991/2001/2011/ 2016
    தேர்தல்களில் எம்ஜிஆர் அரசாங்கம் உருவானது . உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் ..... Thanks Friends...

  6. #535
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    1,265
    Post Thanks / Like
    அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
    கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
    மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
    1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
    1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
    சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
    கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
    எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
    அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
    எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
    மக்கள் ஏற்று கொண்டார்கள்
    தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
    இன்றும் உழைக்கிறார்கள் ..
    நாளையும் உழைப்பார்கள்
    இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
    அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
    உள்ளவரை அழியாது .
    சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .... Thanks Friends...

  7. #536
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    5,783
    Post Thanks / Like
    கோவை

    ராயலில்

    வெற்றி

    நடைபோடுகிறது

    தனிப்பிறவி

  8. #537
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    5,783
    Post Thanks / Like

  9. #538
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    5,783
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 7th December 2018 at 11:32 PM.

  10. #539
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    5,783
    Post Thanks / Like

  11. #540
    Moderator Diamond Hubber ravichandrran's Avatar
    Join Date
    Aug 2012
    Location
    TIRUPUR
    Posts
    5,783
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •