Page 361 of 401 FirstFirst ... 261311351359360361362363371 ... LastLast
Results 3,601 to 3,610 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00.மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ள புரட்சித்தலைவரின் அபிமானிகள் ஒன்று கூடும் விழாவாம்... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.புகழ்பாடும் ஐம்பெரும் பெருவிழா ! சிறப்பான முறையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, அபுதாபி, குவைத், பிரான்ஸ், கனடா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்தும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் அமைபுகளை சார்ந்த பக்தர்கள் யாவரும் கலந்து கொள்வது மட்டுமல்லாது.... அரபு ஆமீரகத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஒரு முக்கிய இளவரசர் தலைவரின் இந் நிகழ்ச்சிக்கு அபுதாபி திரு. சைலேஷ் பாசு அவர்களுடன் தனி விமானத்தில் வருகிறார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில் இன்னிசை "லஷ்மன்ஸ்ருதி " இசைநிகழ்ச்சி , தலைவருடன் கலை அரசியல் பங்குகொண்ட பல துறைகளை சார்ந்த சான்றோர்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றனர். மேலும் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது..... விழா ஒருங்கிணைப்பு : தலைவரின் அனைத்து அமைப்புகள். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். விழா ஒத்துழைப்பு : பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.நற்பணி சங்கம் மற்றும் நம்முடன் ஒன்றாக இணைந்த சென்னை நகர எம்.ஜி.ஆர் அமைப்புகள் ........... Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி ஞாயிறு அன்று நடைப்பெறும் ... தலைவரின் புகழ்பாடும் ஐம்பெரும் விழாவில்! 102 வது மனிதநேய விழா ! கலையுலகில் மக்கள் திலகம் 85 ம் ஆண்டு விழா! புரட்சித் தலைவரின் நம் நாடு காவியத்தின் பொன்விழா ! தலைவருடன் பயணித்த சான்றோர்களுக்கு சிறப்பு செய்யும் விழா! தலைவரின் திரைப்பட பாடல்களின் இசைத் திருவிழா! மற்றும் கவிதையரங்கம்
    கருத்தரங்கம் , நம்நாடு திரைப்பட பொன்விழா மலர் வெளியீடு, தலைவரின் சமபந்தி போஜனமாக வருகின்ற தலைவர் உள்ளங்களுக்கு காலை மதியம் இரவு சமபந்தி சாப்பாடு வழங்கப்படுகிறது. தலைவரின் விழா என்றால் வயிறார உணவளித்து அவர்கள் உள்ளமெல்லாம் குளிர்வது தான் தலைவர் விழா நடத்தியதற்கே பெருமையாகும் வருகின்ற தலைவரின் அபிமானிகளுக்கு மனநிறைவுடன் கொடுப்பது தான் விழாவின் சிறப்பாகும். இதைவிட தலைவருக்கு புகழ்பாடும் சிறப்பு வேறு ஏதும்மில்லை. நன்றி. திரு. அபுதாபி சைலேஷ் பாசு அவர்கள் உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,

  4. #3603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தெய்வத்தின் வெற்றிக்கும், கொடை தன்மைக்கும், கழகம் இரண்டு பட்டு தோல்வி கண்டபோது எந்தவித ஈகோவும் பார்க்காமல் தம் கணவரின் கழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் விலகி நின்று வெற்றிக்கு துணை புரிந்ததில் ஆகட்டும்,
    தன் சொந்த சொத்து ராயப்பேட்டை தற்போதைய அதிமுக தலைமை கழகம் இலவசமாக கொடுத்து புரட்சி தலைவரின் ஈகை குணத்துக்கு தானும்
    சளைத்தவர் அல்ல என்று புரட்சி தலைவருக்கு பெருமை சேர்த்த ஜானகி எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று😢
    வணங்குவோம் அன்னையை!............... Thanks wa.,

  5. #3604
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தான்பட்ட கஷ்டங்களை மறக்காமல் கஷ்டகாலத்தில் தனக்கு உதவியவர்களைத் தேடி சென்று உதவி செய்யவே தான் நல்ல நிலைக்கு வந்து சம்பாதித்த செல்வத்தைப் பயன்படுத்திய நினைத்ததைமுடிப்பவன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நன்றி மறவாத நல்லமனத்தில் அனைவருக்கும் இன்றையநாள் இனிதாகவே இருக்கட்டும்......... அன்புடன். மதுரை.எஸ் குமார்.... Thanks wa.,

  6. #3605
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று அன்னை ஜானகி அவர்களின் 23 வது நினைவு தினம். திருக்கோவில் ராமாபுரம் தோட்டத்துக்கு காலையில் சென்று அன்னை ஜானகி அவர்களுக்கு மலர் அஞ்சலி செய்தேன். அன்புடன் :. சௌ. செல்வகுமார்......... Thanks wa.,

  7. #3606
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது கதை அல்ல நிஜம்
    ------------------------------------------------
    பாகனேரி என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தற்போதும் அதிமுகவில் இருக்கிறார் ;

    ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.

    எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால் எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார். எம்ஜியாரை எதிர்த்து கடுமையாக பொது கூட்ட மேடைகளில் விமர்சிப்பார் ;

    தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை அடித்து தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாண செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு , நான் கல்யாணத்துக்கு வந்தா வரவேற்ப்பு,க ட்சிக்காரனுக்கு சாப்பாடு அது-இதுன்னு
    எக்கச்சக்கமா செலவு வரும். நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி என தனது நரி சிரிப்பை உதிர்த்து விட்டு இருக்கிறார். .

    உடைந்து போனார் அந்த சிவகங்கை திமுக காரர் ; தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்ச கொடுத்தவர்.
    பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்... புரட்சி தலைவரை பாப்போம் " என இழுத்திருக்கிறார்.

    சிவகங்ககாரருக்கோ எம்ஜியாரை வச்சு
    நாடகம் போட்ட காலத்துல பழக்கம்.

    அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு தொடர்பு விட்டு போச்சு ; அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும் என தயங்கியிருக்கிறார்.

    நீ வா மாமா... தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.. என தைரியம் சொல்லி அழைத்து சென்றார். முதல்வர் எம்ஜியாரை வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர். காரை நிறுத்தி அருகில் அழைத்து இங்கேயே இருந்து சாப்பிட்டு வெய்ட் பண்ணுங்க ; கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன் என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

    மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில் ஒரு குட்டித்தூக்கம். தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

    வந்தவர்களை வரவேற்று சாப்பிட்டீங்களா எனக்கேட்டு , என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
    திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
    ஏழாயிரம் கேட்டு கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார். புரட்சி தலைவர் ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு... தனது உதவியாளரிடம் சொல்லி...
    20,000 ரூபாய் வரவழைத்து கொடுத்து விட்டு , அந்த கட்சியிலேயே இரு... நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் பொன்மனச்செம்மல் .

    ஊருக்கு வந்த சிவகங்கை காரரும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவிலும் சேராமல் அரசியலை விட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்தும் போய் விட்டார்.

    சொந்த கட்சிக்காரனுக்கு உதவாத இந்த கோபாலபுரத்து கோயபல்ஸ் தமிழினத்திற்காக ரத்தம் சிந்துவேன் என்று புழுகு மூட்டையை இன்னமும் அசராமல் அவிழ்த்து விடுகிறார்...

    புரட்சி தலைவர் மணக்கும் சந்தனம்.
    கருணாநிதி நாற்றமடிக்கும் சாக்கடை
    என்பதற்கு இந்த உதாரணமே போதும் !............. Thanks wa.,.....

  8. #3607
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #திரைத்துறையின் #முதல் #பெண் #முதலமைச்சர்

    இன்று அவரது நினைவு தினம்.

    ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படி ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான வி.என்.ஜானகி ராமச்சந்திரன்.

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வைக்கத்தில், 1923ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்தவர் வைக்கம் நாராயணி ஜானகி. இதுதான் பின்னாளில் வி.என். ஜானகி என்றானது.

    இயக்குநர் கே.சுப்ரமணியம், 1937ஆம் ஆண்டு தனது 'மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்' நிறுவனம் மூலம் 'இன்பசாகரன்' என்ற திரைப்படத்தில் 13 வயது வி.என்.ஜானகியை நாட்டிய நடிகையாக அறிமுகம் செய்தார்.

    துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்தின் நெகடிவ் எரிந்ததால்
    படம் வெளிவரவில்லை.,1940ஆம் ஆண்டு 'கிருஷ்ணன் தூது' என்ற திரைப்படத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ,கே.எஸ்.

    தொடர்ந்து மன்மத விஜயம், கச்ச தேவயானி, மும்மணிகள், சாவித்திரி, அனந்த சயனம், கங்காவதார், தேவ கன்யா, ராஜா பர்த்ருஹரி, மான சாம்ரட்சனம் , பங்கஜவல்லி உள்பட சிறுசிறுவேடங்கள் கிடைத்தன.

    1943-ல் தேவகன்யா, சகடயோகம், சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன. 1947ல் அவருடைய 18-வது படமான 'ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் முதன்முறையாக பிரதான கதாநாயகி வேடம் கிடைத்தது.

    கதாநாயகன் பி.எஸ். கோவிந்தன். இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த வி.என்.ஜானகி நடிப்பில் அசத்தியிருப்பார்.1948-ல் வெளியான எம்.கே.தியாகராஜ பாகவதர் உடன் நடித்த 'ராஜமுக்தி' திரைப்படம் வி.என் ஜானகிக்கு பெரும்புகழைத் தேடிக்கொடுத்தது.

    அவரின் வாழ்க்கையையும் திசைமாற்றியது அந்தப் படம்.படத்தில் நடித்த மக்கள் திலகம் எம் ஜி ஆருடன் அவருக்கு நட்பு உருவானது. மோகினி, மருத நாட்டு இளவரசி, நாம் படங்களில் அவர் எம் ஜி ஆருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சூழல் வந்தது.

    இப்போது எம் ஜி ஆர் கதாநாயகனாக ஆகிவிட்டிருந்தார். இதனிடையே 'லைலா மஜ்னு', 'வேலைக்காரி படங்கள் வெளிவந்தன.'நாம்' படத்துடன் திரையுலகுக்கு முழுக்குப் போட்டுவிட்டு எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியாக ஆனார் ஜானகி.

    இந்தத் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்திட்டவர், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர்.

    எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் வாழ்வில் ஜானகிக்குப் பெரும்பங்கு உண்டு. பிரபலமான கதாநாயகியாக இருந்தாலும் திரைத் துறையில் இருந்து ஒதுங்கிய பின், ஒரு குடும்பப் பெண்மணியாக, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பக்கபலமாக இருந்தவர், ஜானகி.

    ராமாவரம் தோட்டத்தில் எப்போதும் சமையல் அடுப்பு எரிந்த வண்ணம் இருக்கும்.ஏழை-எளியவர் ஆனாலும் சொகுசு காரில் வந்திறங்கும் தொழிலதிபர்களானாலும் சாப்பிடவைக்காமல் அனுப்பமாட்டார்கள், எம்.ஜி.ஆர் - ஜானகி தம்பதி.

    படப்பிடிப்புக்காக வெளிநாட்டுப் பயணங்களின்போது, மனைவி ஜானகியையும் உடன் அழைத்துச் செல்வார், எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின்னர் எம்.ஜி.ஆர் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் மனைவி ஜானகிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஜானகியும் அவற்றில் குறுக்கிட்டது இல்லை.

    1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நோய் வாய்பட்டு, முதலில் அப்போலோவிலும் பிறகு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட போது, ஒரு தாயைப்போல கவனித்து எம்.ஜி.ஆர் உடல்நிலை சீராகித் திரும்பிவந்ததற்கு ஜானகி அம்மையார், ஒரு முக்கிய காரணம் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

    1986-ம் ஆண்டு ஜானகிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்நாளில் எம்.ஜி.ஆர் துடிதுடித்துப் போனார். அத்தனை அன்பு, தன் துணைவியார் மீது எம்.ஜி.ஆருக்கு!

    1987 டிசம்பர் 24-ல், தமிழகத்தை நிலைகுலையவைத்த எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எதிர்பாராத அந்தச் சூழலில் அடுப்பங்கரையில் இருந்து ஆட்சிக்கட்டிலுக்கு வந்தார் ஜானகி.

    அற்ப ஆயுசில் ஆட்சி கவிழ்ந்தாலும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமை பெற்றார், ஜானகி.இந்த நேரத்தில், 1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த கட்சி, இரண்டு அணிகளாக தேர்தல் களத்தில் நின்றன.

    தேர்தலில் தோல்வி அடைந்த ஜானகி கட்சி தேர்தல் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொண்டார். கழகத்தவரின் ஆதரவு பெருமளவு ஜெயலலிதாவுக்கே உள்ளதை உணர்ந்தார்.

    வீம்புக்காக தொடர்ந்து போராடி, கணவர் உருவாக்கிய கட்சியைக் காணாமல்போகச் செய்வதை விரும்பாமல் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார்.

    தனது அணியையும், கட்சி அலுவலகத்தையும் முறைப்படி ஒப்படைத்து விட்டு, கவுரவமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    தன் இறுதிக்காலத்தில் பேசமுடியாத்தால் பெரும் சிரமப்பட்ட எம்.ஜி.ஆர் தன்னைப்போன்று அடுத்த தலைமுறை சிரமப்படக்கூடாது என தான் வாழ்ந்த வீட்டையே காதுகேளதாதோர் பள்ளியாக மாற்றினார்.

    கணவரின் இறுதிஆசையை நிறைவேற்ற அந்த பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக்காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 மேமாதம் தனது 73-வது வயதில் மறைந்தார்.

    (மீள்........ .)................... Thanks wa.,

  9. #3608
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலக சக்கரவர்த்தி, மக்கள் திலகம் வழங்கும் "அரசகட்டளை"... இன்று 19-05-2019 52 ஆண்டுகள் நிறைவு செய்து 53ம் வருடம் தொடக்கம்... எப்பொழுதும் பொருந்தும் evergreen வசனங்கள்... காட்சி அமைப்புகள்... என்றும் நம் உள்ளத்தில் வாழும் நிதர்சன காவியம்...

  10. #3609
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சித்தலைவர்எம்ஜிஆர் எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்

    1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’
    இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும்.
    கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த்தும்’’ என்று கூறியுள்ளார்.

    இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

    பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக்கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.
    அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும் குறிப்பாக இன்றைய அரசியல்வாதிகள் மனதில்கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன்னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப்போகிறோம் அரங்கண்ணல்.’’

    அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார்.

    ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான்,

    மக்களின் மனங்களில்...

    #இதயதெய்வம்எம்ஜிஆர் #உச்சநிலையிலேயே #இருந்தார்
    #இருக்கிறார்
    #இருப்பார்!............👍 👌 💐....... Thanks wa.,

  11. #3610
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி முதல் (17/05/19) சென்னை அகஸ்தியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
    "தர்மம் தலை காக்கும் " தினசரி மாலை காட்சி மட்டும் திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •