Page 173 of 401 FirstFirst ... 73123163171172173174175183223273 ... LastLast
Results 1,721 to 1,730 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #1721
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.

    அருமையாக தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி.

    ராணி சம்யுக்தா வெற்றிப்படமல்ல .

    ம.மீ. சுந்தர பாண்டியன் சுமாரான வெற்றி .

    பொங்கலையொட்டி வெளியான சக்கரவர்த்தி திருமகள் மகத்தான வெற்றிப்படம் .

    பொங்கலுக்கு சற்று முன்பு வெளியான ரகசிய போலீஸ் 115, பணத்தோட்டம்
    ஆகியன விடுபட்ட வெற்றிப்படங்கள் .தாய்க்கு தலைமகன் சுமாரான வெற்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1722
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் 15/02/19



  4. #1723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் மக்கள் திலகம் திரி இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல இதர உறுப்பினர்கள், எவ்வளவு பணிகள் இருந்தாலும், சில காலங்கள் அவற்றில் அட்டவணை நேரம் பார்த்து கொண்டு எங்கு தேடினாலும் இனி கிடைக்கவே இயலாத தலைவரின் சில துளிகள் சாதனைகள் எடுத்து ஆவணங்கள் பதிய உரிமையோடு வேண்டுகிறோம்...

  5. #1724
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -20/2/19




  6. #1725
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் 100 | 86 - அப்படியேதான் இருந்தார் .

    M.G.R. #ரசிகர்களில் #நடிகர்களும் பலர் உண்டு.
    அப்படிப்பட்ட ரசிகரான ஒரு நடிகர் காமெடி வேடங்களில் கலக்கியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்றாலே அவர்கள் தோற்றமே சிரிப்பை வரவழைக்கும்.

    ஆனால், நகைச்சுவை நடிகர்களிலேயே அழகான தோற்றம் கொண்டவர் அவர். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த அந்த நடிகர் #தேங்காய் #சீனிவாசன்!

    எம்.ஜி.ஆர். மீது தீவிரமான அன்பு கொண்டவர் தேங்காய் சீனிவாசன்.
    வெறிபிடித்த ரசிகர் என்றுகூட சொல்லலாம். ‘கல் மனம்’ என்ற நாடகத் தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் சீனிவாசன் என்ற இவரது பெயருக்கு முன்னால் ‘தேங்காய்’ சேர்ந்து கொண் டது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், கட்சியிலும் சேர்ந்தார். எம்.ஜி.ஆருக்கும் தேங்காய் சீனிவாசன் மீது #மிகுந்த அன்பு.

    தனக்கு நெருக்கமானவர்கள் தவ றான பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்துக் கொள்வதையோ, அநாவசியமாக செலவு செய்வதையோ எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார்.

    ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட வர் நகைச்சுவை நடிகர் #ஐசரி #வேலன்.

    ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அவர் எம்.ஜி.ஆரிடம், ‘‘அண்ணே, எனக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கச் சொல்லுங்க. குடும்ப செலவை சமாளிக்க முடியலை’’ என்றார்.

    அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘வரும் சம்பளத் தில் குடும்ப செலவை சமாளிக்க முடி யலை என்று சொல்லாதே.

    இந்த வருடத் தில் நீ எத்தனை படங்களில் நடித்தாய்? அதற்கு மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினாய்? உன் குடும்பத்துக்கான செலவினங்கள் என்ன?’’ என்று கேட்டு அறிவுரை கூறினார். எம்.ஜி.ஆர். சொல் வதில் உள்ள நியாயத்தை ஐசரி வேலன் உணர்ந்து கொண்டார்.
    இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பின்னர், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். இணை அமைச்சர் அந்தஸ்துக்கு இணை யான ‘#பார்லிமென்டரி செக்ரட்டரி’ பதவியி லும் ஐசரி வேலனை எம்.ஜி.ஆர். நியமித்தார்!

    தேங்காய் சீனிவாசன் சொந்தமாக படம் எடுக்க ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆலோசித்தார்.

    ‘‘சொந்தப் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வேண் டாம்’’ என்று எம்.ஜி.ஆர். தடுத்தார்.

    ஆனால், அதையும் மீறி படத் தயாரிப் பில் தேங்காய் சீனிவாசன் ஈடுபட்டார்.

    அவர் கையில் இருந்த பணம் படப் பிடிப்பு செலவுகளுக்காக கரைந்துவிட் டது. பணமும் புரட்ட முடியவில்லை. மேற் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து நிலைமையைச் சொன்னார்.

    ‘‘நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, கேட்டியா? பட்டால்தான் புத்தி வரும். போ… போ…’’ என்று எம்.ஜி.ஆர். கோபமாகப் பேசி அவரை அனுப்பிவிட் டார்.

    இருந்த கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோன நிலையில், ஏமாற்ற மும் சோகமுமாய் நெடுநேரம் கழித்து இரவில் வீடு திரும்பினார்.

    அங்கே தேங்காய் சீனிவாசனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது உதவியாளர்கள் மூலம் #பெரும் #தொகையை அவர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியிருந் தார்.

    விஷயம் அறிந்து, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கோரியதுடன், உதவிக்காக கண்களில் நீர்மல்க நன்றியும் தெரிவித்தார் தேங்காய் சீனிவாசன்!

    ‘நினைத்ததை முடிப்பவன்’ படத் தில், கிராமத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆர்., தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள மற்றவரைப் போல நடிக்க வேண்டிய நிலை. அடுக்கு மாடி ஒன்றில் இருந்து கீழே பார்க்கும் எம்.ஜி.ஆர்., அங்கு சுக்கு காப்பி விற்றுக் கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனை மேலே அழைப்பார். படத்தில் இருவருக் கும் ஏற்கெனவே அறிமுகம். தனக்கு ஆரம் பத்தில் காசே வாங்காமல் சுக்கு காப்பி கொடுத்த தேங்காய் சீனிவாசனுக்கு 500 ரூபாய்க்கு காசோலை கொடுக்கு மாறு நடிகை லதாவிடம் சொல்வார் எம்.ஜி.ஆர்.! அப்போது அது பெரிய தொகை.

    பணம் கிடைத்த மகிழ்ச்சியில் வியா பாரம் செய்யும் சுக்கு காபி வைத்திருக் கும் தூக்கை மறந்துவிட்டு செல்லும் தேங்காய் சீனிவாசனிடம்,

    ‘‘பணம் வந்த தும் பழசை மறந்துட்ட பாத்தியா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார். தனது தவறை ஒப்புக்கொள்ளும் தேங்காய் சீனிவாசன்,

    எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. #அடுக்குமாடிக்கு வந்தாலும் #பழசை #மறக்காம #ஸ்டெடியா இருக்கே.
    இப்படியே இரு துரை’’ என்று #வாழ்த்துவார்.!

    அப்படியேதான் இருந்தார் எம்.ஜி.ஆர்.

    தி இந்து............ Thanks wa.,......

  7. #1726
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1727
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1728
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1729
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  11. #1730
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •