Page 369 of 401 FirstFirst ... 269319359367368369370371379 ... LastLast
Results 3,681 to 3,690 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3681
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா நாளிதழ் – 8 ஜூன் 1983
    சைதை துரைசாமிக்கு செல்வி ஜெயலலிதா பாராட்டு.
    புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய்.
    சென்னை ஜூன் 8: புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய் என்று சைதை துரைசாமியை சிந்தனை செல்வி ஜெயலலிதா பாராட்டினார்.
    சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் சிந்தனை செல்வி ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது : -
    இந்தக் கூட்டம் சைதை துரைசாமிக்கு பாராட்டு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைதை துரைசாமி இளைஞர், லட்சிய வீரர், புரட்சித் தலைவர் பட்டாளத்தின் துணிச்சல் மிக்க சிப்பாய். புரட்சித் தலைவர் வெட்டி வா என்று கட்டளையிட்டால், வெட்டி கட்டிக் கொண்டு வருபவர் சைதை துரைசாமி.
    1972ம் ஆண்டு நமது இதய தெய்வமாம் புரட்சித் தலைவர் அவர்களை கருணாநிதி கழகத்திலிருந்து வெளியேற்றினார். 26 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே செய்த முடிவு அது. புரட்சித் தலைவரை கழகத்திலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் கருணாநிதி நின்றுவிடவில்லை. தனது செயலை நியாயப்படுத்திப் பேச இதே சைதைக்கு அப்போது கருணாநிதி வந்தார்.
    கருணாநிதி பேச எழுந்தபோது ஒரு இளைஞர் மேடைக்கு வந்தார். கருணாநிதிக்கு 26 எலுமிச்சம் பழங்கள் கோர்த்த மாலையை அணிவித்தார். அந்த இளைஞர்தான் சகோதரர் சைதை துரைசாமி.
    எலுமிச்சம் பழம் எத்தனையோ நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. பைத்தியம் தெளிவிக்கவும் பயன்படுகிறது. கருணாநிதிக்கும் அவரோடு சேர்ந்த 25 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தலையில் தேய்த்துக் கொள்ளவோ என்னவோ அந்த இளைஞர் 26 எலுமிச்சம் பழங்களை மாலையாகக் கட்டி அணிவித்தார். அந்தத் துடிப்புமிக்க துணிச்சல்மிக்க இளைஞர்தான் சைதை துரைசாமி.
    புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு வெளியேற்றியது பைத்தியக்காரத்தனம் என்பதை உணர்த்தவே சைதை துரைசாமி, கருணாநிதிக்கு எலுமிச்சம் பழம் மாலையை அணிவித்தார். சைதை துரைசாமி செய்தது சரிதான் என்பதை பின்னால் காலம் உணர்த்தியது.
    புரட்சித்தலைவர் அவர்களை கழகத்தைவிட்டு நீக்கியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை காலம் உணர்த்தியது என்றாலும் இன்னமும் எலுமிச்சம் பழம் மாலை அணிவிக்க வேண்டிய நிலையில்தான் கருணாநிதி இருக்கிறார். அவருக்கு இன்னும் தெளியவில்லை.
    இப்போது ஜனநாயகத்தைக் காக்க படைபட்டாளத்தோடும் ஆள் அம்புகளோடும் கருணாநிதி கிளம்பி இருக்கிறார். எந்த கருணாநிதி தெரியுமா? சகோதரர் சைதை துரைசாமி மீது மட்டும் 17 பொய் வழக்குகளைப் போட்ட கருணாநிதி; சகோதரர் சைதை துரைசாமி 10 ருபாய் பிக்பாக்கெட் அடித்ததாக ஒரு பொய் வழக்கு, கருணாநிதி மகன் படத்தையும் ஒரு தியேட்டரையும் கொளுத்தியதாக இன்னொரு பொய் வழக்கு; அவர் மீது கொலை வழக்குக்கூட சுமத்தப்பட்டது.
    ஜனநாயக ஜாம்பவான் கருணாநிதி ஏன் இத்தனை பொய் வழக்குகளை அடுக்கடுக்காக போட்டார்? சகோதரர் சைதை துரைசாமி தனக்கு எலுமிச்சம் பழம் மாலை போட்டது எத்தனை நியாயம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா? அதற்காகத்தான் கருணாநிதி சரம்சரமாக பொய் வழக்குகளைத் தொடுத்தார்.
    இவ்வாறு செல்வி ஜெயலலிதா கூறினார்................ Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3682
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்காட்சி இது. தலைவரின் சண்டை காட்சிகளில் வீரமும் சாகசமும் இருக்கும். வன்முறை இருக்காது. தாக்க வரும் எதிரியிடம் கூட மனிதாபிமானம் காட்டுவார். இந்த சண்டையின்போது கிணற்றில் விழும் ஒருவரின் காலை பிடித்து கையில் இடுக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே மற்றொருவரை வீழ்த்தி பிறகு அந்த நபரை வெளியே இழுத்து பின்னர் அடிப்பார்.

    என்ன உயரத்துக்கு தலைவர் காலை தூக்குகிறார் என்று பாருங்கள். அப்போது அவருக்கு 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்...உழைக்கும் கரங்கள் காவிய காட்சி.............. Thanks wa.,

  4. #3683
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ்

  5. #3684
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி... இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்... தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மத்திய ரயில்வே நிலையம்" எனும் சரித்திர முக்கியத்துவம் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியில் அமர மக்கள் திலகம் அருளாசிகள் நிரம்ப உண்டு... அதே சமயம் தமிழ்நாடு சட்டசபை அவையில் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக உழைத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்மனச்செம்மல் புகழை , மாண்பினை காக்க தொடர்ந்து வந்தால் வெற்றியுண்டு...

  6. #3685
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    யார் ஆட்சி செய்தாலும் நம் புரட்சித் தலைவரின் ஆட்சியைப் போல் வராதுதான்.. ஆனால் புரட்சித் தலைவரின் பாதையில்.. தலைவரின் மாண்புகளை பறைசாற்றும் நல்ல உள்ளங்கள் வரலாமல்லவா..!!! அதற்கு நிச்சயமாக புரட்சித் தலைவரின் அருள்.. அனுமதி வேண்டும்.. அப்படிப்பட்ட புரட்சித் தலைவரின் ஆட்சியை... முன்நிறுத்தி.. தலைவரின் பெயரையும்.. மாண்புகளையும்.அனுதினமும் சட்டசபையில் முன்மொழியும் .. தலைவரின் சாதனைகளை உணர்ந்து..போற்றி..அவரது பாத அடிகளைப் பின்பற்றி நடக்கும் நேர்மையான புரட்சித் தலைவரின் பக்தர் யாராவது ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாடு நலம் பெறும்..
    புரட்சித் தலைவர் நிச்சயமாக மீண்டும் புயலாக செயலாற்றும் நாளை எதிர் நோக்குவோம்... வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்...........👍

  7. #3686
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சந்திரோதயம் !
    _________________
    எங்கிருந்தோ ஆசைகள்
    எண்ணத்திலே ஓசைகள்
    என்னென்று சொல்லத்தெரியாமலே
    நான் ஏன் இன்று மாறினேன் ?

    சந்தித்தோ பார்வைகள்
    தித்திதோர் நினைவுகள்
    மையலைச் சொல்லத்தெரியாமலே
    ஏன் ஏன் இந்த கேள்விகள் ?

    கவிஞர் வாலி !

    பாடலின் ஆரம்பத்திலேயே காதலின் மென்மையும் மேன்மையும் நம்மை தொத்திக் கொள்கிறது

    பாடலின் நாயகி பாடல் தொடங்கும் முன்னர் கண்களை மூடியவாரே தன் இடது கையால் வலக்கையை மென்மையாக மிக மென்மையாக வருடுவதும்
    காதலனின் முகத்தை மெல்ல விழி திறந்து பார்த்து காதலனின் கண்களை நேர் கொண்டு பார்க்கும் இயலாமையால் சரேலேன முகத்தை மூடிக்கொண்டு காதலனும் தன் காதலை உணர்ந்து கொண்டான் என்பதை உணர்ந்து சொல்லோண்ணா இன்பத்தில் காதல் இதயம் படபடக்க மாடிப்படியில் காதலன் வருகையை பின்புறம் நோட்டம் விட்டவாறு துள்ளிச்சென்று காதல் உணர்வுகள் முழமையும் தூனில் பதிக்கும் பாவமும் அழகின் எல்லை !

    மாலை வரும் மயக்கம்
    என்ன மயக்கம் ?
    காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
    பூ விதழ் மேனியில் பனித்துளி இருக்க
    நானதை பார்க்கையில்
    நூலென இளைக்க
    என்னென்ன அதிசயமோ ?

    இந்த வரிகளில் புன்னகைத்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் அதன் அர்த்தம் விளங்கி புருவங்கள் உயர்ததும் அக்கணம்
    வாலியின் பாடலில் கவிஞரின் கவிதை !

    இந்த காட்சி காணும் ஒவ்வொரு முறையும்
    உணர்வுகள்
    உறைந்து போகின்றன !

    ஹயாத் !........ .... Thanks wa.,

  8. #3687
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    களையுலகின் கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், காமதேனு... அள்ள............ அள்ள திரையுலக வசூல் வித்தகர், வசூல் திலகம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "முகராசி" இன்று முதல் (24-05-2019) சென்னை - புரசை பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி முகம் காண்கிறார்.........👌

  9. #3688
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் பக்தர்கள், ரசிகர்கள் பற்பல அணிகள் தனி தனியாக இயங்கி கொண்டு வரும் அமைப்புகள் எல்லாம் மனம் விட்டு பேசி ஓன்று சேர்த்து இதயக்கனி மாண்பினை மேன்மேலும் பெருக்குவோம்............

  10. #3689
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    ஜூனியர் விகடன் வார இதழ்

  11. #3690
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (24/05/19) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    சுவரொட்டியில் தவறாக இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் பதிலாக
    விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .
    Last edited by puratchi nadigar mgr; 24th May 2019 at 09:52 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •