Page 38 of 41 FirstFirst ... 283637383940 ... LastLast
Results 371 to 380 of 403

Thread: muthalidam

  1. #371
    Senior Member Veteran Hubber suvai's Avatar
    Join Date
    Nov 2006
    Posts
    2,004
    Post Thanks / Like
    pp maam....vanakam nga...

    avalangal....romba pramaatham.....enaku ellaa varigalumey muthaagathaan thondrugirathu....en manathai thotta aazhamaana varigal....
    "படைத்தவன் அலுத்துத்தான் போனானோ?
    மீண்டும் படைக்க ஆவல் கொண்டானோ? "
    superbbbbb!

    meemdum....is equally touching!

    romba poruthamaaga, arumaiyaaga, unarthum thiramai mika writing....nga....awesome!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #372
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #373
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    மரமோற்சவம்

    மாறுகின்ற பருவங்கள்
    மாற்றுகின்ற வண்ணங்கள்
    மரங்களில் வசியங்கள்
    மயக்குகின்ற கோலங்கள்
    மாற்றமில்லா நியதிகள்
    மந்திரக்கோலின் நிகழ்வுகள்
    முடியாத வசந்தங்கள்

    மணக்கின்ற கற்பனைகள்
    மலருகின்ற உவமைகள்:

    மருதாணி சிகப்புகள்
    மகரந்த மஞ்சள்கள்
    மண்மகளின் ஒப்பனைகள்
    மின்னுகின்ற செந்தழல்கள்
    மணியான நவரத்தினங்கள்
    மாணிக்க வைடூரியங்கள்
    மரகதத்தின் மறுபக்கங்கள்

    மங்கையரின் கனவுகள்
    மந்தகாச நினைவுகள்
    மாருதமாகும் சாமரங்கள்
    மாலை வான காட்சிகள்
    மாயாலோக தரிசனங்கள்
    மனம் வருடும் மயிலிறகுகள்
    மெல்லத் தொடும் தளிர் விரல்கள்

    மழைக் கால சாரல்கள்
    மோகனமான ராகங்கள்
    மெளன நாடகங்கள்
    மொழியில்லா காவியங்கள்
    மங்காத ஓவியங்கள்
    மரபின் அதிசயங்கள்
    மண்ணில் தேவதருக்கள்

    மகிழ்ச்சியின் ரகசியங்கள்
    மொட்டவிழும் கவர்ச்சிகள்
    மடை திறந்த வெள்ளங்கள்
    மாசில்லா களிப்புகள்
    மட்டற்ற பரவசங்கள்
    மனசுக்குள் பேரின்பங்கள்
    மருந்தாகும் விருந்துகள்

    மீண்டும் ஒரு இலையுதிர் காலம்
    மீட்டிட காத்திருக்கும் நரம்புகள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #374
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    தீர்ப்பு


    முழுதாய் மனதைத் திருடிவிட்டாய்
    முற்றிலும் என்னை மாற்றிவிட்டாய்
    என்னை எனக்கே தெரியவில்லை
    எதுவும் முன்போல் இப்போதில்லை

    நினைவை அழித்து கனவை நிறைத்து
    நிலை தடுமாறி நிற்க வைத்தாய்
    உன் விரல் நுனி கட்டளையில்
    இயங்கும் இயந்திர பொம்மையானேன்

    பொல்லாத மாயம் செய்தாய்
    கல் மனதை கரைத்துவிட்டாய்
    சொல்லாத சுகமிதுதானோ
    வெல்ல இனியேதுமுளதோ

    தந்திரங்கள் பல செய்து
    ஆயுதங்கள் பல கொண்டு
    அடியோடெனை வீழ்த்திவிட்ட
    அழகான கொடும்பாவாய்

    உள்ளங்கை நெல்லிக்கனி போல்
    உன் குற்றமிங்கு நிரூபணம்
    நீதிமன்றம் செல்ல வேண்டாம்
    வாதிட்டு விளக்க வேண்டாம்

    நானே சொன்னேன் தீர்ப்பினை
    தந்தேன் தகுந்ததோர் தண்டனை
    அடைத்தேன் நெஞ்சக் கோட்டைக்குள்ளே
    ஆயுள் கைதியாக்கிவிட்டேன் உன்னையே

    அல்லும் பகலும் காவலுண்டு
    அதில் அணையாத காதலுண்டு
    இமைக்குள் இருக்கும் கண்மணியாய்
    இருப்பாய் என்னுள் பத்திரமாய்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #375
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    தர்மம்


    கண்டிக்கிறான் கண்காணிக்கிறான்
    கண்டபடி திட்டித் தீர்க்கிறான்
    காட்டுமிராண்டிபோல் நடக்கிறான்
    கடுமையாய் ஆதிக்கம் செய்கிறான்
    கட்டுப்பெட்டியாயிருக்கச் சொல்கிறான்
    கட்டுப்பாடுகள் பலவும் விதிக்கிறான்
    கைகட்டி சேவகம் செய்யச் சொல்கிறான்
    கண்ணீரில் தினம் மிதக்க வைக்கிறான்

    அவனியல்பு மரபணுவின் ஒரு ஆதி கோளாறு
    அதை வெல்லும் சங்கதிகள் உன்னிடமுளது
    அனுசரித்துப் போய்விடு பொறுமை காட்டிடு
    அன்புக்கு அடங்கும் முரட்டுக்குழந்தையவன்
    அப்படி இப்படி இன்று இருந்தாலும் விரைவிலே
    அடங்கிக் கிடப்பான் சாதுவாய் உன் நிழலிலே
    அழகான குடும்பத்தின் ஆணிவேராயிருந்திடு
    அறிவாய் உன் ஆட்சியின் அகண்ட எல்லையை

    உனக்கென்ன குறைச்சல் எதிலே மட்டம்
    உரிமைகள் இல்லாத பதுமை நீயல்லவே
    உலகம் தெரியாத ஒரு பேதையுமல்லவே
    உணர்ச்சியில்லா பொம்மையா பெண்டாட்டி
    உருட்டிப்பார்த்தால் திருப்பி முறை நீ
    உரக்கக் கத்தினால் எதிர்த்துப் பேசு
    உக்கிரமாய் போராடு விட்டுக்கொடாதே
    உன் நியாயங்கள் உறுதியாய் நிற்கட்டும்

    அன்றும் இன்றும் கண்ணோட்டம் வேறு
    ஆட்டம் கண்டது வாழ்வின் அடித்தளம்
    அடங்கச் சொன்ன பெரியவர் இன்றில்லை
    ஆடச் சொல்பவர் ஆதரவு அதிகமானது
    அதிலே பலியாகிப்போகுது இனிய நல்லறம்
    ஆயிரம் காலப் பயிருக்கின்று அற்பாயுசு
    அவசரமான காலத்தின் அவதியில் சிக்கி
    ஆவியை விட்டது அரிய இல்லற தர்மம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #376
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    நேற்றில் மட்டும் வாழ்ந்தேன் நேற்று
    இன்றில் மட்டும் இருக்கிறேன் இன்று
    படிக்காத பக்கங்கள் இன்னும் எத்தனை
    புரட்டும் இப்புத்தகமிதில் இதுவரை
    முடிந்த அத்தியாயங்கள் நிறையத்தான்
    நடந்த நாடக காட்சிகள் ஏராளம்தான்
    எத்தனை திருப்பங்கள் எத்தனை மர்மங்கள்
    எதிர்பாராத நிகழ்வுகள் கிளறிய ஆர்வங்கள்
    ஆச்சர்யங்கள் ஏமாற்றங்கள் நிறைவுகள்
    புதிது புதிதாய் தோன்றின கதாபாத்திரங்கள்
    காணாமல் போயின பல நட்சத்திரங்கள்
    கண்ணுக்குத் தெரியாத விரல்கள் இயக்கும்
    கருத்தைக் கவரும் அதிசய பொம்மலாட்டம்
    பொதுவாய் புரியக்கூடிய கதையோட்டம்
    அடிமனதில் படியும் ஒரு ஆற்று வண்டல்
    அதில் வளரும் வளமான கற்பனைகள்
    பட்டின் இழையாய் ஊடூறுது ஒரு கரு
    அதன் அர்த்தம் தேடுது என் மனது
    நோகாமல் உதிரும் காய்ந்த சருகு
    அதுபோல் அமைதியான முற்றுப்புள்ளி
    கதையின் முடிவில் காத்திருக்கும் என்ற
    கனவில் கணங்கள் கடிதாய் விரையும்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #377
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமையுடைத்திவ் வுலகு என்பது தான் நினைவுக்கு வருகிறது..எல்லோரும் அமைதியான முற்றுப் புள்ளிக்குத்தான் காத்திருக்கிறோம் எப்போதென்று அறியாமலேயே...அதுவே இருக்கும் கணத்தை சுவை கூட்டுகிறது...

  9. #378
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    அமைதியான முற்றுப்புள்ளிக்கும் கொடுப்பினை வேண்டும் போல! மருத்துவத்துறையின் முன்னேற்றமெல்லாம் மூச்சினை மெஷினில் நிப்பாட்டி வைத்து கதையின் முற்றுப்புள்ளியை வரவிடாமல் இழுத்தடிக்கும் அவலத்திற்குத்தானோ என்கிற விசாரம் எழுகிறது சுற்றிலும் நடப்பதை பார்க்கும் போது!கொல்லாமல் கொல்லும் கலையா?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  10. #379
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    பாவியே

    பாரடா அவள் அழுவதை
    ஏங்கி ஏங்கி
    தேம்பி தேம்பி
    விம்மி விம்மி
    அடி வாங்கிய குழந்தையாய்

    வற்றாத குளமோ
    வஞ்சியின் கண்கள்
    வடிக்கின்ற கண்ணீரில்
    வடியாத வேதனை
    வாழ முடியா ரோதனை

    பாவியே பதரே பதடியே
    உத்திரத்திற்காகா உதியமரமே
    பகுத்தறிவில்லா மிருகமே
    ஒன்றா இரண்டா உனக்கு காரணம்
    வெறியாட்டம் ஆட விளைவதற்கு

    உள்ளே வளர்க்கிறாய் ஒரு பூதம்
    முளையில் கிள்ளாத ஆலவிருட்சம்
    கதைகளில் கேட்ட ராட்சத அரக்கன்
    உரைக்கும் வார்த்தைக்கு பொருளறியாய்
    உடைக்கும் பொருளின் மதிப்பறியாய்

    நாயாய் பேயாய் திரிந்திட
    நாறப்பிறவி எடுத்தாய்
    நம்பி வந்தவளின் நரகம் ஆனாய்
    நல்லறத்தை கொன்றாய்
    நட்டாற்றில் விட்டாய்

    மொத்தமாய் தனை மறந்து
    மனித சாடையை தொலைத்து
    கூசாமல் தலை நிமிர்த்தி
    வேசம் மட்டும் போடுகிறாய்
    யாரை ஏமாற்ற உன்னைத் தவிர

    வெக்கமில்லை துக்கமில்லையுனக்கு
    அதையெல்லாம் ஏற்றினாய் அவள் தோளில்
    பேதை சுமக்கின்ற சிலுவை
    ஆணியறையும் நாள் என்று
    ஆனந்த முடிவெப்போது

    ஒளியில்லா விழி அருளில்லா வதனம்
    உயிரில்லா உன் உடலின் பெயரென்ன
    பூ சூடிய பொட்டு வைத்த
    விதவை ஒருத்தி உன் வீட்டில்
    ஊரறியா ஊமை நாடகம்

    இஷ்டம் போல் வளர்ந்தாய்
    இடிப்பாரின்றி கெட்டாய்
    இறுமாப்பில் மிதக்கிறாய்
    இம்மியும் அறியாய் நிசத்தை
    இப்படியே இருக்கப் போகிறாயா

    (ஒரு சோகக் கதையை படித்தபின் பொங்கிய ஊற்றின் பெருக்கிது)
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #380
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,795
    Post Thanks / Like
    என் காதலன்

    வருடக்கணக்காய் வளர்ந்த மோகம்
    ஆசைத்தீயில் வளர்த்த யாகம்
    தீராத உள்ளுயிர் தாகம்
    அது ஒரு அற்புத யோகம்

    மறைந்திருந்து அழைப்பான் என் காதலன்
    பசுமரக்கிளையில் ஒளிந்திருந்து கூவும்
    பச்சைக்கிளியினைப் போல் கொஞ்சுவான்
    இச்சை மொழிகள் காற்றில் நிறைந்திருக்கும்

    இருட்டில் துழாவும் நானொரு பிச்சி
    நீ நிற்கிறாய் எப்போதும் எட்டி
    ஏக்கத்தில் வாடவிட்ட ஏமாற்றுக்காரா
    வஞ்சியை வதைக்கும் பொல்லாத கள்ளா

    நான் பிறந்த நாள் முதலாய்
    என் மெய்யுடலின் ஓர் நிழலாய்
    கூடவே நீ வருகின்றாய்
    என் ஆருயிர் காதலனே!

    கண்ணால் காணாமல் கையால் தொடாமல்
    கண நேரமும் விலகாத ஆவி ரூபனே
    உன்னுள் கரைய அணுஅணுவாய் ஏங்கி
    என் ஐம்புலனும் நரகத்தில் உழலுதே

    எனை நீ உரசிச் செல்கையிலே
    என் மூச்சு ஒரு நொடி நிற்கிறதே
    செய்வதறியாது தவிக்கிறேன்
    கடுந்தவம் நான் செய்கிறேன்

    வந்தென் துன்பம் தீர்த்திடு
    ஆனந்தக் கரையில் சேர்த்திடு
    ஆலிங்கனத்தில் அமிழ்வேன்
    விட்டு விடுலையாகிப் பறப்பேன்

    இறப்பும் பிறப்பும் என்றுமே
    நாணயத்தின் இரு புறமே
    அர்த்தமுள்ள அவற்றின் சங்கமம்
    நடக்கத்தானே கண்ணாமூச்சி நாடகம்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 38 of 41 FirstFirst ... 283637383940 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •