Page 31 of 401 FirstFirst ... 2129303132334181131 ... LastLast
Results 301 to 310 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #301
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #302
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #303
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #304
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #305
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிம்மக்குரல்...
    ________________
    எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.
    1952
    ஒலித்ததே ஓர் குரல்.
    "தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"
    இக்குரலுக்கு இதுதான்
    முதல்குரல்.
    அக்குரல் ஒலித்தது
    அதுமுதல்
    திரைகள் நடுங்கின
    அன்றுமுதல்.
    மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
    ஏற்றிய நெற்றியை
    கடைசி வரை
    ஏற்றிக்கொண்டே
    இருக்க வைத்ததும்
    இக்குரலன்றோ!
    ***
    "மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....
    "நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
    மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...
    குரலுக்கும் நடிப்புண்டு
    அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
    அதை
    இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
    என்பதை புத்தியில் வைத்த குரல்.
    ****
    "பரசுராமன் அவதாரம்.
    மனோகரன் மனிதன்.
    "என் வாள் களத்திலேதான் விளையாடும்
    கனிகளை காயப்படுத்தாது."
    பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
    பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
    இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
    மற்றதெல்லாம் உமிழ்.
    திரும்பிப் பார்க்காதவர்களையும்
    திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
    ஏளனம் செய்தோரை
    ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
    ***
    "பாடுவது என் தொழிலும் அல்ல
    சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
    இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."
    பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
    பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
    அது குரலுக்கும் உண்டு.
    அப்பெருமை இவரைத் தவிர
    வேறு எவருக்குண்டு?,
    ***
    "அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...
    உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...
    "நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."
    இது-
    மூதறிஞரை பேச வைத்த குரல்.
    ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.
    கண்டேன் சீதையை-
    இது காவியச் சொல்
    பரதனைக் கண்டேன்-
    இது அழியாச் சொல்
    ***
    "ஹ"
    இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
    செய்ததே!
    இந்த விந்தையான வேந்தன் குரல்.
    இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
    மொழிகளைத் தாண்டி
    சுண்டி இழுத்ததே
    "நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
    "இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."
    இரண்டும் ஒரு குரலாயினும்,
    ஒன்று காந்தம்
    ஒன்று சாந்தம்.
    அண்டை தேசத்தவர்களையும்
    ஆட்டிப் படைத்த குரல்.
    மண்டையை வியக்க வைத்த
    ஜாலக் குரல்.
    இதையா பிரதியெடுப்பது என்று
    ஓட வைத்த குரல்.
    ***
    "ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"
    தமிழ் எல்லை தாண்டி,
    பாரத பூமி தாண்டி,
    அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
    தட்டினார்களே கைகளை
    கொட்டினார்களே விருதுகளை
    "போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"
    பொழியும் வானத்தையும்,
    விளையும் பூமியையும்
    சாட்சிக்கு அழைத்த குரல் .
    தன்மானத்தை பறைசாற்றிய குரல்
    தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
    ஒலித்ததோ ஓர் குரல்
    உள் வாங்கி ஒலித்த குரல்களோ
    கோடி கோடி
    தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
    இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
    ***
    "ஆனந்தா!
    உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.
    இது-
    ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
    யாருக்கும் மசியாத குரல்
    ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
    பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
    ***
    "துரியோதனா!
    என் மானம் காத்த தெய்வமே.
    என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."
    அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
    ஆறையும் பேசவைத்த குரல்.
    யாரையும் வியக்க வைக்கும் குரல்.
    ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
    ***
    அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
    பங்கம் படவிரண்டு கால்பரப்பி
    சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
    என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
    யாரால் அறிய முடியும் சொக்கனை
    சொக்கனேவியப்பானேஇக்குரலினை
    மனிதருக்கு மரியாதை "ஜி"
    சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"
    ***
    "எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
    கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."
    இது
    வீரசிவாஜியாய்
    விழுப்புரத்து கணேசன் பேசியது.
    இந்தக்குரல்தானே
    வெண்தாடியை வியக்க வைத்தது
    மறுகணமே
    பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
    அதுதானே
    "சிவாஜி"
    ***
    நிற்க!
    கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
    எதை எழுதுவது?
    எதை விடுவது?
    சுருங்கக் கூறின்,
    "சிங்கத்திற்கு ஒரு குரல்
    சிவாஜிக்கு நூறு குரல்"
    வணக்கம்

    (senthilvel)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #306
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இது ஒரு மீள் பதிவு.... ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.பி.என் போன்று ஒருசிலரே அப்போது சிறந்த ரைட்டராகவும் சிறந்த டைரக்டராகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருக்கிறார்கள்.. அவர்கள் தயாரிப்பாளர்கள் என்று இன்னொரு முகமும் கொண்டு பல நல்ல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார்கள்
    ஏ.பி. நாகராஜனை பொறுத்தவரை தான் மரணிக்கும் காலம் வரை திரைஉலகிற்கு சேவை செய்தவர்.. மூன்று விதமான படங்களில் அவர் பங்களிப்பு அவசியமாகிறது... (1) கடவுள் சம்பந்தப்பட்ட புராணப் படங்கள்.. (2) சமூக நலச் சித்திரங்கள்... (3) வரலாற்று நாயகர்கள் பற்றிய பதிவுகள்... சிவாஜி சினிமாக்கள்தான் இவருக்கு ஏற்ற அடையாளங்கள்.. இவர் பங்குகொண்ட படங்களில் பெரும்பாலான படங்கள் தனித்துவம் மிக்கவை.. மக்களிடம் வரவேற்பை பெற்றவை.. அதிலும் இவரது பங்களிப்பு பெற்ற "சிவாஜி சினிமாக்கள்".. 100/100 சிறப்பு மிக்க படங்கள்,, ஒருசில சினிமாக்களை ஒரு குறு ஆய்வு செய்தபின் சிவாஜி சினிமாக்களை வகைப்படுத்தி மாஸ்டர் பீஸ் படம் எது என்பதை தேர்வு செய்ய முயற்சிப்போம்...
    அகத்தியர், காரைக்கால் அம்மையார்.. இந்த இரு படங்களிலும் டைட்டில் ரோல் செய்தவர்கள் முறையே ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் அம்மா கே.பி.சுந்தராம்பாள் அவர்களும் சிறுவயதில் இந்தப் படங்களை பார்க்கும் போது அவர்கள்தான் அகத்தியர் மற்றும் காரைக்கால் அம்மையார் என்று நம்பிக் கொண்டு இருந்திருக்கிறோம்.. ஆனால் நம்மவர் போட்ட ராஜாராஜ சோழனின் வேடம் அதையெல்லாம் தாண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு.. 1973ல் தலைவர் கூட்டணியில் ஏ.பி.என் இயக்கிய கடைசிப்படம்.. அதன் பிறகு நான்கே ஆண்டுகளில் ஏ.பி.என் சகாப்தம் முடிந்தது.. அவர் ட்ராக் மாறி வேறு பக்கம் போகாமல் இந்த நான்காண்டுகளில் இன்னும் நான்கைந்து சிவாஜி சினிமாக்களை இயக்கி இருப்பாரே யானால் தன் அந்திம காலங்கள் மன உளைச்சலின்றி சீரும் சிறப்புமாக அமைந்திருக்கும்... விதி வலியதன்றோ..
    சம்பூர்ண ராமாயணம், நான் பெற்ற செல்வம் படங்கள் ஒரு ரைட்டராகவும் மக்களைப் பெற்ற மகராசி ஒரு தயாரிப்பாளராகவும் வடிவுக்கு வளைகாப்பு ஒரு ரைட்டர் கம் டைரக்டராகவும் இவரை சிவாஜி சினிமாக்களில் பங்கு கொள்ள செய்த படங்களாகும்... முதல் பிரிவில் புராணப்படங்கள் அணியின் தலைவராக "திருவிளையாடல்" படமும் அந்த அணிக்கு பக்கபலமாக சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை ஆகிய படங்களைக் கொண்டு ஒரு அணி திரட்டப்படுகிறது.. அடுத்த அணியாக சமூக நலச் சினிமா அணி... இதன் தலைவராக "தில்லானா மோனாம்பாள்".. அந்த அணி சார்ந்த நவராத்திரி, குலமகள் ராதை, விளையாட்டுப் பிள்ளை, வடிவுக்கு வளைகாப்பு ஆகிய படங்களை கொண்டு ஒரு அணி அமைக்கப்படுகிறது... இதில் வரலாற்று நாயகனும் நல்ல தீர்ப்பு சொல்ல வரும் நடுவராக வருபவர் "ராஜ ராஜ சோழன்".. சிவபெருமான்... இன்றைக்கும் சிலாகிக்கும் ஒரு புராணப் பதிவு... தமிழ் சினிமாவில் சிவன் வேஷம் போட்ட அத்தனை நடிகர்களும் ஒருமித்த குரலில் அன்னாந்து பார்த்த பிறைசூடன் லார்டு 'சிவா' ஜி தான் என்று சிவா வையும் சிவாஜியையும் கம்பேர் செய்தார் திருமுருக கிருபானந்த வாரியார்.... என்று முதல் வாதத்தை வைக்கிறது திருவிளையாடல் அணி... இசைக் கலையா, பரதக்கலையா எது பெஸ்ட் என்று காதலும் மோதலுமாக கதைக்காவியமான தில்லானா மோகனாம்பாளை வாரியார் சுவாமிகள் பார்த்திருந்தால் வேறு தீர்ப்பு சொல்லியிருப்பார் என்கிறது இந்த அணி சூடாக... வீரபாகுவைக் கண்டு வீரம் பொங்காத தமிழருண்டோ? என்பதற்கு பதிலாக சகலகலாவல்லவராக ஒரு தமிழன் ஜல்லிக்கட்டு காளையாக வீரம் விளைந்த மண்ணில் சிறந்தானே அந்த விளையாட்டுப் பிள்ளை.. வீரன் அவரன்றோ என்கிறார்கள்...
    நாரதராக, அப்பராக, திருமாலாக இன்னும் பலதரப்பட்ட கடவுள் அவதாரங்களாக மன்னனாக ஒரு நவரசத்தை காட்டியது இங்கேதானே என்பதற்கு பதிலாக..... நவரசரத்தை நவராத்திரிகளில்... நவ நாயகர்களாக.. சமூக மனிதர்களை கொண்டு வந்து ஒரே படத்தில் நிகழ்த்தியவர் அன்றோ.. என்று ஒரே போடாக போடுகிறது தில்லானா குரூப்...
    இப்படியே ஒரு நீண்ட விவாதத்தில் சென்று கொண்டிருந்தததை குறுக்கிடுகிறார் சோழர் மாமன்னர்... இந்தப்படங்களின் ஒருங்கிணைப்பாளர் குருதட்சணை உட்பட இன்னும் சில படங்களின் படைப்பாளி..... ஆகினும் இவ்விரு அணிகளில் இருந்து சில படங்களை குறித்து ஒருசில கருத்துகளை சொல்கிறார்.. குறிப்பாக சரஸ்வதி சபதத்தில் பல சிவாஜியை அவர் பயன் படுத்திய விதம் வித்தியாசம் ஆனது... கல்வி,செல்வம்,வீரம் இந்த மூன்றுக்கும் மும்முனை போட்டி வைக்கிறார்.. நாரதர் கலகத்தை நன்மையில் முடிக்கிறார்.. இயல், இசை,நாட்டியம் இதனைக் கொண்டு ஒரு காதல் காவியத்தை வித்தியாசமான கோணத்தில் பதிவிடுகிறார் தில்லானா மோகனாம்பாள் படத்தில்..... அதிலும் இறுதியாக இசையும் நாட்டியமும் இரு கண்கள் என்று இரண்டும் வென்றதாக காட்டுகிறார்... ஒன்பது இரவுகளில் ஒன்பதுவகையில் கொலு வைக்கப்படுகிறது,, அது நரகாசூரன் என்ற அநீதியை அழிப்பதற்குரிய தீபாவளியை வரவேற்கும் விதமாக அமைகிறது.. இப்படி ஒன்றோடு ஒன்று ஒட்டிய ஆன்மிக கருத்துகளை சமூக குடும்ப கருத்தின் இடையே வலியுருத்தியும் உள்ளது,,, இப்படி தான் படைத்த அத்தனை சிவாஜி சினிமாக்களிலும் ஒரு நற்கருத்தையே சொல்லி இருக்கிறார்..ஒரு வலிமையான அதே சமயம் வெகுஜன ஈர்ப்பாளராக சிறந்து விளங்கிய சிவாஜி என்ற ஆளுமை மூலம் இதுபோன்ற கதைகள் சொல்லி இருப்பது சிறப்பிலும் சிறப்பு .. எந்தப் படத்தையுமே தவிர்த்துப் பார்க்க இயலவில்லை... இருப்பினும் நவராத்திரி, தில்லானா மோனாம்பாள், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய நான்கு படங்களை முதல் சுற்றிலும் கந்தன் கருணை,திருவருட் செல்வர், குலமகள் ராதை, விளையாட்டுப் பிள்ளை ஆகிய நான்கு படங்களை இரண்டாவதாகவும் தேர்வு செய்யப்படுகிறது..
    இதில் ராஜராஜ சோழன் பற்றிய குறிப்பும் அவசியம்.. ஆம் அவர் ஒரு பேரரசன்.. நீதி வழுவாத ஆன்மிக நாட்டம் கொண்ட மாமன்னன்.. ஆன்மிகமும் அவர் அரசாட்சியில் தளைத்து ஓங்கியது.. அவரது சதய விழாவும் நடக்கிறது.. இப்படி பல பொருத்தங்களையும் பெற்று அவர் இருப்பதால் எட்டு ரஸங்களோடு ராஜராஜன் என்கிற ரஸத்தையும் இணைத்து நவரசமும் சிவாஜியே... என்ற கூற்றுக்கு இணங்கி ஒன்பது படங்களும் முக்கியத்தும் பெறுகிறது.. தமிழ் திரையில் இந்த கூட்டணி ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை



    (jahir hussain)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #307
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் அய்யன் நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளினை முன்னிட்டு, குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் ஐந்தாம் வா...ர நிகழ்ச்சி, இன்று காலை அன்னை இல்லத்து பிள்ளையார் கோயில் வாயிலில் இனிதே நடந்தேறியது.
    இன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர் திருச்சியைச் சார்ந்த சிவாஜி பக்தன் திரு. குரு அவர்கள்.
    இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து அன்னதானத்தைத் துவக்கி வைத்தவர் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களில் ஒருவரான திரைப்படப்புகழ் திரு.ராஜேஷ் அவர்கள்.
    அவருக்கு குழுவின் சார்பாகதிரு.பி. கணேசன் அவர்கள் வரவேற்பளிக்க, திரு.முரளிஸ்ரீநிவாஸ் அவர்கள் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பித்தார்.. திருச்சி குரு அவர்கள் எதிர்பாராத சில காரணங்களினால் நிகழ்ச்சிக்கு வர இயலாததால், அவருக்கான நினைவுக் குறிப்பேட்டினை திரு. முரளி ஸ்ரீநிவாஸ் பெற்றுக்கொண்டார்.
    இந்நிகழ்ச்சிக்கு எதிர்பாராமல் வந்திருந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் திருமதி. லலிதா சபாபதி அவர்கள். இவர் தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதாசிரியர் மறைந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியாவார்.
    மேலும், நிகழ்ச்சிக்கு வழக்கம்போல் முன்நின்று வழி நடத்தியவர் நடிகர்திலகத்தின் அன்பின் இதயம் திரு.ML.கான் அவர்கள். மற்றும் திரு.ராமஜெயம், மிட்லண்ட் திரு.சங்கர், சூளைமேடு நந்தகுமார், ஈரோடு கல்தூண்ரவி, திரு. காமராஜ், திரு. KS.நரசிம்மன் ஆகியோர் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
    இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வாராவாரம் பெருகிவருவது மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.
    வாழிய நடிகர்திலகத்தின் புகழ்.!



    (vaannilaa vijayakumar)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #308
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #309
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #310
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •