Page 189 of 401 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #1881
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே..?
    நமது நடிகர் தில...கத்தின் 125 வது மாபெரும் வெற்றிக் காவியமான ''உயர்ந்த மனிதன்'' தான் அப்படத்தின் பெயர்...
    அது ஒருபுறம் இருக்கட்டும்...
    தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும்...
    இதில் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் தமிழ்வாணன் படமாக்கி வருகிறார்...
    இப்படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும்...
    அதற்கு பக்கத்தில், அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்...
    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப்பச்சன் தெரிவித்திருப்பதாவது :
    சிவாஜி கணேசன் என்னும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள் எஸ்.ஜே.சூர்யாவும் நானும்...
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் உச்ச பட்ச மாபெரும் அடையாளம். அவரது புகைபடம் இந்த சுவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது...
    அவர் வியத்தகு திறமை கொண்டவர்...
    அவருக்கு எனது மரியாதையை தாழ் பணிந்து உரித்தாக்குகிறேன்...
    சிவாஜியின் திருவுருவப்படத்தை சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன்...
    அவர் ஒரு மாஸ்டர்...
    நாம் அனைவருமே அவருடைய சீடர்கள் என்று நடிகர் திலகத்திற்கு இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்...


    நன்றி M V Ramkumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1882
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Last edited by sivaa; 5th April 2019 at 03:58 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1883
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 5th April 2019 at 07:13 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1884
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1885
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்று மாலை சென்னை P.T. தியாகராய ஹாலில், சமூக சேவகர் சிவாஜிரவி அவர்கள் வழங்கும் நடிகர்திலகத்தின் பாடல்களால் தொகுக்கப்பட்ட,
    #முரளியின்மௌனராகம் இசைத் திருவிழா!


    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1886
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி....
    இப்படி ஒரு மனிதரை உலகம் கண்டதுண்டா
    என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்,
    ஆட்சி அதிகாரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்காத
    ... ஒரே அரசியல் தலைவர் சிவாஜி மட்டுமே,
    பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக தனி இயக்கம் கண்டார்,
    அண்ணாவிற்கு பிறகு கலைஞர்,
    கலைஞரிடமிருந்து பிரிந்த எம்,ஜி,ஆர்,
    பின்னர் திமுகவிலிருந்து பிரிந்த பலரும் தான் முதலமைச்சராக நினைத்தனர்,
    அதே போல், கலையுலகில் இருந்த வந்தவர்கள் பலரும் தான் முதலமைச்சராக நினைக்கின்றனர்.
    ஆனால், மக்கள்தலைவர் சிவாஜி அவர்களோ,
    ஆரம்பத்தில் அண்ணா அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
    அதன் பிறகு பெருந்தலைவர் காமராசர் அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
    பின்னர் திமுக, அதிமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது, கருணாநதி அவர்களையும், எம்,ஜி,ஆர் அவர்களையும் முதலமைச்சர் ஆக்குங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
    மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் கூட தனியாக கட்சியை உருவாக்கி, தான் முதலமைச்சராக ஆசைப்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை,
    ஆனால, தான் தனியாக இயக்கம் கண்டபோதும், எம்,ஜி,ஆரின் மனைவி ஜானகி எம்,ஜி,ஆரை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று மக்களிடத்தில் கேட்டாரே தவிர,
    என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கேட்கவில்லை,
    தன்னை நம்பியவர்களை, உயர்நத இடத்திற்கு கொணடு சென்ற ஒரே தலைவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்,
    கமல் அவர்கள் சொன்னது போல, சிவாஜி ரசிகர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்,



    நன்றி sunderrajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1887
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1888
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
    இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
    தமிழகத்தில் சினிமா தோன்...றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
    இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
    எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
    அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
    ஆம்.
    நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
    அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
    காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
    விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
    அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...
    1. பிராட்வே தியேட்டர்
    பெண்ணின் பெருமை 105 நாள்
    தெய்வப்பிறவி 107
    படித்தால் மட்டும் போதுமா 104
    2. கிருஷ்ணா தியேட்டர்
    பாவ மன்னிப்பு 127
    பாலும் பழமும் 127
    ஆலயமணி 105
    வாழ்க்கை 117
    3. பிரபாத் தியேட்டர்
    கை கொடுத்த தெய்வம் 100
    கர்ணன் 100
    4. மகாராணி தியேட்டர்
    பச்சை விளக்கு 105
    நவராத்திரி 101
    அந்தமான் காதலி 100
    மருமகள் 117
    5. பாரத் தியேட்டர்
    பராசக்தி 100
    படையப்பா 126
    6. அகஸ்தியா தியேட்டர்
    சிவந்தமண் 117
    நீதிபதி 125
    படிக்காதவன் 123
    தேவர் மகன் 103
    7. எம்.எம். தியேட்டர்
    ஒன்ஸ் மோர் 133
    8. கிரவுன் தியேட்டர்
    அமரதீபம் 125
    வணங்காமுடி 100
    வீரபாண்டிய கட்டபொம்மன் 111
    பாகப்பிரிவினை 104
    படிக்காத மேதை 116
    விடிவெள்ளி 104
    பாசமலர் 133
    திருவிளையாடல் 179
    சரஸ்வதி சபதம் 133
    கலாட்டா கல்யாணம் 106
    தில்லானா மோகானாம்பாள் 111
    தெய்வமகன் 100
    வியட்நாம் வீடு 103
    எங்கிருந்தோ வந்தாள் 100
    சவாலே சமாளி 107
    பாபு 102
    பட்டிக்காடா பட்டணமா 111
    வசந்தமாளிகை 140
    பாரதவிலாஸ் 100
    எங்கள் தங்க ராஜா 102
    கௌரவம் 102
    தங்கப்பதக்கம் 176
    அவன்தான் மனிதன் 113
    மன்னவன் வந்தானடி 100
    தீபம் 106
    அண்ணன் ஒரு கோயில் 114
    தியாகம் 111
    திரிசூலம் 175
    ரிஷிமூலம் 104
    வா கண்ணா வா 100
    தீர்ப்பு 105
    சந்திப்பு 100
    வெள்ளை ரோஜா 104
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1889
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக பி.கணேசன் அவர்கள் தலைமையில், நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்று வரும் 52 வார தொடர் அன்னதானத்தில், இன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
    இந்த சிறப்பு அன்னதானத்தின் உபயதாரர் தஞ்சாவூர் திரு. P. நாகராஜா அவர்கள்.
    திரு. நாகராஜா அவர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால் அவர் சார்பாக திரு.BV.முரளி அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. சிவாஜி பாஸ்கர் அவர்க...ள் நடிகர்திலகத்தின் புத்தகமும், நினைவுச் சான்றிதழையும் வழங்கினார்.
    பின்னர், திரு. பி.வி.முரளி, திரு. சிவாஜி பாஸ்கர் இருவரோடு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட 'மாடிப்பூங்கா சிகர' மன்றத்தின் திரு. மகா, புரசைவாக்கம் திரு. பாபு முதலானோர் அன்னதானத்தை துவக்கி வைத்து பொது மக்களுக்கு உணவினை வழங்கினர்.
    சமூகசேவகர் திரு. சிவாஜிரவி அவர்கள் வந்திருந்து நிகழ்ச்சிக்கு வாழ்த்தினைத் தெரிவித்தார்.
    இந்நிகழ்ச்சியில், திரு.ML.கான், திரு. RS. சிவா, தென்சென்னை மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் திரு. அண்ணாமலை, திரு. கோவா ராஜேந்திரன், திரு. குமார், திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. ராகவேந்திரா, அம்பத்தூர் திரு. சுப்பிரமணி உள்ளிட்ட 'சிகர' மன்றத்து அன்புள்ளங்கள் பலர் கலந்து கொண்டனர்.
    இவர்களுடன், ஏராமான பொது மக்களும் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்ற மன மகிழ்வோடு...
    வான்நிலா விஜயகுமாரன்.




    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1890
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •