Page 184 of 401 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

 1. #1831
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1832
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  வசந்த மாளிகை' விழா ஹைலைட்ஸ்
  சிவாஜி கணேசன் நடித்த படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவாஜி நடித்திருக்கும் `வசந்தமாளிகை’ ப...டத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன். அந்தக் காலத்தில் திரைப்படங்களுக்கு டிரெய்லர் ரிலீஸ் செய்யும் பழக்கமில்லை. எனவே, இதுபோன்ற பழைய படங்களின் டிரெய்லர் ரிலீஸ் சிறப்பான ஒன்று. டிஜிட்டலில் ரிலீஸாகவிருக்கும் `வசந்தமாளிகை’ படத்தின் டிரெய்லர் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் ஹைலைட்ஸ் இதோ!
  'கர்ணன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' எனப் பல வரலாற்று நாயகர்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் சிவாஜி கணேசன். அவர் நடிப்பில் வெளிவந்த 'சிவகாமியின் செல்வன்', 'ராஜபார்ட் ரங்கதுரை', 'திருவிளையாடல்', 'பாசமலர்' ஆகிய படங்கள் ஏற்கெனவே டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வந்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இப்போது 'வசந்தமாளிகை.’
  ஒரு புதுப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிபோல இந்த நிகழ்வு நடந்தது. கூட்டத்திலிருந்த அனைவரும் 40 வயதுக்குமேல் உள்ளவர்களாக இருந்தார்கள். படத்திலிருக்கும் `மயக்கமென்ன', 'யாருக்காக', 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' ஆகிய பாடல்களை ஒளிபரப்பும்போது, இன்றைய இளைஞர்களே மிரளும் வகையில் கைதட்டி, விசிலடித்து மொத்த அரங்கத்தையும் ஆரவாரத்தில் ஆழ்த்தினர். குறிப்பாக,
  கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்
  கட்டி முடிந்ததடா - அதில்
  கட்டில் அமைந்ததடா - கொடும்
  சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை - இன்பச்
  சக்கரம் சுற்றுதடா அதில் நான்
  சக்கரவர்த்தியடா!" பாடலில்,
  'சக்கரவர்த்தியடா!' என வரும்போது, மொத்தத் திரையரங்கமும் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய சிவாஜி ரசிகர்களில் ஒருவரான முரளி ஸ்ரீனிவாசன், இந்தப் படம் பற்றிய சில விஷயங்களைக் கூறினார். படத்தின் பூஜை முடிந்தவுடன் முதல் நாளே காலை 4 மணிக்கு 'கிண்ணத்தை ஏந்துகின்றேன்' பாடல் எடுக்கப்பட்டதாகவும், மொத்தம் மூன்று மணிநேரத்தில் முழுப் பாடலும் எடுத்து முடிக்கப்பட்டதாகவும் சொன்னார்.
  'வசந்தமாளிகை' டிஜிட்டலுக்கு மாற்றம்
  "தமிழகத்தில் 10 ஊர்களில், 12 திரையரங்குகளில் 100 நாள்கள் நிறைவு செய்தது. மதுரையில், 'வசந்தமாளிகை' ரிலீஸாகும்போது 'பட்டிக்காடா பட்டணமா', 'தவப்புதல்வன்' படங்கள் ஒடிக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளில் 'நீதி'னு ஒரு படம் வந்தது. 175 நாள்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, 'பாரத விலாஸ்' ரிலீஸ். பிறகு, 'ராஜராஜ சோழன்' வெளியானது. அத்தனை படங்களுக்கு மத்தியிலும் வசந்தமாளிகை 200 நாள்கள் ஓடியது. குறிப்பாக, இலங்கையில் மாபெரும் பிரளையத்தை ஏற்படுத்திய படம் இது. அங்கே வெலிங்டன் தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணாங்க. கூட்டம் அலைமோதவே, அருகிலுள்ள லிடோ திரையரங்கிலும் படத்தைப் போடுவோமென முடிவெடுத்தார்கள். ஒரு பிரிண்ட் மட்டுமே இருந்தது. 15-20 நிமிட இடைவெளியில் ஒரு கார் வைத்து, வெலிங்டனிலிருந்து லிடோவுக்கும், லிடோவிலிருந்து வெலிங்டனுக்கும் படத்தைப் போட்டோம். இப்படித்தான் இந்தப் படம் கொழுப்பில் 287 நாள், யாழ்பாணம் திரையரங்கில் 207 நாள் ஓடியிருக்கிறது. முதல் முதலாக யாழ்பாணத்தில் வெள்ளிவிழா கண்ட படம் இது’’ என்றார்.
  நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, ```வசந்தமாளிகை’ படம்தான், 271 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன முதல் திரைப்படம். படத்தில் 'ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்' பாடலில் அவர் ஆடிய ஸ்டைலில் தமிழ் சினிமாவில் யாராவது ஆட முடியுமா?" எனக் கேட்க மொத்த அரங்கமுமே 'முடியாது', 'யாருமில்லை' என ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய அவர்,
  "இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பல நாள்கள் பணிபுரிந்திருக்கிறேன். டெய்லர், கோட் சூட்டை எல்லோருக்கும் தச்சுத் தருவான்; ஆனா, அதைப் போட்டுக்கிட்டு சிவாஜி நடந்துவரும்போதுதான் ராயலா இருக்கும். நடிப்புப் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள் 10 சிவாஜி படங்களைப் பார்த்தால் போதும். சிவாஜி படங்களை இந்தியில் ரீமேக் செய்ய யோசிப்பார்கள், பாலிவுட் ஹீரோக்கள். ஏன்னா, 'நவராத்திரி' படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் யாராவது நடிக்க முடியுமா?! நடித்து, படம் தோல்வியடைவதைவிட நடிக்காமல் இருந்துவிடலாம்னு நினைப்பாங்க. அதேசமயம், சிவாஜி தன்னைப் பெரிய நடிகன் என நினைத்துக்கொண்டது கிடையாது. 'கௌரவம்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. வசனம் பூராவும் பேசி முடித்து, 'தட்ஸ் ஆல்' என இங்கிலிஷ்ல சொல்லி முடிப்பார். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, ஸ்பாட்ல இருந்தவங்க கைதட்டிப் பாராட்டியிருக்காங்க. நாகேஷும் இருந்திருக்கார், ஒய்.ஜி.மகேந்திரனும் இருந்தார். ஒய்.ஜி-க்கு அது முதல் படம்.
  `எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டுறாங்க, நீ அமைதியா இருக்க'னு நாகேஷைப் பார்த்துக் கேட்குறார் சிவாஜி. 'இந்தப் படத்துல பல இடங்கள்ல நீங்க இங்கிலீஷ் பேசி பிச்சு உதறியிருக்கீங்க. ஆனா, இன்னைக்குப் பேசுனது சரியில்லை'னு நாகேஷ் சொல்லியிருக்கிறார். 'அவனும் அதைத்தான் சொல்றான்'னு பக்கத்துல இருந்த ஒய்.ஜி.மகேந்திரனைக் கை காட்டுறார் சிவாஜி. கூடவே, 'எனக்கு, அவங்க அம்மா நடத்துற பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல சீட்டு கிடைச்சுப் படிச்சுட்டா வந்தேன் நான். பேசுன இங்கிலீஷ் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லு, சரியா இருக்கா இல்லையானு சொல்லாதே!'னு நாகேஷைக் கிண்டல் பண்ணிட்டுப் போனார், சிவாஜி அப்படியே இருந்துடல. கேமராமேன் வின்சென்ட்கிட்ட போய், அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துக்கலாம்னு சொன்னார்.
  'வசந்தமாளிகை' ட்ரெய்லர் வெளியீடு
  இதேமாதிரி, 'பேசும் தெய்வம்' படப்பிடிப்பிலும் ஒரு சம்பவம் நடந்தது. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 'ஒன்மோர், ஒன்மோர்'னு சொல்றார். ஐந்தாறு டேக் போகுது. எதிலும் திருப்தியடையாத கோபாலகிருஷ்ணனைக் கூப்பிட்டு, 'எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெவ்வேறு விதமா நடிச்சுட்டேன். நீ எப்படி நடிக்கணும்னு நடிச்சுக் காட்டு'னு சிவாஜி சொல்லிட்டார். எல்லோரும் இயக்குநரைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. கோபாலகிருஷ்ணன் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, அந்தக் காட்சியை நடிச்சுக் காட்டினார். சிவாஜி அங்கிருந்து கிளம்பிட்டார். கோபாலகிருஷ்ணன் அண்ணன் சபரிநாதன்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். நடந்ததை அவருக்குச் சொன்னாங்க. அவர் இயக்குநரைப் பார்த்து, 'என்ன இப்படிப் பண்ணிட்ட... சிவாஜி யாரு அவருக்கு நீ நடிப்பு சொல்லிக்கொடுக்கிறதா? சிவாஜி கால்சீட் கிடைக்க மூணு மாசம் ஆகும்'னு சொல்லியிருக்கார்.
  அன்னைக்கு நைட்டே கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜி சார் ஆபீஸ்ல இருந்து போன். 'காலைல 7 மணிக்கு ஷாட் ரெடி பண்ணிக்கோங்க, சார் வந்திடுவார். உங்க ஷூட்டிங் முடிச்சுட்டு, அவர் அடுத்த ஷூட்டிங் போவார்'னு சொன்னாங்க. அடுத்தநாள் ஷூட்டிங்ல இயக்குநர் மெய்சிலிர்க்கிற அளவுக்கு நடிச்சுக் கொடுத்தார் சிவாஜி. அவர் கிளம்பிப்போனதுக்குக் காரணம்... வீட்டுக்குப் போய், கண்ணாடி முன்னாடி நடிச்சுப் பார்த்து பழகியிருக்கார்!’’ என்று முடித்தார் சித்ரா லட்சுமணன்.
  பின்னர் பேசிய சிவாஜியின் மகன் ராம்குமார், "இந்த மாதிரி புது முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர் மன்றம் உறுதுணையாய் இருக்கும்" என்றார்.
  நன்றி... ஆனந்த விகடன்.


  நன்றி ‎R Vijaya to நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #1833
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. #1834
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,106
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. #1835
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  தலைவர் சிவாஜி அவர்களிடம் நம் சிவாஜி மன்றத்தினர் அல்லது அவரது நண்பர்கள் தங்களது இல்ல திருமணம் மற்றும் காதணி விழா போன்ற சுபமங்கள விழாக்களில் கலந்து கொள்ள அழைக்கும் போது தனது தம்பி V.C. சன்முகம் மன்றாயர் அவர்களை பார்க சொல்லுவார்கள் ஏன் என்றல் அவர் தான்.சிவாஜி அவர்களுக்குபடபிடிப்பு நேரம் மற்றும் ஒய்வு நாட்கள் என்ன என்பது தெரியும் மேலும் அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாஜி மன்றத்தினரை நன்கு அறிந்தவர் அவர் முடிவு செய்யும் தேதிகளிலேயே அண்ணன் சிவாஜி அவர்கள் கலந்து கொள்வார் தேதி முடிவான...வுடன் யார் அழைத்தார்களே அவர்களை கூப்பிட்டு எங்கே விஷேசம் வைத்துள்ளாய்..... எத்தனை மணிக்கு வரணும் எவ்வளவு பத்திரிக்கை அடிக்க போறே... எத்தனை பேருக்கு சாப்பாடு செய்ய போற..... என்ற விபரங்களை கேட்பார் இப்படி ஒரு வரை விசாரிக்கிறார் என்றால் அவருக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது என்று அர்த்தம் பிறகு அவர்கள் அழைப்பிதழ் அச்சடித்து அண்ணன் சிவாஜி அவர்களுக்கு தருவதற்காக அவரது இல்லத்திற்கு வந்தவுடன் தன் தம்பி சண்முகம் அழைப்பார் தன் கண்களாலே ஜாடை காட்டுவார் உடனே அவர் உள்ளே சென்று அண்ணி கமலாம்மாள் அவர்களை அழைத்து வருவார் ( திருமண அழைப்பிதழாக இருந்தால்) வரும் போது ஒரு தாம் பாளத்தில் விலை உயர்ந்தபட்டு வேஷ்டி பட்டுபுடவை மற்றும் 4 கிராம் தங்ககாசு மேலும் கவரில் பணம் வைத்து அழைப்பிதழ் கொடுத்தவரிடம் கொடுத்து விஷேசத்தை நல்லா பண்ணு நான் வந்து விடுகிறேன் என்று சொல்வார்கள் சிலர் சிவாஜி மீது அதிதீவிர பக்தி கொண்டவர்களா இருப்பர் ஆனால் தகுதிக்கு மீறி செலவு செய்பவர்களா இருப்பர் அவர்களுக்கு அந்த ஊரில் உள்ள சிவாஜி மன்ற நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப் பார் அப்போது அவனுக்கிட்ட இதை கொடுத்தால் அவன் வெட்டி செலவு செய்து விடுவான் அதான் உங்களை வரச் சொல்லி கொடுத்தேன் கூட இருந்து விஷேசத்தை நல்லபடியா செய்யுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லுவார் 4 கிராம் தங்ககாசு அவரவர் மதம் இனத்திற்கு தகுந்தார் போல் தாலி செய்வதற்காக கொடுப்பதை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார் இதில் ஏழை ... பணக்காரன்... உயர்ந்த ஜாதி ..... தாழ்ந்த ஜாதி ..... என்று ஒரு போதும் அவர் பார்த்ததில்லை அவரது இறுதி மூச்சு வரை வஸ்திரதானம் சொர்ண தானம் ( தாலிக்கு தங்கம், ) அன்னதானம் செய்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள் இதையே தான் தன் இனிய நண்பர் மூனா . கானா (மு.கருணாநிதி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் இராமாமிர்தஅம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் என்பதை நடைமுறைபடுத்தினார் மேலும் பல தகவலுடன் தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன்.. .... சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்


  நன்றி Vasudevan.S
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 7. #1836
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #1837
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 9. #1838
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 10. #1839
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 11. #1840
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,655
  Post Thanks / Like
  இப்பொழுது வெற்றிநடை போடுகிறது
  புளியங்குடி -கண்ணா a/c dts,
  சிவகாசி -லட்சம் a/c dts,
  ஆளன்துறை -சக்திவேல் a/c dts ல் நமது பாரததேசத்தின் பொக்கிஷம் கர்ணன்.


  நன்றி Divyafilms Chokkalingam


  .................................................. ...............

  உங்களுக்குத் தெரியுமா?
  டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
  மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
  நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
  வசூலை வாரிக் குவித்தது.
  அதாவது,
  சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
  செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
  வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
  இணைந்து 49 வாரங்களும்,
  தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
  கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
  திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
  நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
  மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
  சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
  பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
  இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
  நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
  நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
  மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
  சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
  இதை அறியாதவன் வாயில் மண்ணு!!
  Last edited by sivaa; 31st March 2019 at 06:44 PM.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •