Page 261 of 261 FirstFirst ... 161211251259260261
Results 2,601 to 2,605 of 2605

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

 1. #2601
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,664
  Post Thanks / Like
  வருடங்கள் ஆகிவிட்டது.இன்றைக்கு பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் மூன்று நாட்கள் மட்டும்தான் கூட்டமிருக்கும்.மூன்று வாரங்கள் ஓடினால்,மிகப்பெரும் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது.
  'வசந்த மாளிகை',1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.இந்தப் படத்திற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன்.சென்னை ஆல்பர்ட் தியேட்டரில்தான் இந்தக் கூட்டம்.இளைஞர்களும்,பெண்களும் குடும்ப சகிதமாக வந்ததுதான் மற்றுமோர் ஆச்சர்யம்.தியேட்டர் வளாகம் முழுவதும் ஊடகத் துறையினர்.அரங்கினுள்ளே சிவாஜியின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கைத்தட்டல் காதைக் கிழித்தது.
  தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யமான நிகழ்வு, 'வசந்த மாளிகை'க்கு கிடைத்த வரவேற்பு.
  https://www.facebook.com/manisekaran...q4K9KhsXXr4ciF
  https://m.facebook.com/groups/535938...65167857162865  நன்றி Vasudevan.S
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #2602
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,664
  Post Thanks / Like
  திருப்பூர் கலைவாணி தியேட்டரில் "வசந்த மாளிகை" மகோத்சவம் ரசிகர்களின் ஏகோபித்த மகிழ்ச்சியில் "ஆயிரம்வாலா" சரவெடியுடன் இன்னும் சில நிமிடங்களில் இனிதே ஆரம்பிக்க உள்ளது... இக்காவியத்தைக் காண வந்துள்ள அனைவர் முகங்களிலும் அளப்பறிய சாதனை செய்த மகிழ்ச்சி �� தாண்டவமாடுகிறது......  நன்றி Kannappan Velliangiri
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #2603
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,664
  Post Thanks / Like
  படித்ததில் ரசித்தது...
  சிவாஜியின் வசந்த மாளிகை ஆல்பர்ட்டில் வெள்ளியன்று திரைக்கு வந்தது.ஆன்லைனில் புக் செய்து ஞாயிறன்று சென்றோம். அடடடடா என்ன குதூகலம் கொண்டாட்டம் ஆரவாரம் சந்தோஷம் தெருவுக்குள் நுழையவே முடியவில்லை. சரி முந்தய ஷோ இப்போதான் முடிந்திருக்குமோ என்று நினைத்து காத்திருந்தோம். பிறகு தான் புரிந்தது அடுத்த காட்சியை காண வந்திருக்கும் ரசிகர்களளென்று.
  தலைவர் படமென்றால் சும்மாவா? ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. திலகத்தின் பெரிய கட்அவுட் கம்பீரமாக வரவேற்கிறத. பெங்களூர் ர...
  சிகமன்றம் வழங்கிய மாலைகளுடன். எவ்ளோ மாலைகள். தெருவெங்கும் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பூக்களை உதிர்த்து
  பட்டாஸ் வெடித்து உற்சாகம் கரைபுரண்டோடியது.
  கேட் தாண்டி உள்ளே சென்றதும் ஒரு சின்ன கூட்டம் மைக்குடனும் கேமராவுடனும் வரவேற்றது. ஏதாவது அண்ணனைப்பற்றி அவருடைய இந்த படத்தைப்பற்றி பேசுங்களேன் என்று. மகன் சிவாஜியின் தீவிர ரசிகன்.
  அவன் பேச கூடியிருந்தோரெல்லாம் கைதட்டி வரவேற்றனர்.
  எந்த திசையில் பார்த்தாலும் நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள். சில அரசியல் பிரபலங்களும் தயாரிப்பாளர் குகநாதனும் வந்திருந்தார்கள்.
  உள்ளே நுழையும் போது ஒரு ரசிகர் தன் சார்பாக படம் காண வந்திருந்த அனைவருக்கும் ரெவ்வெண்டு ஜாங்கிரி கொடுத்தார். படு குஷியாக இருந்தது எனக்கு. படம் துவங்க சில நிமிஷங்கள் இருந்தது. கணீரென்று ஐயாவின் குரலிலே "யாருக்காக" என்று ஐம்பது வயது மதிக்கத்தக்க இளைஞர் பாடத்துவங்கினார். அரங்கமே அமைதியானது.
  அசத்தலான குரல்வளம். இடையிடையே இருமி பாட்டை தொய்வில்லாமல் கச்சிதமாக முடித்தார்.
  திரையில் படம் முதல் காட்சியில் பிளேன் பறக்க இங்கு விசில் சத்தம் விண்ணை பிளக்க தலைவர் தோன்றினார்.
  உதிரிப்பூக்களும் glitters தூவி ஆர்ப்ரித்தனர். பேசினால் "கைதட்டு"நடந்தா "ஆஹா தலைவா" "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" பாடலுக்கு யாருமே சீட்டில் இல்லை.
  "ஏன் ஏன் ஏன்" தாளத்தோடு விசில் கைதட்டல் ஆட்டம்
  இதுவரை இந்த சந்தோஷ ப்ரவாகம் எங்கேயும் பார்த்ததில்லை. "சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுத்துதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா"
  அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு திரையில் என்ன வந்ததென்று யாருக்குமே தெரியாது.
  நீச்சல் குளத்திலிருந்து ப்ளு கலர் டிரெஸ்ஸில் வெளியே வந்ததும், செகரெட்ரி என்று அறிமுகப்படுத்தும் போதும்,
  ஆதிவாசிகளுடன் ஆடும் போது ஸ்கிப் செய்து ஸ்டெப் போடுவதும் , கண்ணாடி மாளிகையை வாணிஸ்ரீ பார்க்கும் போது வெளியே white and white ல் போஸ் கொடுத்து காத்திருப்பதும் இப்படியாக பல இடங்களில் தூண்டில் போட்டு ரசிகர்களை இழுக்கிறார்.
  ஆச்சர்யமா இருக்கு. எழுபத்திரெண்டில் வந்த படமென்று நினைக்கிறேன். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்
  ரசிகர்களை சுண்டி இழுக்கும் இந்த நடிப்பாற்றல் ரசிகர் கூட்டம் இப்போதுள்ள நடிகர்களுக்கு இதே போல் வரவேற்பு கிடைக்குமா?
  சந்தேகம்தான். கலைத்தாயின் தலைமகனுக்கு ஈடில்லை எவரும்.

  நன்றி Vasudevan.S
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 5. #2604
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,664
  Post Thanks / Like
  நடிகர் திலகம் திரைப்படங்களுக்கு வெள்ளி, சனி,ஞாயிறு என்றெல்லாம் கிடையாது,
  திருவொற்றியூர் MSM
  திரையரங்கில் இன்று(திங்கள் கிழமை) 6:30&10:00 மணிக் காட்சிகள் நிறைந்து வரும் காட்சி,
  ...
  மிகப்பெரிய வெற்றி,
  இமாலய வெற்றி,
  இப்படி எல்லாம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் அடைந்த வெற்றியை மட்டுமே சொல்ல முடியும்,
  போட்டிக்கு படத்தை ஏதாவது போடலாம்னு யோசிக்கப் போரீங்க கட்சிக்காரர்களே?
  தலைகீழ் புரண்டாலும் வசந்த மாளிகையின் முன் டெபாசிட் கூட கிடைக்காது,


  நன்றி Sekar
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 6. #2605
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  8,664
  Post Thanks / Like
  கோட்டை இல்லை . கொடியும் இல்லை.. எப்பவுமே சிவாஜிதான் ராஜா.. எந்த எதிர்பார்ப்பு இல்லா இணையற்ற ரசிகர் படை சிவாஜிக்கே சொந்தம்.. கட்சி ஆட்சி எதுவும் இல்லாமல் இறந்து 18 ஆண்டு கழிந்த பின்னரும் ஆர்ப்பரிப்போடு கொண்டாடும் ஒப்பற்ற சிவாஜி படை��

  C J Joe


  நன்றி ஜோ
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •