Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #71
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    abdul kadar abdul salam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #73
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    abdul kadar abdul salam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #74
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகத்திற்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை ?
    இதற்கான வினாவிற்கு வலைதளத்தில்
    தேடிய போது இதற்கான விடையை 'திரு ஆர்.சரவணன் அவர்கள் ஆங்கிலத்தில் அழகாக விளக்க...ியிருக்கின்றார்.
    ஆர்.சரவணன் 17.11.2013 புதன் 12:10
    உலகத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது சிவாஜி அய்யாவிற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணமிருக்கிறது.
    இதுவரைக்கும் உலகமே இப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன சிறந்த விருது சிவாஜிக்கு கொடுக்க வேண்டும் ?
    நேற்று பர்மா பஜாரில் ஒரு கால்குலேட்டர் வாங்க சென்றேன். அந்த கடைகாரர் எனக்கு 25 வருடமாக
    தெரிந்த ஒரு நண்பர்...சில பழைய தமிழ் பட சி.டிக்களும் வாங்க வேண்டியிருந்தது.
    "என்ன கடைக்காரரே பழைய படங்கள்
    எதாவது கிடைக்குமா ?"
    "இருக்கு சார்"
    "பாரதிராஜா படம் "மண் வாசனை"
    பாக்கியராஜ் படம் "தூரம் நின்னு போச்சி இருக்குதா ?"
    "இல்ல சார்"
    "சரி... (சந்தேகத்துடன்) "வியட்னாம் வீடு" "கௌரவம்"*
    இந்த படங்கள் இருக்குமா ?
    "கண்டிப்பா சார்...இருக்கு சார்"
    "வேற எதாவது சிவாஜி படம்..." வசந்த மாளிகை"
    " வீரபாண்டிய கட்டபொம்மன்?"
    "இருக்கு சார்"
    "(சந்தேகத்துடன்) சிவாஜி படம் இன்னுமா பாப்புலரா இருக்கு ?"
    " எவர் கிரீன் சார், சிவாஜி மூவி ஃபாஸ்ட் மூவிங் சார்... எங்க கிட்ட எல்லா சிவாஜி படமும் இருக்கு சார்.
    25 வருடம் ஆகிவிட்டது... இன்னும் சிவாஜி படத்த இன்னும் இந்த உலகம் ரசிப்பதற்கு... சிவாஜி அய்யாவிடம்
    குறிப்பிட்டு சொல்லும்படியா ஏதோ இருப்பதை நினைத்தால் பிரமிப்பா இருக்கிறது. அதனால்தான் அவர் புகழ் நிலைத்து இருக்கிறது.
    'இந்த விருது உலகத்தின் சிறந்த நடிகருக்காக வழங்கப்பட்ட ஒரு சிறந்த விருது'
    '2002ல் சிவாஜி அய்யாவிற்கு என்ன மரியாதை கொடுத்திருந்தார்கள் ?
    நேற்று ஒரு பழம்பெரும் நடிகரை பேட்டி கண்டேன்... அப்போது அவர் சிவாஜி அய்யாவை பேசும் போது ஒவ்வொரு சிவாஜி என்ற வார்த்தைக்கு சார் போட்டு சிவாஜி சார் என்று பௌயமாக மரியாதையுடன் குறிப்பிட்டது சாதரணமானதல்ல... அவர் மனதின்
    அடித்தளத்திலிருந்து வந்த மரியாதை அது.
    ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தங்க முலாம் பூசப்பட்ட சிவாஜியின் படம் பொறிக்கப்பட்டு நினைவுச் சின்னத்தின் திறப்பு விழா நடந்தது. அப்போது பேசிய
    திரு ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் சிவாஜி அய்யாவின் மேல் வைத்த மரியாதையை பார்க்க முடிந்தது.
    இந்த மரியாதையெல்லாம் சாதரண மரியாதையல்ல... மனதிலிருந்து வரும் உண்மையான மரியாதை. அவரும் சிவாஜி சார் என்றுதான் குறிப்பிட்டார். இந்த விழாவிற்கு
    முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும்
    கலந்துக்கொண்டனர்.
    கமல், ரஜினி, விஜய்காந்த் மற்றும் அனைத்து நடிகர்களும் அவர் மீது பாசத்தையும், மரியாதையையும்
    புரிந்துக் கொள்ளமுடிகிறது. அந்த மரியாதையின் காரணமாகத்தான் கமல் 'தேவர்மகன்' படத்தில் சிவாஜி
    அய்யா அவர்களை நடிக்க வைத்தார். இரண்டு காட்சிகள்... அவரின் இயல்பான நடிப்பு மறக்கமுடியாதது.
    ....
    ஆர்.சரவணன் 17.11.13
    புதன் 16:15
    சிவாஜி என்ற ஒரே தமிழன்தான் இந்த உலக முழுதிற்குமான தலைசிறந்த நடிகன். இந்த பூமியில் அவரை தவிர இன்னொருவர் இல்லை. ஆனால் அவருக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்நாடுதான்.
    தமிழில் மட்டும் சிவாஜி அய்யா நடிப்பது குறித்து எனக்கு உண்மையில் சந்தோஷந்தான். தமிழர்கள்தான் அவரை புரிந்துக்கொள்ள முடியும். என்னுடைய சொந்த கருத்து இத்தனை திறமை படைத்தவர்... இன்றைய காலத்தில் கமலை போன்று சிவாஜியும் ஹிந்தியிலும் கதாநாயகனாக வலம் வந்திருந்தால், இந்திய மக்கள் அனைவரும் சிவாஜி யாரென உணர்ந்திருப்பார்கள். அதுவே அவருக்கு பாரதரத்னா, ஆஸ்கர் போன்ற
    மிகப்பெரிய விருதுகள் 'செவாலியே விருதிற்கு முன்பே அவ்விருதுகள் எளிதாக கிடைத்திருக்கும். அதற்காக
    கடலிருந்து சில சொட்டு நீரை எடுப்பது போல் கீழே சில உதாரணங்களை தருகிறேன்.
    வங்காள இயக்குநர் மரியாதைக்குரிய 'சத்தியஜித்ரே' அவர்கள்... உலகம் போற்றும் ஒப்பற்ற இயக்குநர்களில்
    ஒருவராக உலகமே ஒப்புக்கொண்டவர்.
    சிவாஜி அய்யாவின் பெயரை செவாலியே கமிட்டிக்கு பரிந்துரைக்கும் போது சிவாஜி அய்யாவின் பெயர் செவாலியே கமிட்டியில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
    செவாலியே விருதை பெற அத்தனை தகுதிகளும் சிவாஜி அய்யாவிடம் இருந்தது. அந்த விருது சிவாஜி அய்யாவிற்கு கிடைக்க வைண்டுமென அக்கறையுடன் யாராவது பெறுநரை அணுகினார்களா ? இவர்கள் பரிந்துரைத்து அனுப்பியது பழைய இந்திய பெறுநரிடமிருந்தது. சிவாஜி அய்யாவை அந்த விருதிற்கான தனி தகுதிக்கு ( personality ) பொறுத்தமானவரில்லை யென கூட்டமைப்பு (federation) செவாலியே கமிட்டிக்கு கூறியது.
    ( அதற்கு காரணம் அரசியல்தான்... அதன் உண்மையான காரணத்தை அய்யன் சிவாஜியே சொல்லுவார்... அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம்.)
    சத்தியஜித்ரேதான் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இன்று சிவாஜியை தவிர செவாலியே விருது யாராவது பெற முடிந்ததா ?
    ( இநத கட்டுரை கட்டுரை எழுதப்படும்போது கமல்ஹாசன் செவாலியே விருதை பெறவில்லை)
    ....
    பழம்பெரும் நடிகர் திரு பிரதிவிராஜ்:
    ( நடிகர் திரு ராஜ்கபூரின் தந்தை )
    நாம் வித்தியாசமான நடிகர்களை பார்க்கின்றோம்... வித்தியாசமான கதாபாத்திரங்களில் வித்தியாசமாக
    நடிக்கின்றார்கள்.நாம் இலக்கிய வரலாற்று பாத்திரங்களை அவர்கள் எப்படி நடிக்கின்றார்கள் ? என்று பார்த்தால்தான் அந்த நடிகர்களை பற்றி அறிந்துக்கொள்ள இயலும். அவ்வித கதாபாத்திரங்களில் சிவாஜியால்தான் நடிக்கமுடியும். ஏனென்றால் நடிப்பின்
    இலக்கணம் அவர் !
    அவர் நடித்த எத்தனையோ சிறந்த படங்கள் ஹிந்தியில் மறுபடியும் தயாரிக்கப்பட்டு வந்தாலும்...அவரைப்போல் யாராலும் நடிக்க இயலவில்லை. தயவு செய்து மக்களும், நடிகர்களும் யாரும் அவருடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம்.
    அவர் ஒரு பெரிய நடிப்புலக மேதை... அது போன்ற நிகழ்வுகள்... சில இடங்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அவையெல்லாம் எண்ணமுடியாத நேரங்கள்.
    ....

    ஹிந்தி சூப்பர் ஸ்டார்ஸ் 'திலீப்குமார்

    மற்றும் 'சஞ்சீவ்குமார் சிவாஜியின் தீவிர ரசிகர்கள்.
    ....

    இயக்குநர் கே. கோபாலகிருஷ்ணன்

    படபிடிப்பு தளத்தில்... ஹிந்தி நடிகர்கள்
    பேசிக்கொண்டிருக்கும் போது... நான் எப்போதெல்லாம் சிவாஜி பெயரை உச்சரிக்கும்போது... உடனே பேசிக்கொண்டிருக்கும் நடிகர்கள் கவனம் சிவாஜி என்ற பெயர் சொன்ன இடத்திற்கு திரும்பும்... அத்துடன் இரண்டு கைகளால் அவர்களின் இரண்டு காதுகளை பிடித்துக்கொண்டு கடவுளை கும்பிடுவதுபோல்
    மிக மரியாதையுடன் கவனமாக கேட்பார்கள்... அதை எத்தனையோ முறை நான் கவனித்திருக்கிறேன்.
    பிறகு சிவாஜியை வேறு ஒரு நடிகருடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு நோ...நோ...அவரை நம்மிடம் ஒப்பிட்டு
    பார்ப்பது தவறு தவறு என்பார்கள்.
    .......

    சிவாஜி ஒரு அப்போஸ்டல் கலை.
    நற்குணத்திற்கும் சிறப்பிற்கும் ஓர் எடுத்துக்காட்டு. தன்னுள் அனைத்தையும் அடக்கிவைத்திருப்பவர்தான்
    'டாக்டர் சிவாஜி அவருடைய நடிப்புதிறன் தூண்டுதலுக்கு 'சூப்பர்ப்' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே... ஏனென்றால் இதைவிட சிறந்த வார்த்தையால் அவரின் பல்துறை திறமையை விவரிக்க முடியாது. அவர்
    எல்லோரையும் போன்ற நடிகரல்ல... அவர் ஒரு 'பல்கலை கழகம்... அவர் ஒரு 'கல்விச்சாலை... அவரை யாரும் ஒப்பிட்டு பார்க்கவோ... அளந்து பார்க்கவோ முடியாதவர்.
    ...
    'டாக்டர் கணேசன் இந்த உலகின் ஒரு மகப்பெரிய நடிகர் அத்துடன் எல்லோரையும் மிஞ்சக்கூடிய உருவத்திற்கு சொந்தக்காரராக வெள்ளித்திரையில் மின்னியவர். இதில் எந்த ஒரு சந்தேகம் ஏதுமில்லை. அவர் ஒரு ஆண்டவனின் அறுமையான படைப்பு. தன்னுடைய சுய திறமையால்
    நுணுக்கமான கலைதன்மையை கொண்ட கலைஞனாக திகழ்ந்தவர். அவருக்கான சுய திறமையாலும் அவருடைய அமைப்பினாலும் சுற்றுப்புறத்தில் தன் புகழை நிலை நிறுத்தியவர்.
    கலையும் மற்றும் கலாச்சாரமும் அவருடைய நிலைப்பாடுகளாய் ஆகின. அவரின் முகத்தின் வெளிபாடுகள் மேடையில் வித விதமான பாவனைகளாய் ஆகின. அவரின் உயர்தரமான நடவடிக்கைகள் அவரை
    உச்சத்தில் இருப்பதை சொல்லிவைத்தன.
    --------தீக்குறிசி சுகுமாரன் நாயர்
    ( மலையாள இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்)
    .....
    தெலுங்கு சூப்பர் 'நாகேஷ்வரராவ் மற்றும் மலையாள
    சூப்பர் ஸடார் 'மம்முட்டி ஓர் வித்தியாசமான சந்திப்பில் சிவாஜி அய்யாவை பற்றி விவரித்தது :
    நடிகர் திலகம் தன் அசாதரண நடிப்புத்திறனால் வெள்ளி திரையில்
    தோன்றி அதிசயத்தால் அனைவரையும் தாக்கி அவர் பெயரை உச்சரிக்க செய்தவர்.
    ....
    மலையாள சூப்பர் ஸ்டார் 'மோகன்லால்
    சிவாஜி சார் ஒரு அற்புதமான நடிகர்.
    அவருடைய இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க முடியாது.
    ...
    'மாண்புமிகு சரத்பவார்'
    ( முதலமைச்சர். மஹாராஷ்ட்ரா )
    தாங்கள்... மராட்டிய வீர சிவாஜியாய்
    நடிப்புதிறனை காட்டி நடித்ததை
    என்றுமே மறக்க முடியாது.
    ...................

    எம்.ஜி.ஆர்

    இனிமேலும் இன்னொரு நடிகர்
    பிறக்கமுடியாதென என்தம்பி
    நிரூபித்திருக்கின்றார்.
    .....
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
    என்னுடைய ஸ்டைலை பார்த்து... என்னை 'ஸ்டைல் மன்னன் என்கிறார்கள். நான் ஸ்டைல் மன்னனாக இருந்தால்... சிவாஜி சார் ஸ்டைல் சக்ரவர்த்தியாக இருப்பார்கள்.
    ....
    காதல் இளவரசன் கமல்ஹாசன்
    இன்றோ... நாளையோ... என்றுமே அவரை காலத்தால் மறைக்க முடியாது. ஒதுக்க முடியாத உயரத்தில்
    இருப்பவர். அத்தனை நடிகர்களும் அவர் நடிப்பை பார்த்துத்தான் நடிக்கிறார்கள். அவர்கள் இவர் வழியில்
    சென்றாலும் இல்லை வேறு வழியில்
    சென்றாலும். சிவாஜி அய்யாவின் பாதிப்புத்தான் இருக்கும். அப்படி இல்லை என்றும் சொன்னால்... அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற அர்த்தமாகும்.
    ...
    மூன்று முறை தேசிய விருதை பெற்ற 'நடிகை லக்ஷமி :*
    நான் இந்தியா முழுதும் சுற்றுலா சென்றிருக்கிறேன்.இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போய் இருக்கின்றேன். நான் எல்லா மொழி நடிகர்களிடமும் பேசியிருக்கின்றேன்...
    அவர்கள் நடிப்பையும் பார்த்திருக்கிறேன்... ஆனாலும்
    சிவாஜி சாரை போன்று நடிப்பு திறமை ஒருவரிடமும் இல்லை. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது.
    அவருக்கு ஆற்றல் இயற்கையாய் அமையப்பெற்றது. சிவாஜி சாரின் புகழ் ஓர் இமயமலையை போன்றது. அதை யாருமே நெருங்க முடியாது. நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். அவருக்கு கீழ்படிந்த மாணவிபோல் நினைக்கின்றேன். அவரிடமிருந்து பெரிய நடிப்புக் கலையை கற்றுக்கொள்ள ஆசைபடுகின்றேன்.
    ...
    ஆர்.சரவணன் புதன். 17.11.13/21:27
    இயக்குநர் சத்தியஜித்ரேவுக்கு ஆஸ்கர்
    கிடைத்தது... சிவாஜி அய்யாவிற்கு
    அது கிடைக்கவில்லை.
    சத்தியஜித்ரே உலகத்தின் சிறந்த இயக்கநரில் பத்தில் ஒருவராக இருந்தார். அவருக்கு மட்டும் அனைத்து உலக நாடுகளின் விருதுகளை பெற சாத்தியமிருந்தது. அதற்கு காரணம் அவருக்கிருந்த சுயமான தன்மை (Originality) உருவாக்கும் தன்மை (Criativity) தனித் தன்மை (Individuality) அவருடைய படைப்புகள் தரமிக்கது.
    அவருடைய படங்கள் வித்தியாசமானவையை அணுகக்கூடியது. வித்தியாசமான சிந்தனைகள் அவரை உயர்ந்த இடத்தில் அவரின் அடையாள புள்ளியை பதிய வைத்தது. அவருடைய படங்கள் கதை வெகு வேகமாக நகர்ந்து யாரும் எதிர்பாராத போது திடீரென படம் முடிந்துவிடும். இந்த காரணங்களால் இவரை உலகம் அங்கிகரித்திருக்கலாம்.
    *1.* சத்தியஜித்ரே... அவர் என்ன நினைக்கின்றாறோ..? அதே முறையில் படத்தை தயாரித்தார். அவருடைய
    படங்கள் உயர்தரமாகவும், உலகத்தரமாகவும், படித்தவர்களுக்காகவும், அகில உலகத்தினர் பார்பதற்காகவும் இருக்கும். அவர் எடுத்த படங்கள் எல்லாமே சிறப்பிற்குரியவை. ஆனால் அவர் படங்கள் பெரும்பாலும் பொழுது போக்கிற்காக இருக்காது. வியாபாரத்திற்காகவும்,பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இன்னும் மற்றவை ஏதுமிருக்காது. மிக மிக யதார்த்தமாக நடைமுறை வாழ்க்கையைப் போலிருக்கும்.
    2அவருடைய படங்கள் அகில உலக தரத்திற்கு
    எடுக்கப்பட்டதால் அவருக்கு உலகத்தின் விருதுகள் பெற காரணமாய் அமைந்தது.
    3. சத்தியஜித்ரே... அவரே அனைத்தையும் தீர்மானிப்பவராய் இருந்ததார். அதாவது இயக்கம், தயாரிப்பு மற்றும் இசையமைப்பு... இவையெல்லாம் ஒருங்கே பெற்றவராய் இருந்தார். அவர் ஒரு சிறந்த இசையமைப்பவராக இருந்ததால் உலக தரத்திற்கு அவர் இசையமைப்பு இருந்தது.
    4. அவர் திரையரங்க வசூலைபற்றி (Box - Office) கவலைபட்டதில்லை. அவர் தயாரித்த 3,4 படங்கள்தான் மேற்கு வங்கத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அவருடைய படங்களில் பெரும்பாலும் செலவில்லாமல் தொலைகாட்சியில்தான் நான் பார்த்திருக்கிறேன். 50% படங்களை மட்டுமே திரையரங்கில் பார்த்திருக்கின்றேன். அதுவும் எனக்கு பிடித்தமானதாக இல்லை. பல படங்கள்
    ஒன்றரை மணி நேரத்தில் ஆங்கில படம் போல் முடிந்துவிடும்.
    5. அவர் எடுத்த 5,6 படங்களை தவிர, மற்ற படங்களை ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது.
    'பதர் பாஞ்சாலி, 'சாருலதா மற்றும் 'கோபி க்யானே பாகா பய்ன' இது போன்ற படங்களைத்தான் திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் கதை கற்பனையானதும் அவரின் தந்திரங்களினால் எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் மற்றும் அருமையான பாடல்களும் நிறைந்த ஒரு அற்புதமான படம். அவருடைய படத்திலேயே மாறுபட்ட ஒரு வித்தியாசமான படம். இந்த படத்தில் நடிகைகள் யாருமில்லை. இந்த இடத்திலே குறிப்பிட்டு சொல்ல வேண்டியது... இந்த படந்தான் அவர் எடுத்த படங்களிலே எனக்கு உண்மையாகவே ஞாபகத்தில் இருப்பது. ஆனால் இந்த படம் உலக தரத்திற்கானதல்ல... எந்த விருதுகளும்
    இந்தப்படம் பெறவில்லை. இதைத்தானே சிவாஜி அய்யாவும் பின்பற்றினார்.
    6. நான் எவ்வளவோ சத்தியஜித்ரேவின் படங்களை பார்த்திருந்தாலும் அதில் நடித்த நடிகர்கள் - நடிகைகள் அவர்களின் நடிப்பு என்று ஞாபகத்தில் இல்லை.எனக்கு ஞாபகத்தில் இருப்பதெல்லாம் சத்தியஜித்ரேவின் புத்திசாலிதனமான அவரின் திறமை மட்டுமே.
    ..........
    1.'நடிகர் திலகம் படத்தை பார்பதற்கென்றே தனி ஒரு கூட்டமே இருந்தது. அவர் ஒரு மிகப்பெரிய 'மெகா ஸ்டார்... சாதரண கிராமத்தில்கூட அவரை தெரியும். அவரை பொறுத்தவரை அவர் படம் வெற்றியடைவதே குறிக்கோள். அவரை நம்பி படத்தை வெளியிட்டவர்கள் கைமேல் பலனடைய வேண்டுமில்லையா ?
    நடிகர் திலகத்திற்கு வித்தியாசமான ரசிகர்கள் மாநில முழுதும் மாவட்டம், பட்டணங்கள், கிராமங்கள் முழுதும் இருந்தார்கள். அவர்களை திருப்தி படுத்துவதே முக்கியம். A, B,C மையங்களில் (Centre) அவர் படம் நன்றாக ஓட வியாபார மதிப்பு (Business value) இருந்தது. அவர் படத்தை 1% அதிக படித்தவர்களையும் 99% சுமாராக படித்தவர்களையும் படிக்காதவர்களையும் திருப்தி படுத்துவது முக்கியமாக இருந்ததால், பாட்டு காட்சிகள், சண்டை காட்சிகள், நகை சுவை காட்சிகள், நடிகைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இவையெல்லாம் தேவைபட்டதால்... அவர் நடிப்பை யதார்த்த நிலையில் புதிய பரிசோதனைக்கு உட்படுத்த முடியாமல் போனது. அப்படி உட்படுத்தியிருந்தால் திரையரங்கில் வருமானம் வராது... படமும் ஓடாது.
    2. சிவாஜி அய்யாவின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அகில உலக தரத்திற்கு படமெடுக்கவும், சிவாஜியின் இயல்பான நடிப்பை காட்டி
    அகில உலக விருதை பெற முயற்சிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை படம் குடும்பத்துடன் வந்து குதுகுலமாக இருக்க வேண்டும். சிவாஜி படம் நன்றாக ஓடியது என்று நல்ல பெயர் எடுத்தால் போதுமென்ற
    எண்ணமிருந்தது.
    3.சிவாஜியும் தான் நடிக்கும் படத்தில்
    எதிலும் குறிக்கிடமாட்டார். அவரை பொறுத்தவரை இந்த படத்தில் தன் நடிப்பாற்றலை எப்படி ஜனங்கள் ரசிக்க வேண்டுமென்பதே குறிக்கோலாய் இருந்தது.
    4.அவரே சுயமாக நடிப்பில் எல்லையற்ற பல விதங்களில் உருவாக்கி கொள்வார். அந்த நேரத்திலும் அவர் உலக தரத்திற்கேற்பத்தான் அவர் நடிப்பும் இருந்தது. ஆனால் தெழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் , மேக்கப் மேன், கேமரா மேன் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருக்கு உறுதுணையாய் இல்லை. தனி மனித காட்சி (One man show) செய்பவராக இருக்க வேண்டியிருந்தது.
    இந்த விஷயத்தில் அவர் பெருந்தன்மையை பாராட்ட வேண்டும். இயக்குநர் என்ன ? தன்னிடம் எதிர்பார்பதை மரியாதையுடன் ஒத்துக்கொண்டு செய்தார். அந்த காலத்திற்கு எது தேவைபட்டதோ அதற்காக சிவாஜியை
    பயன்படுத்தி கொண்டதால்... பல சிவாஜி படங்கள் பெரும் வெற்றி (Super - hit) பெற்றது.
    1980ல் 'திரிசூலம் பல மையங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது... சின்ன சின்ன ஊர்களில் நீண்ட நாட்கள் ஓடியது. அது அந்த காலத்திற்கு பொருந்தியது. அதே படம் இந்த காலத்தில் எடுக்கப்பட்டால் அவ்வளவு நாட்கள் ஓடுமா? என்று சொல்ல முடியாது. அது அந்த காலத்திற்கு பொருந்தியது
    அவ்வளவுதான்.
    சிவாஜி தன் படத்தில் எதையும் தீர்மானிப்பவர் அவர் அல்ல. இயக்குநர் என்ன விரும்புகிறாறோ? அதையே அவர் செய்தார்... அதனால் அவருக்கு கிடைத்த முடிவு (Result) சிவாஜி மிகையான நடிப்பு (Over acting) நடிக்கிறார் என்றாகியது. அதனால் அவரை குறை சொல்ல முடியாது... அதைத்தானே மக்களும் ரசிகர்களும் விரும்பினார்கள்.
    நான் அறிந்தவரை... அவர் நடிக்கும்போது அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார். அதை அவர் அறியமாட்டார்... மிதமான நடிப்பு (Under acting) இயல்பான நடிப்பு (Natural acting) மிகையானநடிப்பு (Over acting) எல்லாமே சிவாஜிக்கு நடிக்க தெரியும். அதை தீர்மானித்து OK சொல்வது இயக்குநர்தானே...அதனால் சிவாஜி அய்யாவின் மேல் எந்த குறையும் இல்லை. ஒரே நடிப்பை பலவிதமாக நடிக்க அவரால் முடியும்.
    பல ஆண்டுகள் போன பின்னர்... 'பாரதிராஜா மற்றும் 'கமல்ஹாசன்... எடுத்த "முதல் மரியாதை" மற்றும்
    "தேவர்மகன்" அவருடைய இயல்பான அற்புத நடிப்பை அவர்களால் எப்படி பெறமுடிந்தது ?
    5. சிவாஜி அய்யா நடித்த படங்களை எத்தனை முறை வேண்டுமென்றாலும் திரும்ப திரும்ப பார்க்கலாம். நான்
    'வியட்நாம் வீடு, 'தில்லானா மோகனாமாம்பாள் படத்தை குறைந்தபட்சம் 10 தடவையாவதுபார்த்திருப்பேன்... ஆனால் இயக்குநர்களின் பெயர்களை கேட்டால் என் ஞாபகத்திற்கு வருவதில்லை... எனக்கு ஞாபகத்தில் இருப்பதெல்லாம் சிவாஜி அய்யாவின் நடிப்பு மட்டுமே...
    இந்த காரணங்களால்தான் சிவாஜி படங்கள் உலக தரத்திற்கு விருதுகள் கிடைக்காமல் போனது. சிவாஜி ஒருவர் மட்டும் படமல்ல... அந்த படத்தில் என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்தனையும் உலக தரத்திற்கு ஏற்றவையாய் இருந்திருந்திருந்தால், சிவாஜிக்கு நிறைய உலக விருதுகள் கிடைப்பது சாத்தியமாகியிருக்கும்.
    சத்தியஜித்ரேவுக்கு ஆஸ்கர் கொடுத்தால் சிவாஜிக்கும் ஆஸ்கர் கொடுத்திருக்க வேண்டும்.
    சத்தியஜித்ரே உலகத்தின் மிக முக்கியமான இயக்குநர் என்றால்....
    சிவாஜி அய்யா உலகத்தின் ஈடு இணையற்ற மாபெரும் நடிகர்.
    சத்தியஜித்ரேவும் சிவாஜியும் ஒப்பற்ற மேதைகள்... அவர்கள் ஏற்றிவைத்த சுடரின் வெளிச்சத்தில்தான் இன்றைக்கு, திரைப்பட கலைஞர்கள் நடைபோடுகின்றனர்.
    சிவாஜியும் சத்தியஜித்ரேவும் ஒன்றாக இணைந்திருந்தால் உலக தரத்திற்கேற்ற அற்புதமான படங்கள் உருவாகியிருக்கும்.
    இன்றைக்கு சத்தியஜித்ரே மட்டும் உயிரோடு இருந்திருந்தால் சிவாஜியின் பெயரை வாழ்நாளின் சாதனையாளருக்காக கிடைக்கின்ற 'ஸ்பெஷல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்திருப்பார். ஒருவரை பரிந்துரைக்க நிறைய சிபாரிசுகள் தேவைபடுகின்றது. சத்தியஜித்ரேவுக்கும் இது போன்ற சிபாரிசுகள் தேவைபட்டது...
    உலகத்தின் மிக முக்கியமான நடிகர்களின் பெயர்களெல்லாம் செவாலியே கமிட்டியில் இருந்தது.
    6 ஆண்டுகளாக ஊக்கமான முயற்சியால்தான் அவர்கள் உண்மையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி வேலையெல்லாம் நடந்த பின்னர்தான் சிவாஜி 'செவாலியே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். ஆறு வருடங்களாக சிவாஜி நடித்த படங்களின் பட்டியலில் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து... அதன்பின்னர்தான் சிவாஜிக்குத்தான் செவாலியே என்று வெற்றிகரமாக நிறைவேறியது.
    99 படிகளில் கஷ்டப்பட்டு ஏறித்தான் சிவாஜியால் செவாலியேவை வெல்லமுடிந்தது. வெகு சீக்கிரத்தில் அவர் 100 வது படியும் ஏறுவதும் சாத்தியந்தான். சரியான முறையில் ஆராய்ச்சி நடந்திருந்தால் அதை விடாமல் அணுகியிருந்தால் மகிழ்ச்சியான 'ஆஸ்கரும் சிவாஜி அய்யாவிற்கு கிடைத்திருக்கும்.
    ��
    ஆர் சரவணன்) புதன் 17.11.13/25:33
    நீங்கள் சொல்லிக்கொண்டேயிருங்கள்.உங்களின் ஈடு இணையற்ற திறமை சரியான பெறுநரிடம் கிடைத்து உங்கள் திறமை நிரூபிக்கபட்டால்... மிதமான
    திறமையுள்ளவர்கூட ஆஸ்கர் விருதுக்கு பொறுத்த மாகலாம். உலகமே கொடுப்பதுதானே 'ஆஸ்கர் விருது.
    நைஸ் ஜோக்... ஆஸ்கர் நல்ல ஆங்கில படத்திற்கு கொடுக்ககூடியது... அதற்காக உலகத்தை குறை சொல்ல
    முடியாது. இங்கிருக்கும் அரசியலை போல் அங்கும் அரசியல் சம்மந்தப்பட்டு இருக்கிறது. லாபிகள் வேலை நன்றாகவே நடக்கின்றது.
    அதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம்.இதுவரை இரண்டு கறுப்பர்கள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும், ஒரே ஒரு கறுப்பு பெண்மணிக்கு சிறந்த நடிகைக்காக ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
    வெள்ளைக்கார நடிகர் - நடிகைக்கு மட்டும் ஆஸ்கர் விருது தீர்மானிக்ப்படுகிறதா ? அங்கும் இனத்தின் பேரால்
    ஓரவஞ்சனை அரசியல்தானே நடக்கின்றது.
    உலகமெங்கும் 1000 கணக்கான படங்கள் தயாரிக்கப்படுகின்றது. எல்லா நாட்டினிலும் அரசியல் இருக்கிறது. அதன்படிதான் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்து படங்கள் அனுப்ப படுகின்றது. இந்தியாவில் சுமாராக ஆண்டுக்கு 800 படங்கள் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் ஆஸ்கர் கமிட்டியால் தேர்வு செய்யப்படுவது 1000ல் ஒரே ஒரு படம் மட்டுந்தான் பரிந்துரைக்க தேர்வு செய்யப்படுகின்றது.
    நல்ல வெளிநாட்டு படங்களும் நல்ல உலக தரத்தில்தான் இருக்கிறது. அசாதரணமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் கூட கவனிக்கப்படாமல் போகின்றது.
    இந்த காரணங்களால்தான் ஆஸ்கர் கமிட்டி உலக தரமான படங்களுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கின்றதா ?
    சத்தியஜித்ரேவின் படங்களுக்கே 'ஆஸ்கர்விருது ஒரு முறைகூட கிடைக்கவில்லை.இதுவரை ஒரு இயக்குநருக்கும் கிடைக்கவில்லை
    ஏ.ஆர்.ரஹ்மானை தவிர்த்து, எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்... இசை ஞானி இளயராஜா உலக தரத்திற்கு இசையமைக்க வில்லையா ?
    இது ஒரு பெரிய ஜோக்...அகில உலகத்தின் விருது ஆஸ்கர் என்பது....
    ஆசிய - ஆப்ரிக்கா மற்றும் செவாலியே விருது உலக படவிழாவின் விருதென்று எத்தனை பேருக்கு தெரியும் ?
    உலகளவில் சில பேருக்கு மட்டுந்தான் நடிப்பிற்காக 'செவாலியே விருது கிடைத்திருக்கிறது. இந்த விருது
    'ஃபிரான்ஸ் அரசால் கொடுக்கப்படும் மிக பெரிய விருது. இந்த விருது ஆஸ்கர் விருதிற்கு சமமானது.
    சிவாஜி அய்யாவை தவிர்த்து...ஹாலிவுட் நடிகர்களும்
    செவாலியே விருதிற்காக முயற்சி செய்தார்கள். அவர்கள் எந்தளவு புகழ் பெற்றிருக்கிறார்கள்... என்பதையெல்லாம் ஆஸ்கர் கமிட்டி போல் செவாலியே கமிட்டியும் விருதை
    அவ்வளவு சீக்கிரமாக கொடுப்பதில்லை.ஏனென்றால் ஃபிரான்ஸ்சின் மிக முக்கிய உயர்ந்த விருது. சிவாஜிக்கு எப்படி கிடைத்தான் ஏற்கனவே பாத்தோம். எத்தனைதான்
    ஹாலிவுட் நடிகர்கள் ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும்... குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஹாலிவுட் நடிகர்கள்
    'கிளீண்ட் ஈஸ்ட்வுட், 'டஸ்ட்டின் ஹூப் மேன் போன்றோருக்குத்தான் செவாலியே விருது கிடைத்தது.
    அய்யன் நடிகர் திலகம் சிவாஜிக்கு செவாலியே விருது கிடைக்க... வெகு காலத்திற்கு முன்பே..
    *வீர பாண்டிய கட்டபொம்மன்* படத்தில் தன் ஒப்பற்ற நடிப்புத்திறனை காட்டி 1960ஆம் ஆண்டே
    *ஆசிய - ஆப்ரிக்கா* விருதை வென்றுவிட்டார்.
    நான் இந்தியாவை நினைத்து மிக மிக
    வெட்கப்படுகின்றேன். இந்தியாவின் எங்கோ ஓர் மூலையிலிருக்கும் சிவாஜியை கண்டுபிடித்து ஃபிரான்ஸ்
    தேசம் செவாலியே விருதை கொடுக்கின்றது. ஆனால் இந்திய அரசு அவருக்கான மரியாதையை தராமல்
    ஒதுக்கிவைத்து வேடிக்கை பார்கிறது. ஏனென்றால் சிவாஜி ஒரு தமிழன். அதிலும் சிங்கத்தமிழன். நானும்
    தமிழன்தான்... நம் சொந்த தமிழின மிகப்பெரிய மேதையை பெற்றிருப்பதால் பெருமைபடுகின்றேன்.
    வாழ்க சிங்கத்தமிழன் சிவாஜி!
    மொழி பெயர்ப்பு:
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:




    courtesy net
    Last edited by sivaa; 19th September 2018 at 04:17 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #75
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #76
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #77
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #78
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    nillaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #79
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஆச்சரியத்தில் ஆச்சரியம்!
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$
    சரித்திர சாதனைகள் அடிக்கடி
    நிகழ்வதில்லை....
    அப்படி அவைகள் நிகழ்ந்தால், அது
    அய்யன் சிவாஜியால் மட்டுமே நிகழ்த்த முடியும். அவர் மறைந்தும்
    நிகழ்வதுதான் பேராச்சரியம்.
    இன்னும் அவரின் ரசிகர்கள் அவரை மறவாமல் இருப்பதும், அவர் படங்கள் 100 நாட்கள் ஓடுவதவற்கும், அவரை போற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதும், அவர் சிலைகளை பற்பல இடங்களில் நிறுவுவதும், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், வழக்குகள் இன்னும் அவருக்காக சமூக நற்பணிகள் செய்வதும் நினைத்தால் பேராச்சரியம்.
    எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமின்றி, இதற்காக பொருளுதவி செய்யும் பணம் படைத்தவர்களின் உதவியின்றி, சிவாஜி என்ற சிம்மத்தின் மீது அடங்கமுடியாத பாசத்தின் பிரவாகமாக, நேசத்தின் ஊற்றுக்கண்ணாக எந்த பிரதிபலன் பார்க்காமல் செய்வது அப்பப்பா...
    ஆச்சரியத்தில் ஆச்சரியம், பிரமாண்ட ஆச்சரியம்.
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/: F B


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #80
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 8 of 401 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •