Page 13 of 401 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #121
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram

    இரண்டு நாட்களுக்கு முன் ஹரிச்சந்திராவையும் பிதாமகன் போஸ்டர்களையும் பதிவில் காட்டிய நான் என்னுடைய கருத்து என எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை, நாம் ஒன்றை சொல்ல நினைத்து அது ஒப்பீடு செய்வது போல சென்று விடுகின்ற காரணத்தால் தவிர்த்து நண்பர்கள் சொல்லும் கருத்தை ஆவலோடு படித்து பின் கருத்தை சொல்லி விடுவதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன், தெண்டுல்கரை பதிவில் இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது போதும்,
    பொதுவாகவே ஏதாவது செய்தியை சொல்லப் போனால் அது ஒப்பீடு என அவசரம் காட்டிவிடுகிறோம்,
    ஒப்பீடு இல்லாமல் எந்தத் தலைவரையும் உயர்த்திப் பிடிக்க முடியாது, ஒப்பீடு இல்லாமல் எந்தச் சாதனையாளரும் உருவாகவும் முடியாது,
    1952 வரை இருந்த நடிகர்களை பராசக்தி ஹீரோவோடு ஒப்பிட்டதால் தான் அன்றைய அத்தனை ஹீரோக்களும் தவிடு பொடியானார்கள்,
    ஏன் பின்னாட்களில் எம்ஜிஆர் கூட சிரமெடுத்து நடித்தக் காட்சிகளும் உண்டு, ஆனாலும் நடிகர் திலகத்தோடு ஒப்பிட்ட காரணத்தினால் மட்டுமே நடிக்க தெரியாதவர் எம்ஜிஆர் என்ற விமர்சனத்திற்கு உள்ளானார் என்பதை மறுக்க முடியாது, அதன் தொடர்ச்சியாகவே எம்ஜிஆர் இன் ஆதரவாளர்கள் நடிகர் திலகம் எவ்வளவோ தான தர்மங்கள் செய்த போதும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர் மறை விமர்சனங்களை பரப்பி விட்டனர்,
    எனவே ஒப்பீடுகளை சீர் கொண்டு பார்த்து அதில் அடங்கி இருக்கும் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக செயல்படுவோம்,
    அதன் அடிப்படையில் தான் ஹரிச்சந்திராவையும் பிதாமகனையும்.இணைத்தேன், பிதாமகன் 2003 ஆண்டு வெளியான போது விக்ரம் மிகவும் தைரியமாக வெட்டியான் கேரக்டரில் நடித்து இருக்கிறார், எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத தைரியம் என அன்றைய பத்திரிக்கைகள் புகழ்ந்து இருந்தன, அதைத்தான் அன்றைய இளைய தலைமுறையினர் கூட தெரிந்துக் கொண்டச் செய்தி, இங்கு கவனிக்கத் தவறியச் செய்தி அன்றைய நாளில் விக்ரம் வளர்ந்து வரும் நடிகர் அவர் அந்தக் கேரக்டரை ஏற்றுக் கொண்டதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை, ஆனால் 1968 ல் நடிகர் திலகம் வெட்டியான் கேரக்டரில் நடித்தது தான் பெருமைக் கொள்ளும் நிகழ்வு செய்தியும் கூட,
    நடிகர் திலகம் சிகரத்தின் உச்சியில் இருந்தார், 150 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தமது இமேஜ் பற்றியேல்லாம் யோசிக்காமல் அசத்தினார், உண்மையில் நடிகர் திலகம் வெட்டியான் கேரக்டரில் நடித்ததனால் அவரை நேசித்த ரசிகர்கள் தாமும் ஒரு நாள் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டவர்கள் உண்டு "அது தான் நடிப்பின் தாக்கம்" உண்மையான விருதும் கூட,












    தேசிய விருது
    பிதாமகனின் நடிப்பிற்காக விக்ரம் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது,
    விருது பெருவது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது நடிகர் திலகம் பற்றிய ஒரு கேள்விக்கு "நடிகர் திலகம் ஒரு பல்கலைக்கழகம் அதில் நாங்கள் மாணவர்கள்" எனப் பதிலளித்து இருந்தார், எனவே விக்ரம் அவர்கள் விருது பெற்றது பெருமையே,
    அதற்கான முதன்மை காரணம் வெட்டியான் என்ற கேரக்டரை ஏற்றதுதான், உண்மையில் பிதா மகன் படத்தில் விக்ரமைக் காட்டிலும் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது தான் எனது கருத்து, அதில் சூர்யா வெவ்வேறு காட்சிகளில் நடிப்பில் அசத்திக்காட்டினார்,
    ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிகர் திலகம் நாட்டின் மஹாராஜாவாக இருந்தவர் சூழ்நிலை காரணமாக சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்திட வேண்டும், அந்தப் பணியையும் நேர்மையாக செய்தாக வேண்டும், அந்தச் சூழலில் தனது மகன் இறந்த சூழலில் தனது மனைவி எரிக்க முயலும் போது அதைத் தடுக்கும் அதி முக்கிய காட்சி
    இங்கு தான் நடிகர் திலகம் தேவைப்படுகிறார்,
    மஹாராஜாவின் உடல்மொழியிலிருந்து மாறி வெட்டியான் என்ற உடல் மொழிக்கு மாறியாக வேண்டும், இது தான் நடிப்பு,
    பிதாமகனில் விக்ரம் ஏற்ற கேரக்டர் முழுக்க வெட்டியான் கேரக்டர் என ஏற்க முடியாது, அவரை ஒரு மன நோயாளி போன்று தான் உருவாக்கியிருந்தார் இயக்குனர் பாலா, விக்ரம் படம் முழுக்க ஒரு விரக்தியுடன் முரட்டுச் சுபாவம்.கொண்ட மனிதராக மட்டுமே தோன்றினார், ஆனால் விருதுக் குழுவினருக்கு தெரிந்தது வெட்டியான் கேரக்டரை திறம்பட செய்திருக்கிறார் என மட்டுமே,
    ஹரிச்சந்திராவித்கும் பிதாமகனிற்கும் உள்ள தொடர்பு என நான் நினைத்து இருந்ததில் முக்கிய செய்தியை ஐயா பூபால் சிங் அவர்கள் பதிவில் சொல்லி இருந்தார்,
    இரண்டு கேரக்டருமே "சுடுகாட்டில் வெட்டியான்" தொழில் செய்வது,
    பிதா மகனிற்கு தேசிய விருது கிடைத்தது, மாறாக ஹரிச்சந்திரா வை இந்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை,
    ஆனால் ஹரிச்சந்திராவை விருதுப் போட்டிக்காக அனுப்பவேக் கிடையாது, அப்படி இருக்கும் பட்சத்தில் விருது என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டியதில்லை
    நான் பிதாமகனை எடுத்துக் கொண்ட காரணம் அந்தப் படம் முழுக்க நடிகர் திலகம் நினைவேந்தல் காட்சிகள் போல தொடர்ந்து கொண்டே வருவதை கவனிக்கலாம்,
    எதற்கெடுத்தாலும் சினிமாக் காட்சிகளில் எம்ஜிஆர் ஐ மட்டுமே நினைவு கூறும் அள்ளக் கைகளுக்கு இடையே பிதாமகனில் இயக்குனர் பாலா அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல் வரிகள், காட்சியமைப்பு இருக்கும் படி பார்த்துக் கொண்டார், அதில் வரும் முக்கிய வில்லன் கேரக்டரை கூட நடிகர் திலகம் போல நடிக்க வைத்து காட்சியை சிறப்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார்,
    பொன் மகள் வந்தாள், ஒரு கிண்ணத்தை ஏந்து கிறேன், நலந்தானா ஆகிய பாடல் வரிகளை இணக்க நமது இசைஞானி இசைந்தார் என்றால் அது நடிகர் திலகத்திற்காகவே,
    எனவே தான் பிதாமகனிற்கு தேசிய விருது யோகம் அடித்தது.






    Last edited by sivaa; 23rd September 2018 at 06:19 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    நன்றி ரங்கநாதன் முகநூல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #123
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #124
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #125
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    palaniappan subbu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #126
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்
    ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒ...ரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம். இந்தப் படத்தை கொஞ்சம் அங்கே இங்கே பட்டி பார்த்து 'புதுப்பொலிவுடன்' என்ற தலைப்போடு மீண்டும் வெளியிடுகிறார்கள். 1972-ல் வெளியான வெளியான இந்தப் படம், தெலுங்கில் வெளியான பிரேம் நகர் என்ற படத்தின் தமிழ் வடிவம்.
    டி ராமாநாயுடு தயாரிப்பில், கேஎஸ் பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். இந்தப் படம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வசூலில் மிகப் பெரிய சாதனையைச் செய்தது. தமிழகத்தில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை - சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி - ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது. இலங்கையில் கேபிடல், வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் முறையே 287 மற்றும் 208 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை இன்றுவரை வசந்த மாளிகைக்குத்தான். ஒரு படத்துக்கு ஒரே நாளில் பல ஊர்களில் விழா எடுப்பது என்ற புது ட்ரென்ட்டை உருவாக்கியதும் இந்த வசந்த மாளிகைதான். இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய நான்கு ஊர்களில் 1973ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மயிலாடுதுறையிலும் விழா நடந்தது. இந்தப் படம் வரும் 8-ம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. அதனையொட்டி நேற்று செய்தியாளர்களுக்கு ஆர்கேவி அரங்கில் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டினார்கள். பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள். வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது. கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன. நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்! படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!



    (சினிமா களம் பழைய பதிவு நன்றி சேகர் முகநூல்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #127
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #128
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #129
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #130
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    Friends most welcome to use this for their FB cover.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •